search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman jewelry"

    தருமபுரி அருகே டாஸ்மாக் ஊழியர் மனைவியிடம் நூதன முறையில் நகை, பணம் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் மேல்எண்டப்பட்டியை சேர்ந்தவர் கணேசன். இவர் டாஸ்மாக் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

    இவரது மனைவி பழனியம்மாள் (வயது42). இவர்கள் 2 பேரும் நேற்று காலை வங்கியில் அடகு வைத்திருந்த 18 பவுன் நகையை மீட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்தனர்.

    அப்போது, அவர்கள் மதிகோன்பாளையம் ரவுண்டானா அருகே உள்ள பழக்கடையில் பழங்களை வாங்கி கொண்டிருந்தனர்.

    அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2பேரும் ரூபாய் நோட்டை கீழே போட்டு கணேசனையும், பழனியம்மாளையும் திசை திருப்பிவிட்டு வண்டியில் இருந்த 18 பவுன் நகையையும், ரூ.40 ஆயிரத்தையும் எடுத்து கொண்டு அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை தப்பி சென்றுவிட்டனர்.

    இந்த சம்பவத்தால் கணேசன் அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் சம்பவம் குறித்து தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் 2 மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் கணேசனையும், பழனியம்மாளையும் வங்கியில் இருந்து நோட்டமிட்டு பின்தொடர்ந்து வந்தாக தெரிகிறது.

    பின்னர் அவர்கள் மதிகோன்பாளையம் ரவுண்டானாவில் உள்ள பழக்கடை அருகே 2 பேரையும் நூதன முறையில் ஏமாற்றி நகையையும், பணத்தையும் எடுத்து சென்றது உள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள மதிக்கோன்பாளையம் ரவுண்டானா அருகே நூதன முறையில் பெண்ணிடம் நகை, பணத்தை மோட்டார் சைக்கிளில் வந்து மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வியாசர்பாடி மார்க்கெட்டில் 2 பெண்களிடம் நகை-பணம் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பூர்:

    சென்னை வியாசர்பாடி 3-வது பள்ளத் தெருவை சேர்ந்தவர் டில்லி. இவரது மனைவி கெஜலட்சுமி (77). நேற்று மாலை மார்க்கெட்டிற்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றார். அப்போது 3 பெண்கள் கெஜலட்சுமியை அணுகி பூஜை பொருட்கள் வாங்கித் தருவதாக கூறினர்.

    நீங்கள் அலைய வேண்டாம். நாங்கள் வாங்கி தருகிறோம் என்று கூறி பொருட்கள் வாங்கி கொடுத்துள்ளனர். பின்னர் அவரை ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளனர். வீட்டிற்கு சென்று பார்த்த போது கழுத்தில் கிடந்த 5 பவுன் செயினை காணவில்லை.

    கெஜலட்சுமியிடம் இருந்து எப்படி நகையை அபேஸ் செய்தார்கள் என்று தெரியவில்லை. நைசாக பேசி கழற்றினார்களா? மாந்திரீகம் ஏதும் செய்து நகையை பறித்தார்களா என்பதை கெஜலட்சுமியால் சொல்ல முடியவில்லை.

    இதேபோல வியாசர்பாடி மெகன்சிபுரத்தை சேர்ந்த செல்லம்மாள் என்பவர் பிளாட்பாரத்தில் பூண்டு வியாபாரம் செய்து வருகிறார். அவர் வியாபாரம் செய்து வைத்திருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கம் மற்றும் அரை பவுன் நகையை காணவில்லை என்று கூறியுள்ளார். 3 பெண்கள் தன்னிடம் வந்து நைசாக பேசியதாக அவர் கூறியுள்ளார்.

    வியாசர்படி போலீசில் 2 பெண்களும் புகார் கொடுத்துள்ளனர். போலீசார் மார்க்கெட் பகுதயில் ரகசியமாக கண்காணிக்கின்றனர். ஆட்டோவில் வந்து கைவரிசை காட்டி செல்லும் 3 பெண்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×