search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "women officers"

    பாய்மரப்படகில் உலகம் முழுவதும் சுற்றி வந்த 6 பெண் கடற்படை அதிகாரிகளுக்கு நவ சேனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. #NavSena #IndianNavy
    புதுடெல்லி:

    இந்திய கடற்படையில் பணியாற்றிவரும் 6 பெண் அதிகாரிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாய்மரப்படகு மூலம் உலகை சுற்றி வரும் சாகச பயணத்தை தொடங்கி கடந்த மே மாதம் நாடு திரும்பினர்.

    6 கட்டங்களாக நடைபெற்ற இந்தப் பயணத்தில், எரிபொருள் நிரப்புவது, பராமரிப்பு பணிகள் ஆகியவற்றுக்காக, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, மொரிஷியஸ் மற்றும் ஃபாக்லண்டஸ் ஆகிய நாடுகளின் துறைமுகங்களில் அந்தக் கப்பல் நிறுத்தப்பட்டது. இந்த படகு 5 நாடுகளுக்கு சென்றுள்ளது. 4 கண்டங்களை தாண்டி, 3 பெருங்கடல்களை கடந்து 8 மாதங்களில் உலகை சுற்றி வந்து சாதனைப் படைத்துள்ளது.

    லெப்டினண்ட் கமாண்டர் வர்திகா ஜோஷி தலைமையிலான கமாண்டர் பிரதிபா ஜம்வால், ஸ்வாதி, ஐஸ்வரியா போடாபதி, விஜய தேவி மற்றும் பாயல் குப்தா ஆகிய 6 பெண்கள் கொண்ட குழு இந்த சாதனையை புரிந்துள்ளது. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தாரினி படகு இந்த பயணத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது சிறப்புக்குரிய அம்சமாகும்.

    இந்நிலையில், 6 பெண் அதிகாரிகளுக்கும் கடற்படையில் வழங்கப்படும் உயரிய விருதான நவ சேனா விருது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
    ×