search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women Twenty20 Asia Cup"

    பெண்கள் ஆசிய கோப்பை டி20 இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி வங்காள தேசம் சாம்பியன் பட்டம் வென்றது. #INDWvBANW
    பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் மலேசியாவில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா - வங்காள தேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    டாஸ் வென்ற வங்காள தேசம் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் இந்திய வீராங்கனைகள் களம் இறங்கினார்கள். கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிறப்பாக விளையாடி 42 பந்தில் 56 ரன்கள் சேர்த்தார். இவரைத் தவிர மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேற, இந்தியா 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

    பின்னர் 113 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேசம் அணி களம் இறங்கியது. இந்தியாவை வீ்ழ்த்தி முதன்முறையாக ஆசிய கோப்பையை ருசித்து விட வேண்டும் என்ற நோக்கத்துடன் வங்காள தேச வீராங்கனைகள் களம் இறங்கினார்கள்.



    தொடக்க வீராங்கனைகள் ஷமிமா சுல்தானா 16 ரன்னும், ஆயிஷா ரஹ்மான் 17 ரன்களும் எடுத்து நல்ல அடித்தளம் கொடுத்தனர். அதன்பின் வந்த பர்கானா ஹோக்யூ 11 ரன்னும், நிகர் சுல்தானா 27 ரன்னும் ருமானா அஹமது 23 ரன்களும் எடுக்க வங்காள தேசம் வெற்றியை நோக்கிச் சென்றது.

    வங்காள தேச அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது. ஹர்மன்ப்ரீத் கவுர் கடைசி ஓவரை வீசினார். முதல் பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. 2-வது பந்தில் ருமானா அஹமது பவுண்டரி அடித்தார். 3-வது பந்தில் ஒரு ரன் அடிக்கப்பட்டது. இதனால் கடைசி மூன்று பந்தில் மூன்று ரன்கள் தேவைப்பட்டது.



    4-வது பந்தில் கவுர் வீக்கெட் வீழ்த்தினார். இதனால் கடைசி 3 பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டது. 5-வது பந்தில் ஒரு ரன் எடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தப்பட்டது. இதனால் கடைசி பந்தில் இரண்டு ரன்கள் தேவைப்பட்டது. ஜஹனாரா ஆலம் பந்தை எதிர்கொண்டார். கவுர் ஒரு ரன் அல்லது ரன் எடுக்க விடக்கூடாது என்ற நிலையில் பந்தை வீசினார். ஆனால் ஜஹனாரா ஆலம் சிறப்பான விளையாடி இரண்டு ரன்கள் அடித்தார்.

    இதனால் பரபரப்பான ஆட்டத்தில் வங்காள சேதம் இந்தியாவை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதன்முறையாக ஆசியக் கோப்பையை ருசித்துள்ளது.
    ×