search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "women world cup"

    10 அணிகள் இடையிலான பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் நாளை மோதுகிறது. #HarmanpreetKaur #WomenWorldT20 #T20 #India

    கயானா:

    10 நாடுகள் பங்கேற்ற மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நேற்று தொடங்கியது.

    ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கியது. அந்த அணி நியூசிலாந்தை 34 ரன்னில் வீழ்த்தியது.

    முதலில் விளையாடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 194 ரன் குவித்தது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவூர் சதம் அடித்து சாதனை புரிந்தார். அவர் 51 பந்தில் 103 ரன்னும், (7 பவுண்டரி, 8 சிக்கர்) ஜெமீமா 45 பந்தில் 59 ரன்னும் (7 பவுண்டரி) எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணியால் 9 விக்கெட் இழப்புக்கு 160 ரன்னே எடுக்க முடிந்தது. தொடக்க வீராங்கனை பேட்ஸ் அதிகபட்சமாக 50 பந்தில் 67 ரன் (8 பவுண்டரி) எடுத்தார். பூனம்யாதவ், ஹேமலதா, தலா 3 விக்கெட்டும், ராதாயாதவ் 2 விக்கெட்டும், அருந்ததி ரெட்டி 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    இந்திய அணி 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானை நாளை எதிர்கொள்கிறது. பலவீனமான பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி 2-வது வெற்றி பெற அதிகமான வாய்ப்பு இருக்கிறது.

    நேற்று நடந்த மற்ற ஆட்டங்களில் ஆஸ்திரேலியா 52 ரன்னில் பாகிஸ்தானையும், வெஸ்ட் இண் டீஸ் 60 ரன் வித்தியாசத்தில் வங்காள தேசத்தையும் வீழ்த்தின.

    இன்று நடைபெறும் 4-வது ‘லீக்’ ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள இங்கிலாந்து- இலங்கை அணிகள் மோதுகின்றன. #HarmanpreetKaur #WomenWorldT20 #T20 #India

    14-வது பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டியில் ‘டி’ பிரிவு ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி முதலாவது வெற்றியை பதிவு செய்தது ஜப்பான். #WomenWorldCupHockey #Japan #NewZealand
    லண்டன்:

    16 அணிகள் இடையிலான 14-வது பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ‘டி’ பிரிவில் நேற்று நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் ஜப்பான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி முதலாவது வெற்றியை பெற்றது. ஜப்பான் அணியில் ஒகவா, ஷிமிசூ தலா ஒரு கோல் அடித்தனர். ஆஸ்திரேலியா-பெல்ஜியம் இடையிலான மற்றொரு ஆட்டம் கோல் இன்றி ‘டிரா’ ஆனது.

    இன்றைய ஆட்டங்களில் ஜெர்மனி-அர்ஜென்டினா, அமெரிக்கா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது 2-வது லீக்கில் அயர்லாந்தை நாளை சந்திக்கிறது.  #WomenWorldCupHockey #Japan #NewZealand
    பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச் சுற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இத்தாலி 20 வருடத்திற்குப் பிறகு தகுதிப் பெற்றுள்ளது.
    உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச் சுற்றில் இத்தாலி பெண்கள் அணி குரூப் 6-ல் இடம்பிடித்திருந்தது. இதில் இதுவரை நடைபெற்ற 7 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இத்தாலி உலகக் கோப்பை தொடருக்கு தகுதிப் பெற்றுள்ளது. கடைசியாக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் போர்ச்சுக்கல் அணியை 3-0 என வீழ்த்தியது. இன்னும் ஒரு போட்டி மீதமுள்ளது.



    இதற்கு முன் இத்தாலி 1991 மற்றும் 1999 உலகக் கோப்பையில் விளையாடியிருக்கிறது. அதன்பின் தற்போதுதான் அடுத்த வருடம் பிரான்சில் நடைபெற இருக்கும் உலகக் கோப்பையில் 20 வருடம் கழித்து பங்கேற்க இருக்கிறது. இத்தாலியுடன் ஸ்பெயின் அணியும் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது.
    ×