search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "womens conference"

    • தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
    • இந்தியா கூட்டணி வெற்றி பெறுவதன் மூலம் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படும்.

    சென்னையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மகளிரணி நடத்தும் மகளிர் உரிமை மாநாடு தொடங்கியது. இதில், தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. முன்னிலை வகிக்கிறார்.

    இந்த மாநாட்டில் "இந்தியா" கூட்டணியை சேர்ந்த முன்னணி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக, இந்த மாநாட்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியா கூட்டணியின் மகளிர் தலைமைகள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். பாஜகவை முற்றிலுமாக வீழ்த்த வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற எண்ணத்தில் பிரதமர் செயல்படுகிறார்.

    உண்மையான அக்கறையுடன் மகளிர் இடஒதுக்கீடு மசோதா கொண்டுவரப்படவில்லை. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை உடனடியாக செயல்படுத்தி இருந்தால் பாராட்டி இருக்கலாம்.

    தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

    2024க்கு பிறகு பாஜகவின் ஆட்சி இருக்காது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

    சமூக நீதியை எந்த சூழ்நிலையிலும் விட்டு கொடுக்கக்கூடாது. இந்தியா கூட்டணைி கொள்கை கூட்டணி. இந்தியா கூட்டணி வெற்றி பெறுவதன் மூலம் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படும்.

    இந்த மாதத்திற்கான மகளிர் உரிமை தொகை இன்றே வந்துவிடும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பெண்களின் செயல்திறனே தேசத்தை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்லும்.
    • பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒருபோதும் சகித்துக்கொள்ள கூடாது.

    சென்னையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மகளிரணி நடத்தும் மகளிர் உரிமை மாநாடு தொடங்கியது. இதில், தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. முன்னிலை வகிக்கிறார்.

    இந்த மாநாட்டில் "இந்தியா" கூட்டணியை சேர்ந்த முன்னணி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக, இந்த மாநாட்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    மகளிர் உரிமை மாநாட்டில் காங்கிரஸ் செயலாளர் பிரியங்கா காந்தி பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இறந்த எனது தந்தையின் உடலை பெற முதல் முறையாக தமிழகம் வந்தேன். நீங்கள் தான் என் தாய், நீங்கள் தான் என் சகோதரி. உங்களுடன் இருப்பதை பெருமையாக கருதுகிறேன்.

    பெண்களே இந்தியாவின் தூண்கள். சமூக மாற்றத்திற்கான புரட்சி இங்கே தான் உருவானது. பெண் ஏன் அடிமையானாள் என்ற புத்தகத்தை 100 ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் எழுதி உள்ளார்.

    பெண்களின் செயல்திறனே தேசத்தை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்லும். பெண்களை மையமாக வைத்துதான் குடும்பம் என்பது கட்டமைப்படுகிறது.

    100 ஆண்டுகள் கழித்தும் பெரியார் கேட்ட அதே கேள்வியை தான் இன்றும் கேட்டுக் கொண்டு இருக்கிறோம்.

    இன்றும் பெண்களின் அதிகாரம் பறிக்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறது. மாற்றத்திற்கான சரியான தருணத்தில் இருக்கிறோம்.

    பெண்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். உரிமைக்காக பெண்கள் இனியும் காத்திருக்க கூடாது.

    மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒருபோதும் சகித்துக்கொள்ள கூடாது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×