என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "worker attack"
- ஆத்திரம் அடைந்த கோகுல்நாத் அருகே கிடந்த கல்லால் பன்னீர்செல்வத்தின் முகத்தில் தாக்கினார்.
- கல்லால் தாக்கியதில் பன்னீர்செல்வம் படுகாயம் அடைந்தார்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி பகுதியை சேர்ந்தவர்கள் பன்னீர்செல்வம்(59), தொழிலாளி. கோகுல்நாத்(22). இவர்கள் இருவரும் சேர்ந்து மதுகுடித்தபோது தகராறு ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த கோகுல்நாத் அருகே கிடந்த கல்லால் பன்னீர்செல்வத்தின் முகத்தில் தாக்கினார். இதில் பன்னீர்செல்வம் படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோகுல்நாத்தை கைது செய்தனர்.
- பணத்தகராறில் மகமுதாவின் சகோதரர்களான அக்பர் பாஷா, முகமது ரபி, பர்கத் ஆகிய 3 பேரும் சேர்ந்து அசோன் செரீப்பை தாக்கினர்.
- திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அக்பர் பாஷா உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் விக்னேஸ்வரா நகரை சேர்ந்தவர் அசோன் செரீப். சமையல் வேலை செய்து வருகிறார். இவரிடம் திருவள்ளூர் முகமது அலி தெருவை சேர்ந்த மகமுதா என்பவர் ரூ.60 ஆயிரம் கடன் வாங்கி இருந்ததாக தெரிகிறது. ஆனால் அவர் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இது தொடர்பான தகராறில் மகமுதாவின் சகோதரர்களான அக்பர் பாஷா, முகமது ரபி, பர்கத் ஆகிய 3 பேரும் சேர்ந்து அசோன் செரீப்பை தாக்கினர்.
இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அக்பர் பாஷா உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- விற்பனையாளர் மதுபாட்டிலுக்கு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக ரூ.10 வசூலித்தார்.
- வாலிபர் தட்டிக்கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த காக்களூர் பைபாஸ் சாலையில் டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. இங்கு நேற்று மாலை திருவள்ளூரை சேர்ந்த வாலிபர் ஒருவர் மதுபாட்டில் வாங்க சென்றார்.
அப்போது அங்கு இருந்த விற்பனையாளர் மதுபாட்டிலுக்கு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக ரூ.10 வசூலித்தார். இதனை வாலிபர் தட்டிக்கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனை அந்த வாலிபர் தனது செல்போனில் படம் பிடித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மதுக்கடை விற்பனையாளர், திடீரென அந்த வாலிபரை சரமாரியாக தாக்கினார். இருவரும் மதுக்கடை முன்பு கட்டிப்புரண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதனை கண்டு மதுபாட்டில் வாங்க வந்த குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த தாக்குதலில் வாலிபருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்து அவர் திருவள்ளூர் தாலுக்கா போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- கடந்த 10 மாதங்களுக்கு முன்பு எனது மனைவி ஒரு வாலிபருடன் ஓடி விட்டார்.
கோவை:
கோவை காளப்பட்டி அருகே உள்ள வீரியம்பா ளையத்தை ேசர்ந்தவர் முருகன் (வயது 31). கூலித் ெதாழிலாளி.
இவர் பீளமேடு போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- எனது சொந்த ஊர் தர்மபுரி. நான் கோவையில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகிறேன். இந்தநிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு எனது மனைவி ஒரு வாலிபருடன் ஓடி விட்டார். இதனால் தனியாக வசித்து வந்த எனக்கு செந்தில்முருகன் என்பவரது மனைவி கவிதா என்பவருக்கு எனக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது.
நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. நான் அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்று ஜாலியாக இருந்து வந்தேன். இந்த விவகாரம் கவிதாவின் கணவருக்கு தெரிய வரவே கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து நான் கவிதாவை அழைத்துக்கொண்டு தர்மபுரிக்கு சென்றேன். இது குறித்து அவரது கணவர் தர்மபுரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் எங்களை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது கவிதா அவரது கணவருடன் செல்ல மறுத்து விட்டார். இதனையடுத்து அவருடன் கோவைக்கு வந்த நான் வீரியம் பாளையத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தேன்.
சம்பவத்தன்று நான் சித்ரா சந்திப்பு வழியாக நடந்து சென்றேன். அப்போது அங்கு வந்த செந்தில்குமாரின் நண்பர்கள் நேரு நகரை சேர்ந்த ஆனந்தன் (31), ஆட்டோ டிரைவர் கணேசன் (34), சிவா ஆகியோர் அவரது மனைவியை அவருடனே அனுப்பி வைக்கும்படி கூறினர். அப்போது எங்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் கையில் வைத்து இருந்த பீர் பாட்டில் மற்றும் உருட்டு கட்டையால் தாக்கி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய என்னை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.
புகாரின் போரில் பீளேமேடு போலீசார் தாக்குதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து முருகனை தாக்கிய ஆனந்தன், கணேசன் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலை மறைவாக உள்ள சிவாவை தேடி வருகிறார்கள்.
திருவோணம்:
தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே எடையாத்தியை சேர்ந்தவர்கள் பழனிவேல், கருப்பையன், செவ்வந்தி. இவர்கள் 3 பேரும் கூலித் தொழிலாளர்கள். அதே பகுதியை சேர்ந்தவர்கள் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்துவேல் மற்றும் அண்ணாதுரை, அண்ணாமலை. இவர்கள் கூலித் தொழிலாளர்களான பழனிவேல் உள்ளிட்ட 3 பேரின் இடத்தை அபகரிக்கும் நோக்கத்தில் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் முத்துவேல், அண்ணாமலை, அண்ணாதுரை ஆகிய 3 பேரும் நேற்று பழனிவேல், கருப்பையன், செவ்வந்தி ஆகியோரது வீட்டுக்கு சென்று வீட்டை காலி செய்யுமாறு கூறி கற்களால் அவர்களை தாக்கியுள்ளனர். மேலும் 3 பேரின் வீடுகளையும் அடித்து சேதப்படுத்தியதோடு வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கி உள்ளனர். கற்கள் வீசி தாக்கியதில் காயமடைந்த பழனிவேலை அப்பகுதியினர் மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த சம்பவம் பற்றி பழனிவேல் உள்ளிட்ட 3 பேரும் வாட்டாத்திக்கோட்டை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் வழக்குப்பதிவு செய்து கூலித் தொழிலாளிகளை தாக்கிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட 3 பேரையும் தேடிவருகின்றனர்.
வந்தவாசி அடுத்த புன்னை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (34) கூலித்தொழிலாளி.
இவர் ஓசூரில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தி விட்டு அதே கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள மரத்தடியில் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த நெல்லியாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (22) பாஸ்கர் (26) ஜானகிராமன் (26) ஆகிய மூவரும் தூங்கி கொண்டிருந்த ஏழுமலையிடம் தகராறு செய்து கைகளால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஏழுமலை கீழ்கொடுங்காலூர் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப் பதிவு செய்து சுரேஷ் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினார்.
புதுச்சேரி:
புதுவை குமரகுரு பள்ளத்தை சேர்ந்தவர் கீதா (வயது 35). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கீதாவை விட்டு அவரது கணவர் ராஜு பிரிந்து சென்று விட்டார். இதையடுத்து கீதா தனது குழந்தைகளுடன் சாரம் ஜெயராம் நகர் அவ்வை வீதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இதற்கிடையே கீதாவுக்கும், தட்டு வண்டி தொழிலாளியான சடை ஆனந்த் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் இன்று மதியம் 1.00 மணி அளவில் இவர்கள் இருவருக்கும் இடையே வீட்டில் தகராறு ஏற்பட்டது.
அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த சடை ஆனந்த் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக கீதாவை குத்தினார். இதில், ரத்த வெள்ளத்தில் கீதா சாய்ந்தார். இதனை பார்த்ததும் சடை ஆனந்த் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
அக்கம் பக்கத்தினர் மற்றும் கீதாவின் உறவினர்கள் திரண்டு வந்து கீதாவை சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே கீதா பரிதாபமாக இறந்து போனார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் கோரிமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து தப்பி ஓடிய சடை ஆனந்தை தேடி வருகிறார்கள்.
பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் உத்தம பாளையம் அருகே உள்ள கோம்பை அமுல்நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 44). கூலி வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி பழனியம்மாள் (40).
இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பழனியம்மாளும், அவரது தாய் முத்தம்மாள் (60) என்பவரும் தோட்ட வேலைக்கு சென்று வந்தனர். நேற்று இரவு பழனியம்மாள் மற்றும் முத்தம்மாளை மணிகண்டன் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர்கள் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் பிணமானார்கள்.
இது குறித்து கோம்பை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் கொலை செய்யப்பட்ட பழனியம்மாள் மற்றும் முத்தம்மாளின் உடல்களை கைப்பற்றி உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மணிகண்டனிடம் விசாரணை நடத்தினர். அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
நான் எனது மனைவியை உறவுக்கு அழைக்கும் போதெல்லாம் மறுத்து வந்தார். இதனால் அவருடன் நான் அடிக்கடி தகராறு செய்தேன். அப்போது என் மனைவியும், மாமியாரும் சேர்ந்து என்னை அடித்து வீட்டை விட்டு வெளியே துரத்தி விடுவார்கள்.
என் மனைவி வேலை செய்யும் தோட்டத்தில் அவரை பார்க்க சென்ற போது அவர் அங்குள்ள வேறு ஒருவரிடம் சிரித்து பேசி பழகிக் கொண்டு இருந்தார். இதனால் வீட்டுக்கு வந்த என் மனைவியிடம் என்னுடன் இருக்க உனக்கு பிடிக்கவில்லையா? தோட்டத்தில் வேலை பார்க்கும் வேறு ஒருவருடன் சிரித்து பேசுகிறாய்? அவனுடன் உனக்கு தொடர்பு உள்ளதா? என சத்தம் போட்டேன். நேற்று இரவும் இது தொடர்பாக எங்களுக்குள் தகராறு வந்தது. பின்னர் என் மனைவி தூங்கச் சென்று விட்டார். ஆனால் ஆத்திரம் அடங்காமல் இருந்த நான் என் மனைவியை வெட்டிக் கொன்றேன். சத்தம் கேட்டு அருகில் தூங்கிக் கொண்டு இருந்த என் மாமியார் எழுந்து அதை தடுத்தார். அவரையும் வெட்டி கொன்றேன்.
இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து போலீசார் மணிகண்டனை கைது செய்தனர். நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தில் மனைவி மற்றும் மாமியாரை வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள பாட்டத்தூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 35). கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் வீட்டில் ஏற்பட்ட துக்க நிகழ்வின் போது இவருக்கும், அந்த ஊரை சேர்ந்த ஆறுமுகம் மகன் பாக்கியராஜ் என்பவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று கருணாகரன் வீட்டில் இறந்த உறவினருக்கு விஷேசம் நடைபெற்றுள்ளது. இதன் காரணமாக சங்கரன்கோவிலுக்கு வந்து விட்டு பாட்டத்தூருக்கு வந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் கருணாகரனை வழிமறித்த அதே ஊரை சேர்ந்த பாக்கியராஜ், மாரியப்பன் (40), சுரேஷ் (26), மாரியப்பன் மகன் ஆனந்தராஜ் (16) மற்றும் அவர்களது உறவினர் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த சமுத்திரபாண்டி உள்ளிட்டோர் வழிமறித்தனர். இதில் இவர்களுக்கும், கருணாகரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்தவர்கள் கருணாகரனை அவதூறாக பேசி அடித்து உதைத்து விட்டு தப்பி சென்று விட்டனர்.
இதில் காயமடைந்த கருணாகரன் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த டவுண் போலீசார் பாக்கியராஜ், மாரியப்பன், சுரேஷ், ஆனந்தராஜ் ஆகிய 4 பேரை கைது செய்தனர். தப்பி ஓடிய சமுத்திரபாண்டியை தேடி வருகின்றனர்.
கும்பகோணம்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கோணுலாம்பள்ளம் அடுத்த திட்டசேரி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 35), கூலி தொழிலாளி. இவரது மனைவி கொடியரசி (24). இவர்களுக்கு சிபாசினி (5), சந்தித் குமார் (3) ரேஷ்மா (1½) என்ற 3 குழந்தைகள் உள்ளனர்.
செந்தில்குமாரின் எதிர் வீட்டில் பார்த்திபன் (26) என்ற வாலிபர் தனது தாய் லட்சுமியுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் பார்த்திபனுக்கும், கொடியரசிக்கும் இடையே பழக்கம் காரணமாக இருவரும் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவர் செந்தில்குமாருக்கும், கொடியரசிக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் புத்தாண்டு அன்று பார்த்திபன், தனது செல்போனில் கொடியரசிக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து பேசியதாக கூறப்படுகிறது. இதை பற்றி கேள்விப்பட்ட செந்தில்குமார் , மனைவியின் மீது கடும் கோபத்தில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது செந்தில்குமாரை கண்டித்து கொடியரசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் மனைவி மீது கடும் ஆத்திரத்தில் செந்தில்குமார் இருந்து வந்தார். தொடர்ந்து நிம்மதியில்லாமல் தவித்து வந்த அவர் , மனைவியை கொன்று விட முடிவு செய்தார். இன்று அதிகாலையில் செந்தில்குமார் கண் விழித்தார். அப்போது தூங்கி கொண்டிருந்த கொடியரசியை பார்த்து ஆத்திரம் அடைந்தார். உடனே வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கொடியரசி கழுத்தை அறுத்தார். இதில் ரத்தம் பீறிட்டு வெளியேறியதால் அவர் அலறி துடித்தார்.
இதனால் மனைவி இறந்து விட்டால் தன்னை போலீசார் கைது செய்து விடுவார்களே என்று செந்தில்குமார் பயந்தார். உடனே அவர் மதுபாட்டிலால் தனது வயிற்றை கிழித்தார். இதில் அவரது குடல் சரிந்து ரத்தம் வெளியேறியது.
இதற்கிடையே கொடியரசின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவரையும், செந்தில்குமாரையும் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் செந்தில்குமார் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பற்றி திருப்பனந்தாள் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விருதுநகர்:
விருதுநகர் மேற்கு பாண்டியன் காலனியைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (வயது 64). இவர் கீழக் கடைத்தெருவில் பார்பர் ஷாப் நடத்தி வருகிறார். இவரது மருமகள் மாரிச்செல்வி அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
அப்போது சோலைக் கவுண்டன்பட்டியைச் சேர்ந்த கார்த்தி (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவருடன் ஏற்பட்ட தொடர்பால் மாரிச்செல்வி, கார்த்தியுடன் சென்று விட்டார்.
இது குறித்து தெரிய வந்ததும் மாரிச்செல்வியின் கணவர் மாரிச்சாமி, கார்த்தியை சந்தித்து தகராறு செய்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்தி நேற்று சிவசுப்பிரமணியனிடம், உனது மகன் தேவையில்லாமல் தகராறு செய்கிறார்’ என கூறினார்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் கார்த்தி தன்னை தாக்கியதாக விருதுநகர் பஜார் போலீசில் சிவசுப்பிரமணியன் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி கார்த்தியை கைது செய்தனர்.
குன்னத்தூர்:
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள சுக்காகவுண்டன்புதூரை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 56). பனியன் கம்பெனி ஊழியர். இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு பிரகாஷ் (28) என்ற மகன் உள்ளார்.
கைத்தறி தொழிலாளியான பிரகாஷ் நேற்று முன்தினம் இரவு காலதாமதமாக வீட்டுக்கு வந்தார். இதனை பழனிசாமி கண்டித்தார். இதனால் தந்தை- மகன் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. மீண்டும் மறுநாள் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பிரகாஷ் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து பழனிசாமியின் கழுத்து மற்றும் தலையில் வெட்டி விட்டு அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய பழனிசாமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து குன்னத்தூர் இன்ஸ்பெக்டர் தவமணி வழக்குப்பதிவு செய்து தந்தையை வெட்டி விட்டு தலைமறைவாக உள்ள பிரகாஷை போலீசார் தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்