search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Worker sacrifice"

    • தங்கவேல் (55), தொழிலாளியான இவர் கடந்த 11-ந் தேதி இரவு இளம்பிள்ளையில் இருந்து சின்னப்பம்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • இளம்பிள்ளை நோக்கி வந்த அரசு பஸ் தங்கவேல் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் இடங்கணசாலை அருகே உள்ள கோணேரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (55), தொழிலாளியான இவர் கடந்த 11-ந் தேதி இரவு இளம்பிள்ளையில் இருந்து சின்னப்பம்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது சின்னப்பம் பட்டியில் இருந்து இளம்பிள்ளை நோக்கி வந்த அரசு பஸ் தங்கவேல் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தங்கவேல் தலையில் பலத்த காயம் அடைந்த நிலையில் உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அந்த பகுதியினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் ஆஸ்பத்திரியில் பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். இந்த விபத்து குறித்து தங்கவேலுவின் மகன் கார்த்திக்கேயன் கொடுத்த புகாரின் பேரில் காகாபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தங்கவேல் (55), தொழிலாளியான இவர் கடந்த 11-ந் தேதி இரவு இளம்பிள்ளையில் இருந்து சின்னப்பம்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • சின்னப்பம் பட்டியில் இருந்து இளம்பிள்ளை நோக்கி வந்த அரசு பஸ் தங்கவேல் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் இடங்கணசாலை அருகே உள்ள கோணேரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (55), தொழிலாளியான இவர் கடந்த 11-ந் தேதி இரவு இளம்பிள்ளையில் இருந்து சின்னப்பம்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது சின்னப்பம் பட்டியில் இருந்து இளம்பிள்ளை நோக்கி வந்த அரசு பஸ் தங்கவேல் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தங்கவேல் தலையில் பலத்த காயம் அடைந்த நிலையில் உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அந்த பகுதியினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் ஆஸ்பத்திரியில் பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். இந்த விபத்து குறித்து தங்கவேலுவின் மகன் கார்த்திக்கேயன் கொடுத்த புகாரின் பேரில் காகாபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • புறா பிடிப்பதற்காக சுவர் மீது ஏறியபோது பறிதாபம்
    • வழக்கு பதிவு செய்து விசாரணை

    ராணிப்பேட்டை:

    ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் அசோக் கர்கேட்டா(22), திருமணமானவர்.இவர் ராணிப்பேட்டை அடுத்த நெல்லிக்குப்பத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் கடந்த சில மாதங்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.

    அசோக் கர்கேட்டா தொழிற்சாலையின் மேலே புறாக்கள் இருப்பதைக் பார்த்து அடிக்கடி மேலே சென்று புறாக்களை பிடித்து வந்துள்ளார்.

    நேற்று காலையிலும் புறா பிடிப்பதற்காக சுவர் மீது ஏறினார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது பற்றி தகவலறிந்த போலீசார் அசோக் கர்கேட்டா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரும்பு பயிரிடப்பட்ட நிலத்தில் உடல் கருகிய நிலையில் உடல் கிடப்பதை பார்த்தனர். அருகே சென்றபோது மின் கம்பி அறுந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். கட

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சியை அடுத்த சி.கீரனூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 56). விவசாய தொழிலாளி. இவர் அதே கிராமத்தில் விவசாய பணிக்கு செல்வதாக கூறிவிட்டு நேற்று காலை வீட்டிலிருந்து சென்றார்.நேற்று மாலை வெகுநேரமாகி யும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தார் பழனிவேலை தேடினர். விளைநிலங்களில் இரவு நேரத்தில் தேடும் பணியை தொடருவதில் சிக்கல் ஏற்பட்டதால், காலை தேடிக் கொள்ளலாம் என்று வீடு திரும்பினர்.இன்று அதிகாலை முதல் அவர் பணிக்கு சென்ற விளைநில பகுதியில் மீண்டும் தேடும் பணியில் பழனிவேலின் குடும்பத்தார் ஈடுபட்டனர்.அப்போது, அங்கிருந்து கரும்பு பயிரிடப்பட்ட நிலத்தில் உடல் கருகிய நிலையில் உடல் கிடப்பதை பார்த்தனர். அருகே சென்றபோது மின் கம்பி அறுந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    இது தொடர்பாக மின் வாரியத்திற்கும், கருவேப்பிலங்குறிச்சிபோலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். மின் விநியோகத்தை நிறுத்திய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கருகிய நிலையில் இருந்த உடலை கைப்பற்றினர். இதனைப் பார்த்த பழனிவேலுவின் குடும்பத்தார், இறந்தவர் பழனிவேல் என்பதை உறுதி செய்தனர்.மேலும், அங்கு அவர்கள் கதறியழுத காட்சி காண்போரிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்கு பதிந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார், பிரேத பரிசோதனைக்காக பழனிவேலுவின் உடலை விருத்தாசலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விவசாய கூலி வேலைக்கு சென்றவர் அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • மதுபோதையில் தடுமாறி கீழே விழுந்தார்
    • போலீசார் விசாரணை

    கலவை:

    கலவை கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் உமேஷ் (வயது 45) கட்டிட மேஸ்திரி. இவர் கடந்த 29-ந் தேதி அவரது வீட்டின் மாடியில் இருந்து படி வழியாக இறங்கினார். அப்போது அவர் மதுபோதையில் இருந்ததால் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

    இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரது குடும்பத்தினர் உமேஷை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஆற்காடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில்,சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கலவை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • தோல் தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டிருந்த போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தோல் தொழிற்சாலையில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த நசீப் கான் (வயது 22) என்பவர் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் வழக்கம்போல் நசீப் கான் பணியில் ஈடுபட்டிருந்த போது தொழிற்சாலை இயந்திரத்தை இயக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட நசீப்கான் மயங்கி விழுந்தார்.

    உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக ராணிப்பேட்டை தனியார் மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் நசீப்கான் வரும் வழியி லேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் விசாரணை
    • ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டனர்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அத்தி மகுல பள்ளியை சேர்ந்தவர் ஜெயவேல் (வயது 50). தொழிலாளி.

    இவர் நேற்று இரவு தேவலாபுரம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரி இவர் ஓடி சென்ற பைக் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்டு ஜெயவேல் படுகாயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயவேல் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து உமராபாத் போலீசார் இருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போலீசார் ஜெயவேல் உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலத்தில் இருந்து கரூர் நோக்கி அதி வேகமாக சென்ற லாரி ஒன்று மணி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • இதில் மணி மோட்டார் சைக்கிளுடன் தார் சாலையில் கீழே விழுந்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலூகா உழவர் பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் மணி( 55). கூலித் தொழிலாளி.

    இவர் இன்று காலை வீட்டில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு படமுடி பாளையத்தில் உள்ள தாலுகா அலுவலகம் அருகே சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்த போது சேலத்தில் இருந்து கரூர் நோக்கி அதி வேகமாக சென்ற லாரி ஒன்று மணி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மணி மோட்டார் சைக்கிளுடன் தார் சாலையில் கீழே விழுந்தார்.

    இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் இருந்த வர்கள் ஓடிவந்து உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை பரமத்திவேலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே மணி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து பரமத்தி வேலூர் போலீசில் புகார் செய்தனர்.

    அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    • நீச்சல் பழக சென்றபோது விபரீதம்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் சுவால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 23), தச்சு தொழிலாளி. இவர் தனது நண்பர்களுடன் அரக்கோணம் அடுத்த அம்மனூர் தேவதானம் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் நீச்சல் பழகச் சென்றார்.

    அப்போது திடீரென தாமோதரன் நீரில் மூழ்கினார். நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் கத்தி கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு வந்த அந்த பகுதி மக்கள் கிணற்றில் குதித்து தாமோதரனை தேடினர்.

    இருப்பினும் அவர் கிடைக்கவில்லை. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரக்கோணம் தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தாமோதரனை பிணமாக மீட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் டவுன் போலீசார் தாமோதரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அலுமினிய மட்டக்கோலை தூக்கி சென்றார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த கீழ் புதுப்பாக்கம் பசும்பொன் நகரை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 48). கட்டிட மேஸ்திரி.

    இவர் நேற்று அதே பகுதியில் கட்டிடப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது வீட்டு மாடிக்கு கொண்டு செல்ல அலுமினிய மட்டக்கோலை தூக்கி சென்றார். அப்போது வீட்டின் அருகே உள்ள மின் கம்பியில் மட்ட கோல் பட்டுள்ளது. அதிலிருந்து மின்சாரம் தாக்கி மகேந்திரன் தூக்கி வீசப்பட்டார்.

    அங்கு பணியில் ஈடுபட்டிருந்த சக ஊழியர்கள் மயங்கி கிடந்த மகேந்திரனை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து செய்யாறு போலீசில் மகேந்திரன் மகன் அருண் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மகேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எதிர்பாராத விதமாக விழுந்தார்
    • போலீசார் விசாரணை

    போளூர்:

    போளூர் அடுத்த அல்லி நகரை சேர்ந்தவர் பழனி (வயது 45). இவர் செங்கல் சூளையில் வேலை செய்து வந்தார்.

    இவரது மனைவி வசந்தி, வினோத், விக்னேஷ் என 2 மகன்கள் உள்ளனர்.

    நேற்று மாலை பழனி அதே பகுதியில் உள்ள கிணற்றின் அருகே பேசிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்தார். இதனைக் கண்ட அவரது மகன்கள் கத்தி கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள் கிணற்றில் விழுந்த பழனியை மீட்டு மேலே கொண்டு வந்தனர். பின்னர் போளூர் அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பழனி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பழனி உடலை மீட்டு உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கைப்பிடி இல்லாத மாடிப்படியில் ஏறியபோது விபரீதம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த தணிகை போளூர் கிராமத்தில் பத்மஜா என்பவரின் வீடு உள்ளது. இவரது 6 மாடி கொண்ட அடுக்குமாடி வீட்டில் மாடிக்கு செல்ல படிக்கட்டில் கைப்பிடி வைக்கப்படவில்லை.

    இந்நிலையில் அந்த வீட்டிற்கு வண்ண பூச விழுப்புரம் மாவட்டம் துருவை கிராமத்தில் இருந்து 3 தொழிலாளர்கள் பணிசெய்து வந்தனர்.

    இவர்கள் சுண்ணாம்பு அடிக்கும் பணியை மேற்கொண்டு வந்த நிலையில் நேற்று இரவு தனஞ்செழியன் (வயது 51) என்ற தொழிலாளி கைப்பிடி இல்லாத மாடிப்படியில் ஏறிய போது 3-வது மாடி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்தார்.

    இதனால் பலத்த காயம் அடைந்த தனஞ்செழியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த அரக்கோணம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×