search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "works"

    • நீடாமங்கலம் துணைமின் நிலையத்தில் வருகிற 12-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    திருவாரூர்:

    நீடாமங்கலம் துணைமின் நிலையத்தில் வருகிற 12-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் நீடாமங்கலம், சித்தமல்லி, ரிஷியூர், ஒளிமதி, பச்சகுளம், பெரம்பூர், கானூர், பருத்திக்கோட்டை, சர்வமான்யம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் 12-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாலநேத்திரம் தெரிவித்துள்ளார்.

    • 15 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றப்பட்டனர்.
    • சூப்பிரண்டு வந்திதா பாண்டே அதிரடி

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டத்தில் போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் சப்- இன்ஸ்பெக்டர்களில் 15 பேரை பணியிட மாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே அதிரடி உத்தரவிட்டுள்ளார். இதில் பொது மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிட மாற்றம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • எனது வார்டு பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி பணிகள் தொடங்கப்பட்டு பாதியிலேயே நிற்கின்றன.
    • அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்படும்.

    சீர்காழி:

    வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியில் மன்ற கூட்டம் நடைபெற்றது.பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர் தலைமை வகித்தார்.

    செயல் அலுவலர் அசோகன், துணைத் தலைவர் அன்புச்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பதிவரை எழுத்தர் உதயகுமார் மன்றத் தீர்மானங்களை பிடித்தார்.

    கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் வருமாறு:-

    வித்யா தேவி:-

    எனது வார்டு பகுதியில் சேதம் அடைந்த நிலையில் குடிநீர் குழாய் உள்ளது. இதனை சீரமைத்து தர வேண்டும். ராஜா கார்த்திகேயன்:-

    எனது வார்டு பகுதியில் எந்த வளர்ச்சி பணிக ளும் இதுவரை மேற்கொள்ள ப்படவில்லை. காட்டு நாயக்கன் தெருவில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைத்து தர வேண்டும்.

    முத்துக்குமார்:-

    வைத்தீ ஸ்வரன் கோயில் பகுதிகளில் உள்ள பொதுப்பணி த்துறைக்கு சொந்தமான வாய்க்கால்களை தூர்வா ரப்படாததால் இந்த ஆண்டு மழை காலங்களில் மழைநீர் வடிய வழியில்லாமல் ஊருக்குள் மழைநீர் புகும்.

    முன்கூட்டியே பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கென்னடி:-

    எனது பகுதியில் மின் கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதனை சரி செய்ய வேண்டும்.

    மீனா:-

    பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித் திரியும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் . மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

    பிரியங்கா: -

    எனது வார்டு பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி பணிகள் தொடங்கப்பட்டு பாதியிலேயே நிற்கின்றன. இந்த பணியினை துரிதப்படுத்த வேண்டும்.

    துணைத் தலைவர் அன்புசெழியன்:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலுக்குள் வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தேவையான வளர்ச்சிப் பணிகளை தேர்வு செய்து பணிகளை தொடங்க வேண்டும்.

    தலைவர் பூங்கொடி:-

    வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி பகுதியில் வரும் மார்ச் மாதம் முதல் ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் (100 நாள் வேலை) தமிழக அரசு சார்பில் செயல்படுத்த உள்ளது.

    இதற்கு அனைத்து ஊராட்சி மன்ற உறுப்பி னர்களும் ஆதரவு தர வேண்டும்.

    உறுப்பி னர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிதி நிலைக்கேற்ப உடனுக்குடன் நிறைவேற்றப்படும் என்றார்.

    • வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ. 4.42 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது
    • அமைச்சர் சிவசங்கர் திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நன்னை, வடக்கலூர், கிழுமத்தூர், மிளகாநத்தம், கீழப்புலியூர், மழவராயநல்லூர் ஆகிய கிராமங்களில் பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுதல், சிமெண்ட் சாலை அமைத்தல், கதிரடிக்கும் களம் அமைத்தல் போன்ற ரூ. 4.42 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர்சிவசங்கர், மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் தலைமையில் அடிக்கல் நாட்டினார்.

    இந்நிகழ்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பாண்டியண், மேலாண் இயக்குநர் (த.அ.போ.(கும்ப)லிட்,கும்பகோணம் மோகன், பொது மேலாளர் (த.அ.போ.(கும்ப)லிட்)திருச்சி மண்டலம் சக்திவேல், வேப்பூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் பிரபா செல்லப்பிள்ளை பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் தேவேந்திரன், உதவி பொறியாளர் சதீஷ்குமார், வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார்

    உள்ளிட்ட அலுவலர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் நன்னை சின்னு, கீழப்புலியூர் சாந்தி செல்வராஜ், ஒகளூர் அன்பழகன், வசிஷ்டபரம் பன்னீர்செல்வம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் முக்கிய பிரதிநிதிகள் பலர் 

    • ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.
    • கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருமரு கல் அடுத்த கட்டுமாவடி ஊராட்சி கோதண்டராஜ புரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும், கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

    ஆய்வின்போது ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜவகர், ஊராட்சி தலைவர் சரவணன், ஒன்றிய பொறியாளர் செந்தில் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • கடந்த சில மாதத்திற்கு முன்பு பணிகள் தொடங்கிய நிலையில் இன்னும் முடிவடையவில்லை.
    • குளத்தில் பல மாதங்களாக தண்ணீர் இல்லை.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், மெலட்டூரில் பேரூராட்சி பகுதியில் உள்ள வடக்கு குளம் சுற்று சுவர் அமைத்து நான்கு கரைகளிலும் பூங்கா அமைக்கும் பணி ரூ. 117 லட்ச மதிப்பில், கடந்த சில மாதத்திற்கு முன்பு பணிகள் தொடங்கிய நிலையில் இன்னும் பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது.

    வடக்கு குளத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் இன்னும் குளத்தில் தண்ணீர் திறந்து விடுவது தாமதமாகி வருகிறது அதனால் குளத்தில் பல மாதங்களாக தண்ணீர் இல்லாததால் வறட்சியின் காரணமாக வடக்கு குளத்தை சுற்றியுள்ள குடிநீர் ஆதாரங்கள் செயல் இழக்கும் அபாயம் உள்ளதால் வடக்கு குளத்தில் கட்டுமான பணிகளை விரைந்து முடித்து குளத்தில் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • நிலத்தடி நீரும் உப்பு நீராக மாறி வருவதால் பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர்.
    • கதவணை கட்டும் பணிகள் கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடங்கியது.

    சீர்காழி:

    சீர்காழி அருகே கொண்டல் தலைப்பிலிருந்து உருவாகும் உப்பனாறு கொண்டல், வள்ளுவக்குடி, அகணி, சீர்காழி, சட்டநாதபுரம், பனமங்கலம், திட்டை, தில்லைவிடங்கன், எடமணல், திருநகரி, காரைமேடு, புதுத்துறை, வழுதலைக்குடி வழியாக சென்று திருமுல்லைவாசலில் கடலில் கலந்து வருகிறது.

    இந்த உப்பனாறு மூலம் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மேம்பட்டு வந்தது. இந்நிலையில் கோடை காலங்களில் கடல் நீர் உப்பனாற்று முகத்துவாரம் வழியாக 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு உப்புகுந்து நிலத்தடி நீர் முழுதும் பாதிக்கப்பட்டு உவர் நீராக மாறி வருகிறது. இதனால் 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம் பாதிக்கப்படுவதோடு, நிலத்தடி நீரும் உப்பு நீராக மாறி பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர்.

    கடந்த 2020 ஆம் ஆண்டு நபார்டு உலக வங்கி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு பணிகள் தொடங்கியது. ரூ. 30 கோடியே 96 லட்சத்தில் திருநகரியில் உப்பனாற்றின் குறுக்கே கதவனை கட்டும் பணிகள் தொடங்கியது.

    இப்பணிகள் 18 மாதங்களில் நிறைவடைய வேண்டும். ஆனால் மூன்று ஆண்டுகள் ஆகியும் பணிகள் நிறைவடையாததால் கிராமங்களில் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறுவதை தடுக்க முடியாமல் கேள்விக்குறியாக உள்ளது. சுமார் 240 மீட்டர் நீளத்திற்கு கதவணை அமைக்கப்பட்டு வரும் நிலையில் இதில் 39 ஷட்டர்கள் பொருத்தப்படவுள்ளன.

    அவற்றின் 18 ஷட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் மெத்தனமாக ஆமை வேகத்தில் நடைபெறுவதால் பொதுமக்கள், கிராம மக்கள், விவசாயிகள் பாதிப்பு உள்ளாவது தொடர்கதையாக உள்ளது.இதனிடையே இப்பணிகளை முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ. பி.வி. பாரதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறுகையில், கடந்த அ.தி.மு.க ஆட்சியின் போது திருநகரி உப்பனாற்றில் கதவனைக் கட்ட நிதி ஒதுக்கீடு பெற்று கடந்த 2020 ஆகஸ்டு மாதம் பணிகள் தொடங்கியது.

    ஆனால் தற்போது ஆமை வேகத்தில் நடந்து வருகின்றன. எனவே வரும் மழை காலத்திற்குள் அனைத்து பணிகளையும் நிறைவு செய்து இதில் தண்ணீரைத் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அப்போது அக்செப்ட் அமைப்பை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் ஜெக.சண்முகம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • ராகவாம்பாள்புரம் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையை அடுத்த சாலியமங்கலம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் நல்லையன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை அருகே பூண்டி மற்றும் ராகவாம்பாள்புரம் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பூண்டி, சாலிய மங்கலம், திருபுவனம், மலையர்நத்தம், குடிகாடு, செண்பகபுரம், பள்ளியூர், களஞ்சேரி, இரும்புத்தலை, ரெங்கநாதபுரம், சூழியக்கோட்டை, கம்பர்நத்தம், அருந்தவபுரம், வாளமர்கோட்டை, ஆர்.சுத்திப்பட்டு, அருமலைக்கோ ட்டை, சின்ன புலிகுடிக்காடு, நார்த்தேவன்குடிக்காடு, அரசப்பட்டு, வடக்கு நத்தம், மூர்த்தியம்பாள்புரம், பனையக்கோட்டை, சடையார்கோவில், துறையுண்டார்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சாக்கோட்டை துணைமின் நிலையத்தில் வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    கும்பகோணம்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கும்பகோணம் நகர உதவி செயற்பொறியாளர் பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    சாக்கோட்டை துணைமின் நிலையத்தில் வருகிற 10-ந் தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் கும்பகோணம், உமா மகேஸ்வரபுரம், கோசி மணி நகர், தாராசுரம், எலுமிச்சங்கா ய்பாளையம், அண்ணல் அக்ரஹாரம், திப்பிராஜபுரம், அரியத்திடல், சிவபுரம், உடையாளூர், சுந்தர பெருமாள்கோவில், நாச்சியார் கோவில், திருநாகே ஸ்வரம், முருக்கங்குடி, அய்யாவாடி, புதூர், அவனியாபுரம், திருநீலக்குடி, பட்டீஸ்வரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்திய வரலாற்றில் சோழர்களின் காலம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
    • தற்போது நிரந்தரமாக இந்த அருங்காட்சியகம் தஞ்சையில் அமைய உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரியகோவில் மேம்பாலம் அருகே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. அருங்காட்சியகம் அமைய உள்ள இடத்தை கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் தமிழ்நாடு சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையத்துறை அரசு முதன்மை செயலாளர் மணிவாசன், அருங்காட்சியக ஆணையர் அரவிந்த் ஆகியோர் முன்னிலையில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:-

    இந்திய வரலாற்றில் சோழர்களின் காலம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தஞ்சை பெரியகோவிலை கட்டி மாமன்னன் ராசராச சோழன், கங்கைகொண்ட சோழபுரம் கட்டிய ராஜேந்திர சோழன் என பிற்கால சோழர்களின் பங்களிப்பு என தமிழகத்தில் நிலை நாட்டிய பெருமை உண்டு. சோழர்களின் போர் வெற்றி, கோவில் பணிகள், சமுதாய பணிகள், கலைத்திறன் என எல்லாவற்றையும் விளக்கக்கூடிய வகையில் அருங்காட்சியகம் அமைய உள்ளது.ஏற்கனவே பெரியகோவில் ஆயிரம் ஆண்டு விழாவின்போது சோழர்களின் பெருமையை விளக்கும் விதமாக மிகப்பெரிய கண்காட்சி நடத்தப்பட்டது. அது ஒரு குறிப்பிட்ட காலம் தான் நடைபெற்றது. தற்போது நிரந்தரமாக இந்த அருங்காட்சியகம் தஞ்சையில் அமைய உள்ளது. பெரியகோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எளிதாக அருங்காட்சி யகத்திற்கு வந்து பார்ப்பதற்கு சிறந்த இடமாக அமைந்துள்ளது. விரைவில் முதல்-அமைச்சரின் ஒப்புதலின்பேரில் கட்டுமான பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மாவட்ட சுற்றுலா அலுவலர் நெல்சன், தஞ்சை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் (பொறுப்பு) சிவக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • ரூ.70 லட்சம் மதிப்பில் பணிகள் தொடங்குவதற்கு பூமிபூஜை நடைபெற்றது.
    • மீதமுள்ள 2 பங்கினை நகராட்சி சார்பில் வழங்கி பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை மாதிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு தலைவி, பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களின் முயற்சியில் அடிப்படைத் தேவைகள் மற்றும் கட்டுமான பணிகளை மாணவ, மாணவிகளின் பெற்றோர், முன்னாள் மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் ஆதரவுடன் பல்வேறு கட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    பள்ளியின் மேலாண்மை குழு உறுப்பினர் முருகேசன் பள்ளியின் வளர்ச்சிக்காக ரூ.50 ஆயிரம் கொடுத்தார்.அதன் ஒரு கட்டமாக பள்ளி வளாகத்தில் தரைத்தளம் (பேவர் பிளாக்) அமைக்க முடிவெடுக்கப்பட்டு நகராட்சி அதிகாரிகளால் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு ரூ.70 லட்சம் மதிப்பில் பணிகள் தொடங்குவதற்கு பூமி பூஜை செய்யப்பட்டது. அதில் நமக்கு நாமே திட்டத்தின் அடிப்படையில் மூன்றில் ஒரு பங்கு நிதியினை பள்ளி மேலாண்மை குழு சார்பாக வழங்குவது என்றும், மீதமுள்ள இரண்டு பங்கினை நகராட்சி சார்பில் வழங்கி இந்த பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    பள்ளி மேலாண்மை குழு தலைவி சுகன்யாவின் கோரிக்கையை அடுத்து, அந்த வார்டு உறுப்பினர் முன்னாள் நகர்மன்ற தலைவர் ஜெயபாரதி விஸ்வநாதன், தற்போதைய நகர்மன்ற தலைவர் சண்முகப்பிரியா செந்தில்குமார், இந்தப் பணியினை செய்து கொடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

    தொடர்ந்து நடைபெற்ற பூமி பூஜையின் போது நகராட்சி ஆணையர் முருகன், பொறியாளர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.104 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.
    • விரைந்து பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

    நாகப்பட்டினம்:

    நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் ரெயில்வே மேம்பால பணி ஆய்வு செய்து கூறியதாவது:-

    நாகப்பட்டினம் - அக்கரைப்பேட்டை ரயில்வே மேம்பாலம் கட்டிமுடிக்கப்படாமல் நீண்டகாலமாக பாதியிலேயே நின்ற நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்ததும் சட்டமன்றத்தில் நான் இது குறித்து பேசினேன்.

    அப்போது, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு, விரைவில் பணி தொடங்கப்படும் என்று அறிவிப்பு செய்தார். அதன்படி ரூ.104 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    அதை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் என்.கெளதமன் ஆகியோருடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தோம்.

    விரைந்து பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளிடம் வலியுறுத்தினோம். இவ்வாறு ஷா நவாஸ் எம்.எல்.ஏ கூறினார்.

    ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, சார் ஆட்சியர் பானோத் ம்ருகேந்தர் லால், நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, நகராட்சி செயற்பொ றியாளர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    ×