search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "world leaders meet"

    அர்ஜென்டினாவில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டில் பங்கேற்ற டிரம்ப், ஜி ஜின்பிங் மற்றும் ஷின்சோ அபே உள்ளிட்ட உலக தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். #G20summit #Modi
    புய்னோஸ் எய்ரேஸ்:

    ஜி-20 என்று சுருக்கமாக அழைக்கப்படும் அமைப்பானது உலகில் வளர்ச்சி அடைந்த 20 நாடுகளான அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய‌வை இடம்பெற்றுள்ளன.
     
    இந்த அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் உச்சி மாநாடுகள் நடைபெற்று வருகிறது. அவ்வகையில், இந்த ஆண்டுக்கான 13-வது உச்சி மாநாடு அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் புய்னோஸ் எய்ரேஸ் நகரில் நாளை தொடங்கி டிசம்பர் முதல் தேதி வரை நடைபெறுகிறது.



    இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அர்ஜென்டினா சென்றார். அங்கு அவருக்கு தூதரக அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

    இதற்கிடையே, அர்ஜென்டினாவில் இன்று நடைபெற்ற ஜி 20 மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாதிகள் உலக நாடுகளுக்கு கடும் அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றனர் என தெரிவித்தார்.

    இந்த மாநாட்டின்போது சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உள்ளிட்ட பல்வேறு உலக தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. #G20summit #Modi
    ×