search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "WWDC 2023"

    • ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர டெவலப்பர்கள் நிகழ்வு ஜூன் மாதம் நடைபெறுகிறது.
    • ஒவ்வொரு ஆண்டும் டெவலப்பர்கள் நிகழ்வில் மென்பொருள் சார்ந்த புதிய அறிவிப்புகளை ஆப்பிள் வெளியிட்டு வருகிறது.

    ஆப்பிள் நிறுவனம் தனது சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வு (WWDC 2023) ஜூன் 5 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்து இருக்கிறது. விர்ச்சுவல் முறையில் நடைபெறும் நிகழ்வு ஜூன் 5 ஆம் தேதி துவங்கி ஜூன் 9 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. ஆப்பிள் பார்க் வளாகத்தில் டெவலப்பர்கள் நேரடியாக கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதுவரை நடைபெற்ற டெவலப்பர்கள் நிகழ்வுகளிலேயே மிகவும் பெரியது மற்றும் அதிக சுவாரஸ்யங்கள் நிறைந்த நிகழ்வாக WWDC 2023 இருக்கும் என ஆப்பிள் நிறுவனத்தின் சர்வதேச டெவலப்பர் தொடர்பாளர் பிரிவு துணை தலைவர் சூசன் பிரிஸ்காட் தெரிவித்து இருக்கிறார். "WWDC 2023 எங்களின் மிகப் பெரிய மற்றும் அதிக சுவாரஸ்யங்கள் நிறைந்த ஒன்றாக இருக்க போகிறது. இந்த சிறப்பு நிகழ்ச்சியின் போது ஆன்லைனிலும், நேரிலும் உங்களை பார்க்க காத்திருக்க முடியவில்லை!" என்று அவர் தெரிவித்தார்.

     

    வழக்கமாக ஆப்பிள் நிறுவனம் தனது வருடாந்திர சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வில் புதிய ஐஒஎஸ், மேக்ஒஎஸ், ஐபேட் ஒஎஸ், வாட்ச் ஒஎஸ் மற்றும் டிவி ஒஎஸ் உள்ளிட்டவைகளை அறிவிக்கும். அதே வரிசையில், இந்த ஆண்டும் ஆப்பிள் தனது புதிய மென்பொருள் சார்ந்த அறிவிப்புகளை WWDC 2023 நிகழ்வில் வெளியிடவுள்ளது.

    அதன்படி இந்த ஆண்டு பல்வேறு மேம்படுத்தல்கள் மற்றும் புதிய அம்சங்கள் நிறைந்த ஐஒஎஸ் 17 வெர்ஷனை ஆப்பிள் அறிமுகம் செய்யும் என தெரிகிறது. ஆப்பிள் தெரிவித்து இருப்பதை வைத்து பார்க்கும் போது, இந்த ஆண்டின் WWDC நிகழ்வு சிறப்பான ஒன்றாக இருக்கும். கடந்த சில மாதங்களில் வெளியான தகவல்களை உண்மையாக்கும் பட்சத்தில் ஆப்பிள் தனது விர்ச்சிவல் ரியாலிட்டி அல்லது ஆக்மெண்டெட் ரியாலிட்டி ஹெட்செட்-ஐ WWDC 2023 நிகழ்வில் அறிமுகம் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

     

    இவைதவிர ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புதிய மேக் ஹார்டுவேர் சாதனத்தை இந்த நிகழ்வில் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. ஆப்பிள் சமீபத்தில் வெளியிட்டு வரும் டீசர்களின் படி சிலிகான் மேக் ப்ரோ மாடலும் இதே நிகழ்வில் அறிமுகம் செய்யப்படலாம். இவற்றுடன் 15 இன்ச் மேக்புக் ஏர் மாடலும் இணையும் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு நிகழ்வில் ஆப்பிள் 13 இன்ச் மேக்புக் ஏர் மாடலை அறிமுகம் செய்தது. இதன் காரணமாக புதிய மேக்புக் ஏர் அறிமுகம் செய்யப்படும் என்றே தெரிகிறது.

    சமீபத்தில் தான் ஆப்பிள் நிறுவனம் தனது ஐஒஎஸ் 16.4 வெர்ஷனை வெளியிட்டது. புதிய ஐஒஎஸ் வெர்ஷன் உலகம் முழுக்க ஐபோன் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் ஏராளமான புதிய அம்சங்கள், மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு புதிதாக 21 எமோஜிக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இவை யுனிகோட் 15.0 கீழ் இடம்பெற்றுள்ளன.

    ×