search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Yaris"

    ஆண்டு இறுதியை முன்னிட்டு டொயோட்டா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி வழங்குகிறது. #Toyota



    டொயோட்டா நிறுவன கார் மாடல்களுக்கு ஆண்டு இறுதியை முன்னிட்டு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியா முழுக்க இயங்கி வரும் ஜப்பான் நிறுவனத்தின் விற்பனை மையங்களில் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. 

    பழைய மாடல்களின் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் புது சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜனவரி 2019 முதல் டொயோட்டா கார் மாடல்களின் விலை 4 சதவிகிதம் வரை அதிகரிக்கப்பட இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்து இருக்கும் நிலையில், புது சலுகைகள் புதிய கார் வாங்குவோருக்கு பயனுள்ளதாக இருக்கும் என தெரிகிறது.



    டொயோட்டா ஃபார்ச்சூனர்

    ஃபார்ச்சூனர் எஸ்.யு.வி. கார் வாங்குவோருக்கு ரூ.1.25 லட்சம் மதிப்பிலான சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. டொயோட்டா ஃபார்ச்சூனர் மாடலில் 2.8-லிட்டர் டீசல் மோட்டார் கொண்ட மாடலுக்கு அதிகபட்ச தள்ளுபடி வழங்கப்படுகிறது, இதே போன்று 166 பி.ஹெச்.பி. பவர் கொண்ட 2.7-லிட்டர் பெட்ரோல் என்ஜின் மாடலுக்கும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது.

    டொயோட்டா யாரிஸ்

    இந்தியாவில் மாருதி சுசுகி சியாஸ், ஹோன்டா சிட்டி மற்றும் ஹூன்டாய் வெர்னா போன்ற மாடல்களுக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்ட டொயோட்டா யாரிஸ் 1.5-லிட்டர் பெட்ரோல் என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 7-ஸ்டெப் சி.வி.டி. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. புது யாரிஸ் மாடலுக்கு அதிகபட்சம் ரூ.1.1 லட்சம் மதிப்புள்ள சலுகைகள் வழங்கப்படுகிறது.



    டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா

    இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் இன்னோவா மாடலுக்கு நேரடி போட்டியாக எந்த மாடலும் இல்லை என்றாலும், இரண்டாம் தலைமுறை மாருதி சுசுகி எர்டிகா மற்றும் மஹிந்திரா மராசோ உள்ளிட்டவை விற்பனையில் போட்டி போடுகின்றன. டொயோட்டா எம்.பி.வி. மாடலில் 150 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் 2.4 லிட்டர் டீசல், 174 பி.ஹெச்.பி. வழங்கும் 2.8 லிட்டர் டீசல், 168 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் 2.7 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. 

    வாடிக்கையாளர்கள் டீசல் என்ஜின் கொண்ட மாடல்களுக்கு ரூ.1 லட்சம் வரையிலான சலுகைகளுடன், எக்சேஞ்ச் சலுகை வழங்கப்படுகிறது. பெட்ரோல் மாடல்களுக்கு அறிவிக்கப்படாத மறைமுக சலுகை வழங்கப்படுகிறது என்றாலும், இந்த கார் பெற இரண்டு மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும் என கூறப்படுகிறது.

    டொயோட்டா எடியோஸ்

    டொயோட்டா எடியோஸ் செடான், ஹேட்ச்பேக் (எடியோஸ் லிவா) மற்றும் கிராஸ்-ஹேட்ச் (எடியோஸ் கிராஸ்) என மூன்று வித வேரியன்ட்களில் கிடைக்கிறது. அனைத்து வேரியன்ட்களும் பெட்ரோல் மற்றும் டீசன் என்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. அவ்வாறு 68 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் 1.4-லிட்டர் டீசல் என்ஜின், செடான் மற்றும் கிராஸ் ஹேட்ச் மாடலில் 90 பி.ஹெச்.பி., 1.5 லிட்டர் பெட்ரோல், ஹேட்ச்பேக் மாடலில் 80 பி.ஹெச்.பி., 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதி வரை டொயோட்டா எடியோஸ் மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ.1 லட்சம் மதிப்புள்ள தள்ளுபடி மற்ரும் சலுகைகள் வழங்கப்படுகிறது.



    டொயோட்டா கொரோலா ஆல்டிஸ்

    ஸ்கோடா ஆக்டேவியா மற்றும் ஹூன்டாய் எலான்ட்ரா மாடல்களுக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்ட கொரோலா ஆல்டிஸ் 140 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் 1.8-லிட்டர் பெட்ரோல் என்ஜின், 88 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் 1.4 லிட்டர் டீசல் என்ஜின் வேரியன்ட்களில் கிடைக்கிறது. கொரோலா ஆல்டிஸ் வாங்கும் வாடிக்கையாளர்கள் கார் விலையில் இருந்து அதிகபட்சம் ரூ.75,000 வரையிலான சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவை பெற முடியும்.
    ×