என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Yellow bags"
- மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக துறை அலுவலர்களின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
- அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு ஆய்வு பணி மேற்கொண்டார்.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் சுற்றுப்பயணத்தின் போது பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக துறை அலுவலர்களின் ஆய்வு கூட்டம் வெள்ளகோவிலில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் தலைமையில் நடைபெற்றது. தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு ஆய்வு பணி மேற்கொண்டார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் வளர்ச்சி வாணி, வெள்ளகோவில் நகர் மன்ற தலைவர் மு.கனியரசி, நகராட்சி ஆணையாளர் ஆர்.மோகன்குமார் மற்றும் தி.மு.க. ஒன்றிய செயலாளர் மோளகவுண்டன் வலசு கே.சந்திரசேகரன், நகர செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன், நகர் மன்ற உறுப்பினர்கள் உட்பட அனைத்து துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தி.மு.க. பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மூலம் வாரிசு அடிப்படையில் 4 பேருக்கு பணி நியமன உத்தரவை தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். நகராட்சி பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாக்கவும் நெகிழி பைகளை ஒழிக்கும் வகையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மஞ்ச பைகளை வழங்கினார்.