என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Yellow Cloth bag"
- தமிழக அரசு பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகளை ஒழிப்பதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
- பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
பல்லடம் :
தமிழக அரசு பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகளை ஒழிப்பதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மஞ்சப்பை வாழை இலை, உலோகத்தாலான குவளைகள் போன்றவற்றை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில்,திருப்பூர் தெற்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், பல்லடம் நகராட்சி நிர்வாகம் ஆகியவை இணைந்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்லடம் கடை வீதியில், பிளாஸ்டிக் பைகளை கொண்டுவந்தவர்களிடம், அவற்றைத் திரும்பப் பெற்றுக்கொண்டு மஞ்சப்பை இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் அவர்களிடம் இனி இதுபோல பிளாஸ்டிக் பைகள் கொண்டு வந்தால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், பல்லடம் நகராட்சி ஆணையாளர் விநாயகம், மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் வனிதா, நகராட்சி சுகாதார ஆய்வாளர் சங்கர், மற்றும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.