search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Yogi"

    தேர்தல் கமிஷனால் 3 நாள் தடை விதிக்கப்பட்ட உத்தரப்பிரதேசம் மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் இன்று தனது பிரசாரத்தை மீண்டும் தொடங்கினார். #Yogivisits #Yogiresumes #Yogicampaigning
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் மீரட் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியதாக தேர்தல் கமிஷனில் புகார் அளிக்கப்பட்டது.

    இந்த புகாரை விசாரித்த தேர்தல் கமிஷன் 16-4-2019 அன்று காலை 6 மணிமுதல் 72 மணிநேரத்துக்கு அவர் பிரசாரம் செய்ய தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.



    இந்த தடை இன்று காலையுடன் முடிவடைந்ததால் யோகி ஆதித்யாநாத் இன்று மீண்டும் பிரசாரத்தை தொடங்கினார். #Yogivisits #Yogiresumes  #Yogicampaigning
    அக்‌ஷயா பாத்திரம் திட்டத்தின் மூலம் மாணவ-மாணவியருக்கு இதுவரை இலவசமாக 300 கோடி பகல் உணவு அளிக்கப்பட்ட சாதனையை மோடி இன்று விருந்தாவனத்தில் உணவு பரிமாறி கொண்டாடினார். #Modiservesfood #Vrindavanchildren #AkshayaPatra #ThirdBillionthMeal
    லக்னோ:

    பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் 'அக்‌ஷயா பாத்திரம்' என்ற தொண்டு நிறுவனம் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவ-மாணவியர்களுக்கு இலவசமாக பகல் உணவு வழங்கி, நாட்டில் கல்வியறிவின் வளர்ச்சிக்காக சேவை புரிந்து வருகிறது.

    பள்ளிகளில் பசியுடன் படிக்கும் குழந்தைகள் கல்வியின் மீது கவனம் செலுத்த முடியாமல் போய்விடும் என்பதற்காக செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் மூலம் கடந்த சில ஆண்டுகளில் பலகோடி மாணவ-மாணவியருக்கு பகல் உணவு அளிக்கப்பட்டுள்ளது.

    அவ்வகையில், 300-வது கோடி பயனாளிக்கு இன்று பகல் உணவு வழங்கும் நிகழ்ச்சி உத்தரபிரதேசம் மாநிலம், மதுரா நகரில் உள்ள விருந்தாவனத்தில் இன்று நடைபெற்றது.

    பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேசம் மாநில கவர்னர் ராம் நாயக், முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் ஆகியோர் அங்கு மாணவ-மாணவியர்களுக்கு உணவு பரிமாறினர். இந்நிகழ்ச்சியில் மதுரா பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் நடிகை ஹேமா மாலினி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். #Modiservesfood #Vrindavanchildren #AkshayaPatra #ThirdBillionthMeal 
    ஊழல் காரணமாக 2019 பாராளுமன்றத் தேர்தலில் பெரும் இழப்பை சந்திப்போம் என யோகி ஆதித்யநாத்திடம் பா.ஜனதா எம்.எல்.ஏ. கூறியுள்ளார். #yogiadityanath #bjp #parliamentelection
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தின் குன்னார் தொகுதியின் பா.ஜனதா எம்.எல்.ஏ. அஜித்குமார் யாதவ். ஜனவரி 3-ம் தேதி மாவட்டத்தில் காணப்படும் ஊழல் தொடர்பாக யோகி ஆதித்யநாத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். “மாவட்டத்தில் அதிகாரிகளின் ஊழல் நடவடிக்கை காரணமாக மக்களின் எண்ணம் மாநில அரசுக்கு எதிராக எழுந்துள்ளது. 

    ஊழல் நடவடிக்கைகளை தடுக்கவில்லை என்றால், 2019 பாராளுமன்றத் தேர்தலில் பெரும் தோல்வியை பா.ஜனதா சந்திக்கும்,” என கூறியுள்ளார். 

    அஜித்குமார் யாதவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மாவட்டத்தில் உள்ள அதிகாரிகளில் பெரும்பாலானோர் ஊழலில் ஈடுபட்டுள்ளனர். ரூ. 200-300 விலையுடைய குப்பை பெட்டிகள் ரூ. 12 ஆயிரத்திற்கு வாங்கப்படுகிறது. மின்சார இணைப்பு இல்லாத கிராமங்களுக்கும் மின்கட்டணத்திற்கான ரசீது வழங்கப்படுகிறது,” என்று கூறியுள்ளார். #yogiadityanath  #bjp #parliamentelection 
    ஷாஜஹானை சிறையில் வைத்துவிட்டு ஆட்சியை பிடித்த அவுரங்கசிப் பாணியில் முலாயம் சிங் யாதவ் முதுகில் குத்திவிட்டு அகிலேஷ் யாதவ் கட்சியை பிடித்து விட்டதாக யோகி ஆதித்யநாத் குறிப்பிட்டுள்ளார். #Yogi #Akhilesh #Aurangzeb
    லக்னோ:

    லக்னோ நகரில் நடைபெற்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் கருத்தரங்கில் உத்தரப்பிரதேசம் மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் இன்று பங்கேற்று பேசினார். 

    அப்போது, முன்னாள் முதல் மந்திரியும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவை மறைமுகமாக தாக்கிப் பேசிய அவர், தனது சுயநலத்துக்காக தந்தையையும் மாமாவையும் முதுகில் குத்திய அகிலேஷ் யாதவ் சரியான சந்தர்ப்பவாதி என்று குற்றம் சாட்டினார்.

    இந்தியாவில் இருப்பவர்கள் யாரும் தங்கள் மகன்களுக்கு அவுரங்கசிப் என்று பெயர் வைப்பதில்லை. ஏனென்றால், அரியாசனத்தை பிடிப்பதற்காக தனது தந்தை ஷாஜஹானை ஆயுள் தண்டனை கைதியாக்கி சிறையில் அடைத்தவர் அவுரங்கசிப் என்பதால் இதற்கு யாரும் தயாராக  இல்லை. 

    சொந்த தந்தையையும், மாமாவையும் முதுகில் குத்திவிட்டு கட்சியை பிடித்தவர் மக்களுக்காக எதுவும் செய்துவிடப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். #Yogi #Akhilesh #Aurangzeb
    வள்ளி முத்து இயக்கத்தில் யோகி, வர்ஷிதா நடிக்கும் பார்த்திபன் காதல் திரைப்படம் உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாக இருக்கிறது. #ParthibanKadhal
    எஸ் சினிமா கம்பெனி என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘பார்த்திபன் காதல்’. இந்த படத்தில் யோகி கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக வர்ஷிதா அறிமுகமாகிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

    தங்கையா மாடசாமி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பில்லா இசையமைக்கிறார். வள்ளி முத்து கதை எழுதி இயக்குகிறார். இவர் ட்ரிபிள் வி ரெக்கார்ட்ஸ் தயாரித்த என்னமோ நடக்குது, அச்சமின்றி போன்ற படங்களை இயக்கிய பி.ராஜபாண்டியிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

    படம் பற்றி இயக்குனர் வள்ளிமுத்து கூறும்போது, ‘உண்மை சம்பவத்தை மையப்படுத்தி புதிய களத்தில் இளமை கொஞ்சும் காதல் கதையாக உருவாக இருக்கிறது. அறிமுக நாயகன் யோகி ஓவிய கல்லூரி மாணவனாக நடிக்கிறார். இளம் கதாநாயகி வர்ஷிதா கிராமத்து கல்லூரி மாணவியாக நடிக்கிறார்.



    சமீப கலாமாக தமிழ் சினிமாவில் காமெடி பேய் படங்களும், ஆக்ஷன் படங்களும் வந்து கொண்டிருக்கும் இந்த சூழலில் ‘பார்த்திபன் காதல்’ ஒரு முழுமையான காதல் கதையாக உருவாகிறது. கும்பகோணம், ராஜபாளையம், தென்காசி போன்ற இடங்களில் விரைவில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது’ என்றார்.
    உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், ஜெர்மனியில் நடைபெறும் ஜூனியர் உலக கோப்பை போட்டியில் பங்கேற்க பிரியாசிங்குக்கு ரூ.4½ லட்சம் நிதி உதவி வழங்க உத்தரவிட்டார். #PavaShooter #PriyaSingh
    லக்னோ:

    ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணிக்கு உத்தரபிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த 19 வயதான பிரியா சிங் தேர்வு பெற்றுள்ளார். ஏழை தொழிலாளியின் மகளான அவருக்கு ஜெர்மனி செல்வதற்கு போதிய பணம் இல்லை. இதனால் போட்டியில் பங்கேற்க தனக்கு உதவி செய்யும்படி உள்ளூர் எம்.எம்.ஏ. முதல், முதல்-மந்திரி மற்றும் பிரதமர் வரை பிரியாசிங் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

    இந்த கோரிக்கைக்கு உடனடியாக பதில் கிடைக்காததால், ‘தனக்கு சொந்தமான மாடுகளை விற்றும், நண்பர்களிடம் கடன் வாங்கியும் தனது மகளை நிச்சயம் ஜெர்மனி போட்டிக்கு அனுப்பி வைப்பேன்’ என்று பிரியாசிங்கின் தந்தை பிரிஜ்பால் சிங் தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் துப்பாக்கி சுடுதல் வீராங்கனையின் ஏழ்மை நிலையை அறிந்த உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், ஜெர்மனியில் நடைபெறும் ஜூனியர் உலக கோப்பை போட்டியில் பங்கேற்க பிரியாசிங்குக்கு ரூ.4½ லட்சம் நிதி உதவியை மாநில அரசு சார்பில் உடனடியாக வழங்க உத்தரவிட்டார். #PavaShooter #PriyaSingh  #tamilnews
    சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளின் தாக்குதலில் உயிரிழந்த உ.பி.யைச் சேர்ந்த 2 இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியும், அரசு வேலையும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது. #compensationformartyrs #YogiAdityanath
    லக்னோ:

    சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா பகுதியின் சோல்னார் கிராமத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் போலீஸ் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, அங்கு பதுக்கி வைத்திருந்த வெடிகுண்டுகளை நக்சலைட்டுகள் வெடிக்கச்செய்தனர்.

    இந்த வெடிகுண்டு தாக்குதலில் 6 பாதுகாப்பு படை வீரர்கள் உடல்சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வருத்தம் தெரிவித்தார்.

    மேலும், இந்த தாக்குதலில் பலியான உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த அர்ஜுன் ராஜ்பர், ரவிநாத் சிங் படேல் ஆகிய 2 பாதுகாப்பு படை வீரர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் பணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். #compensationformartyrs #YogiAdityanath
    ×