search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Young man mysterious death"

    • கணவன்-மனைவி இடையே அடிக்கடி கருத்துவேறுபாடு ஏற்பட்டு வந்த நிலையில் வாலிபர் தனது வீட்டில் இறந்து கிடப்பதாக அவரது பெற்றோருக்கு தகவல் கிடைத்தது.
    • பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் ஆலமரத்தெருவை சேர்ந்த இருளப்பன் மகன் பிரபாகரன்(30). இவர் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு மாற்று சமூகத்தை சேர்ந்த மீனா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி கருத்துவேறுபாடு ஏற்பட்டு வந்ததால் மீனா கோவித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் பிரபாகரன் தனது வீட்டில் இறந்து கிடப்பதாக அவரது பெற்றோருக்கு தகவல் கிடைத்தது.

    அவர் அருகே பூச்சிமருந்து பாட்டிலும் இருந்துள்ளது. இதுகுறித்து பிரபாகரனின் தாய் போதுமணி சின்னமனூர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதால் உரிய விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • பெட்ரோல் பங்க் கழிப்பறைக்கு சென்ற வாலிபர் மயங்கி நிலையில் இறந்து கிடந்தார்.
    • மர்மமானமுறையில் வாலிபர் இறந்தது குறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குபதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் உத்தமபுரம் விவேகானந்தர் தெருவை சேர்ந்த மொக்கைபாண்டியன் மகன் அஜித்குமார்(26). இவர் சொந்தமாக ஜீப் வைத்து கேரளாவில் ஏலத்தோட்டங்களுக்கு செல்பவர்களை அழைத்துச்செல்லும் பணியில் ஈடுபட்டு வந்தார். சம்பவத்தன்று ஆணைமலையான்பட்டி பெட்ரோல்பங்க் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஜீப்பை எடுத்து வருவதாக தனது வீட்டில் கூறிவிட்டு சென்றார்.

    அப்போது அங்குள்ள பெட்ரோல் பங்க் கழிப்பறைக்கு சென்றவர் வெளியே வரவில்லை. பங்க் ஊழியர்கள் கதவை திறந்து பார்த்தபோது அவர் மயங்கி நிலையில் கிடந்தார். உடனே அவரது வீட்டிற்கு தகவல் தெரிவித்து ஆம்புலன்ஸ் மூலம் உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இறந்த அஜித்குமார் மீது பல்வேறு வழக்குகள் போலீஸ்நிலையங்களில் உள்ளன. மர்மமானமுறையில் அவர் இறந்தது குறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குபதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×