என் மலர்
நீங்கள் தேடியது "youth arrest"
- ஓட்டலில் தங்கியிருந்த போது மாணவிக்கு உணவில் போதை மருந்தை கலந்து கொடுத்திருக்கிறார்.
- போதை பழக்கத்தில் இருந்து விடுபட சிகிச்சையில் இருந்தபோது மாணவிக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வெங்கரசேரூர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் கபூர்(வயது23). இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக கோட்டக்கல் பகுதியை சேர்ந்த பிளஸ்-1 மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
வசதி படைத்தவர் போன்று காட்டிக் கொண்டதால் அப்துல் கபூருடன் அந்த மாணவி நெருங்கி பழகி வந்துள்ளார். அதனை பயன்படுத்தி பல இடங்களுக்கு மாணவியை அப்துல் கபூர் அழைத்துச் சென்றுள்ளார்.
ஓட்டலில் தங்கியிருந்த போது மாணவிக்கு உணவில் போதை மருந்தை கலந்து கொடுத்திருக்கிறார். இதனால் அந்த மாணவி போதை பழக்கத்துக்கு அடிமையாகியிருக்கிறார். அதனை பயன்படுத்தி பல்வேறு இடங்களுக்கு மாணவியை அழைத்துச் சென்ற அப்துல்கபூர், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அந்த நேரத்தில் மாணவியை நிர்வாணமாக வீடியோவும் எடுத்திருக்கிறார். மாணவி பிளஸ்-1 படித்த கடந்த 2020-ம் ஆண்டில் இருந்து தற்போது வரையிலான 5 ஆண்டுகளாக அப்துல் கபூரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டபடி இருந்திருக்கிறார்.
இந்தநிலையில் போதை பழக்கத்தில் இருந்து விடுபட சிகிச்சையில் இருந்தபோது மாணவிக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. அப்போது தன்னை வாலிபர் ஒருவர், கடந்த 5 ஆண்டுகளாக பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கி வரும் அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.
மேலும் தன்னை அந்த வாலிபர் நிர்வாணமாக்கி வீடியோ எடுத்திருப்பதாகவும் கூறினார். அதனையறிந்த மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் அதுபற்றி கோட்டக்கல் போலீஸ் நியைத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிந்தனர்.
மாணவிக்கு போதை மருந்து கொடுத்து சீரழித்த அப்துல் கபூர் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதியப்பட்டது. அதன்பேரில் அவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அப்துல் கபூரின் செல்போனை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு செய்கின்றனர்.
- கஞ்சா மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டம் கல்யாண் கோவிந்த்வாடி பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக பஜார்பேட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியில் சந்தேகப்படும் வகையில் வாலிபர் ஒருவர் நடமாடியதை கவனித்தனர்.
இதையடுத்து அவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர் பீட் மாவட்டத்தை சேர்ந்த சகில் சேக் (வயது25) என்பது தெரியவந்தது. இவர் வைத்திருந்த உடைமையை பிரித்து சோதனை போட்ட போது, அதில் 12 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இவர் கஞ்சாவை விற்க கல்யாணுக்கு வந்தது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் வைத்து. விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இருவரும் ஒன்றாக ரீல்ஸ் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
- ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காக தனது வீட்டின் அருகிலேயே மற்றொரு வீட்டை வாடகைக்கு எடுத்து வைத்திருந்தார்.
திருவனந்தபுரம்:
'இன்ஸ்டாகிராம்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கணக்கு வைத்திருப்பவர்களில் ஏராளமானோர் வித்தியாசமான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அதன் மூலம் பலர் பிரபலமாகி விடுகிறார்கள்.
அப்படி பிரபலமான ஒரு வாலிபர், தன்னுடன் ரீல்ஸ் வீடியோ எடுத்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கேரளாவில் அரங்கேறி உள்ளது. அந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஹபீஸ் சஜீவ். இவர் இன்ஸ்டாகிராமில் ஏராளமான வீடியோக்களை பதிவிட்டிருக்கிறார். இதன் மூலம் கேரளாவில் பிரபலமான நபராக அவர் மாறினார். இந்தநிலையில் அவருக்கு ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டது.
அந்த பெண் ஹபீஸ் சஜீவுடன் நட்பாக பழகினார். இதனைத்தொடர்ந்து இருவரும் ஒன்றாக ரீல்ஸ் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இதன் காரணமாக அவர்களுக்குள் நெருக்கம் அதிகமானது. ஹபீஸ் சஜீவ் ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காக தனது வீட்டின் அருகிலேயே மற்றொரு வீட்டை வாடகைக்கு எடுத்து வைத்திருந்தார்.
அங்கு வைத்து தான் 'ரீல்ஸ்' வீடியோ எடுப்பாராம், அந்த வீட்டுக்கு இளம்பெண்னை வரவழைத்த ஹபீஸ் சஜீவ் 'ரீல்ஸ்' வீடியோ எடுத்துள்ளார். அந்த வீட்டில் வைத்து இளம்பெண்ணை ஹபீஸ் சஜீவ் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
திருமணம் செய்வதாக கூறி அவர் பல முறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் ஹபீஸ் சஜீவ் அந்த இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், திருமணம் செய்வதாக கூறி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஹபீஸ் சஜீவ் மீது ஆலப்புழா தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். பின்பு ஹபீஸ் சஜீவை கைது செய்தனர். அவர் மீது பி.என்.எஸ். சட்டப்பிரிவு 69 (துணிச்சலான வழிகளை பயன்படுத்தி உடலுறவு கொள்ளுதல்), 74 (பெண்ணின் அடக்கத்தை அவமதிக்கும் நோக்கத்துடன் பெண்ணை தாக்குதல் அல்லது குற்றவியல் பலத்தை பயன்படுத்துதல் )ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
ரீல்ஸ் வீடியோ எடுக்க பயன்படுத்திய பெண்ணை வாலிபர் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் ஆலப்புழாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சங்கரன்கோவில் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 41 வயது பெண்.
- சம்பவத்தன்று மலையன்குளம் பகுதியில் நின்று கொண்டிருந்தார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 41 வயது பெண். சம்பவத்தன்று சங்கரன்கோவில் அருகே மலையன்குளம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த திருவேங்கடம் அருகே உள்ள பி.ஆலங்குளத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான விஜயதுரை என்ற ரோப்(வயது 31) என்பவர் அந்த பெண்ணை அங்குள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.
பின்னர் அவரை கற்பழித்த விஜயதுரை, நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அந்த பெண் தனது பெற்றோரிடம் கூறி உள்ளார். உடனே அவர்கள் சங்கரன்கோவில் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்குப்பதிவு செய்து விஜயதுரையை கைது செய்தனர்.
- பி சுப்பிரமணியபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார் குடும்பத்துடன் காரில் சென்று விட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
- அதே கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் கண்ணன் என்பவர் குடிபோதையில் காரின் முன்பு பட்டாசு வெடித்துள்ளார்.
புதியம்புத்தூர்:
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பி சுப்பிரமணியபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார். (வயது 28) குடும்பத்துடன் காரில் சென்று விட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அங்குள்ள பிள்ளையார் கோவில் அருகே கார் வந்தபோது அதே கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் கண்ணன் (28) என்பவர் குடிபோதையில் காரின் முன்பு பட்டாசு வெடித்துள்ளார். இதை அருண்குமார் கண்டித்துள்ளார்.
உடனே அருண்குமாரின் வீட்டுக்கு சென்ற சந்தோஷ் கண்ணன் அருண்குமாரின் தாயார் இந்திராவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து ஓட்டப்பிடாரம் போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இயைடுத்து வழக்குப் பதிவு செய்து போலீசார் சந்தோஷ் கண்ணனை கைது செய்தனர்.
- தூத்துக்குடி புதுகிராமம் பகுதியில் உள்ள ஒரு வீட்டு மாடியில் வாலிபர்கள் சிலர் ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- ஒருவர் தப்பி ஓட, மீதி 3 பேர் தப்பிச் செல்ல முடியாததால் கையில் அரிவாளுடன் போலீசாரை தாக்குவதற்காக பாய்ந்து வந்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி புதுகிராமம் பகுதியில் உள்ள ஒரு வீட்டு மாடியில் வாலிபர்கள் சிலர் ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து தென்பாகம் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். திடீரென போலீசாரை கண்டதும் அதிர்ச்சி அடைந்த வாலிபர்கள் தப்பி ஓட முயற்சித்தனர்.
இதில் ஒருவர் தப்பி ஓட, மீதி 3 பேர் தப்பிச் செல்ல முடியாததால் கையில் அரிவாளுடன் போலீசாரை தாக்குவதற்காக பாய்ந்து வந்தனர். உடனடியாக சுதாரித்துக் கொண்ட போலீசார் லாவகமாக அவர்களை மடக்கி பிடித்து அவர்களிடமிருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்து கைது செய்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி சண்முகபுரத்தைச் சேர்ந்த கணேஷ் (வயது 28), முத்தையாபுரத்தை சேர்ந்த ரத்தினகுமார் ஹரீஷ் (29), மற்றும் லோகேஸ்வரன் என்பது தெரிய வந்தது. அவர்கள் எதற்காக ஆயுதங்களுடன் வீட்டு மாடியில் பதுங்கி இருந்தனர் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பி ஓடிய மேல சண்முகபுரத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- இளம்பெண் ஒருவர் ராஜ பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை செய்து வந்தார்.
- பெண்ணின் தலைமுடியை பிடித்து தரையில் இழுத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் கரி வலம்வந்தநல்லூர் அருகே உள்ள கீழவயலியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ராஜ பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை செய்தார்.
அதே மில்லில் வேலை செய்து வந்த குவளைக் கண்ணியை சேர்ந்த துரை என்ற ரஞ்சித் ( வயது 25) என்பவர் அந்த பெண்ணிடம், தான் 4 மாதமாக காதலிப்பதாக தெரிவித்துள்ளார்.
சம்பவத்தன்று வேலை முடிந்து சுப்புலாபுரத்தில் பணியாளர்களை இறக்கி விட்டபோது அந்த பெண்ணிடம் சென்று துரை நான் உன்னை காதலிப்பதாக கூறுகிறேன். நீ ஒன்றும் பதில் சொல்லவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
தாக்குதல்
இதுகுறித்து வேன் டிரைவர் குருசாமி மற்றும் கிளீனர் பாலமுருகன் ஆகியோர் துரையை தட்டி கேட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த துரை அருகில் இருந்த கம்பியை எடுத்து அவர்களை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாகவும், வேன் கண்ணாடியை உடைத்ததாகவும் கூறப்படு கிறது. தொடர்ந்து அந்த பெண்ணின் தலைமுடியை பிடித்து தரையில் இழுத்து சென்ற தாகவும் கூறப்படு கிறது.
மேலும் வேனில் இருந்து உடைந்த கண்ணாடி துண்டுகளை வைத்து அந்த பெண்ணிடம் என்னை காதலிக்க வேண்டும் என சொல்லி தனக்குத்தானே கையை கிழித்து கொண்ட தாகவும் தெரிகிறது.
இதில் முட்டியில் காயமடைந்த அந்த இளம்பெண் மற்றும் துரை ஆகியோர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டனர். மேலும் தாக்குதலில் காயமடைந்த வேன் டிரைவர் குருசாமி, கிளினர் பாலமுருகன் ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று சென்றனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த கரிவலம்வந்த நல்லூர் போலீசார் பெண் வன்கொடுமை சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளின் கீழ் கைது செய்தனர்.
- சம்பந்தப்பட்ட கார் உரிமையாளர் மீது பொது மக்கள் சிலர் போலீசில் புகார் அளித்தனர்.
- சிறுவனின் தாய் கொடுத்த புகாரை அடுத்து பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு.
கேரளா மாநிலம் தலசேரியில் உள்ள சாலை ஒன்றின் ஓரமாக நின்றுக் கொண்டிருந்த கார் மீது 6 வயது சிறுவன் சாய்ந்து நின்றுக் கொண்டிருந்தான். அப்போது, திடீரென காரின் உள்ளே இருந்து வெளியே வந்த அதன் உரிமையாளர் சிறுவனை திட்டிக் கொண்டே வேகமாக எட்டி உதைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சிசிடிவியில் பதிவான இந்த காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் அந்த வீடியோவில் அங்கிருந்த பொது மக்கள் சிலர் சிறுவனை தாக்கியது தொடர்பாக கேட்டதற்கு தன் செயலை நியாயப்படுத்தி பேசிய கார் உரிமையாளர், காரை வேகமாக எடுத்து சென்றுள்ளார்.
சம்பந்தப்பட்ட சிறுவன் ராஜஸ்தானைச் சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளரின் மகன். படுகாயமடைந்த சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், சம்பந்தப்பட்ட கார் உரிமையாளர் மீது பொது மக்கள் சிலர் போலீசில் புகார் அளித்தனர். ஆனால் போலீசார் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
வீடியோ வைரலானதை அடுத்து சம்பவத்த உறுதி செய்த போலீசார் சம்பந்தப்பட்ட கார் எண்ணைக் கொண்டு பொண்ணியம்பாலம் பகுதியை சேர்ந்த முகமது ஷின்ஷாத் (20) என்கிற கார் உரிமையாளரை கண்டுபிடித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.
சிறுவனின் தாய் கொடுத்த புகாரை அடுத்து முகமது மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிரடியாக கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கார் உரிமையாளரின் செயலை கண்டு மாநில கல்வித் துறை, சுகாதாரத் துறை அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
- சங்கரன்கோவில் போலீசார் வாகன சோதனை போது அந்த வழியாக வந்த ஆட்டோவை தடுத்து நிறுத்தினர்
- ஆட்டோவை சோதனை செய்து பார்த்தபோது 71 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன
நெல்லை:
சங்கரன்கோவில் அருகே அய்யாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருப்பசாமி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை தடுத்து நிறுத்தினர். உடனே ஆட்டோவில் இருந்த 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதையடுத்து போலீசார் அந்த ஆட்டோவை சோதனை செய்து பார்த்தபோது அதில் ரூ.26 ஆயிரம் மதிப்பிலான 71 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்ததில் ஆட்டோ உரிமையாளர் களப்பாகுளம் பகுதியை சேர்ந்த கருப்பசாமி(வயது 25) என்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பசாமியை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அவரது கூட்டாளிகளான அதே பகுதியை சேர்ந்த பால்ராஜ், ரவி, காளிராஜ் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.
- வாலிபர் வீட்டின் ஒட்டை பிரித்து உள்ளே குதித்தார்.
- தர்மராஜை போலீசார் கைது செய்த பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
கோவை :
கோவை புலியகுளத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் ஒரு பெண் குழந்தை உள்ளனர்.
சம்பவத்தன்று இரவு இளம்பெண் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் வீட்டில் உள்ள அறையில் படுத்து தூங்கினார். நள்ளிரவு 1 மணியளவில் அதே பகுதியில் வசிக்கும் தர்மராஜ் (வயது 22) என்ற வாலிபர் வீட்டின் ஒட்டை பிரித்து உள்ளே குதித்தார். பின்னர் இளம்பெண்ணின் அருகில் சென்று படுத்தார். இதனையடுத்து அவர் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதில் அதிர்ச்சியடைந்த இளம்பெண் சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் தர்மராஜ் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.
இது குறித்து இளம்பெண் ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவுசெய்து நள்ளிரவு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தர்மராஜை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- ஒரு வேனில் ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தது தெரியவந்தது.
செங்கோட்டை:
செங்கோட்டை நகராட்சி பூங்கா அருகில் உள்ள முருகாத்தாள் என்பவர் வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாதவன் மற்றும் போலீசார் அந்த வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது வீட்டில் இருந்து ஒரு வேனில் ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஒரு டன் ரேஷன் அரிசியுடன் அந்த வேனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சேர்ந்தமரம் அருகே உள்ள கடையாலுருட்டி சர்ச் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி மகன் சுந்தரராஜன் (வயது 20) என்பவரை கைது செய்தனர். மேலும் இன்ஸ்பெக்டர் சியாம் சுந்தர் விசாரணை நடத்தி வருகிறார்.
- விழுப்புரத்தில் செல்போன் கடையில் கைவரிசை காட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- பிரபல செல்போன் கடையில் கடந்த 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுக்கா கணபதிபட்டு கிராமத்தை சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் தமிழரசன்(வயது21). இவர் விழுப்புரம் திருச்சி மெயின் ரோட்டில் உள்ள பிரபல செல்போன் கடையில் கடந்த 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அதே கடையில் ஆடிட்டராக பணிபுரியும் சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் சுரேஷ்பாபு என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடையில் ஆடி ட்டிங் செய்தபோது கடையில் இருந்த பொருட்கள் காணாமல் போனது தெரியவந்தது.
உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டு விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மருது நேரில் வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் கடையின் பொறுப்புகளை கவனித்து கொண்டு வந்த தமிழரசன் கடையில் உள்ள ரூ.6,51,830 மதிப்புள்ள 26 புதிய மொபைல்களை பில் போடாமலேயே திருடிச் சென்றது தெரியவந்தது. மேலும் திருடிச் சென்ற செல்போன்களை விற்பனை செய்து வைத்திருந்த ரூ.4,10,000 பணத்தை போலீசார் பறிமுதல் அவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.