என் மலர்
நீங்கள் தேடியது "youths arrested"
- போலீசார் காலேஜ் ரோட்டில் உள்ள கொரியர் நிறுவனம் ஒன்றில் சோதனை நடத்தினர்.
- வலி நிவாரணி மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வலி நிவாரணி மாத்திரைகளை போதை பயன்பாட்டிற்கு பயன்படுத்த கொரியர் மூலம் கொண்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் போலீசார் காலேஜ் ரோட்டில் உள்ள கொரியர் நிறுவனம் ஒன்றில் சோதனை நடத்தினர். அப்போது திருப்பூர் நல்லாத்துப்பாளையத்தை சேர்ந்த மோகன் (வயது 27) என்பவருக்கு பெங்களூருவில் இருந்து வந்த கொரியரை கைப்பற்றி சோதனை செய்தனர். அதில் 90 வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து போலீசார் அதனை கைப்பற்றி மோகன் மற்றும் மாத்திரை விற்பனையாளரான பிச்சம்பாளையத்தை சேர்ந்த சஞ்சீவிகுமார்(23) ஆகியோரை கைது செய்தனர். 90 வலி நிவாரணி மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர்.
- நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் தினமும் சிகிச்சைக்காக ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
- செல்போன், பணம் உள்ளிட்டவற்றை மர்மநபர்கள் திருடி செல்வதாக ஐகிரவுண்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது
நெல்லை:
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் தினமும் சிகிச்சைக்காக ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இதில் உள்நோயாளிகளுக்கு உதவியாக வரும் உறவினர்கள் ஆஸ்பத்திரி வளாகத்தில் தங்களது உடைமைகளை வைத்து விட்டு ஓய்வெடுப்பார்கள்.
திருட்டு
அவர்களிடம் செல்போன், பணம் உள்ளிட்டவற்றை மர்மநபர்கள் திருடி செல்வதாக ஐகிரவுண்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர்.
அப்போது வளாகத்தில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் குமரி மாவட்டம் எடலாக்குடியை சேர்ந்த முகமது சம்சீர்(வயது 19), மூலக்கரைப்பட்டியை சேர்ந்த மகேந்திரன் என்பதும், அவர்கள் மோட்டார் சைக்கிளை திருடியதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அதேநேரத்தில் அங்கு வந்த மற்றொருவரை பிடித்து விசாரித்ததில், அவர் திருமலைகொழுந்துபுரத்தை சேர்ந்த செல்லத்துரை(47) என்பதும், செல்போன் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரையும் கைது செய்தனர்.
- ஓரின சேர்க்கைக்கு மறுத்த பிச்சைக்காரரை வாலிபர்கள் கொலை செய்த சம்பவம் மேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நெல்லையை சேர்ந்த ராஜ்குமார் மேலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக சுற்றி திரிந்து பிச்சை எடுத்து வந்துள்ளார்.
மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே வண்ணாம்பாறைபட்டி பகுதியில் கோவில் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் பிணமாக கிடப்பதை அந்த வழியாக சென்றவர்கள் இன்று பார்த்தனர்.
இதுகுறித்து மேலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு மேலூர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சாந்தி மற்றும் போலீசார் சென்றனர். அங்கு தண்ணீர் தொட்டியில் கிடந்த வாலிபரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த வாலிபர் பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட அந்த நபர் யார்? அவரை கொன்றவர்கள் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது கொலை செய்யப்பட்ட வாலிபரை நேற்று முன்தினம் 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றதை பார்த்ததாக சிலர் போலீசில் தெரிவித்தனர். இதையடுத்து அந்த வாலிபர்கள் யார்? என்று விசாரிக்கப்பட்டது.
அப்போது அவர்கள் வண்ணாம்பாறைபட்டியை சேர்ந்த ராமன் என்பவரின் மகள் பசுபதி (வயது19), நடுவளவு பகுதியை சேர்ந்த கணபதி என்பவரின் மகன் பெருமாள் (22) என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அப்போது தண்ணீர் தொட்டியில் பிணமாக கிடந்த வாலிபரை கொன்றது தாங்கள் தான் என்றும், அந்த நபர் நெல்லையை சேர்ந்த ராஜ்குமார் (35) எனவும் கூறியுள்ளனர். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் வாலிபர் கொலை குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
பசுபதி மற்றும் பெருமாள் ஆகிய 2 பேரும் கடந்த 13-ந் தேதி காலை மேலூர் அருகே உள்ள மலம்பட்டி அரசு மதுக்கடையில் மதுபானம் வாங்கி குடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அப்போது வண்ணாம்பாறைபட்டி பிள்ளையார் கோவில் அருகே ராஜ்குமார் உட்கார்ந்திருந்தார்.
குடிபோதையில் இருந்த பசுபதி, பெருமாள் ஆகிய இருவரும் ராஜ்குமாரை ஓரின சேர்க்கைக்கு அழைத்துள்ளனர். ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவர்கள் ராஜ்குமாரை உருட்டுக்கட்டையால் அடித்து நிர்வாணப்படுத்தி தங்களின் ஆசைக்கு இணங்க வைக்க முயன்றுள்ளனர்.
ஆனால் அவர்கள் இருவரையும் தள்ளி விட்டு தப்பி ஓடி முயன்றுள்ளார். இதையடுத்து பசுபதி, பெருமாள் ஆகிய இருவரும் ராஜ்குமாரை பீர்பாட்டிலால் சரமாரி குத்தி உள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
பின்பு ராஜ்குமாரின் உடலை கோவில் அருகே இருந்த தண்ணீர் தொட்டிக்குள் போட்டு விட்டு பசுபதி மற்றும் பெருமாள் அங்கிருந்து சென்று விட்டனர். ராஜ்குமார் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடந்த 2 நாட்களாக யாருக்கும் தெரியவில்லை.
அவர் கொலை செய்யப்பட்டு தண்ணீர் தொட்டியில் கிடந்தது இன்று காலையில் தான் தெரியவந்தது. அதன்பிறகு போலீசார் நடத்திய விசாரணையில், கொலையாளிகளை போலீசார் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.
நெல்லையை சேர்ந்த ராஜ்குமார் மேலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக சுற்றி திரிந்து பிச்சை எடுத்து வந்துள்ளார். அவரை பிச்சைக்காரர் என்று கூட பார்க்காமல் கொலையாளிகள் இருவரும் குடிபோதையில் ஓரின சேர்க்கைக்கு முயன்று, அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தால் கொலை செய்துள்ளனர்.
ஓரின சேர்க்கைக்கு மறுத்த பிச்சைக்காரரை வாலிபர்கள் கொலை செய்த சம்பவம் மேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
- வள்ளியூர் ஐ.எஸ்.ஆர்.ஓ குடியிருப்பு பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரகுமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
வள்ளியூர்:
நெல்லை மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் ஒழிப்பு பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
வள்ளியூர்
நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் வாகன தணிக்கையிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வள்ளியூர் ஐ.எஸ்.ஆர்.ஓ குடியிருப்பு பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரகுமார் தலைமை யில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்தவழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்தனர். அதில் அவர்கள் கலுங்கடி பகுதியை சேர்ந்த லென்ஸ் குமார் (வயது 23), ஏர்வாடி சீனிவாசபுரம் அய்யா பிச்சை (21) என்பது தெரியவந்தது.
மேலும் அவர்கள் 2 கிலோ கஞ்சா வைத்திருப்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களுக்கு கஞ்சா எப்படி கிடைத்தது? அதனை எங்கு கொண்டு செல்கிறார்கள்? இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போக்கு வரத்து வீதிமிறலில் ஈடுபடுபவர்களிடம் இ- சலான் மெஷின் மூலம் ஸ்பாட் பைன் வசூல் செய்து ரசீது வழங்கி வருகின்றனர்.
- இந்த சாலையில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்யவும் உத்தரவிட்டார்.
விழுப்புரம்:
திண்டிவனம்-புதுச்சேரி 4 வழிச் சாலை யில் மது விலக்கு செக்போஸ்ட் உள்ளது. இங்கு 24 மணி நேரமும் கிளியனூர் போலீ சார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். புதுச்சேரியில் இருந்து தமிழ கத்திற்கு கடத்தி வரப்படும் மதுபானங்கள், அதை கடத்தி வர பயன்படுத்தப்படும் வாக னங்களை பறிமுதல் ெசய்வது இவர்களது தலை யாய பணியாகும். மேலும், போக்கு வரத்து வீதிமிறலில் ஈடுபடுபவர்களிடம் இ- சலான் மெஷின் மூலம் ஸ்பாட் பைன் வசூல் செய்து ரசீது வழங்கி வருகின்றனர். அதன்படி, கடந்த 24-ந் தேதி கிளியனூர் செக் போஸ்டில் திருஞானம், கார்த்தி ஆகிய 2 போலீசார் வாகன தணிக்கையில் ஈடு பட்டு வந்தனர். அப்போது புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் ஹெல்மெட் அணிந்த படி வந்தனர். மோட்டார் சைக்கிளை திருஞானம் என்ற போலீசார் நிறுத்தினர். மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்துவது போல நடித்து காவலர் திருஞானம் கையில் இருந்து இ-சலான் மெஷினை பிடிங்கிக் கொண்டு தப்பி ஒடிவிட்டனர். சம்பவமறிந்து விரைந்து வந்த விழுப்புரம் மாவட்ட சுப்பிரண்டு ஸ்ரீநாதா விசாரணை நடத்தினார்.
மோட்டார் சைக்கிளின் எண்ணை வைத்து அதன் உரிமையாளரை கண்டுபிடிக்கவும், இந்த சாலையில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்யவும் உத்தரவிட்டார். அதனடிப்படையில் கிளியனூர் இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையி லான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பகுதியில் உள்ள சீர்பாத நல்லூர் ஏழுமலை மகன் சதீஷ் (வயது 22), திரு வண்ணாமலை மாவட்டம் சோமாசி பாடி ரங்கநாதன் மகன் சந்தோஷ் (20) ஆகி யோர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இவ்விருவரையும் கைது செய்த போலீசார் அவர்க ளிடம் விசாரணை நடத்தி னர். அதில் 2 பேரும் புதுச்சேரியை சுற்றிப் பார்த்து விட்டு, மது அருந்தி வீடு திரும்பியதாகவும், போலீசாரிடம் மாட்டிக் கொண்டால் பைன் போடு வார்கள் என்ற பயத்தில் இ.சலான் மெஷினை பிடிங்கி சென்றதாகவும் தெரிவித்தனர். மேலும், அந்த மெஷி னை கொந்தாமூர் மேம்பா லத்தின் அடியில் ஒளித்து வைத்துள்ளதாகவும் கூறி னர். அங்கு சென்ற போலீ சார் இ-சலான் மெஷினை கைப்பற்றினர். வானூர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி 2 பேரையும் சிறையில் அடைத்தனர்.
- நாளுக்கு நாள் போதை கும்பலின் தொந்தரவு அதிகமாகவே திவ்யா அவர்களை கண்டித்ததாக தெரிகிறது.
- கடந்த சில நாட்களாக திவ்யா வீட்டு முன்பு பீர் பாட்டில்களை உடைத்து விட்டு கும்பல் சென்றது.
மதுரை:
மதுரை ஆழ்வார்புரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி திவ்யா (வயது 28). இவர்களது வீட்டின் அருகே அதே பகுதியை சேர்ந்த சிலர் எந்த நேரமும் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டு வந்தனர்.
மேலும் அங்குள்ள பெண்களையும் கேலி கிண்டல் செய்ததாக தெரிகிறது. நாளுக்கு நாள் போதை கும்பலின் தொந்தரவு அதிகமாகவே திவ்யா அவர்களை கண்டித்ததாக தெரிகிறது.
இதனால் அந்த கும்பல் கடந்த சில நாட்களாக திவ்யா வீட்டு முன்பு பீர் பாட்டில்களை உடைத்து விட்டு சென்றது. சம்பவத்தன்று இதுதொடர்பாக திவ்யா அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் இதுதொடர்பாக மதிச்சியம் போலீசிலும் புகார் செய்யப்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் இன்று அதிகாலை திவ்யா வீட்டில் பெட்ரோல் குண்டுகளை வீசியது. இதில் அந்த குண்டுகள் வீட்டின் முன்பு விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. சத்தம் கேட்டு அந்த பகுதியினர் திரண்டனர். உடனே அந்த கும்பல் மோட்டார் சைக்கிளில் தப்பியது.
இதுகுறித்து தகவல் அறிந்த மதிச்சியம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீதர், சோணைமுத்து ஆகிய 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம்பெண் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சிப்காட் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வந்த ஒரு காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.
- சுமார் 1 கிலோ 150 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் காரில் இருந்த 2 பேரை கைது செய்தனர்.
தூத்துக்குடி:
தென் மாவட்டங்களில் போதைப்பொருள் பழக்கத்தை முற்றிலும் ஒழிக்க தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க் உத்தரவின் பேரில் பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி பகுதியில் காரில் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் போதை பொருள் தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர்.
அப்போது சிப்காட் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சுமார் 1 கிலோ 150 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் காரில் இருந்த 2 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி கே.டி.சி.நகரை சேர்ந்த மாரிகணேஷ் ஞானராஜ் (வயது 38), குமரநகரை சேர்ந்த இசக்கிராஜா (29) என்பது தெரியவந்தது.
இவர்கள் எங்கிருந்து கஞ்சாவை வாங்கி வந்தார்கள் என தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் போலீசார் கார் மற்றும் அவர்களிடமிருந்த 4 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் வாகனங்களை மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருமங்கலம் அருகே லாரி டிரைவர்-கிளீனரை தாக்கி பணம் பறித்த 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- வழிப்பறி நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து விசாரித்தனர்.
திருமங்கலம்
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சிவபாபு(வயது26). லாரி டிரைவரான இவர் கடந்த 25-ந் தேதி மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் தொழிற்பேட்டைக்கு இன்வெர்ட்டர் பேட்டரிகளை ஏற்றி வந்தார்.
அப்ேபாது நிறுவனம் மூடப்பட்டிருந்ததால் லாரி தொழிற்பேட்டை பகுதியில் நிறுத்தினார். பின்னர் சிவபாபு, கிளீனர் சூரஜூடன் சாப்பிடுவதற்காக கூத்தியார்குண்டு சென்றார்.சர்வீஸ் ரோடு பகுதியில் நடந்து சென்றபோது 2 பேரையும் வழிமறித்த கும்பல் சரமாரியாக தாக்கிவிட்டு ரூ.5 ஆயிரம் ெராக்கம், 2 செல்போன்களை பறித்து சென்றது. இந்த தாக்குதலில் சிவபாபு, சூரஜ் ஆகியோர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து வழிப்பறி கொள்ளையர்களை தேடும் பணியை தீவிரப்படுத்தினர். வழிப்பறி நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து விசாரித்தனர்.
அதில் லாரி டிரைவர்-கிளீனரை தாக்கி பணம் பறித்தது கூத்தியார்குண்டை சேர்ந்த கண்ணன் மகன் ராஜலிங்கம்(21), ராஜேந்திரன் மகன் விஜயராஜா(27), முருகன் மகன் ராஜவேலு(27), கணேசன் மகன் பிரபாகரன்(27) என தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- கூடுவாஞ்சேரி ரெயில்வே தண்டவாளம் அருகே தனியாக நடந்து வந்த வாலிபர் ஒருவரை தாக்கி செல்போன், பணத்தை பறித்து சென்று இருப்பது தெரியவந்தது.
- தப்பி ஓடிய கூட்டாளியான சந்தோஷ்குமாரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கூடுவாஞ்சேரி:
கூடுவாஞ்சேரி கணபதி நகர் விரிவு 2-வது பகுதியில் மருந்து கடை உள்ளது. நள்ளிரவில் வந்த மர்மநபர்கள் மருந்து கடையை உடைத்து கொள்ளை அடித்தனர்.
மேலும் கொள்ளையர்கள் அருகில் இருந்த மற்றொரு பிளாஸ்டிக் தயாரிக்கும் கடையை உடைத்து லேப்டாப், டி.வி. உள்ளிட்ட பொருட்களை சுருட்டினர்.
இதைத்தொடர்ந்து வீபாகு நகர் காளியம்மன் கோவில் தெருவில் ஒரு மோட்டார் சைக்கிளை திருடினர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் கொள்ளையில் ஈடுபட்ட 3 வாலிபர்களை விரட்டினர்.
அந்த நேரத்தில் அவ்வழியே ரோந்து வந்த போலீசார் 2 பேரை மடக்கி பிடித்தனர். ஒருவன் தப்பி ஓடி விட்டான்.
விசாரணையில் அவர்கள் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த பாலன் என்கிற சின்ன அட்டி, தினேஷ் என்பது தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
ஏற்கனவே அவர்கள் கூடுவாஞ்சேரி ரெயில்வே தண்டவாளம் அருகே தனியாக நடந்து வந்த வாலிபர் ஒருவரை தாக்கி செல்போன், பணத்தை பறித்து சென்று இருப்பதும் தெரியவந்தது.
தப்பி ஓடிய கூட்டாளியான சந்தோஷ்குமாரை போலீசார் தேடி வருகிறார்கள். கைதானவர்களிடம் இருந்து டி.வி., லேப்டாப், 3 செல்போன், 2 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- சிறுமியின் உடல் நிலை பாதிக்கப்படவே அவரது பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளனர்.
- டாக்டர்கள் பரிசோதித்த போது சிறுமி 4 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவரவே பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் ராக்கியாபாளையம் சின்னச்சாமி காம்பவுண்டு பகுதியை சேர்ந்த 17 வயதான சிறுமி 10-ம்வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். அவரது பெற்றோர் வேலைக்கு செல்லும் போது அந்த சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருப்பார்.
இந்தநிலையில் அதே காம்பவுண்டு பகுதியில் சூர்யகுமார் (வயது 28), அரவிந்த் (29) ஆகியோர் வசித்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.
சம்பவத்தன்று சூர்யகுமாரின் மனைவி மற்றும் அவரது 2 குழந்தைகள் வெளியூருக்கு சென்று விட்டனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட சூர்யகுமார், வீட்டில் தனியாக இருந்த 17 வயது சிறுமியிடம் நைசாக பேச்சுக்கொடுத்து அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு சென்றதும் சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது அங்கு வந்த அரவிந்தும் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.
இது பற்றி வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என்று 2 பேரும் சிறுமியை மிரட்டியுள்ளனர். மேலும் 2பேரும் அவ்வப்போது சிறுமியை தனியாக அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளனர்.
இந்தநிலையில் சிறுமியின் உடல் நிலை பாதிக்கப்படவே அவரது பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளனர். டாக்டர்கள் பரிசோதித்த போது சிறுமி 4 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவரவே பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது பற்றி சிறுமியிடம் கேட்டபோது, அவர் நடந்த விவரத்தை கூறினார்.
உடனே இதுகுறித்து திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி சூர்யகுமார், அரவிந்த் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர். சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து திருமணமான வாலிபர்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு காமிராவை பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை
மதுரை தல்லாகுளம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சொக்கிகுளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது வல்லபாய் மெயின் ரோட்டில் 4 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வீலிங் சாகசம் செய்து அதனை வீடியோ வாக பதிவு செய்து கொண்டி ருந்தனர்.
அவர்கள் பொது இடத்தில் சாகசம் செய்ததால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. இதனை கண்ட போலீசார் அவர்கள் 4 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
இதில் அவர்கள் செல்லூர் சுயராஜபுரம் பாலமுருகன், எஸ்.கொடிக்குளம் கதிரவன், செல்லூர் சிவராமன், மீனாம்பாள்புரம் சத்திய மூர்த்தி மெயின் ரோடு மகாபிரபு என்பது தெரியவந்தது.
இவர்கள் மதுரையில் செயல்பட்டு வரம் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஆவார்கள். இவர்கள் சமூக வலை தளத்தில் தங்கள் சாகசத்தை பதிவிடுவதற்காக மோட்டார் சைக்கிள் வீலிங் செய்து அதனை வீடியோ எடுத்துள்ளனர் என்பது தெரிய வந்தது.
அவர்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால் 4 பேரையும் ேபாலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு காமிராவை பறிமுதல் செய்யப்பட்டது.
- சுடலைகுட்டி பொதுமக்கள் நோயாளிகள் வந்து செல்லக்கூடிய இடம். இங்கு வேகமாக செல்லாமா என கேட்டார்.
- இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் ஜெயிலில் அடைத்தனர்.
கோவை,
கோவை பேரூர் அருகே உள்ள ஆறுமுக கவுண்டனூரை சேர்ந்தவர் சுடலைகுட்டி (வயது 59).
இவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று சுடலைகுட்டி பணியில் இருந்தார். அப்போது அரசு ஆஸ்பத்திரிக்குள் 3 வாலிபர்கள் ஒரே மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து கீழே விழுந்தனர்.
இதனை பார்த்த காவலாளி அந்த வாலிபர்களின் அருகே சென்று பொதுமக்கள் நோயாளிகள் வந்து செல்லக்கூடிய இடம். இங்கு வேகமாக செல்லாமா என கேட்டார்.
இதில் ஆத்திரம் அடைந்த அந்த 3 வாலிபர்களும் சேர்ந்து காவலாளி சுடலை குட்டியை தகாத வார்த்தைகளால் பேசி ஹெல்மெட்டால் தாக்கினர்.
பின்னர் அங்கு இருந்து தப்பிச் சென்றனர். தாக்குதலில் படுகாயம் அடைந்த காவலாளியை அங்கு இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி காலாளியை தாக்கி சிவகங்கையை சேர்ந்த கட்டிட தொழிலாளி மகேஸ்வரன் (27), சுகுமார் (29), பாலமுருகன் (27) ஆகியோரை கைது செய்தனர்.
பின்னர் போலீசார் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.