என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "youtuber"
- இந்தியாவில் வெளியிடுவதற்காக அவர்கள் இந்தியா வந்துள்ளனர்.
- மிஸ்டர் பீஸ்ட்-இடம் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
உலக அளவில் மிகப்பெரிய யூடியூபர்களான மிஸ்டர் பீஸ்ட், லோகன் பால மற்றும் கேஎஸ்ஐ இந்தியா வந்துள்ளனர். இந்த மூவரின் பிரான்டுகள்- ஃபீஸ்டபில் மற்றும் பிரைம் ஆகியவற்றை இந்தியாவில் வெளியிடுவதற்காக அவர்கள் இந்தியா வந்துள்ளனர்.
மிஸ்டர் பீஸ்ட் இந்தியா வந்ததில் இருந்து அவர் பற்றிய தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. அதன்படி இன்ஸ்டாகிாமில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா ஆகியோரை ஃபாளோ செய்த மிஸ்டர் பீஸ்ட்-இடம் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அப்போது உங்கள் வீடியோவில் விராட் கோலியை எதிர்பார்க்கலாமா என்று கேட்டிருந்தார். அதற்கு கமென்ட் செய்த மிஸ்டர் பீஸ்ட், "உங்களுக்கு மிஸ்டர் பீஸ்ட் வீடியோவில் விராட் கோலி இடம்பெறுவதை பார்க்க வேண்டுமா?" என்று குறிப்பிட்டார். இவரது இந்த கமென்ட் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.
- திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக நடிகை புகார்.
- இவரது யூடியூப் சேனலை 1 கோடிக்கும் அதிகமானோர் சப்ஸ்க்ரைப் செய்துள்ளனர்.
தெலுங்கானாவின் பிரபல யூடியூபர் ஹர்ஷா சாய் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகவும், நிர்வாண படங்கள், வீடியோக்களை வைத்து பணம் கேட்டு மிரட்டுவதாகவும் நடிகை ஒருவர் ஹர்ஷா சாய் மீது புகார் கொடுத்துள்ளார். இதன் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தன் மீது பொய் புகார்களை சுமத்துவதாகவும், அதை சட்ட ரீதியில் சந்திக்கப்போவதாக ஹர்ஷா சாய் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஏழை மக்களுக்கு பணம், பொருட்கள் உதவி செய்வதை வீடியோவாக எடுத்து யூடியூப் மற்றும் தனது சமூக வலைதள பக்கங்களில் யூடியூபர் ஹர்ஷா சாய் பதிவிட்டு வருகிறார். இவரது யூடியூப் சேனலை 1 கோடிக்கும் அதிகமானோர் சப்ஸ்க்ரைப் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- சைக்கிளில் சென்ற முதியவர் மீது நுரை ஸ்பிரே அடித்து யூடியூபர் வினய் யாதவ் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டார்.
- சமூக வலைத்தளங்களில் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து கண்டனம் தெரிவித்தனர்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் ஜான்சி பகுதியில், சைக்கிளில் சென்ற முதியவர் மீது நுரை ஸ்பிரே அடித்து கிண்டலடிக்கும் விதமாக யூடியூபர் வினய் யாதவ் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து முதியவரை பொதுவெளியில் துன்புறுத்திய யூடியூபர் வினய் யாதவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனையடுத்து யூடியூபர் வினய் யாதவை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பின்பு வினய் யாதவ் கால் வலியோடு மெதுவாக நடக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
யூடியூபர் வினய் யாதவின் ஆக்சனுக்கு இதுதான் சரியான ரியாக்சன் என்று இந்த வீடியோவை பகிர்ந்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Youth sprayed on an old man on a bicycle for fun and making reels in Jhansi.UP Police has arrested him and given him course on manners. His walk tells the intensity of course.pic.twitter.com/DBJKAZ8iQn
— Megh Updates ?™ (@MeghUpdates) September 22, 2024
- யூடியூபர் பறக்கவிட்ட பணத்தை எடுக்க மக்கள் முண்டியடித்து ஓடினர்.
- சாலையில் சிதறிக்கிடந்த ரூபாய் எடுக்க முயன்றவர்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் பரபரப்பான குகட்பல்லி பகுதியில் ரூபாய் நோட்டுகளை பறக்க விட்டு ரீல்ஸ் எடுத்த யூடியூபரை போலீசார் கைது செய்தனர்.
யூடியூபர் பறக்கவிட்ட பணத்தை எடுக்க மக்கள் முண்டியடித்து ஓடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
அந்த வீடியோவில் யூடியூபர் பவர் ஹர்ஷா என்ற மகாதேவ் சாலையின் நடுவில் நின்று பணத்தை பறக்க விடுகிறார். இதனால் சிதறிய நோட்டுகளை எடுக்க வாகன ஓட்டிகளும் தங்கள் வாகனங்களை நிறுத்தி, பணத்தை எடுக்கின்றனர். நடந்து சென்றவர்களும் ரூபாய் நோட்டுகளை முண்டியடித்து சேகரிக்கின்றனர். சாலையில் சிதறிக்கிடந்த ரூபாய் எடுக்க முயன்றவர்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வீடியோ வைரலானதை அடுத்து ஹர்ஷா மீது வழக்கு பதிந்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.
- பெங்களூருவை சேர்ந்தவர் இஷான் சர்மா.
- சமீபத்தில் பதிவிட்ட தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெங்களூருவை சேர்ந்தவர் இஷான் சர்மா. யூடியூப் பிரபலமான இவர் அமெரிக்காவுக்கு சென்றிருந்தார். லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள 5 நட்சத்திர விடுதியில் அவர் அறை எடுத்து தங்கியிருந்தார்.
அப்போது ஊழியர்களிடம் குடிக்க தண்ணீர் கேட்டநிலையில் குடிநீருக்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும் என அவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து வீடியோவுடன் ஒரு பதிவை வெளியிட்டார்.
அதில் அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையின் ஒருநாள் கட்டணம் ரூ,16 ஆயிரம் என்றும் ஆனால் குடிநீர் காசு கொடுத்து தனியாகதான் வாங்க வேண்டும் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
இஷான் சர்மாவின் இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவிய நிலையில் ஓட்டல் நிர்வாகத்தினர் மீது கடும் கண்டனம் எழுந்தது.
- பாரம்பரிய மயில் கறி என்ற பெயரில் தேசியப் பறவையான மயிலை சமைத்து வீடியோ பதிவிட்டுள்ளார்.
- காட்டுப் பன்றிக் கறி சமையல் வீடியோவையும் பிரணாய் பதிவிட்டிருந்தார்.
தெலங்கானாவில் யூடியூபர் ஒருவர் மயில் கறி சமைத்து வம்படியாக வந்து சிக்கலில் மாட்டியுள்ளார். தெலங்கானா மாநிலம் சிர்சில்லா [Siricilla ] மாவட்டத்தில் உள்ள தங்களப்பள்ளியை சேர்ந்தவர் பிரணாய் குமார்.
பாராம்பரிய உணவு வகைகளைச் சமைத்து அந்த வீடியோக்களை தனது யூடியூப் சேனலில் பதிவிட்டு வரும் பிரணாய் பாரம்பரிய மயில் கறி என்ற பெயரில் தேசியப் பறவையான மயிலை சமைத்து அந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.
ஆனால் மயிலை கொல்வது சட்டவிரோதம் என்பதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரணாய் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், குற்றத்தை உறுதி செய்த பின் அவரை கைது செய்து விரைவில் சிறையில் அடிப்போம் எனவும் சிர்சில்லா மாவட்ட எஸ்.பி ராஜண்ணா உறுதியளித்துள்ளார்.
சர்ச்சைக்குப்பிறகு பிரணாய், மயில் கறி வீடியோவை தனது யூடியூப் சேனலில் இருந்து நீக்கியுள்ளார். எனினும் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்கு முன்னதாக காட்டுப் பன்றிக் கறி சமையல் வீடியோவையும் பிரணாய் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
- நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
- சாட்டை துரைமுருகனை குறி வைத்து திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார் செயல்படுகிறார்.
சென்னை:
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசார மேடையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தேவர், நாடார், கோனார், தேவேந்திரர் மீது வருணுக்கு பிறப்பு வெறுப்பு. அதனால் அவர்களுக்கு எதிராக செயல்படுகிறார்.
* ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் சாதி வெறுப்புடன் செயல்படுகிறார் என்பதற்கு ஆதாரம் உள்ளது.
* சாட்டை துரைமுருகனை குறி வைத்து திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார் செயல்படுகிறார் என்று அவர் கூறினார்.
- குற்றாலத்தில் தங்கியிருந்த சாட்டை துரைமுருகனை திருச்சி போலீசார் கைது செய்தனர்.
- முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பிரபல யூடியூபர் சாட்டை துரைமுருகன் குற்றாலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றாலத்தில் தங்கியிருந்த சாட்டை துரைமுருகனை திருச்சி போலீசார் கைது செய்தனர்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரசார மேடையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக அரசையும் தரக்குறைவாக விமர்சித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம் குற்றாலம் வந்த நாம் தமிழர் கட்சி பிரமுகர் சாட்டை துரைமுருகன் திருச்சி சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
- கடையில் பெண் ஒருவரிடம் "பேல் பூரி" வாங்கிய யூடியூபர், ஓகே... தாங்க்யூ என்று கூறினார்.
- அதற்கு அந்த பெண்ணும் "நன்றி அண்ணா" என்று கூறுவதை கேட்டு யூடியூபர் சிரிக்கிறார்.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல யூடியூபர் கிறிஸ்டோபர் லூயிஸ் தமிழில் "நன்றி தங்கச்சி" என்று பேசிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கடையில் பெண் ஒருவரிடம் "பேல் பூரி" வாங்கிய யூடியூபர், ஓகே... தாங்க்யூ என்று கூறினார்.
what do you say for like sister in... என்று கேட்கிறார்.
அதற்கு அந்த பெண் "தங்கச்சி" என்று கூறுகிறார்.
younger sister is தங்கச்சி என்று கேட்கிறார்.
அந்த பெண்ணும் ஆம் என்று கூறுகிறார்.
இதையடுத்து "நன்றி தங்கச்சி" என்று கூறுகிறார். அதற்கு அந்த பெண்ணும் "நன்றி அண்ணா" என்று கூறுவதை கேட்டு யூடியூபர் சிரிக்கிறார்.
தான் கூறியது சரியா என்று கேட்கிறார். அப்பெண்ணும் சரி என்கிறார்.
அவர் வாங்கியதின் பெயர் என்ன என்று கேட்கிறார். அப்பெண் மசாலா பொரி என்று கூறுகிறார்.
அந்த பெண்ணின் பெயரை கேட்கிறார். வெண்ணிலா என்று அப்பெண் பதிலளிக்கிறார்.
வெண்ணிலாவின் "பேல் பூரி" என்று சுவைக்கிறார்.
இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- சல்மான் கான் வீட்டின் முன் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
- சல்மான் கானை கொலை செய்யப் போவதாக வீடியோ வெளியிட்டு மிரட்டிய ராஜஸ்தானை சேர்த்த பன்வாரிலால் பன்டி என்ற யூடியூபரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் மீது கொலை முயற்சிகள் அடுத்தடுத்து நடந்து வருவது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி அதிகாலையில் மும்பையின் பாந்திரா பகுதியில் உள்ள சல்மான் கான் வீட்டின் முன் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இந்த விவகாரத்தில் மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களுள் அனுஜ் தபான் என்பவர் கடந்த மே 1 ஆம் தேதி காவல் நிலையத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தவிர்த்து அவர் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட அரியானவைச் சேர்த்த பிஷ்னாய் மற்றும் கோல்டி ஆகிய ரவுடிக் கும்பலைச் சேர்ந்த 5 பேர் நவி மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் சல்மான் கானின் பாந்திரா இல்லத்தையும், பன்வேலில் உள்ள பண்ணை வீட்டையும், சல்மான் கானின் படப்பிடிப்பு தளத்தையும் பல நாட்களாக வேவு பார்த்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் சல்மான் கானை கொலை செய்யப் போவதாக வீடியோ வெளியிட்டு மிரட்டிய ராஜஸ்தானை சேர்த்த பன்வாரிலால் பன்டி என்ற யூடியூபரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் நெடுஞ்சாலையில் வைத்து எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் பன்டி பேசியதாவது, "லாரன்ஸ் பிஷ்னாய் மற்றும் கோல்டி கேங்கைச் சேர்நதவர்கள் என்னுடன் தான் உள்ளனர், நான் சல்மான் கானை கொலை செய்யப் போகிறேன்" என்று மிரட்டல் விடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து ராஜஸ்தான் விரைந்த மும்பை சைபர் கிரைம் போலீசார் பன்டியை கைது செய்து மும்பை அழைத்து வந்தனர். பன்வரலால் பன்டிக்கு குற்றப்பின்னணி இருக்கிறதா? அல்லது விளம்பரத்துக்காக வீடியோ வெளியிட்டாரா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- காசியாபாத்தில் வசித்து வரும் சிக்கா மெத்ரே 'She will say no - let her' என்ற யூடியூப் சேனலை நடத்தி வந்துள்ளார்.
- இவர் டெல்லியில் உள்ள நேஷனல் பேஷன் டெக்னோலஜி இன்ஸ்டிடியூட்டில் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தத்க்கது.
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அளிக்க ஊக்குவிக்கும் வீடியோக்களை வெளியிட்டு பாடம் எடுத்த பெண் யுடியூபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காசியாபாத்தில் வசித்து வரும் சிக்கா மெத்ரே 'She will say no - let her' என்ற யூடியூப் சேனலை நடத்தி வந்துள்ளார். 20,50 சப்ஸ்க்ரைபர்கள் கொண்ட இந்த சேனலில் இதுவரை 115 வீடியோக்களை அவர் பதிவேற்றியுள்ளார்.
அந்த வீடியோக்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் அனுமதி இல்லாமல் வலுக்கட்டாயமாக அவர்களுடன் பாலியல் உறவு வைப்பதை ஊக்குவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக செயற்பாட்டாளர் நாராயண் பரத்வாஜ் என்பவர் அளித்த புகாரின் பேரிலேயே தற்போது மெத்ரே கைது செய்யப்பட்டுள்ளார். பரத்வாஜ் தனது புகாரில், இந்த வீடியோக்கள் மூலம் மெத்ரே இளைஞர்களை தவறாக வழிநடத்துகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சிக்கா மெத்ரேவிடம் இருந்து லேப்டாப் மற்றும் மொபைல் போனை பறிமுதல் செய்துள்ள போலீசார், அவரது யூடியூப் சேனலையும், சமூக வலைதளக் கணக்குகளையும் முடக்கியுள்ளனர். அவர் மீது குழந்தைகளுக்கு எதிராக பாலியல் படங்களை தயாரிப்பது மற்றும் விநியோகிப்பது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனது யூடியூப் பக்கத்தை பிரைவேட் மோடில் வைத்திருந்ததால் சிக்கா மெத்ரே இத்தனை நாள் சிக்காமல் இருந்துள்ளார். இவர் டெல்லியில் உள்ள நேஷனல் பேஷன் டெக்னோலஜி இன்ஸ்டிடியூட்டில் [NIFT] பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- நியூயார்க்கில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 19-வது லீக் போட்டி நடைபெற்றது
- ஈகோ கிளாஸை எளிதாக விளக்கும் வகையில் ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை இந்த போட்டிக்கு வந்த நபர் ஒருவர் அரங்கேற்றியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை 2024 போட்டிகள் அமெரிக்காவில் நடந்து வரும் நிலையில் நியூயார்க்கில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 19-வது லீக் போட்டி நடைபெற்றது. இதில், முதலில் விளையாடிய இந்தியா 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் விளையாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியை காண வந்த பாகிஸ்தானை சேர்ந்த யூடியூபர் ஷாத் அகமத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கிரிக்கெட்டை விளையாட்டு என்று கருதுவதையும் தாண்டி இரண்டு நாடுகளுக்குமாக ஈகோ கிளாசாக ரசிகர்கள் மாற்றத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் அந்த ஈகோ கிளாஸை எளிதாக விளக்கும் வகையில் ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை இந்த போட்டிக்கு வந்த நபர் ஒருவர் அரங்கேற்றியுள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த ரேசா கான் என்ற அந்த கன்டன்ட் கிரியேட்டர், தனது பாகிஸ்தானிய தந்தையையும், இந்திய மாமனாரையும் போட்டிக்கு அழைத்து வந்து இந்தியா பாகிஸ்தான் அணிகள் விளையாடும்போது அவர்களின் ரியாக்சன்களைப் படம்பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதைத் தொடர்ந்து வீடியோ வைரலாகி வருகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமி நடிப்பில் வெளிவந்த உயிரே படத்தில் இருவேறு சித்தாந்தங்களைக் கொண்ட தகப்பன்கள் மும்பையில் நடக்கும் மதக் கலவரத்தின்போது தங்களுக்குள் உள்ள வித்தியாசங்களையும் பிரிவினையையும் எதிர்கொள்ளும் தருணத்தை சந்திப்பர். இந்த வீடியோ அதை நினைவுபடுத்துவதாக உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்