என் மலர்
நீங்கள் தேடியது "ஆஜர்"
- நீதிபதிகள், நீதித்துறை அதிகாரிகளுக்கு சம்பளம், பணப்பலன்கள் அளிக்காத விவகாரம்.
- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் தலைமைச் செயலாளர், நிதித்துறை செயலாளர் வரும் 23ம் தேதி நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகள், நீதித்துறை அதிகாரிகளுக்கு சம்பளம், பணப்பலன்கள் அளிக்காத விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதித்துறை அதிகாரிகளுக்கு ஊதியம், பணப்பலன்களை 2வது தேசிய நீதிசார் ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இந்த விவகாரத்தில் அகில இந்திய நீதிபதிகளின் சங்கத்தின் மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிமன்றத்திற்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் கே.எஸ்.பரமேஸ்வர் ஆஜராகி உத்தரவை செயல்படுத்தாக மாநிலங்களின் விவரத்தை அறிவித்தார்.
இதை பதிவு செய்துக் கொண்ட உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தில் ஊதியம் மற்றும் பணப்பலன்களை அளிக்கும் உத்தரவை வரும் 23ம் தேதிக்குள் செயல்படுத்தவும், தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநில தலைமைச் செயலாளர்கள், நிதித்துறை செயலாளர்கள் நேரில் ஆஜராகும்படியும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- சிறப்பு புலனாய்வு குழு போலீசாருடன் ஆலோசனை.
- பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக `புளூ கார்னர்' நோட்டீஸ் பிறப்பிக்க பரிந்துரை.
பாலியல் புகாரில் சிக்கி உள்ள பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. விசாரணைக்கு ஆஜராக கூறி ஏற்கனவே ஒருமுறை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.
ஆனால் ஜெர்மனியில் இருப்பதால் தன்னால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என்று சமூக வலைதள பதிவு மூலம் தகவல் தெரிவித்த பிரஜ்வல் ரேவண்ணா, அவரது வக்கீல் மூலம் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக 7 நாட்கள் கால அவகாசம் கேட்டார். அதை ஏற்காத சிறப்பு புலனாய்வு குழு போலீசார், தேடப்படும் நபராக பிரஜ்வல் ரேவண்ணாவை அறிவித்து லுக்-அவுட் நோட்டீஸ் வழங்கினர்.
இவ்வழக்கில் அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து பெங்களூருவில் முதல்-மந்திரி சித்தராமையா, சிறப்பு புலனாய்வு குழு போலீசாருடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக சி.பி.ஐ. 'புளூ கார்னர்' நோட்டீஸ் வழங்கினால் சிறப்பு புலனாய்வு குழு போலீசாரால் பிரஜ்வல் ரேவண்ணா எங்கு இருக்கிறார் மற்றும் அவரது நடவடிக்கைகள் குறித்து எளிதில் தெரிந்து கொள்ள முடியும் என்று அதிகாரிகள் கூறினர்.
இதையடுத்து சிறப்பு புலனாய்வு குழு போலீசார், பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக 'புளூ கார்னர்' நோட்டீஸ் பிறப்பிக்க மத்திய உளவுத்துறை (இன்டர்போல்) உடன் நேரடி தொடர்பில் உள்ள சி.பி.ஐ.யிடம் கர்நாடக அரசு மூலம் பரிந்துரைத்துள்ளனர். இதன் மூலம் பிரஜ்வல் ரேவண்ணாவை வெளிநாட்டில் வைத்து கைது செய்து அழைத்து வர நடவடிக்கை எடுக்க திட்டமிட்டனர்.
இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா துபாயில் இருந்து இன்று பிற்பகல் பெங்களூரில் உள்ள தேவனஹள்ளி விமான நிலையத்துக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து சிறப்பு புலனாய்வு படையினர் பெங்களூர் தேவனஹள்ளி விமான நிலையத்துக்கு விரைந்துள்ளனர். அங்கு வைத்து அவரை கைது செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.
- நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் 500-க்கும் மேற்பட்டவர்கள் போலீஸ் நிலையம் அருகே திரண்டு இருந்தனர்.
- ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
போரூர்:
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கடந்த 2012-ம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி ஒரு புகார் அளித்தார்.
அதில், சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிவிட்டார் என்று கூறியிருந்தார். புகாரை பெற்றுக் கொண்ட வளசரவாக்கம் போலீசார் கற்பழிப்பு உள்பட 5 பிரிவின் கீழ் சீமான் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
அந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் விஜயலட்சுமி திடீரென்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மீண்டும் சீமான் மீது புகார் அளித்தார். அந்த புகார் மனுவில் சீமானை கைது செய்ய வேண்டும். அதுவரை தான் ஓயப் போவதில்லை என்று கூறினார்.
இதையடுத்து போலீசார் மீண்டும் அந்த வழக்கை தூசு தட்டினார்கள். அந்த வழக்கு குறித்து விசாரணைக்கு ஆஜராக சொல்லி சம்மன் அனுப்பப்பட்டது.
முதல் தடவை சீமான் தரப்பில் வக்கீல் மட்டும் ஆஜர் ஆகியிருந்தார். 2-வது முறையாக விஜயலட்சுமியும், வீரலட்சுமியும் சேர்ந்து ஆஜர் ஆக வேண்டும் என்று சீமான் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதற்கிடையே ரூ.1 கோடி மானநஷ்டஈடு கோரி சீமான் தரப்பில் விஜயலட்சுமிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதையடுத்து நேற்று முன்தினம் வளசரவாக்கம் போலீஸ் நிலையத்துக்கு சென்று விஜயலட்சுமி தனது புகாரை வாபஸ் பெற்றுக் கொள்வதாக எழுதி கொடுத்தார்.
மேலும் சீமான் சக்தி வாய்ந்த தலைவர் என்று குறிப்பிட்ட விஜயலட்சுமி தான் இனி சென்னைக்கு வரப் போவதில்லை என்றும் பெங்களூர் செல்வதாகவும் கூறி சென்றார்.
ஏற்கனவே போலீஸ் விசாரணைக்கு 18-ந்தேதி ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன்படி இன்று காலை 11 மணியளவில் சீமான் வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜர் ஆனார்.
காலை 11.15 மணிக்கு சீமான் வந்தார். அவர் வருவதை அறிந்ததும் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் 500-க்கும் மேற்பட்டவர்கள் போலீஸ் நிலையம் அருகே திரண்டு இருந்தனர்.
கோயம்பேடு துணை ஆணையாளர் உமையாள் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
சீமான் வந்ததும் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. அவரால் காரை விட்டு இறங்க முடியவில்லை.
போலீஸ் நிலையத்தில் இருந்து சற்று தொலைவில் தடுப்பு வேலி அமைத்து போலீசார் அரண் போல் நின்றிருந்தார்கள். சீமானின் கார் செல்வதற்காக தடுப்பு வேலிகளை அகற்றுமாறு போலீசாரிடம் கூறினார்கள்.
போலீசார் அகற்றாததால் தடுப்பு வேலிகளை தள்ளி விட்டு உள்ளே நுழைய முயன்றார்கள். இதனால் போலீசாருக்கும் கட்சியினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
சுமார் 15 நிமிடத்துக்கு பிறகு சீமான் காரில் இருந்து இறங்கி போலீஸ் நிலையத்துக்குள் சென்றார். விசாரணையின் போது அவருக்கு உதவுவதற்காக அவரது மனைவியும் வக்கீலுமான கயல்விழி மற்றும் வக்கீல் சங்கர் உள்பட 5 பேர் விசாரணையில் கலந்து கொண்டனர்.
ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
- அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் அனுப்பபட்டது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு ஓட்டு கேட்டு கடந்த பிப்ரவரி 13-ந் தேதி ஈரோடு திருநகர் காலனியில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் பற்றியும், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றியும் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
அவரது பேச்சுக்கு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சீமான் மீது எஸ்.சி. எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட மொத்தம் 4 பிரிவுகளின் கீழ் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இவ்வழக்கில் விசாரணைக்காக ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் அனுப்பபட்டது.
இதன்படி இன்று காலை ஈரோடு முதன்மை நீதிமன்றத்தில் சீமான் ஆஜராகினார். அவருடன் கட்சி நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர் வந்திருந்தனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீதிமன்ற வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
- நகர போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
- வாரம் 2 நாட்கள் கையெழுத்திட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.
கடலூர்:
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித் திருமஞ்சன விழாவையொட்டி, கனகசபை மீது பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாகவும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குறித்தும் சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து பதிவிட்டதாக பாஜக மாநிலச் செயலர் எஸ்.ஜி.சூர்யா, அந்த கட்சி நிர்வாகி கவுசிக் சுப்ரமணியம் ஆகியோர் மீது சிதம்பரம் கிராம நிர்வாக அலுவலர் ஷேக் சிராஜூதின் அளித்த புகாரின்பேரில், நகர போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்ற மேற்கண்ட இருவரும் சிதம்பரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் எண் 2-ல் ஆகஸ்ட் 9-ம் தேதி நீதிபதி சக்திவேல் முன்பு ஆஜராகினர். அவர்கள் இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா வாரம் 2 நாட்கள் கையெழுத்திட வேண்டும். என உத்தரவு பிறப்பித்ததை அடுத்து சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் முன்னிலையில் நிபந்தனை ஜாமீன் கையேட்டில் எஸ்.ஜி.சூர்யா கையெழு த்திட்டார். அவருடன் பாஜக முன்னாள் ராணுவவீரப் பிரிவு செயலாளர் பால சுப்பிரமணியன், விவசாயி அணி தலைவர் ரகுபதி உள்ளிட்டோர் உடன் வந்தனர்.
- மேலூர் கோர்ட்டில் மு.க.அழகிரி மகன் துரைதயாநிதி இன்று ஆஜரானார்.
- கிரா–னைட் வழக்கை விசாரிக்கும் மதுரை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூ–ரில் ஏராளமான கிரானைட் குவாரிகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த குவாரிகளில் முறை–யீடு நடந்ததாகவும், அதன் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் அரசு சார்பில் மேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நூற் றுக்கும் மேற்பட்ட வழக்கு–கள் பதிவு செய்யப்பட்டது.
இதில் பெரும்பாலான கிரானைட் வழக்குகள் மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இங்குள்ள ஒரு சில வழக்குகள் இன்னும் மேலூர் கோர்ட்டிலேயே நடந்து வருகிறது. அதில் இன்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரைதயாநிதி தொடர் பான கிரானைட் வழக்கு மேலூர் கோட்டில் விசாரணைக்கு வந்தது.
அப்போது துரை தயாநிதி தனது வழக்கறிஞர்களுடன் நேரில் ஆஜரானார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல கிருஷ்ணன், கிரானைட் வழக்கை விசாரிக்கும் மதுரை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.
- வேங்கைவயல் வழக்கில் டி.என்.ஏ. பரிசோதனைக்காக 8 பேர் புதுக்கோட்டை கோர்ட்டில் ஆஜராகினர்
- தொடக்கத்தில் டி.என்.ஏ. பரிசோதனைக்கு 8 பேர் வர மறுத்தனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. குற்றவாளிகளை கண்டறியும் வகையில் அறிவியல் ரீதியான தடயங்களை சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இதில் குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்ட அசுத்தத்தில் இருந்து தடயவியல் அறிக்கை பெறப்பட்டுள்ளது. இதேபோல் 180-க்கும் மேற்பட்டவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில் 13 பேரிடம் டி.என்.ஏ. பாிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது. 2 பேரிடம் குரல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தொடக்கத்தில் டி.என்.ஏ. பரிசோதனைக்கு 8 பேர் வர மறுத்தனர். அவர்கள் பரிசோதனைக்கு விருப்பமில்லை என தெரிவித்ததோடு, அவர்கள் தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தனர். இதில் 8 பேரையும் பரிசோதனைக்குட்படுத்த ஐகோர்ட்டு அறிவுறுத்தியது.
மேலும் வர மறுத்த 8 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த அனுமதி கேட்டு புதுக்கோட்டையில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்ட நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீண்டும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணைக்கு 8 பேரும் ஆஜராக கோர்ட்டு சம்மன் அனுப்பியது. அதன்படி வேங்கைவயல் பகுதியை சேர்ந்த சுபா, முத்துராமன், கிருஷ்ணன், கண்ணதாசன், ஜீவானந்தம், கணேசன், இளவரசி, ஜானகி ஆகிய 8 பேர் நேற்று கோர்ட்டில் ஆஜராகினர். அப்போது டி.என்.ஏ. பரிசோதனை தொடர்பான சம்மன் 8 பேருக்கும் கோர்ட்டு மூலம் வழங்கப்பட்டது.
- “என் வீட்டில் பொருட்களை திருடியதால் கொன்றேன்” கைதான வாலிபர்கள் வாக்குமூலம்
- சாமிதோப்பை சேர்ந்த விக்னேஷ் என்பவருடன் சேர்ந்து கண்ணனை மது அருந்து வதற்கு வரும்படி சுசீந்திரம் ஆசிரமம் அருகே உள்ள ஊட்டுவாழ்மடம் செல்லும் பாதைக்கு அழைத்துச் சென்றோம். அங்குள்ள முள் புதருக்குள் வைத்து நானும் விக்னேசும் சேர்ந்து அவரை கொலை செய்து பிணத்தை அங்கேயே வீசிவிட்டு சென்று விட் டோம்.
கன்னியாகுமரி, அக்.18-
கன்னியாகுமரி அருகே உள்ள மகாதானபுரத்தை அடுத்த சுண்டன்பரப்பைச் சேர்ந்தவர் மாசாணம் என்ற கண்ணன் (வயது 32). தொழிலாளி. இவரது மனைவி இசக்கியம்மாள் என்ற செல்வராணி. இவர்க ளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
மாசாணம் என்ற கண்ணன் கடந்த மாதம் 18-ந் தேதி "திடீர்"என்று மாயமானார். இது குறித்து அவரது மனைவி செல்வராணி கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். அப்போது மாசாணம் என்ற கண்ணனை கடைசியாக பாலன் என்ற பாலகிரு ஷ்ணன் (34) அதே ஊரை சேர்ந்த விக்னேஷ் (19) ஆகியோர் அழைத்துச் சென்றது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து பாலன் மற்றும் விக்னேஷ் ஆகிய 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி னர். முதலில் 2 பேரும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறினர். இதையடுத்து 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அதாவது சம்பவத்தன்று மாசாணம் என்ற கண்ணன், பாலன் என்ற பால கிருஷ்ணன் மற்றும் விக்னேஷ் ஆகிய 3 பேரும் ஒன்றாக சேர்ந்து மது குடித் துள்ளனர். கண்ண னுக்கும் பாலனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில் பாலன் மற்றும் விக்னேஷ் சேர்ந்து கண்ணனை கல்லால் அடித்துக் கொலை செய்ததாக தெரிகிறது.
பின்னர் கண்ணனின் உடலை சுசீந்திரம் ஆசிரமம் அருகே உள்ள ஊட்டுவாழ்மடம் செல்லும் பாதையில் வீசிவிட்டு சென்று உள்ளனர். மேற்கண்ட விவரங்கள் விசாரணையில் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா, இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் நேற்று ஊட்டுவாழ் மடம் செல்லும் பாதையில் சென்று பார்வை யிட்டனர்.
எலும்பு கூடு
அப்போது அங்கு ஒரு மனித எலும்புக்கூடு கிடந்தது. எலும்பு கூட்டின் அருகே ஒரு சட்டை கிடந்தது. அதை போலீசார் கைப்பற்றி கண்ணனின் மனைவியிடம் காண்பித்தனர். அப்போது அது தனது கணவர் அணிந்தி ருந்த சட்டை தான் என்பதை அவர் உறுதிப்ப டுத்தினார். அத்துடன் சட்டையை கண்ட வுடன் அவர் கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதைத்தொடர்ந்து எலும்பு கூடாக கிடந்தது கண்ணனின் உடல் தான் என்பதை போலீசார் உறுதி செய்தனர். பின்னர் துண்டு துண்டாக கிடந்த எலும்புக்கூட்டை போலீ சார் கைப்பற்றி ஆசாரிப் பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக பாலன் என்ற பாலகிருஷ்ணன் மற்றும் விக்னேசை கைது செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது பாலன் என்ற பாலகிருஷ்ணன் அளித்த வாக்குமூலம் வருமாறு:-
நான் சுண்டன்பரப்பில் வசித்து வருகிறேன். எங்கள் ஊரை சேர்ந்த கண்ணன் எனது மாமா ஆவார். இந்த உறவு முறையில் எங்கள் வீட்டுக்கு அவர் அடிக்கடி வந்து செல்வார். இதற்கிடையில் எங்கள் வீட்டில் அடிக்கடி பேன், சிலிண்டர் மற்றும் பொருட்கள் திருட்டு போனது. இந்த நிலையில் டாஸ்மாக் மதுகடை பாரில் மது அருந்திவிட்டு போதையில் எனது வீட்டில் பொருட் களைஅவர்தான் திருடிய தாக உளறினார். இது குறித்து நான் அவரிடம் கேட்டேன். அப்போது அவர் என்னை தரக்குறைவாக பேசினார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன்.
எனது நண்பரான சாமிதோப்பை சேர்ந்த விக்னேஷ் என்பவருடன் சேர்ந்து கண்ணனை மது அருந்து வதற்கு வரும்படி சுசீந்திரம் ஆசிரமம் அருகே உள்ள ஊட்டுவாழ்மடம் செல்லும் பாதைக்கு அழைத்துச் சென்றோம். அங்குள்ள முள் புதருக்குள் வைத்து நானும் விக்னேசும் சேர்ந்து அவரை கொலை செய்து பிணத்தை அங்கேயே வீசிவிட்டு சென்று விட் டோம்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
இதற்கிடையில் கைது செய்யப்பட்ட பாலன், விக்னேஷ் இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
சென்னை:
தமிழக அரசு கடந்த 2013-ம் ஆண்டு குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதித்தது. இந்த தடையை மீறி மாதவராவ், சீனிவாசராவ் ஆகியோர் குட்காவை தமிழகம் முழுவதும் விற்பனை செய்தனர். இதற்காக அவர்கள், தமிழக அமைச்சர்கள், போலீஸ் டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமி ஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து விசாரணை நடத்த சி.பி.ஐ. போலீசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதன்படி, சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்து, அமைச்சர், டிஜிபி, முன்னாள் போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோர் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
பின்னர், குட்கா வியாபாரிகள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, அரசு அதிகாரிகள் பாண்டியன், செந்தில் முருகன் ஆகியோரை சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். பின்னர், இவர்களை சி.பி.ஐ. கோர்ட்டில் கடந்த 10-ந்தேதி (திங்கட்கிழமை) ஆஜர்படுத்தி, 4 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதிப்பெற்றனர்.
இந்த நிலையில், விசாரணையை முடித்து, 5 பேரையும் இன்று காலையில் கோர்ட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அவர்கள் அனைவரையும் வருகிற 20-ந்தேதி வரை கோர்ட்டு காவலில் சிறையில் அடைக்க நீதிபதி திருநீலபிரசாத் உத்தரவிட்டார்.
இதன்பின்னர், சி.பி.ஐ. போலீசார், புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில், ‘மாதவராவ், சீனிவாசராவ் ஆகியோரை மேலும் 2 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணை தற்போது நடந்து வருகிறது.
இதற்கிடையில் செந்தில்குமார் உள்பட 3 பேரையும் புழல் சிறையில் அடைக்க, போலீசார் அழைத்து சென்றனர். #gudkacorruption #cbi