என் மலர்
நீங்கள் தேடியது "ஆம்புலன்ஸ்"
- குரல் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருபவர் அசோக் ராஜ்.
- விலங்குகள் அவசர ஊர்தியை (ஆம்புலன்சு) அளித்து பாராட்டினார்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் விலங்குகளை பாதுகாக்கும் குரல் அற்றவர்களின் குரல் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருபவர் அசோக் ராஜ்.
இவர் நோயால் பாதிக்கப்பட்ட, விபத்தில் சிக்கிய நாய், பூனை உள்ளிட்ட விலங்குகளை எடுத்து சென்று சிகிச்சை அளித்து பராமரிப்பு செய்து வருகிறார்.
இவரது சேவையை பற்றி அறிந்த நடிகர் பாலா தன்னை யார் என அறிமுகம் செய்து கொள்ளாமல் கடந்த 2 நாட்களாக அசோக்ராஜை போனில் அழைத்து சந்திக்க வேண்டும் என்றும் உங்களால் காப்பாற்றி பராமரிக்கபடும் விலங்குகளை பார்க்க வேண்டும், என கூறியுள்ளார்.
இந்த நிலையில் திடீரென புதுச்சேரி வந்த பாலா அசோக்ராஜை சந்தித்துள்ளார். அப்போது பாலா, விலங்குகளுக்கு நீங்கள் அளிக்கும் சேவையை கேள்வி பட்டேன். பல இன்னல்கள், வேதனைகளுடன் பல வருடங்களாக உங்கள் வாழ்க்கையே தியாகம் செய்து வரும் உங்களுக்கு, சரியான அங்கீகாரம் இல்லை என்பதை அறிந்தேன் என கூறி விலங்குகள் அவசர ஊர்தியை (ஆம்புலன்சு) அளித்து பாராட்டினார்.
ஒரு கனம் செய்வதறியாது திகைத்த அசோக்ராஜ் ஆம்புலன்ஸ் சாவியை பெற்று கொண்டார். பின்னர் அவர் கூறும்போது,
பல வருடங்களாக விலங்குகளுக்கு உதவி செய்வதாகவும், புழு பிடித்த, நாற்றம் வரும் நாய்களை 2 சக்கர வாகனத்தில் மருத்துவ உதவிக்கு எடுத்து சென்றதாகவும் புதுச்சேரியில் சிகிச்சை பெற முடியாத நாய்களை, சென்னைக்கு, வாடகை வண்டியில் எடுத்து சென்றேன்.
தற்போது நடிகர் பாலா மூலமாக தனக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிஷ்டப்பா குடிமணி (45) சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
- பிஷ்டப்பா குடிமணிக்கு இறுதி சடங்கு செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.
கர்நாடகா மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் மருத்துவர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நபருக்கு மீண்டும் உயிர் வந்த அதிசய சம்பவம் நடந்துள்ளது.
பிஷ்டப்பா குடிமணி (45) என்ற நபர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து மனைவி ஷீலா கணவரது உடலை ஆம்புலன்சில் ஏற்றி வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார். அப்போது அவரது மனைவி, "உங்களுக்கு பிடித்த தாபா வந்துவிட்டது. நீங்கள் இரவு உணவு சாப்பிடுகிறீர்களா?" என்று அழுதுகொண்டே கூறியவுடன் பிஷ்டப்பா குடிமணிக்கு திடீரென்று உயிர் வந்துள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக அவரை மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதனையடுத்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
பிஷ்டப்பா குடிமணிக்கு இறுதி சடங்கு செய்வதற்கான ஏற்பாடுகளும் இரங்கல் அஞ்சலி போஸ்டர்களும் தயார் செய்யப்பட்ட நிலையில் அவருக்கு மீண்டும் உயிர் வந்த சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.
- உல்பேவை பரிசோதித்த டாக்டர்கள் உயிரிழந்தார் என தெரிவித்தனர்.
- இதனால் உல்பே குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்தனர்.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலத்தின் கோலாப்பூர் மாவட்டத்தில் கசாபா-பவடா பகுதியைச் சேர்ந்தவர் பாண்டுரங் உல்பே (65). கடந்த டிசம்பர் 16-ம் தேதி இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவரை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர்.
பரிசோதித்த டாக்டர்கள், அவர் உயிரிழந்து விட்டார் என தெரிவித்ததல் உல்பே குடும்பத்தினர் சோகமடைந்தனர்.
அதன்பின், அவரது உடலை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டனர். வீட்டில் இறுதிச்சடங்குகள் தயாராகி கொண்டிருந்தன.
வீட்டுக்குச் செல்லும் வழியில் வேகத்தடை ஒன்றில் ஆம்புலன்ஸ் ஏறி இறங்கியது. அப்போது உல்பேவின் விரல்கள் அசைந்தன. இதைக் கண்ட அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் அவருக்கு உயிர் இருக்கிறது என நம்பினர்.
இதையடுத்து, உல்பேவை வேறொரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு 2 வாரம் வரை மருத்துவமனையில் அவர் தங்க வைக்கப்பட்டார். ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதில் அவர் குணமடைந்து உடல்நலம் தேறியுள்ளார்.
இந்நிலையில், உல்பே சிகிச்சை முடிந்து கடந்த திங்கட்கிழமை அவரது வீட்டுக்கு நடந்தே சென்றார்.
வேகத்தடை வழியே ஆம்புலன்ஸ் சென்றதில் உல்பே உயிர் பிழைத்து இன்று குடும்பத்தினருடன் ஒன்றாக வாழ்ந்து வருவது அப்பகுதி மக்களிடம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
- ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாமல் கார் ஒன்று தடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது.
- போக்குவரத்து போலீசாரின் இந்த நடவடிக்கையை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
கேரளா மாநிலம் திருச்சூரில் ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாமல் கார் ஒன்று தடுக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தொடர்ந்து சைரன் சத்தம் எழுப்பியபோதும் கார் ஓட்டுநர் திரும்பத் திரும்ப ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் தடுத்தார்.
ஆம்புலன்சில் இருந்த மருத்துவ பணியாளர்கள் இதனை வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ வைரலான நிலையில், ஆம்புலன்சை தடுத்த நபரின் ஓட்டுநர் உரிமத்தை போக்குவரத்து போலீசார் ரத்து செய்தனர்.
மேலும் அந்த நபருக்கு போக்குவரத்து ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்தனர். போக்குவரத்து போலீசாரின் இந்த நடவடிக்கையை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
The Kerala Police took strict action against a car owner who blocked an ambulance from overtaking! They imposed a 2.5 lakh fine, suspended his driving license for 25 years, and personally delivered the challan to his home! Such firm measures remind us of the importance of… pic.twitter.com/VLMeawlXqh
— Tahir Peerzada (@TahirPeerzada_) November 17, 2024
- திரிச்சூர் பூரம் திருவிழாவில் இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
- திருவிழாவில் மோதல் ஏற்பட்டதை அடுத்து அப்பகுதிக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
திரிச்சூர் பூரம் திருவிழாவிற்கு மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி ஆம்புலன்சில் சென்ற வீடியோ இணையத்தில் வைரலானது.
திரிச்சூர் பூரம் திருவிழாவில் இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. திருவிழாவில் மோதல் ஏற்பட்டதை அடுத்து அப்பகுதிக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இதனையடுத்து மோதலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்வதற்காக ஆம்புலன்சில் பயணித்து சம்பவ இடத்திற்கு சுரேஷ் கோபி சென்றுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் பரவியதை அடுத்து, ஆம்புலன்சை தவறாக பயன்படுத்தியதாக சுரேஷ் கோபி மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய சுரேஷ் கோபி, "பூரம் திருவிழாவின் குளறுபடிக்கு பின்னல் சதி உள்ளது. இதில் அரசியல் தலையீடு உள்ளதா என்பதை முழுமையாக விசாரிக்க வேண்டும். அப்பகுதிக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதால் ஆம்புலன்சில் சென்றேன்" என்று தெரிவித்தார்.
- காரை முந்துவதற்காக ஆம்புலன்ஸ் வேகமாக வந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
- இந்த விபத்து ஆம்புலன்ஸ்க்கு முன்னாள் வந்த காரின் பின்புற கேமராவில் பதிவாகியுள்ளது.
பெங்களூருவில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் வேகமாக வந்த ஆம்புலன்ஸ்க்கு வழிவிடும் போது பக்கத்தில் இருந்த பைக் மீது கார் மோதிய வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காரை முந்துவதற்காக ஆம்புலன்ஸ் வேகமாக வந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பைக்கில் வந்தவர் காயமடைந்தார்.
இந்த விபத்து ஆம்புலன்ஸ்க்கு முன்னாள் வந்த காரின் பின்புற கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- மலை கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வாகனம் செல்லும் வகையில் சாலைகள் இல்லை.
- உடல் நலம் பாதிக்கப்பட்ட நோயாளியை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு வருவார்.
திருப்பதி:
ஆந்திராவில் பல்வேறு மாவட்டங்களில் அதிக அளவில் மலை கிராமங்கள் உள்ளன. இந்த மலை கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வாகனம் செல்லும் வகையில் சாலைகள் இல்லை.
இதனால் மலை கிராம மக்கள் வசதிக்காக ஆந்திர மாநில அரசு படுக்கை வசதியுடன் பைக் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கியுள்ளது.
பைக்குடன் பொருத்தப்பட்ட நோயாளி படுக்கும் வகையில் படுக்கை, ஆக்சிஜன் மற்றும் பிற அடிப்படை மருத்துவ வசதிகள் இதில் உள்ளன.
மலைப்பகுதிகள் மற்றும் குறுகலான சாலைகள் கொண்ட பகுதிகளுக்கு பைக் ஆம்புலன்ஸ் உடனடியாக கொண்டு செல்லப்பட்டு பைக்கை ஓட்டி செல்லும் மருத்துவ உதவியாளர் முதலுதவி சிகிச்சை அளிப்பார்.
பின்னர் உடல் நலம் பாதிக்கப்பட்ட நோயாளியை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு வருவார். இந்த ஆம்புலன்ஸ் சேவை தற்போது பார்வதிபுரம் மானியம், விஜயநகரம், அல்லூரி சீதாராம ராஜ் ஆகிய 3 மாவட்டங்களில் தற்போது தொடங்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே கடந்த 2018-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியின்போது இந்த சேவை இருந்தது.
- இந்த ஊர்வலத்தில் இந்தியர்களின் நற்பண்பை எடுத்துக்காட்டும் நெகிழ்ச்சி சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது.
- லட்சக்கணக்கானோர் ஒரே சமயத்தில் விலகி வழி ஏற்படுத்தும் வீடியோ இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது
டி20 உலகக்கோப்பையை வென்று நாடு திரும்பியுள்ள இந்திய வீரர்களுக்கு நேற்று மும்பையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வான்கடே மைதானத்தில் நடக்கும் பாராட்டு விழாவுக்கு செல்லும் வழியில் கடற்கரை ஓரமாக மரைன் டிரைவில் நடந்த வெற்றி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டு இந்திய அணி வீரர்களை உற்சாகப் படுத்தினர்.
இந்த ஊர்வலத்தில் இந்தியர்களின் நற்பண்பை எடுத்துக்காட்டும் நெகிழ்ச்சி சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது. அதாவது ஊர்வலத்தின்போது மரைன் டிரைவ் சாலை வழியாக நோயாளியை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் ஒன்று வந்துள்ளது. உடனே அங்கு திரண்டிருந்த ரசிகர்கள், அனைவரும் ஒன்றுதிரண்டு விலகி ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.
லட்சக்கணக்கானோர் ஒரே சமயத்தில் விலகி வழி ஏற்படுத்தும் வீடியோ இணையதளத்தில் தீயாக பரவி அனைவரின் பாராட்டுகளையும் குவித்து வருகிறது. இதுதொடர்பாக மும்பை போலீஸ் கமிஷனரும் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களின் இந்த செயலுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
- பிரசவவலி அதிகமாகவே தனலட்சுமிக்கு ஆம்புலன்சிலேயே அழகான ஆண் குழந்தை பிறந்தது.
- தாய் சேய் இருவரும் நலமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
மணப்பாறை:
மணப்பாறையை அடுத்த கே பெரியபட்டி அருகில் உள்ள தெற்கு சேர்பட்டியை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மனைவி தனலட்சுமி. நிறைமாத கர்ப்பிணியகா இருந்த தனலட்சுமிக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது.
உடனே அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி மணப்பாறையில் இருந்து 108 ஆம்புலன்ஸ் அவரது வீட்டிற்கு சென்று தனலட்சுமியை ஏற்றிக் கொண்டு மணப்பாறை நோக்கி சென்றது.
வரும் வழியில் பிரசவவலி அதிகமாகவே தனலட்சுமிக்கு ஆம்புலன்சிலேயே அழகான ஆண் குழந்தை பிறந்தது. தனலட்சுமிக்கு 108 ஆம்புலன்சில் அவசர கால மருத்துவ நிபுணர் நல்லழகர், ஓட்டுனர் காளிமுத்து பணியில் இருந்தனர்.
பின்னர் தாய் சேய் இருவரும் நலமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
- அங்கு இருந்த சிறுவன் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏறி வாகனத்தை இயக்கினான்.
- 2 பெண்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் அரசு மருத்துவமனையில் வழக்கமாக பொதுமக்கள் சிகிச்சைகாக வந்து கொண்டிருந்தனர். அப்போது சிகிச்சைக்காக நோயாளியுடன் ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் நோயாளியை இறக்கி உள்ளே அழைத்து சென்றார்.
இந்நிலையில் அங்கு இருந்த சிறுவன் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏறி வாகனத்தை இயக்கினான். அந்த நேரத்தில் ஆம்புலன்ஸ் வேகமாக சென்று அங்கு நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. அதில் 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர். அந்த 2 பெண்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வீடியோ இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.
ஆம்புலன்சை இயக்கிய சிறுவன் - 2 பெண்கள் மீது மோதல்#Cuddalore #Ambulance #Accident #MMNews #Maalaimalar pic.twitter.com/cBrtF1OX5O
— Maalai Malar தமிழ் (@maalaimalar) May 23, 2024
- ஆம்புலன்சுக்கு வழிவிடாது இடையூறு செய்தால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்.
- 10 ஆயிரம் அல்லது 6 மாதம் சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
சண்டிகர்:
அரியானா மாநிலம் குருகிராமில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிடாமல் இடையூறு செய்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகர போக்குவரத்து ஆணையர் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மாநகர போக்குவரத்து துணை ஆணையர் விரேந்தர் விஜி கூறியதாவது:
மோட்டார் வாகனச் சட்டம் 194-இ பிரிவின் கீழ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட அவசரகால வாகனங்களுக்கு வழிவிடாமல் இடையூறு செய்பவர்களுக்கு ரூ.10,000 அல்லது 6 மாதங்கள் சிறை தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படும்.
இந்த அவசரகால சேவை வாகனங்களுக்கு வழிவிடாத நபர்களை சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணித்து அவர்களுக்கு உடனடியாக ஆன்லைன் மூலம் அபராத ரசீது அனுப்பப்படும் என தெரிவித்தார்.
ஏற்கனவே குருகிராம் போக்குவரத்து போலீசார் பல்வேறு மருத்துவமனைகளுக்கு உறுப்புகளை எடுத்துச்செல்லும் ஆம்புலன்ஸ்களுக்கு பசுமை வழித்தடங்களை அமைத்து தீவிர நோயாளிகளின் உயிர்களைக் காப்பாற்றி வருகின்றனர்.
- கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெண் ஒருவர் பிரசவ வலி காரணமாக அவதிப்பட்டார்.
- அவரை கிராம மக்கள் டோலி கட்டி தூக்கி சென்று அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அருகே நெக்னாமலை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 170-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 750 பேர் வசித்து வருகின்றனர். இங்கு சாலை வசதி இல்லாததால் மக்கள் அன்றாட தேவைக்கும், மருத்துவ தேவைக்கும் 7 கிலோமீட்டர் நடந்தே சென்று வரக்கூடிய சூழ்நிலை உள்ளது.

கர்ப்பிணி தாய்மார்கள் பிரசவ வலி ஏற்பட்டாலும், உயிரிழப்புகள் ஏற்பட்டாலும் டோலி கட்டி தூக்கிச்செல்லும் அவல நிலையும் தொடர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெண் ஒருவர் பிரசவ வலி காரணமாக அவதிப்பட்டார். அவரை கிராம மக்கள் டோலி கட்டி தூக்கி சென்று அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். இது குறித்து செய்திகள் சமூக வளைதளங்களில வெளியானது.

இந்நிலையில் சின்னத்திரை நடிகர் பாலா நெக்னாமலை கிராமத்திற்கு நேரில் சென்றார். அங்கே அவருக்கு மலை கிராம மக்கள் பட்டாசு வெடித்து, ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பின்னர் கிராம மக்களுக்கு பயன்படும் வகையில் புதிய ஆம்புலன்ஸ் ஒன்றை வழங்கினார்.