search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேமரா"

    • புதுப்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
    • கேமராக்கள் எத்தகைய செயலுக்காக அனுப்பப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பண்ருட்டி:

    பண்ருட்டி அருகே சித்திரை சாவடி கிராமத்திற்கு இன்று காலை கழுகு ஒன்று பறந்து வந்தது. அது அந்த பகுதியில் இருந்த காமன் கோவில் மேலே பறந்து வந்து அங்கு அமர்ந்தது

    அந்தக் கழுகின் முதுகு பகுதி முன்பகுதிகளில் கேமரா பொருத்தப்பட்டிருந்தது. இதனை கண்ட கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த செய்தியை காட்டு தீப்போல கிராமத்துக்குள் பரவியது. அங்கு பொது மக்கள் திரண்டனர்.

    இதுகுறித்து புதுப்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கழுகு எங்கிருந்து வந்தது. யார் அனுப்பினார்கள் அதில் உள்ள கேமராக்கள் எத்தகைய செயலுக்காக அனுப்பப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • நிறைய இடங்களில் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
    • சென்னை நகரில் மெட்ரோ உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகள் நடப்பதால் போக்குவரத்து நெரிசல் உள்ளது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடை உள்ளிட்ட பொருட்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். குறிப்பாக தி.நகர், புரசைவாக்கம் ஆகிய இடங்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

    இந்த நிலையில் தி.நகரில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை போலீஸ் கமிஷனர் அருண் இன்று ஆய்வு செய்தார். அங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்களை பார்வையிட்டார். மேலும் தி.நகரில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது. பின்னர் சென்னை போலீஸ் கமிஷனர் அருண் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. தி.நகரில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது.

    ரெங்கநாதன் தெருவை சுற்றிலும் 64 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. 7 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் தொலைந்து போவதை தடுக்க அவர்களின் கைகளில் டேக் (அடையாள அட்டை) கட்டப்படுகிறது. இதன் மூலம் குழந்தைகளை சீக்கிரமாக கண்டுபிடிக்க முடியும்.

    நிறைய இடங்களில் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடுவதற்கு காவல்துறை சார்பில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க முடியுமோ அவை அனைத்தையும் எடுத்துள்ளோம்.

    தி.நகரில் பொருத்தப்பட்டுள்ள 64 கண்காணிப்பு கேமராக்களில் முகம் கண்டறியும் வசதி இணைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் கூட்டத்தில் குற்றவாளி இருந்தால் அவர்களை கண்டுபிடிக்க முடியும்.

    பழைய குற்றவாளிகளின் புகைப்படம் உள்ளிட்ட விவரங்கள் எங்களிடம் இருக்கிறது. அதனுடன் ஒப்பிட்டு தி.நகரில் கூட்டத்தில் குற்றவாளிகள் இருப்பதை கண்டு பிடித்து உடனே எச்சரிக்கை தகவல் அனுப்பப்படும்.

    தாம்பரம் மற்றும் கிளாம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் பஸ் நிலையங்கள் உள்ளதால் கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது. சென்னை நகரில் மெட்ரோ உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகள் நடப்பதால் போக்குவரத்து நெரிசல் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விபத்து ஏற்படுத்திய அந்த பெண் நடாஷா டானிஷ் என்பதும் பாகிஸ்தானின் பணக்கார குடும்பம் ஒன்றை சேர்த்தவர் என்பதும் தெரியவந்தது.
    • கேமராவை பார்த்து வில்லத்தனமாக சிரித்த வீடியோ இணையத்தில் தீயாக பரவியது.

    பாகிஸ்தான் தலைநகர் கராச்சியில் கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி நடத்த விபத்து ஒன்றில் தொழிலதிபரின் மனைவி ஓட்டி வந்த சொகுசு SUV கார் மோதி சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டுறதுந்த தந்தை மற்றும் மகள் ஆகிய இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் கடைகளுக்கு பேப்பர் விற்பனை செய்யும் இம்ரான் ஆரிப் மற்றும் அவரது மகள் ஆம்னா என்று பின்னர் தெரியவந்தது. இந்த விபத்தில் மேலும் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

    விபத்து ஏற்படுத்தியதும் காரை பொதுமக்கள் சூழ்ந்த நிலையில் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது காரை விட்டு இறங்கிய அந்த பெண் இரண்டு பேரை கொன்றுவிட்டோமே என்ற குற்றவுணர்வு துளியும் இல்லாமல் போலீஸ் நம்மை கைது செய்துவிடும் என்றகேமராவை பார்த்து வில்லத்தனமாக சிரித்த வீடியோ இணையத்தில் தீயாக பரவியது.

    விபத்து ஏற்படுத்திய அந்த பெண் நடாஷா டானிஷ் என்பதும் பாகிஸ்தானின் பணக்கார குடும்பம் ஒன்றை சேர்த்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் நடாஷா பிரபல தொழித்ததுபரின் மனைவியும் ஆவர். விபத்து தொடர்பாக நடாஷாவிடம் விசாரணை நடந்து வந்த நிலையில் இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு நேற்று வந்தது. அப்போது, நடாஷாவுக்கு மன ரீதியான பிரச்சனை உள்ளதென்றும் கடந்த 2005 முதல் அவர் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் தெரிவித்தார்.

    மேலும் நீதிபதி முன்னாள் உயிரிழந்த தந்தை மகளின் உறவினர்களும், நடாஷாவின் உறவினர்களும் தோன்றினர். அப்போது உயிரிழந்தவர்களின் உறவினர்கள் நடாஷாவுக்கு மன்னிப்பு வழங்கியதால் நீதிமன்றம் நடாஷாவுக்கு ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்துள்ளது. இதைத்தொடர்ந்து நடாஷா குடும்பத்திடம் இருந்து [ரத்தம் படிந்த] பணம் வாங்கிக்கொண்டு அவர்கள் மன்னிப்பு வழங்கியுள்ளனர் என்று சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

    பாகிஸ்தானில் ஷரியத் சட்டப்படி உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அவர்களின் உயிரிழப்புக்கு காரணமானவர்களுக்கு மன்னிப்பு வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சட்டப்பிரிவுக்கு க்விசாஸ் மற்றும் தியாத் என்று பெயர். 

    • பாகிஸ்தானில் தனது மகளின் தலையில் கேமராவை பொருத்தி 24 மணிநேரமும் கண்காணிக்கும் தந்தையின் செயல் விவாதமாகியுள்ளது
    • அவர் நான் எங்கெல்லாம் செல்கிறேன் என்ன செய்கிறேன் என்பதை கண்கணிப்பார்

    பாகிஸ்தானில் தனது மகளின் தலையில் கேமராவை பொருத்தி 24 மணிநேரமும் கண்காணிக்கும் தந்தையின் செயல்  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனது தந்தையின் செயல் குறித்து செய்தியாளருக்கு தலையில் கேமராவுடன் அந்த பெண் பேட்டி அளித்த வீடியோ இணையத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், தனது பாதுகாப்புக்காகத் தந்தை தனது தலையில் செக்யூரிட்டி கேமராவை பொறுதியுள்ளார் என்றும் இந்த கேமராவுக்கான அக்ஸஸுடன் வீட்டில் இருந்தபடியே அவர் தான் எங்கெல்லாம் செல்கிறேன் என்ன செய்கிறேன் என்பதை கண்காணித்து வருகிறார் என்றும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

    இது உங்களுக்கு அசவுகரியமாக இல்லையா என்ற கேள்விக்கு பதிலளித்த அந்த இளம்பெண், எனது தந்தையின் முடிவுக்கு நான் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை.அவர் எது செய்தலும் எனது நல்லதற்கு தான் செய்வார் என்று தெரிவித்துள்ளார். 

    • கழிவறையில் உள்ள குப்பைத்தொட்டியில் கேமரா ஆன் செய்யப்பட்ட நிலையில் இருந்தது செல் போன்
    • கேமரா சுமார் 2 மணி நேரமாக கழிவறையை படம்பிடித்துள்ளது.

    பெங்களூரில் பிரபலமாக இயங்கிவரும் third wave காபி ஷாப் கிளை ஒன்றின் பெண்கள் கழிவறை போன் கேமரா மூலம் படம்பிடிக்கப்ட்டுவந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூரில் BEL Road பகுதியில் உள்ள third wave காப்பி ஷாப்பில் உள்ள பெண்கள் கழிவறையில்உள்ள குப்பைத்தொட்டியில் கேமரா ஆன் செய்யப்பட்ட நிலையில் இருந்த செல் போனை பெண் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

    ஏரோபிலேன் மோடில் இருந்த அந்த போனில் ஆன் செய்யப்பட்டிருந்த கேமரா சுமார் 2 மணி நேரமாக கழிவறையை படம்பிடித்துள்ளது. இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் பதிவிட்டதை அடுத்து போலீஸ் விசாரணை நடத்தியது.



    அந்த செல் போன், அந்த காப்பி ஷாப்பில் வேலை செய்யும் ஊழியருடையது என்று கண்டறியப்பட்டுள்ளது. அவரை பணிநீக்கம் செய்துள்ள third wave நிர்வாகம், அவர் மீது உரிய எடுக்க தாங்கள் முழுமையாக ஒத்துழைப்பதாகத் தெரிவித்துள்ளது. காப்பி ஷாப் கழிவறையில் கேமரா வைக்கப்பட்ட சம்பவம் பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    • ஆதார் கார்டுக்கு பதிய போட்டோ எடுக்கும்போது ஒரு சிறுமி அழகழகாக போஸ் கொடுக்கும் வீடியோ இணையத்தையே கலக்கி வருகிறது.
    • மற்ற நடைமுறைகள் அனைத்தும் முடிந்த பிறகு போட்டோ எடுக்க அந்த சிறுமியை கேமரா முன்னர் நிற்க வைத்துள்ளனர்.

    இந்தியர்களின் அத்தியாவசிய அடையாள அட்டையாக மாறிப்போன ஆதார் கார்டு போட்டோ நன்றாக இல்லை என்ற கவலை பலருக்கு உண்டு. இருட்டடித்த போட்டோக்களும், நேரில் இருக்கும் மனிதர்க்கு சுத்தமாக சம்பந்தமாக இல்லாத வகையில் ஆதார் கார்டில் அவரது போட்டோ உள்ளது என்ற அபிப்பிராயங்கள் பரவலாக உள்ளன.

    இந்நிலையில் ஆதார் கார்டுக்கு பதிய போட்டோ எடுக்கும்போது ஒரு சிறுமி அழகழகாக போஸ் கொடுக்கும் வீடியோ இணையத்தையே கலக்கி வருகிறது. முதல் முதலாக அந்த சிறுமிக்கு ஆதார் கார்டு பதிய ஆதார் சேவை மையத்துக்கு பெற்றோர்கள் அழைத்துச் சென்றுள்ளனர்.

    அங்கு மற்ற நடைமுறைகள் அனைத்தும் முடிந்த பிறகு ஆதார் கார்டுக்கு போட்டோ எடுக்க அந்த சிறுமியை கேமரா முன்னர் நிற்க வைத்துள்ளனர். அப்போது தனது கன்னத்தில் கை வைத்தும் பல வழிகளில் அந்த சிறுமி உற்சாகமாக போஸ் கொடுத்த்து அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளார். இந்த வீடியோ இஸ்டாகிராமில் 18  மில்லயன் பார்வைகளைத் தாண்டி கலக்கி  வருகிறது.

    • சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் சென்று உள்ளது.
    • மதுக்கூட ஒப்பந்ததாரரின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு காப்புத் தொகை பறிமுதல் செய்யப்படும்.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களிலும் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் சென்று உள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பார்களில் மது விற்பனை நடைபெறுவதை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள் அனைத்து மது கூட உரிமையாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சென்னை அலுவலக கடிதத்தின்படி 2024-ம் ஆண்டு மக்களவை பொதுத்தேர்தலுக்கான தேர்தல் செலவின கண்காணிப்பு குறித்து இந்திய துணைத்தேர்தல் ஆணையர் 6.2.2024 அன்று நடத்திய கூட்டத்தில் அனைத்து எம்.எல்.2, எப்.எல்3 மற்றும் டாஸ்மாக் பார்களில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    தங்களது மதுக்கூட வளாகத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட பணியினை திங்கட்கிழமைக்குள் செய்து முடித்து தங்களது மதுக்கூடத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள புகைப்படத்தை இந்த அலுவலகத்தில் சமர்ப்பிக்க மதுக்கூட உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

    தவறும் பட்சத்தில் மதுக்கூட ஒப்பந்ததாரரின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு காப்புத் தொகை பறிமுதல் செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • அரசு அறிவித்துள்ள நேரத்தில் மட்டும் பட்டாசுகள் வெடிக்க வேண்டும்.
    • பொதுமக்கள் கூடும் இடங்களில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா உத்தரவின்படி, சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமெக் அறிவுறுத்தலின்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சீர்காழி நகரில் அனைத்து வர்த்தக, வணிக கடைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதன் அவசியம் குறித்து ஆட்டோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    திருட்டு, கொள்ளை சம்பவங்களை தடுத்திடவும், திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்களை எளிதாக அடையாளம் கண்டு அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்திடவும் கண்காணிப்பு கேமரா பதிவுகள் இன்றியமையாததாக இருப்பதால் அனைத்து வர்த்தக வணிக கடைகளில் உள்புறம் வெளிப்புறம் சாலையை நோக்கியவாறு சிசிடிவி அமைத்திடவும் வீடுகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்திடவும் பொதுமக்கள் கூடும் இடங்களில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    அதேபோல் தீபாவளி பண்டிகையை பாதுகாப்பான முறையில் கொண்டாடிடவும் அறிவிக்கப்பட்டுள்ள நேரத்தில் மட்டும் பட்டாசுகள் வெடித்து பின்பற்றவும் வலியுறுத்தப்பட்டது.

    • ஒவ்வொரு பேருந்தின் முன்புறம் மற்றும் பின்புறத்தில் கேமராக்கள் பொருத்தப்படும்.
    • பேருந்துக்கு வெளியேயும் நடக்கும் விதிமீறல்களை எளிதாக கண்டறிய முடியும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் அரசு பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து பேருந்துகளிலும் வரும் 31-ந்தேதிக்குள் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்படும் என அந்த மாநிலத்தின் போக்குவரத்துத்துறை மந்திரி அந்தோணி ராஜு தெரிவித்துள்ளார். கேமராக்களை கொள்முதல் செய்வதில் சற்று காலதாமதம் ஏற்பட்டதாகவும், இனி இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ஒவ்வொரு பேருந்தின் முன்புறம் மற்றும் பின்புறத்தில் கேமராக்கள் பொருத்தப்படும் என்று தெரிவித்த அவர், இந்த நடவடிக்கையின் மூலமாக பேருந்தின் உள்ளேயும், பேருந்துக்கு வெளியேயும் நடக்கும் விதிமீறல்களை எளிதாக கண்டறிய முடியும் என்று தெரிவித்துள்ளார்.

    இது தவிர, வரும் நவம்பர் 1-ந்தேதி முதல் பேருந்துகள் உள்ளிட்ட கனரக வாகனங்களில் முன் இருக்கைகளில் அமர்ந்திருக்கும் ஓட்டுனர்கள் மற்றும் பயணிகள் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்றும் அந்தோணி ராஜு தெரிவித்துள்ளார்.

    • ஆசனூர் மலைப்பகுதியில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது
    • இந்த கேமராக்கள் இணையதள இணைப்புகள் மூலம் ஆசனூர் காவல் நிலைய கட்டுப்பாட்டு அறை யுடன் இணைக்கப்பட்டு ள்ளன

    சத்தியமங்கலம்,

    ஈரோடு மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க மா வட்ட காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி சத்தியமங்கலம் சப் டிவிஷனில் உள்ள ஆசனூர் காவல் நிலைய த்திற்கு உட்பட்ட பகுதிகளில் குற்றங்களை தடுப்பதற்காக முக்கிய இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொரு த்தப்பட்டு அதற்கான கட்டு ப்பாட்டு அறை ஆசனூர் காவல் நிலை யத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆசனூர் காபி டே பேக்கரி முன்பு 4 கேமரா க்களும், காவல் நிலையம் முன்பு 2 கேம ராக்களும், அரேப்பாளையம் மைராடா வேளாண் அறிவியல் நிலை யம் முன்பு 2 கேமராக்களும், திம்பம் பஸ் நிலையம் பகுதி யில் 4 கேமராக்கள் என மொத்தம் 16 கேமராக்கள் பொருத்தப்பட்டு ள்ளது.

    இந்த கேமராக்கள் இணையதள இணைப்புகள் மூலம் ஆசனூர் காவல் நிலைய கட்டுப்பாட்டு அறை யுடன் இணைக்கப்பட்டு ள்ளன. இதையடுத்து ஆச னூர் காவல் நிலை யத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் சத்தியமங்கலம் ஏ.எஸ்.பி. அய்மன் ஜமால் சி.சி.டி.வி. கேமரா இயக்கத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து 24 மணி நேரமும் சி.சி.டி.வி. கேமரா க்கள் மூலம் கண்காணி க்கப்பட்டு குற்றங்கள் உட னடியாக தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவி த்தார். அப்போது தாளவாடி இன்ஸ்பெக்டர் செல்வம் சிறப்பு இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • 20 இடங்களிலில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
    • சி.சி.டி.வி. கேமராக்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் இயக்கி வைத்தார்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அடுத்த ஆவூரில், பொதுமக்கள் நலன் கருதி காவல்துறையின் அறிவுறுத்தலின்படி, ஜமாத்தார்கள் மற்றும் இளைஞர்களின் உதவியால் 20 இடங்களிலில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

    புதிதாக பொருத்தப்பட்ட சி.சி.டி.வி. கேமராக்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் இயக்கி வைத்தார்.

    தொடர்ந்து, கோவிந்தகுடி ஊராட்சியில் புறக்காவல் நிலையத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் திறந்து வைத்தார்.

    விழாவில் நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) தமிழ்மாறன், வலங்கைமான் இன்ஸ்பெக்டர் ராஜா, தி.மு.க. ஒன்றிய செயலாளர் அன்பரசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் காமராஜ், கணேசன் மற்றும் சிறப்பு காவலர் அறிவழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நால்ரோட்டில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டன.
    • கேமராக்களை பொதுமக்களே ரூ.40 ஆயிரம் நிதி திரட்டி பொருத்தினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை வடக்கு வாசல் பகுதியில் ராஜாகோரி சுடுகாடு உள்ளது.

    இந்த மாநகரில் இறப்பவர்களின் பெரும்பாலான உடல்கள் இங்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் மற்றும் தகனம் செய்யப்படுகிறது.

    மேலும் இந்த பகுதியில் கிறிஸ்தவ ஆலயங்கள், பள்ளிக்கூடங்கள் உள்ளன.

    இந்த பகுதியில் குற்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையிலும், யாராவது குற்றம் செய்தால் அவர்களை அடையாளம் காணும் வகையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நால்ரோட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.

    இந்த கேமராக்கள் அந்த பகுதி பொதுமக்கள் ஏற்பாட்டில், மாநகாராட்சி மற்றும் போலீசார் ஒத்துழைப்புடன் பொருத்தப்பட்டது.

    நான்கு முனைகளில் இருந்து வருபவர்களை அடையாளம் காணும் வகையில் நான்கு திசைகளை நோக்கி இந்த கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன.

    மேலும் இந்த கேமராக்களில் பதிவு செய்யப்படும் காட்சிகளை அருகில் உள்ள ஒரு அறையில் இருந்து பார்க்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    இந்த கேமராக்களை பொதுமக்களே ரூ.40 ஆயிரம் நிதி திரட்டி பொருத்தினர்.

    சில மாதங்கள் மட்டும் பயன்பாட்டில் இருந்து வந்த இந்த கண்காணிப்பு கேமராக்கள் தற்போது பயன்பாட்டில் இல்லை. காரணம் கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்த கம்பத்தில் தற்போது 4 கேமராக்கள் அந்தரத்தில் தொங்கியபடி காட்சி அளி்க்கிறது.

    இதனை யாரும் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கேமராக்கள் பொருத்த ப்பட்டதன் நோக்கமே நிறைவேறாமல் உள்ளது.

    இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், தஞ்சை வடக்குவாசல் பகுதியில் 4 சாலைகள் சந்திக்கும் இடத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்கள் பயன்பாடு இல்லாமல் அந்தரத்தில் தொங்கியபடி உள்ளது.

    இந்த கேமராக்களை சரி செய்து பொருத்தி, மாநகராட்சி பொருத்தும் கேமராக்கள் இணைப்புடன் இணைக்கலாம்.

    எனவே பயன்பாடு இல்லாமல் இருக்கும் இந்த கண்காணிப்பு கேமராக்களை சரி செய்து பொருத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்

    ×