search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை ஐதராபாத்"

    ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைவதற்கு காரணமாக இருந்த பின்வரிசை வீரர்களை கேப்டன் டோனி பாராட்டி உள்ளார். #IPL2018 #CSKvSRH
    மும்பை:

    ஐ.பி.எல். தொடரில், மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த ‘குவாலிபையர் 1’ ஆட்டத்தில் ஐதராபாத் - சென்னை அணிகள் மோதியது. முதலில் விளையாடிய ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்னே எடுக்க முடிந்தது.

    பின்னர் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 19.1 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 140 ரன் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. டு பிளிஸ்சிஸ் 42 பந்தில் 67 ரன்னும் (5 பவுண்டரி, 4 சிக்சர்), ரெய்னா 13 பந்தில் 22 ரன்னும் (4 பவுண்டரி) எடுத்தனர்.

    சென்னை அணி இறுதிப்போட்டிக்கு நுழைவதற்கு டு பிளிஸ்சிஸ் முக்கிய பங்கு வகித்தார். சூப்பர் கிங்ஸ் அணி ஒரு கட்டத்தில் 13 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 62 ரன் எடுத்து இருந்தது. இதனால் தோல்வியை தழுவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடக்க வீரராக களம் இறங்கிய டு பிளிஸ்சிஸ் இறுதி வரை களத்தில் நின்று சென்னை அணியை வெற்றி பெற வைத்தார்.

    கடைசி கட்டத்தில் அவருக்கு தீபக் சாஹரும், ‌ஷர்துல் தாக்கூரும் உதவியாக இருந்தனர். சாகர் 6 பந்தில் 10 ரன்னும் (1 சிக்சர்), ‌ஷர்துல் தாக்கூர் 5 பந்தில் 15 ரன்னும் (3 பவுணடரி) எடுத்தனர்.

    இந்த வெற்றி குறித்து சென்னை அணியின் கேப்டன் டோனி கூறியதாவது:-


    சி.எஸ்.கே. அணியின் பின்வரிசை வீரர்களுக்கே பாராட்டு எல்லாம் சேரும். நெருக்கடியான கட்டத்தில் அவர்கள் டு பிளிஸ்சுக்கு ஜோடியாக நின்று வெற்றியை தேடி தந்தனர். இந்தப்போட்டிக்கான அனுபவத்தில் இருந்து நாங்கள் பாடம் கற்றுக் கொள்வது முக்கியமானது.

    இந்தப்போட்டி தொடரில் விளையாடும் சிறந்த அணிகளில் ஒன்றாக நாங்கள் இருக்கிறோம். வீரர்களின் அறை இதற்கு முக்கிய பங்கு வகித்தது. அணியின் நிர்வாகத்துக்கு பாராட்டு எல்லாம் சேரும். வீரர்களின் அறை சுமூகமாக இல்லாவிட்டால் ஆடுவது கடினமாகும். இறுதிப்போட்டிக்கு நுழைந்தது மிகவும் மகிழ்ச்சியானது. இந்த வெற்றி முக்கியமானது.

    இவ்வாறு டோனி கூறினார்.

    தோல்வி குறித்து ஐதராபாத் கேப்டன் வில்லியம்சன் கூறும்போது, “இது ஒரு சிறந்த ஆட்டம். நாங்கள் சில ரன்களை குறைவாக எடுத்துவிட்டோம். சென்னை அணியின் பின்வரிசை வீரர்கள் எங்கள் வெற்றியை பறித்துவிட்டனர்” என்றார்.

    ஐதராபாத் அணி ‘குவாலி பையர் 2’ ஆட்டத்தில் கொல்கத்தா அல்லது ராஜஸ்தானை சந்திக்கிறது. #IPL2018 #CSKvSRH
    ×