என் மலர்
நீங்கள் தேடியது "தோஷம்"
- குஜராத் ஆய்வகத்தில் சோதனை நடத்தப்பட்டது. 5 கட்டங்களாக சோதனை நடந்தது.
- திருப்பதி லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலந்து இருப்பது உறுதி செய்யப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்படும் லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு சேர்ந்து இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
குறிப்பாக மாட்டு கொழுப்பு, பன்றி கொழுப்பு, மீன் எண்ணெய் ஆகியவை லட்டுகளில் கலந்து இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவே இந்த தகவலை வெளியிட்டு இருப்பதால் நாடு முழுவதும் இது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தரமற்ற நெய்யில் விலங்குகளின் கொழுப்பை கலந்து திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதத்தன்மையை முந்தைய ஆட்சியாளர்களான ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி சீரழித்து விட்டதாக சந்திரபாபு நாயுடு முக்கிய குற்றச்சாட்டை வெளியிட்டு இருந்தார்.
அதோடு திருப்பதி ஆலயத்தில் தயாரிக்கப்படும் லட்டுகளில் உள்ள கலவைகளை ஆய்வு செய்யவும் உத்தரவிட்டார். அதன்படி குஜராத் ஆய்வகத்தில் சோதனை நடத்தப்பட்டது. 5 கட்டங்களாக சோதனை நடந்தது.
அப்போது திருப்பதி லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலந்து இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது ஆந்திர அரசியலில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது.
இந்நிலையில், இந்த விவகாரத்தை தொடர்ந்து, ஏழுமலையான் கோவிலுக்கு தோஷத்தை போக்க சம்ரோஷணம் செய்ய நிர்வாகம் ரீதியாக ஆலோசனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விலங்கு கொழுப்பு கலந்த நெய்யில் லட்டு தயாரித்ததால் கோவிலுக்கு மிகப்பெரிய பாவமும், தோஷமும் ஏற்பட்டதாக அர்ச்சகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சம்ரோஷணம் என்றால் குடமுழுக்கு செய்து கோயிலை தூய்மைப்படுத்தும் நிகழ்வு என கூறப்பட்டுள்ளது. இதனால், திருப்பதி ஏழுமலையான் கோவிலுகு்கு விரைவில் குடமுழுக்கு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- 10-பொருத்தங்களும், ஜாதக-கிரக நிலையை கொண்டு கிரக-தோஷங்களும் பார்த்து விவாகம் முடிவு செய்யப்படுகின்றது.
- ஒரே இராசியில் மற்றும் நட்சத்திரத்தில் உள்ள இருவரை சேர்த்து வைக்காமல் தவிர்ப்பது நல்லது.
திருமணப் பொருத்தம் என்பது கணவன் மனைவியாக இணையும் இருவருக்கும் நிலையான மன ஒற்றுமை, மகிழ்ச்சி, இன்பமான தாம்பத்திய உறவு, பிள்ளைப் பேறு, சுபிட்சமான எதிர்காலம் என்பன அமையுமா? என இருவருடைய ஜாதகங்களில் உள்ள கிரகங்களின் ஆதிக்கத்தைக் (நிலைகளைக்) கொண்டு கணித்து அறிதல்.
திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது மணமகன், மணமகள் ஆகிய இருவருடைய ஜாதகங்களிலும், பிறந்த நட்சத்திரங்களை வைத்து 10-பொருத்தங்களும், ஜாதக-கிரக நிலையை கொண்டு கிரக-தோஷங்களும் பார்த்து விவாகம் முடிவு செய்யப்படுகின்றது.
ஒரே இராசியில் திருமணம் செய்யலாமா?
திருமணப் பொருத்தத்தில் மிகவும் முக்கியமானது நட்சத்திரப் பொருத்தம் ஆகும். நட்சத்திரப் பொருத்தங்கள் 10க்கும் மேற்பட்ட பொருத்தங்கள் இருந்தாலும், ஆண், பெண் இருவருக்கும் ஒரே நட்சத்திரமாக இருந்தால் முக்கியமான பொருத்தமான மாங்கல்ய பொருத்தம் இருக்காது.
தம்பதிகள் வெவ்வேறு இராசிகளாகவும் வெவ்வேறு நட்சத்திரங்களாகவும் இருப்பது மிகவும் நல்லது. ஏனென்றால் ஒரே இராசியாக இருக்கும்பட்சத்தில் கிரக நிலைகள் சரியில்லாத போது இருவருக்கும் ஒரே மாதிரியான கிரக நிலைகள் அமையும். ஏழரை சனி, அஷ்டம சனி போன்றவை இருவருக்கும் ஒரே சமயத்தில் வரும் போது அவர்களிடையே கருத்து வேறுபாடுகளும் வர வாய்ப்புகள் உண்டு.
ஒரே இராசியாக இருக்கும் சமயத்தில் பெண்ணுக்கு பிந்தைய நட்சத்திரமாக ஆணுக்கு இருந்தால் நன்மை. ஆனால் ஒரே இராசியாக இருந்தால் தம்பதிகளின் ரசனை ஒரே மாதிரியாக இருக்கும். எனினும் மோசமான கிரகநிலைகளின் போது கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.
எனவே, ஒரே இராசியில் மற்றும் நட்சத்திரத்தில் உள்ள இருவரை சேர்த்து வைக்காமல் தவிர்ப்பது நல்லது. ஒரே இராசியாக இருந்தாலும் வேறு வேறு நட்சத்திரம் உடையவரர்களாக இருப்பது ஓரளவு பிரச்சனையை குறைக்கும்.
- இத்தலம், பிதுர்தோஷ நிவர்த்தி தலம் ஆகும்.
- மாங்கல்ய தோஷம், நாக தோஷம் நிவர்த்தியாகும் என்பது இத்தலத்து நம்பிக்கை.
நாகை மாவட்டம் நாகூரில் பிரசித்தி பெற்ற ராகு-கேது நிவர்த்தி தலமான நாகநாத சாமி கோவில் உள்ளது. நாகராஜன் வழிபட்டு சாப விமோசனம் பெற்றதாக கூறப்படும் நாகூர் நாகநாத சாமி கோவில் காசிக்கு இணையானதாகவும், ராகு, கேது, காலசர்ப்ப தோஷ நிவர்த்தி தலமாகவும் உள்ளது.
ராகு கால நேரத்தில் இத்தலத்து மூலவர் பெருமான் நாகநாத சாமியையும், நாகவல்லி தாயாரையும் வணங்கி, ராகு பகவானுக்கும் அவரது தேவியருக்கும் அபிஷேகம் செய்து வழிபட்டால் ராகு-கேது தோஷ நிவர்த்தியுடன், திருமணத் தடை விலகி குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும். ராகுபகவானுக்கு நீல வஸ்திரம் சாற்றி வழிபடுவது சிறப்புக்குரியதாக கூறப்படுகிறது.
காசிக்கு இணையானதாக குறிப்பிடப்படும் இத்தலம், பிதுர்தோஷ நிவர்த்தி தலம் ஆகும்.இங்குள்ள சந்திர புஷ்கரணியில் நீராடி, தர்ப்பணம் அளித்து, தானம் செய்தால் கயாவில் வழிபாடு செய்த பலனும், பிதுர்தோஷ நிவர்த்தியும் கிட்டும் என கூறப்படுகிறது. இங்கு கிருத்திகை நட்சத்திர தினத்தில் சாமி, அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் மேற்கொண்டால் சர்வதோஷ நிவர்த்தி கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
நாகூர் நாகநாத சாமி கோவில் இறைவன் நாகநாதர், நாகராஜனால் பூஜிக்கப்பட்டவர் என்பதால் இத்தலம் ராகு, கேது மற்றும் கால சர்ப்ப தோஷ நிவர்த்தி தலமாக விளங்குகிறது. மேலும் இங்குள்ள புன்னாகவனத்தின் கீழே நாகலோகம் அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இங்கு நாகர் லிங்கமும் அதைச்சுற்றி இரு நாகங்கள் இணைந்து சிவலிங்க பூஜை செய்வதைப் போன்ற 20-க்கும் மேற்பட்ட நாகர்கள் சிலைகளும் உள்ளன.
நாகர் லிங்கத்துக்கு வெள்ளிக்கிழமைகளில் மஞ்சள் சாற்றி வழிபட்டால் மாங்கல்ய தோஷம், நாக தோஷம் நிவர்த்தியாகும் என்பது இத்தலத்து நம்பிக்கை. இக்கோவிலின் கன்னி பகுதியில் நாககன்னி, நாகவல்லி சமேதராக ராகு பகவான் காட்சியளிக்கிறார். கன்னி ராசியில் ராகு அமைந்தால் ராஜயோகம் என்ற ஜோதிட சாஸ்திரப்படி இத்தலத்தில் கன்னி பகுதியில் ராகு பகவான் தனது தேவியருடன் காட்சி அளிப்பது மிகவும் சிறப்புக்குரியது ஆகும்.
நாகப்பட்டினம் அருகே உள்ள நாகூரில் அமைந்து உள்ள இந்த கோவிலுக்கு சென்னையில் இருந்து வர விரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் நாகப்பட்டினத்துக்கு வந்து நாகை புதிய பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ள நாகூர் நாகநாதர் கோவிலை அடையலாம். தென் மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்களும் மேற்கண்ட வழித்தடம் வழியாக கோவிலை அடையலாம்.
- பொருள் இழப்பு விஷ சுரம், மர்ம நோய்கள் முதலியனவற்றை அழித்து சாந்தியும், நிம்மதியும் தரவல்லது.
- பஞ்சமுக ஆஞ்சநேயர் திருநள்ளார் நள தீர்த்தத்தில் இருந்து வரும் வழியில் அருள் தருகின்றார்.
அனைத்து கோரிக்கைகளையும் ஈடேற்றக்கூடிய வல்லமைமிக்க பஞ்சமுக அனுமன். அனுமனின் ஐந்து முகங்களான கருடமுகம் பிணி நீக்கும், வராகமுகம் செல்வம் அளிக்கும், அனுமன் முகம் சகல கிரகதோஷமும் போக்கி எல்லாநலமும் தரும், நரசிம்மமுகம் தீமையைப் போக்கும், ஹயக்ரீவர் முகம் கல்வியும், ஞானமும் நல்கும் என்பதால், வேண்டியதை வேண்டியவாறு அருள்கிறார் அஞ்சிலே ஒன்று பெற்ற அருள் குமரன் அனுமன். அனுமனின் தாடை நீண்டு இருக்கும். ஹனுமன் முகம், நரசிம்ம முகம், கருடன் முகம், வராஹமுகம், ஹக்கிரீவர் முகம் என ஆஞ்சநேயர் ஐந்து முகவடிவில் ஒருங்கிணைந்து உள்ளார்.
கிழக்கு முகம் ஹனுமனாக சத்ருக்களை அழிக்க வந்த முகம் "பிரதிவாதி முகஸ்நம்பி'' என்ற சுலோக வரியினால் அனுமனை வேண்டினால் எதிரிகள் விலகுவர் என பொருள் தரும். தெற்கு முகம் நரசிம்ம முகம். இம்முக ரூப ஆஞ்சனேயர் பயத்தினால் உண்டாகும் பிரச்சனைகள்,
பில்லி சூன்யம் துஷ்ட தேவதைகளால் உண்டாகும் பரயந்த்ர பரமந்த்ர தோஷங்களை போக்க அவதரித்த முகம். மேற்கு முகம் கருடன் முகத் தரிசனம் சரும நோய், விஷ நோய், ஊழ்வினை நோய்களை போக்கி அருள்தரும். வடக்கு முகம் வராஹமுகத் தரிசனம், தீராத கடன், பொருள் இழப்பு விஷ சுரம், மர்ம நோய்கள் முதலியனவற்றை அழித்து சாந்தியும், நிம்மதியும் தரவல்லது. பொருளாதார மேன்மை உண்டாகும். மேல் முகம் ஸ்ரீஹயக்கிரீவர் முகம்.
இம்முக ஆஞ்சநேயர் சகல கலைகளையும், சிறந்த ஞானத்தையும், சொல்வன்மையையும், சகல கலா வல்லவனாக தேர்ச்சியையும் தருபவர். சொல்லின் செல்வன் என சீதையால் போற்றப்பட்ட அனுமனை பஞ்சமுக ஆஞ்ச நேயராக வழிபாடு செய்யும் போது உங்களுக்கும் சொல் வன்மை, ஆரோக்யம், எதிரிகள் விலகல் என அனைத்தும் உண்டாகும். பஞ்சமுக ஆஞ்சநேயர் திருநள்ளார் நள தீர்த்தத்தில் இருந்து வரும் வழியில் அருள் தருகின்றார்.
- சூரிய வழிபாடு மிகவும் தொன்மையான வழிபாடு.
- கிருத்திகை நட்சத்திரகாரர்கள் சூரிய வழிபாடு செய்தால் சகல செல்வங்களும் பெறலாம்.
கிருத்திகை நட்சத்திரத்திற்குரிய தெய்வம் முருகப் பெருமான், உரிய கிரகம் சூரியன். இந்த கிரகத்திற்குரிய அதிதேவதை சிவன். சிவனை வழிபட்டால் பல்வேறு செல்வ வளங்களை பெற்று மகிழ்ச்சி பெறலாம்.
சூரிய வழிபாடு மிகவும் தொன்மையான வழிபாடு. கிருத்திகை நட்சத்திரகாரர்கள் சூரிய வழிபாடு செய்தால் சகல செல்வங்களும் பெறலாம். மயிலாடுதுறை அருகே உள்ள காத்ர சுந்தரேஸ்வரர் கோவில் கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தலம்.
கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் கிருத்திகை நட்சத்திரத்தன்றோ, பிரதோஷ நாட்களிலோ இந்தக் கோவிலில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் வளம் பெறலாம் என்பது நம்பிக்கை. திருமணத்தடை உள்ள கிருத்திகை நட்சத்திரப் பெண்கள் புண்ணிய நதிகள் தீர்த்தத்தால் இத்தல அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், சுமங்கலி பூஜை செய்தும் வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் வெள்ளிக்கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திர நாட்களில் இந்தக்கோவிலில் தரிசனம் செய்தால் சிறந்த மணவாழ்க்கை அமையும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெள்ளிக் கிழமை அதிக நன்மைகள் தரும் தினமாக அமைந்திருக்கின்றது.
இந்நாட்களில் கிருத்திகை நட்சத்திரத்தின் நல்ல மின் காந்த கதிர்வீச்சுகள் பூமியில் படரும் அது மிகவும் நல்லது. அத்தி மரம் கிருத்திகை நட்சத்திரத்திற்கு உரிய மரமாகும். இந்த மரத்தின் உடலில் பால் நிரம்பி இருக்கும். அந்தப் பால் கார்மேகங்களை தன் பக்கம் இழுக்கும் குணம் கொண்டது.
இதன் குச்சிகளை எரித்தால் அதன் புகை மழை பொழியும் கருமேங்களை வரவழைக்கும் என்று வானவியல் மூலிகை சாஸ்திரம் கூறுகிறது.
கிருத்திகை நட்சத்திரத்தின் கெட்ட கதிர் வீச்சுகள் மனித உடலில் படும் போது பல வகையான உடல் மாற்றம், மன மாற்றம் நோய்கள் உண்டாகின்றன. இதற்கு கிருத்திகை நட்சத்திர தோஷம் என்பார்கள். இந்த தோஷத்தையும், நோய்களையும் நீக்க இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அத்தி மரத்தை 20 நிமிடம் கட்டிப்பிடிக்கலாம் அல்லது அதன் நிழலில் உட்காரலாம்.
கிருத்திகை தோஷம் உடையோர் ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருந்து காலையிலே வீட்டில் இருந்தவாறு சிவப்புப் பூவும் நீரும் கைகளில் ஏந்தி சூரிய பகவானே எனது தோஷத்தைப் போக்கியருளும் என வேண்டி பூவையும் நீரையும் சூரியனைப் பார்த்தவாறு பூமரத்தடியில் போட்டு வணங்கவும். 108 தடவைகள் இதனை செய்யலாம்.
கோவிலில் சூரியனுக்கு அபிஷேகம் செய்யலாம். சர்க்கரைப் பொங்கல் நைவேதிக்கலாம். கோதுமைத் தானம் கொடுக்கலாம். சிவப்புப்பட்டு சிவப்புப் பூமாலை அணியலாம். சிவப்புப் பூவால் அர்ச்சித்து வழிபடலாம். தினமும் சூரிய கவசம் படிப்பது மிக்க பலனைத்தரும்.
- 21 பிறவி தோஷங்களை நீக்குகிறார்.
- சங்கடகர சதுர்த்தி அன்று இவரை வேண்டி வணங்கினால் எல்லா சங்கடங்களும் நீங்கும்.
விருத்தாசலத்தில் பழமலைநாதர் கோவிலின் உள்ளே ஆழத்து விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோயில் இருக்கும் ஆழத்து விநாயகர் தரைமட்டத்தில் இருந்து கீழே பள்ளத்தில் இருப்பதால் ஆழத்து விநாயகர் என்று அழைக்கப்படுகின்றார்.
விருத்தாசலத்தில் உள்ள ஆழத்து விநாயகர் மிகவும் சக்திவாய்ந்தவர். பிரம்மாவுக்கு அறிவு புகுத்தியவர் இந்த ஆழத்து விநாயகர் என்று கூறப்படுகிறது. பிரம்மா விருத்தாசலத்தில் மலையை உருவாக்க எண்ணினார். அங்கு சிவபெருமான் பழமலையாக காட்சி அளித்தார். ஆகையால் பிரம்மா சிவனே மலையாக இருக்கிறார் என்று சென்றுவிட்டார்.
இங்கு உள்ள ஆழத்து விநாயகர், திருமணதடை நீக்குகிறார், குழந்தை பாக்கியம் தருகின்றார், சிறந்த கல்வி வழங்குகின்றார், 21 பிறவி தோஷங்களை நீக்குகிறார்.
ஜாதகம் இல்லாதவர்கள் இங்கு வேண்டி வணங்கினால் எல்லா தோஷங்களும் நீங்க பெறுகின்றனர். சங்கடகர சதுர்த்தி அன்று இவரை வேண்டி வணங்கினால் எல்லா சங்கடங்களும் நீங்கும்.
சென்னை, டெல்லி, சேலம், கேரளா போன்ற இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து 108, 27, சிதறு தேங்காய் உடைத்து நேர்த்தி கடன் செலுத்துகின்றனர்.
- சந்திரன் ஜெனன காலத்தில் எங்கு இருக்கிறாரோ அதை ஜென்ம ராசி என்கிறோம்.
- நவகிரகங்களால் ஏற்படக்கூடிய தோஷங்கள் விலக அந்தந்த பரிகார ஸ்தலங்களுக்குச் சென்று பரிகாரம் செய்வது நல்லது.
ஒருவருக்கு கற்பனை வளம் அதிகரித்து அவரை கவிஞராக்கும் பலம் சந்திரனுக்கு உண்டு. சந்திரன் மனநிலைக்கு காரகனாகிறார். அழகும், கவர்ச்சியும் கொண்ட சந்திரனை அழகான எதற்கு வேண்டுமானாலும் ஒப்பிடலாம். பொதுவாக பெண்களின் அழகை வர்ணிப்பதற்கு சந்திரன் மிகவும் உறுதுணையாக இருப்பார். வட்ட நிலா போன்ற முகம், பிறை போன்ற நெற்றி, புருவம் என பல உவமைகள் உண்டு. பெண்களும் தன் தலைவன் பிரிந்து ஏக்கத்தை யாரிடமும் கூறமுடியாமல் இரவில் நிலாவுடன்தான் பகிர்ந்து கொள்வார்கள். ஆண்களும் நிலவை ஒரு பெண்ணாக நினைத்து காதலிக்கு தூது விடுவார்கள். எத்தனை எத்தனை கவிஞர்களை கற்பனை திறன் மிக்கவர்களாக உருவாக்கிய பெருமை நிலாவிற்கு உண்டு தெரியுமா? நிலவையே கையில் பிடித்ததாக நினைத்து கொஞ்சி விளையாடும் காதலர்களும் உண்டு.
நிலாவைக் காட்டி தாய் தன் பிள்ளைக்கு சோறுட்டுவாள். பாட்டி தன் பேத்திகளுக்கு நிலவில் ஆயா வடை சுட்டதாக கதைகள் சொல்லுவாள். இதையெல்லாம் தாண்டி விஞ்ஞானம் நிலவிற்கு சென்று மனிதனால் வாழ முடியும் என்றும் பனிக்கட்டிகள் உள்ளதாக சான்றுகள் உள்ளது என்றும் உலகிற்கு உணர்த்தி உள்ளது. நாம் நிலாவிற்கு ஜோதிடத்தில் உள்ள பங்கையும் பற்றி பார்ப்போம்.
சந்திரன், நிலா, திங்களன், வதனமதி, மதிவதனன், மாதுர்காரகன், மனோகாரகன் என வர்ணிக்கப்படும் சந்திரன் நவக்கிரகங்களில் இரண்டாம் இடத்தை வகிப்பவர். சந்திரன் ஒரு பெண் கிரகமாவார் ஒருவரின் ஜாதகத்தை கணிப்பதற்கு மிகவும் உறுதுணையாக இருப்பவர் சந்திரன். சந்திரன் சஞ்சரிக்கும் நட்சத்திரமே ஒருவரின் ஜெனை கால நட்சத்திரமாகிறது. அதனைக் கொண்டுதான் அவருக்கு ஏற்படக்கூடிய தசாபுக்திகளையும் கணக்கிடுகிறோம். இதன் மூலமே அவரின் முழு ஜாதகப் பலனை அறியமுடியும்.
சந்திரன் ஜெனன காலத்தில் எங்கு இருக்கிறாரோ அதை ஜென்ம ராசி என்கிறோம். சந்திரன் ஒருவருக்கு பலம் பெற்றிருந்தால் மற்றவர்களிடம் பாசமாக நடக்கும் பண்பு, நல்ல மனநிலை, கவிதை, கற்பனைத் திறன், கௌரவம், புகழ், நிம்மதியான உறக்கம், அரசு வழியில் ஆதரவுகள் உண்டாகும்.
சந்திரன் மனோகாரகன் என்பதால் அவர் பலமிழந்திருந்தால் மனக்குழப்பம், மன நோய், மற்றவர்களிடம் ஒத்துப்போக முடியாத நிலை, எதிம் தோல்வி போன்ற அனுகூலமற்றப் பலன்கள் உண்டாகும்.
சந்திரன் கோட்சார ரீதியாக 1,3,6,7,10,11 ஆகிய ஸ்தானங்களில் சஞ்சரிக்கும் நாட்களில் அனுகூலமானப் பலன்கள் உண்டாகும். சந்திரன் ஜென்ம ராசிக்கு 8 ல் சஞ்சரிப்பதை சந்திராஷ்டமம் என்கிறோம். சந்திரன் மனோகாரகன் என்பதால் இந்த சந்திராஷ்டம நாட்களில் தேவையற்ற மனக் குழப்பங்கள் உண்டாகும். சந்திரனின் இந்த கோட்சார சஞ்சாரத்தைக் கொண்டுதான் தினப்பலன் ஜோதிடர்களால் கணிக்கப்படுகிறது.
சந்திர திசை 10 வருடங்கள் நடைபெறும். சந்திரன் ஒரு ராசியில் இரண்டே கால் நாட்கள் சஞ்சரிக்கிறார். ராசி மண்டலத்தை சுற்றிவர 27 நாட்கள் ஆகிறது. சூரியன், சந்திரன் ஆகிய இருவரும் இணைந்திருக்கும் நாளை அமாவாசை என்கிறோம். சூரியனுக்கு 7 ல் சந்திரன் சஞ்சரிக்கும் நாளை பௌர்ணமி என்கிறோம். சூரியன் இருக்கும் இடம் முதல் 7ம் வீடு வரை சந்திரன் சஞ்சரிக்கும் நாட்களை வளர்பிறை என்கிறோம். 7ம் வீடு முதல் 12ம் வீடுவரை சந்திரன் சஞ்சரிக்கும் நாட்களை தேய்பிறை என்கிறோம். இந்த இடைவெளி நாட்களை கொண்டுதான் திதி நிர்ணயம் செய்யப்படுகிறது. அதே போல சந்திரனுக்கும், சூரியனுக்கும், இடையில் பூமி ஒரே நேர்கோட்டில் இருக்கும்போது சந்திர கிரகணம் உண்டாகிறது. சந்திரனின் பலத்தைக் கொண்டுதான் திருமண முகூர்த்தங்களும் நிர்ணயம் செய்யப்படுகிறது. சந்திரன் ஜெனன காலத்தில் நின்ற ராசியை ஜென்ம ராசி என்பதுபோல ஜென்ம ராசியைக் கொண்டுதான் கோட்சார ரீதியாக மற்றகிரகங்களின் சஞ்சாரபலனை அறியமுடியும்.
சந்திரன் ரிஷபத்தில் உச்சமும், விருச்சகத்தில் நீசமும், கடகத்தில் ஆட்சியும் பெறுகிறார். சந்திரனுக்கு பகை வீடுகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சந்திரனுக்கு மூல திரிகோண வீடு ரிஷபமாகும்.
சந்திரன் பெண் கிரகமாவான். பாஷை தமிழ், நிறம் வெண்மை, ஜாதி வைசியம், திசை தென்கிழக்கு, ரத்தினம் முத்து, தானியம் நெல், புஷ்பம் வெள்ளை அல்லி, வாகனம் நரி, சுவை தித்திப்பு, உலோகம் ஈயம், வஸ்திரம் வெள்ளை, தேவதை பார்வதி, குணம் வளர்பிறை, சௌமியர் தேய்பிரை, குரூரர் சமித்து எருக்கன் கள்ளியாகும்.
சந்திரனின் நட்பு வீடு மிதுனம், சிம்மம், கன்னி. சமவீடுகள் மேஷம், துலாம், தனுசு, மகம் கும்பம், மீனம், நீசவீடு விருச்சிகம். நட்பு கிரகங்கள் சூரியன், குரு.
சந்திரனின் காரகத்துவங்கள்
மாதுர்காரகனாகிய சந்திரன் தாயார் பராசக்தி, கணவதி, சுவையான விருந்து, உபசரிப்புகள், ஆடம்பரமான ஆடைகள், குதிரை, தூக்கம், ஏற்றத்தாழ்வான பொருளாதார நிலை, உடல்நிலைகள், சீதள நோய்கள், இடது கண்புருவம், உத்தியோகம், கூழ், முத்து, வெண்கலம், வெண்ணெய் அரிசி, உப்பு, மீன், உழவர்கள், உப்பு காய்ச்சுபவர், வண்ணான், தர்ம சத்திரங்கள், சாமரம், அந்நிய நாட்டு பயணங்கள் கடல் கடந்து செல்லுதல் போன்றவற்றிற்கு காரகம் வகிக்கிறார்.
சந்திரனால் உண்டாகக்கூடிய நோய்கள்
தூக்கமின்மை, சோம்பேறித்தனம், மன நிலை பாதிப்பு, மஞ்சள் காமாலை, ஜல தொடர்புடைய நோய்கள், சீதபேதி, உணவு செரிக்காத நிலை, குடல் புண், முகப்பரு, சுவையை அறியும் தன்மையை இழக்கும் நிலை, தைரிய குறைவு, ஜலத்தால் கண்டம், தண்ணீரில் உள்ள மிருகத்தால் கண்டம், பெண்களால் பாதிப்பு, ரத்தத்தில் தூய்மையில்லாத நிலை, சளி, காய்ச்சல் போன்ற நோய்கள் சந்திரனால் ஏற்படும்.
ஒருவருடைய ஜாதகத்தில் வளர்பிறை சந்திரன் சுபராகவும், தேய்பிறை சந்திரன் பாவியாகவும் விளங்குகிறார். வளர்பிறை சந்திரன் கேந்திர திரிகோணத்திலோ 2,11 லோ அமைந்து திசை நடைபெற்றால் நற்பலன்கள் உண்டாகும். தேய்பிறை சந்திரனாக இருந்தாலும் 3,6,10, 11 ல் இருந்து திசை நடைபெற்றால் நற்பலன்களை வழங்குவார். சந்திரன் ராகு, கேது சேர்க்கை பெற்று அமைவது கிரகண தோஷமாகும். கிரகண தோஷம் ஏற்பட்டு திசை நடைபெற்றால் மனக்குழப்பம், மன சஞ்சலம் தாய்க்கு கண்டம் உண்டாகும்.
சந்திரன் தான் நின்ற வீட்டிலிருந்து 7ம் வீட்டை மட்டுமே பார்வை செய்வார். வளர்பிறை சந்திரன் வளமான யோகத்தை தருவது போல தேய்பிறை சந்திரன் தருவதில்லை.
சந்திரனால் உண்டாகக்கூடிய யோகங்கள்
சந்திராதியோகம், சந்திரமங்கள யோகம், சகடயோகம், அமாவாசையோகம், கேமத்துருவ யோகம், அனபாயோகம், சுனபாயோகம்.
சந்திராதியோகம்
சந்திரனுக்கு 6,7,8 ல் சுபகிரகம் இருப்பது. இதனால் தைரியம், துணிவு, நீண்ட ஆயுள், எதிரிகளை வெல்லும் ஆற்றல் உண்டாகும்.
சந்திர மங்கள யோகம்
சந்திரனுக்கு 1,4,7,10 ல் செவ்வாய் இருப்பது. இதனால் வீடு, வானம், செல்வம், செல்வாக்கு யாவும் உண்டகும்.
சகடயோகம்
சந்திரனுக்கு 6,8,12 ல் குரு இருப்பது. வாழ்வில் இன்பமும் துன்பமும் சரிசமமாக இருக்கும்.
அமாவாசை யோகம்
சந்திரனும், சூரியனும் இணைந்து இருப்பது. இதனால் சுறுசுறுப்பாகவும், கல்வியில் சிறந்தவராகவும், வாழ்வில் சாதனைகள் செய்யக்கூடியவராகவும் இருப்பார்கள்.
மேத்ரும யோகம்
சந்திரனுக்கு முன்னும் பின்னும் கிரகங்கள் இல்லாமல் இருப்பது. இதனால் வாழ்வில் முன்னேற்றமற்ற நிலை உண்டாகும்.
அனபாயோகம்
சந்திரனுக்கு 2ல் சுபகிரகம் இருப்பது. இதனால் சொந்த முயற்சியால் முன்னேற்றம், உயர் பதவி உண்டாகும்.
சுனபா யோகம்
சந்திரனுக்கு 12 ல் சுபகிரகம் இருப்பது. இதனால் செல்வம், செல்வாக்கு, புகழ், பதவி யாவும் உண்டாகும்.
சந்திர ஓரையில் செய்ய வேண்டியவை
பெண் பார்த்தல், நகைகள் செய்தல், உறவினரைக் காணுதல், பசு, கன்று வாங்குதல், இசை பயில, கல்வி கற்க, ஜலத்தில் பிராயாணம் செய்ய, வியாபாரம் செய்ய உத்தமம்.
நவகிரகங்களால் ஏற்படக்கூடிய தோஷங்கள் விலக அந்தந்த பரிகார ஸ்தலங்களுக்குச் சென்று பரிகாரம் செய்வது நல்லது.
சந்திரனுக்குரிய திருத்தலங்கள் இரண்டு 1. திங்களூர், 2. திருப்பதி
திங்களூர்
திங்கள் என்றால் சந்திரன். அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவராகிய அப்பூதியடிகளின் சொந்த ஊராகும். தமிழ்நாட்டிலுள்ள சைவத் திருப்பதிகளுள் தேவார பாடல் பெற்ற திருத்தலம் இத்திங்களூராகும். இது சந்திரனுக்கு உரிய ஸ்தலமாதலால் இப்பெயர் பெற்றது. இத்தலம் திருவையாற்றிலிருந்து எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
திருப்பதி
இது சந்திரன் பூஜித்து பெரும்பேறு பெற்ற ஸ்தலமாகும். இது ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா ரயில் நிலையத்திலிருந்து 9 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. மலையடிவாரத்திலிருந்து நடந்தும் பஸ் மூலமும் செல்லலாம். திருப்பதி சென்று வந்தாலே வாழ்வில் ஒரு திருப்புமுனை உண்டாகும். இக்கோவிலில் எம்பெருமான் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.
சந்திரனை வழிபடும் முறைகள்
திங்கட்கிழமைகளில் விரதம் இருத்தல் (சோம வார விரதம்), பௌர்ணமி நாட்களில் சாதத்தில் தேனும் சர்க்கரையும் கலந்து செப்பு பாத்திரத்தில் சந்திரனுக்கு படைப்பது, செம்பருத்தி பூவால் அர்ச்சனை செய்வது, முத்து பதித்த மோதிரம் அணிவது, வெங்கடாசலபதியை தரிசிப்பது, திருப்பதி சென்று வருவது, சந்திரனின் அதிதேவதையான பார்வதி தேவியை திங்களன்று வணங்குவது, ஸ்ரீபராசக்தி, துர்க்கா தேவியை வழிபடுவது, இரண்டு முகங்கள் கொண்ட ருத்ராட்சையை அணிந்து கொள்வது,
நீர், பசும்பால், அரிசி போன்றவற்றை திங்கட்கிழமைகளில் பெண்களுக்கு தானம் தருவது, வெள்ளி பாத்திரங்களை உபயோகிப்பது, வெள்ளை நிற ஆடை அணிவது, எப்போதும் வெள்ளை நிற கைக்குட்டை வைத்திருப்பது.
அதுபோல ஓம் ஷரம் ஸ்ரீம் ஷெளரம் சந்திராய நமஹ என சந்திரனின் மூல மந்திரங்களை 40 நாட்களுக்கு தினம் 250 வீதம் 10,000 தடவை ஜெபிப்பது.
சந்திராயன விரதம் என்ற முறையில் அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமை அன்று 1 கவளம் அடுத்த நாள் 2 கவளம் என வரிசையாக ஒவ்வொரு நாளுக்கு ஒரு கவளம் மட்டும் உணவு சேர்த்து மறுபடியும்
பௌர்ணமியன்று முழு உபவாசம் இருப்பது.
- சிலர் பிரம்மஹத்தி தோஷத்தை சரி செய்ய பல்வேறு பரிகார தலங்களுக்கு சென்றும் பிரச்சனை தீரவில்லை என்று கூறுபவர்கள்
- கோட்சாரத்தில் பாக்கியஸ்தானம் வலுப்பெறும் காலத்தில் வழிபாடு, பரிகாரம் செய்தால் உடனே பலன் கிடைக்கும்.
ஜோதிட ரீதியாக ஒருவரது ஜாதகத்தில் குருவும், சனியும் இணைந்தாலோ, இந்த இரு கிரகங்களுக்கும், சாரப்பரிவர்த்தனை பெற்றாலோ, சமசப்தம பார்வை பெற்றாலோ பிரம்மஹத்தி தோஷம் உள்ளது என்று கூறலாம். 75சதவீதம் ஜாதகத்தில் குரு, சனி ஏதாவது ஒரு விதத்தில் சம்பந்தம் பெற்று இருக்கும். இந்த கிரக இணைவு ஜாதகருக்கு யோகமா, சாபமா என்பதை சுய ஜாதகத்தில் 1,5,9 பாவகங்கள் பெற்ற வலிமை, குரு, சனிக்கு அஷ்டம, பாதக ஸ்தானங்களுடன் உள்ள சம்பந்தம், ராகு, கேதுவுடன் உள்ள சம்பந்தத்தை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
மேலும் இந்த தோஷம் தசா புத்தி அந்தர நாதர்களுடனும், கோட்சாரத்துடனும் சம்பந்தம் பெறும் போதே வினைப்பயனை முழுவதும் அனுபவிக்கச் செய்கிறது. ஜோதிட உலகமே தோஷம் என்று கூறும் இந்த குரு, சனி சம்பந்தம் ஒரு சிலருக்கு பெரிய திருப்பு முனையை தந்திருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை.
இந்த கிரக சம்பந்தம் கூரை வீட்டில் வாழ்ந்தவரை கூட குபேரனாக மாற்றியுள்ளது என்பதும் மறுக்க முடியாத உண்மை. பிரம்மஹத்தி தோஷத்தை சரி செய்ய பல்வேறு பரிகார தலங்களுக்கு சென்றும் பிரச்சனை தீரவில்லை என்று கூறுபவர்கள் தோஷத்தின் வலிமையை முடிவு செய்த பிறகு எந்த முறையில் தோஷத்தை சரி செய்வது என்பதை தீர்மானிக்க வேண்டும். முதலில் பிரம்மஹத்தி தோஷத்தால் பாதிக்கப்படுபவர்கள் கோட்சாரத்தில் பாக்கியஸ்தானம் வலுப்பெறும் காலத்தில் வழிபாடு, பரிகாரம் செய்தால் உடனே பலன் கிடைக்கும்.
குரு, சனிக்கு செவ்வாய் சம்பந்தம் இருப்பவர்கள் நீண்ட நாள் வழிபாடும் பெரிய அளவில் செலவில்லாத முறையான அமாவாசை, சிவ வழிபாடு, வயதான ஏழை தம்பதிகளுக்கு உணவு , உடை கொடுத்து ஆசி பெறுதல் போன்ற எளிய பரிகாரங்களைச் செய்தாலே போதும். நல்ல பலன்கள் கிடைத்து மேன்மை அடைவார்கள். குரு, சனிக்கு ராகு, கேது சம்பந்தம் அல்லது அஷ்டமாதிபதி, பாதகாதிபதி சம்பந்தம் இருப்பவர்கள் ராமர் வணங்கிய தேவிபட்டிணம், ராமேஸ்வரம், திருவிடைமருதூர், கொடுமுடி, ஸ்ரீ வாஞ்சியம், திருபுல்லாணி போன்ற பரிகார வழிபாட்டு தலங்களுக்கு சென்று தோஷ நிவர்த்தி செய்து பயன் பெறாலம்.
- இந்த தோஷம் நெஞ்சை பதை பதைக்க வைக்கும் பாதங்களைச் செய்வதால் ஏற்படுவதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன.
- தோஷம் உள்ளவர்கள் குடும்பத்தில் ஒற்றுமை இருக்காது.
மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான வாழ்க்கை அமைகிறது. ஒரு சிலருக்கு வெற்றி வாய்ப்பு வீடு தேடிவந்து அழைக்கிறது. ஒரு சிலருக்கு வாய்ப்பை தேடிப் போனாலும் கிடைப்பது இல்லை. என்ன உழைத்தாலும், அதற்கு உரிய பலன்கள் கிடைக்காமல் போகின்றன. இதற்கு பலவகையான தோஷங்கள் காரணமாக இருந்தாலும், குறிப்பாக பிரம்மஹத்தி தோஷம்தான் முக்கிய காரணம் என்கிறார்கள். 'பிரம்மஹத்தி தோஷம்' என்பது, நெஞ்சை பதை பதைக்க வைக்கும் கொடுமையான பஞ்ச மகா பாதங்களைச் செய்வதால் ஏற்படுவதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன.
பூமியில் ஒரு உயிர் ஜனனமாக காரணமாக இருக்கும் பிரபஞ்ச சக்திக்கே அந்த உயிரை எடுத்துக் கொள்ள உரிமை இருக்கிறது. சக மனிதர்கள் ஒரு உயிருக்கு தீங்கு விளைவித்தால், பாதிப்பை ஏற்படுத்தினால், உருவாகும் தோசமே பிரம்மஹத்தி தோசமாகும். ஏதோ ஒரு காரணத்தால் ஒருவரை கொலை செய்வது அல்லது அதற்கு சமமான பாவங்கள் செய்தவருக்கே இந்த தோஷம் ஏற்படுகிறது. இந்த தோஷம் யாருக்கெல்லாம் வரும் என்றும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் பார்ப்போம்.
1. கருச்சிதைவு செய்தவருக்கும் அதற்கு உதவிய மருத்துவருக்கும் வரும். அவர்களுக்கு குழந்தையின்மை ஏற்படும். அப்படி குழந்தை பிறந்தாலும் வாழ்நாள் முழுவதும் அந்த குழந்தையால் காலம் முழுவதும் நிம்மதியின்மை ஏற்படும்.
2.பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறேன் என வாக்கு கொடுத்து, ஏமாற்றி திருமணம் செய்யாமல் இருப்பவருக்கு திருமணமே நடக்காத நிலை, அப்படி நடந்தாலும் அந்த திருமண வாழ்க்கை நரக வேதனை தருவதாக இருக்கும்
3.பலரின் உழைப்பை உறிஞ்சி, அதற்குரிய ஊதியம் தராமல் இருப்பது. உழைத்த வேர்வை காயும் முன்பு கூலி கொடுக்காதவர்களுக்கு வரும். இந்த தோஷத்தால் தொழில் சரிவர அமையாமை, தொழில் நட்டம், வேலை இல்லா நிலை ஏற்படும்.
4.குருவுக்கு தட்சிணை தராமல் இருப்பது குருவின் கொள்கை பிடிக்காமல் தானே குருவாக மாறுபவர்களுக்கு, எந்த முகாந்திரமும் இல்லாமல் பிராமணர்களை துன்புறுத்தினால், வருத்தம் ஏற்படுத்தினால், அவர்களுக்கு அல்லது அவர்களது குழந்தைகளுக்கு கற்ற கல்வியை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். குல தெய்வ சாபத்தை விட குரு சாபம், பிராமண சாபம் மிக கொடியது. பிராமண குலத்தில் பிறந்த ராவணனனை ராமர் கொன்றதால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.
5.வெள்ளிக்கிழமைகளில் நல்ல பாம்பை அடிப்பவர்களுக்கு பண இழப்பு ஏற்படும். வேற்று மதத்தினர் அல்லது அந்நிய பாஷை பேசுபவர்களால் தொல்லை ஏற்படும். இவர்களுடைய குழந்தைகள் கலப்பு திருமணம் செய்து கொண்டு வாழ்வை தொலைத்து விடுகிறார்கள்.
6. ஆலயத்தை தகர்த்தல், சாமி சிலையை திருடுதல், குல தெய்வ சொத்தை கொள்ளை அடித்தவர்களுக்கு, பங்காளி தகராறில் குல தெய்வ கோவிலை மூடியவர்களுக்கு கடவுள் அனுக்கிரகம் இருக்காது.
7. கட்டிய மனைவிக்கு தேவையான அடிப்படை வசதி செய்து தரத் தவறியவரால் தன் அடிப்படை தேவையை கூட நிறைவு செய்ய முடியாத நிலை ஏற்படும். மேலும் பெற்றோருக்கு உணவளிக்காமல் விரட்டி அடிப்பவருக்கு, கறவை நின்ற பசுவைக் கசாப்புக்கு அனுப்புபவருக்கு, உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்பவருக்கும், நன்றி மறந்தவர்களுக்கும் இந்த தோஷம் ஏற்படுகிறது. அதனால் வருடக் கணக்கில் மனக்குழப்பம், தவறே செய்யாமல் தண்டணை அனுபவிப்பது, மருத்துவத்திற்குக் கட்டுப்படாத நோய், வறுமை, அங்கீகாரம் இன்மை, குடும்பத்தில் மரியாதை இன்மை, நடத்தி வரும் தொழிலுக்கு வேலையாட்கள் கிடைக்காத நிலை போன்றவை பல ஆண்டுகள் நீடிக்கும். சமூகத்தில் திறமை இருந்தும் நல்ல நிலையை அடைய முடியாமல் தடுமாறிக் கொண்டு இருப்பார்கள். ஒருவரின் உயிரை எடுத்தால் மனம் என்ன பாடுபடுமோ அதேபோல் இந்த தோசம் இருப்பவர்களின் மனமும் இருக்கும். இப்படிப்பட்ட தோஷம் உள்ளவர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்கள் குடும்பத்தில் ஒற்றுமை இருக்காது.
ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional
- காலம் கை கொடுக்காமல் கைவிடப்பட்டவர்கள்.
- 26 வயது வரை ஒரு வழியாக்கி விடும்.
கால சர்ப்ப தோஷம் என்பது என்ன? காலத்தால் மறுக்கப்பட்டவர்கள். காலம் கை கொடுக்காமல் கைவிடப்பட்டவர்கள். இதை எதிர்த்து நின்று மேலே வருகிறவர்கள் இருக்கிறார்களே அவர்களுக்கு 39 வயதிலிருந்து மிகவும் உச்சமாக இருக்கும். உச்சத்திற்கும் வருவார்கள். ஆனால் அதுவரைக்கு உண்டு இல்லை என்று ஆக்கும். குறிப்பாக 26 வயது வரை ஒரு வழியாக்கி விடும்.ஆனாலும் திருமணம் போன்ற விஷயங்களுக்கு இந்த கால சர்ப்ப தோஷம் எந்த விதத்திலும் பாதிப்பை உண்டாக்குவது இல்லை என்பதை முழுமையாக நம்பலாம்.
அத்தகைய கால சர்ப்ப தோஷம் இருப்பவர்கள் கால பைரவரை வணங்குவதுடன் குலதெய்வ வழிபாட்டை மறக்காமல் செய்ய வேண்டும்.
ராகுவின் ஆலயங்களாக திருநாகேஸ்வரம் மற்றும் திருப்பாம்புரம் அமைந்துள்ளது. இந்த ஆலயங்களுக்கு வெள்ளிக்கிழமை ராகுகாலத்தில் சென்று இறைவனை வழிபட ராகுவின் தோஷம் விலகி நன்மைகள் நடக்கும்.
சீர்காழி - மயிலாடுதுறை சாலையில் இருக்கும் கீழப்பெரும்பள்ளம் நாகநாத சுவாமி ஆலயம் கேது பரிகார ஸ்தலமாக உள்ளது. இந்த ஆலயத்திற்கு சனிக்கிழமையில் சென்று இறைவனை தரிசித்தால் கேதுவின் தோஷம் நீங்கி நன்மைகள் நடக்கும்.
ஸ்ரீகாளகஸ்தி, ராகு-கேது இருவருக்குமான ஸ்தலமாக இருக்கிறது. இந்த ஆலயத்திற்குச் சென்று வருவது ராகு கேதுவின் தோஷம் வீரியத்தைக் குறைக்கும். மேலும் கேதுவின் ஆதிக்கத்தை குறைத்துக்கொள்ள காஞ்சிபுரம் சித்ரகுப்தன் ஆலயத்திற்கு சென்று வருவது நல்ல பலன்களைத் தரும்.
அதுமட்டுமல்லாமல் ஸ்ரீ துர்கை வழிபாடும், புற்று உள்ள அம்மன் ஆலயங்கள், கருமாரியம்மன் ஆலயம், நாகாத்தம்மன் ஆலயம் முதலான கோயில்களுக்கு அடிக்கடி சென்று வருவது ராகு கேதுவின் வீரியத்தைக் குறைத்து நன்மைகளை அதிகப்படுத்தித் தரும்.
- நான் வீட்டிற்குள் சென்று தண்ணீர் தெளித்து வந்த போது சாமியார் மாயமாகி விட்டார்
- சி.சி.டி.வி. காமிரா காட்சிகளின் பதிவுகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் குமரி நெசவாளர் காலனி பகுதி யில் காவி உடை அணிந்து சாமியார் போல் வந்த ஒருவர், தோஷம் கழிப்பதாக கூறி முதியவர் ஒருவரை ஏமாற்றி ரூ.14 ஆயிரம் அபேஸ் செய்த சம்பவம் மாநகரில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடந்தது எப்படி? என்பது குறித்து பணத்தை இழந்த கிருஷ்ணன் (வயது 72) போலீசில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:-
எனது மனைவி லெட்சுமி நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டு உள்ளார்.இந்த நிலையில் தான் சம்பவத்தன்று காவி உடை சாமியார் வந்தார். அவர் உங்கள் வீட்டில் தோஷம் உள்ளது. அதை கழித்தால் எல்லாம் சரியாகி விடும் என்று கூறினார்.
இதனை நம்பி அவர் கேட்டபடி ரூ. 14 ஆயிரம் மற்றும் செம்பு தண்ணீர் கொடுத்தேன். பின்னர் தான் மந்திரித்து விட்டதாகவும், செம்பு தண்ணீரை வீடு முழுவதும் தெளித்து வாருங்கள் என்றும் கூறினார். அதன்படி நான் வீட்டிற்குள் சென்று தண்ணீர் தெளித்து வந்த போது சாமியார் மாயமாகி விட்டார். அப்போது தான் ஏமாற்றப்பட்ட விவரம் தெரிய வந்தது.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மோசடி செய்த சாமியாரை தேடி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளின் பதிவுகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். அதில் காவி சாமியார், இரு சக்கர வாகனத்தில் செல்வது தெரிந்தது. அதை வைத்து அவரை தேடும் பணியை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.
- கால சர்ப்ப தோஷம் என அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
- ஆதிசேஷன் வழிபட்டு பேறு பெற்ற முதல் காலத்தில் இத்தல இறைவனை வழிபடுவது சிறப்பாகும்.
பட்டீஸ்வரம்:
கும்பகோணம் கீழக்கோ ட்டத்தில் பிரஹன்நாயகி சமேத நாகேஸ்வரன் கோவில் உள்ளது. தேவார பாடல் பெற்ற 276 தலங்களில் இக்கோவிலும் ஒன்றாகும்.
ஆதிசேஷன் வழிபட்ட கோவில்
முற்காலத்தில் ஆதிசேஷன் உடல் நலிவுற்று சிவனை வணங்கிய போது அவர் மகா சிவராத்திரி அன்று முதல் காலத்தில் கும்பகோணத்தில் உள்ள சூரிய புஷ்கரணியில் நீராடி இக்கோவிலில் உள்ள பிரஹன்நாயகி சமேத நாகேஸ்வரரையும், 2-ம் காலத்தில் திருநாகேஸ்வரம் திருநாகேஸ்வரரையும், 3-ம் காலத்தில் திருப்பாம்புரம் பாம்புரநாதரையும், 4-ம் காலத்தில் நாகூர் நாகேஸ்வரரையும் வழிபட்டு சாபம் நீங்க பெற்றார் என்பது புராண வரலாறு ஆகும்.
தோஷங்கள் நீங்கும்
இக்கோவிலில், சித்திரை மாதத்தில் 11, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் சூரிய கதிர்கள் மூலவர் மீது படுவது தனிச்சிறப்பாகும். இதனால் இத்தலம் 'பாஸ்கர ஷேத்திரம்' என்று அழைக்கப்படுகிறது. கோவிலின் வெளிப்பிர காரத்தில் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கும் நாககன்னி சமேத ராகு- கேது பகவானை வழிபட்டால் ராகு தோஷம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், கால சர்ப்ப தோஷம் என அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
முதல் காலத்தில் வழிபடுவது சிறப்பு
மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோ விலில் ஆண்டுதோறும் சிவராத்திரி விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு சிவராத்திரி விழா நாளை இரவு நான்கு கால பூஜைகளுடன் சிறப்பாக நடைபெற இருக்கிறது. ஆதிசேஷன் வழிபட்டு பேறு பெற்ற முதல் காலத்தில் இத்தல இறைவனை வழிபடுவது சிறப்பாகும்.
4 கால பூஜைகள்
மேலும், மகாமக கரையில் எழுந்தருளியுள்ள சேடச (16) மகாலிங்க கோவில்கள் மற்றும் ஆதிகும்பேஸ்வரர், சோமேஸ்வரர், ஆதிகம்ப ட்ட விஸ்வநாதர், ஏகா ம்பரேஸ்வரர், காசிவிஸ்வ நாதர், அபிமுகே ஸ்வரர், கௌ தமேஸ்வரர், பாணபுரீஸ்வரர், காளஹஸ்தி ஸ்வரர், மேலக்காவிரி நஞ்சுண்டே ஸ்வரர், கைலாசநாதர், பிரம்மபுரீஸ்வரர், தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆகிய கோவில்களில் சிவரா த்திரியை யொட்டி நான்கு கால சிறப்பு பூஜைகளும், சில கோவில்களில் நாட்டியா ஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
விழா ஏற்பாடுகளை அந்தந்த கோவில் செயல் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.