search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    லட்டு விவகாரம் : தோஷம் போக்க திருப்பதி கோவிலில் குடமுழுக்கு
    X

    லட்டு விவகாரம் : தோஷம் போக்க திருப்பதி கோவிலில் குடமுழுக்கு

    • குஜராத் ஆய்வகத்தில் சோதனை நடத்தப்பட்டது. 5 கட்டங்களாக சோதனை நடந்தது.
    • திருப்பதி லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலந்து இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்படும் லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு சேர்ந்து இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

    குறிப்பாக மாட்டு கொழுப்பு, பன்றி கொழுப்பு, மீன் எண்ணெய் ஆகியவை லட்டுகளில் கலந்து இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவே இந்த தகவலை வெளியிட்டு இருப்பதால் நாடு முழுவதும் இது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    தரமற்ற நெய்யில் விலங்குகளின் கொழுப்பை கலந்து திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதத்தன்மையை முந்தைய ஆட்சியாளர்களான ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி சீரழித்து விட்டதாக சந்திரபாபு நாயுடு முக்கிய குற்றச்சாட்டை வெளியிட்டு இருந்தார்.

    அதோடு திருப்பதி ஆலயத்தில் தயாரிக்கப்படும் லட்டுகளில் உள்ள கலவைகளை ஆய்வு செய்யவும் உத்தரவிட்டார். அதன்படி குஜராத் ஆய்வகத்தில் சோதனை நடத்தப்பட்டது. 5 கட்டங்களாக சோதனை நடந்தது.

    அப்போது திருப்பதி லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலந்து இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது ஆந்திர அரசியலில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது.

    இந்நிலையில், இந்த விவகாரத்தை தொடர்ந்து, ஏழுமலையான் கோவிலுக்கு தோஷத்தை போக்க சம்ரோஷணம் செய்ய நிர்வாகம் ரீதியாக ஆலோசனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    விலங்கு கொழுப்பு கலந்த நெய்யில் லட்டு தயாரித்ததால் கோவிலுக்கு மிகப்பெரிய பாவமும், தோஷமும் ஏற்பட்டதாக அர்ச்சகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    சம்ரோஷணம் என்றால் குடமுழுக்கு செய்து கோயிலை தூய்மைப்படுத்தும் நிகழ்வு என கூறப்பட்டுள்ளது. இதனால், திருப்பதி ஏழுமலையான் கோவிலுகு்கு விரைவில் குடமுழுக்கு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×