என் மலர்
நீங்கள் தேடியது "நர்ஸ்"
- இறந்தவர்கள் முதியோர்கள் என்பதால் மறுவாழ்வு மையத்தில் பணியாற்றும் சக நர்சுகள் இதனை பெரிதாக கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்.
- இன்சுலின் வழங்கிய 19 நோயாளிகளில் 17 பேர் நீரிழிவு நோய் இல்லாமலே அளவுக்கு அதிகமாக இன்சுலின் வழங்கியதால் இறந்துள்ளது போலீசாரையே அதிர வைப்பதாக இருந்தது.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் வசிப்பவர் 41 வயதான ஹீதர் பிரஸ்டீ. இவர் 2020 முதல் 2023 ஆம் ஆண்டு வரை அங்குள்ள நான்கு மாவட்டங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட முதியோர் மறுவாழ்வு மையங்களில் நர்சாக பணியாற்றி வந்துள்ளார். இவர் பணியாற்றி வந்த மறுவாழ்வு மையங்களில் வழக்கத்திற்கு மாறாக தொடர்ந்து 17க்கும் அதிகமான நோயாளிகள் மர்மமான முறையில் உயிரிழப்பது, அடிக்கடி முதியோர்கள் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. இறந்தவர்கள் முதியோர்கள் என்பதால் மறுவாழ்வு மையத்தில் பணியாற்றும் சக நர்சுகள் இதனை பெரிதாக கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்.
ஆனால் ஒரு கட்டத்தில் நர்ஸ் ஹீதர் பிரஸ்டீயின் நடத்தை, அவர் நோயாளிகளை அலட்சியப்படுத்து மற்றும் அவர்களை இழிவான முறையில் கடுமையாக திட்டுவது போன்றவை சக நர்சுகளை சந்தேகப்பட வைத்தது.
இதனையடுத்து, நர்ஸ் ஹீதர் பிரஸ்டீவை பிடித்து விசாரணையில் நடத்தியதில் அதிர்ச்சி தகவலை அவர் தெரிவித்துள்ளார். நோயாளிகளின் நீரிழிவு அளவை பொருட்படுத்தாமல் அதிகப்படியான இன்சுலின் வழங்கியதாக அவர் கூறியதை கண்டு சக நர்சுகள் அதிர்ந்து போயினர்.
இன்சுலின் வழங்கிய 19 நோயாளிகளில் 17 பேர் நீரிழிவு நோய் இல்லாமலே அளவுக்கு அதிகமாக இன்சுலின் வழங்கியதால் இறந்துள்ளது போலீசாரையே அதிர வைப்பதாக இருந்தது.
இதற்கான காரணம் குறித்து விளக்கம் அளித்துள்ள நர்ஸ் ஹீதர் பிரஸ்டீ, தனக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தால் நோயாளிகளிடமும், மற்றவர்களிடமும் கோபமாக நடந்துகொண்டதாக கூறினார்.
ஆரம்பத்தில் இந்த குற்றங்களை மறுத்து வந்த நர்ஸ் ஹீதர் பிரஸ்டீ, கடந்த பிப்ரவரி மாத விசாரணையின்போது, தனது வழக்கறிஞர்களிடம் தனது குற்றத்தை ஒப்புக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, 41 வயதான ஹீதர் பிரஸ்டீக்கு, மூன்று ஆயுள் தண்டனையும், 380-760 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி பட்லர் நகர நீதிமன்றம் உத்தரவிட்டது.
- ஜேசனுக்கு ஹீமோதெரபி சிகிச்சைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் காட்சிகளும், தொடர்ந்து நோயாளிகளுடன் நர்சு நடனமாடும் காட்சிகளும் உள்ளது.
- வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் நர்சுவின் செயலை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
புற்றுநோயாளி ஒருவருக்கு ஹீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்ட நேரத்தில் அவரை உற்சாகப்படுத்துவதற்காக அவருடன் நர்ஸ் ஒருவர் நடனமாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
கொலம்பியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் நடைபெற்ற இந்த காட்சி இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜேசன் என்ற நோயாளிக்கு ஹீமோதெரபி சிகிச்சை அளிப்பதற்காக அந்த வார்டு முழுவதும் பலூன்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. வீடியோவில் அந்த வார்டில் உள்ள படுக்கைகளில் நோயாளிகள் அமர்ந்திருக்கும் நிலையில் ஜேசனுக்கு ஹீமோதெரபி சிகிச்சைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் காட்சிகளும், தொடர்ந்து நோயாளிகளுடன் நர்சு நடனமாடும் காட்சிகளும் உள்ளது.
இந்த வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் நர்சுவின் இந்த செயலை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- பிரீத்தி சுகாதார நிலையத்திற்கு அருகாமையில் உள்ள மாடி வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.
- திடீரென மயக்கம் ஏற்பட்டு மாடிப்படியில் அமர்ந்து கொண்டார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பரமத்திவேலூர்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே எரியோடு பாலசுப்பிரமணியன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் பிரீத்தி (27).
இவர் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கந்தம்பா ளையத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 2 1/2 வருடங்களாக நர்சாக பணியாற்றி வந்தார். இவர் சுகாதார நிலையத்திற்கு அருகாமையில் உள்ள மாடி வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் பால்காரர் அழைத்தபோது பால் வாங்குவதற்காக பிரீத்தி மாடியில் இருந்து இறங்கி வந்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு மாடிப்படியில் அமர்ந்து கொண்டார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பிரீத்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பிரீத்தியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது குடும்பத்தினர் பிரீத்தியின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகு றித்து பிரீத்தியின் சகோதரர் ராதா (51) நல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குழந்தைக்கு பால் புகட்ட நர்சுகள் அனுமதிக்கவில்லை.
- நள்ளிரவு 1 மணி அளவில் மீண்டும் குழந்தையை பார்க்க பிரியா காம்ளே சென்றார்.
மும்பை :
மும்பை பாண்டுப்பை சேர்ந்தவர் பிரியா காம்ப்ளே. நிறைமாத கர்ப்பிணியான இவர் பிரசவத்திற்காக அங்குள்ள மாநகராட்சி சாவித்ரிபாய் புலே மகப்பேறு ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு இருந்ததால் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி குழந்தைக்கு பால் புகட்ட பிரியா காம்ப்ளே தீவிர சிகிச்சை பிரிவுக்கு சென்றார். அங்கு குழந்தையின் வாயில் பிளாஸ்டிக் டேப் ஒட்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் குழந்தைக்கு பால் புகட்ட நர்சுகள் அனுமதிக்கவில்லை. மறுநாள் காலை 8 மணிக்கு வரும்படி அவரிடம் கூறி அனுப்பினர். இதன்பின்னர் நள்ளிரவு 1 மணி அளவில் மீண்டும் குழந்தையை பார்க்க பிரியா காம்ளே சென்றார்.
அப்போதும் தனது குழந்தையின் வாயில் ஒட்டிய டேப் அகற்றப்படாமல் இருந்ததை கண்டு நர்சிடம் விசாரித்தார். இதற்கு குழந்தை அழாமல் இருப்பதற்காக டேப் ஒட்டியதாக நர்ஸ் தெரிவித்தார். இதனை கேட்டு திகைத்துப்போன பிரியா காம்ப்ளே மற்ற குழந்தைகளையும் கவனித்தார். அங்கிருந்த மேலும் 3 குழந்தைகளுக்கும் இதே போன்று டேப் ஒட்டப்பட்டு இருந்தது.
இதுபற்றி அவர் முன்னாள் கவுன்சிலர் ஜக்ருதி பாட்டீலிடம் தெரிவித்தார். அவர் ஆஸ்பத்திரி நிர்வாகம் மற்றும் மாநகராட்சி உதவி கமிஷனரிடம் புகார் அளித்தார். குழந்தையின் உயிருக்கு ஆபத்தான செயலில் ஈடுபட்ட நர்சை உடனடியாக பணி இடைநீக்கம் செய்து மாநகராட்சி உத்தரவிட்டது.
- ஒரு குழந்தையை பார்த்து கொண்டிருக்கும் போதே இன்னொரு குழந்தைக்கு அவசர உதவி தேவைப்படலாம்.
- தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குவதற்காக தாய்ப்பால் வங்கியும் செயல்படுகிறது.
சென்னை:
உலக நர்சுகள் தினம் இன்று. நோயாளிகளின் வளர்ப்பு தாய் போல் செயல்படும் இவர்களது பணி மகத்தானது.
அதிலும் பிறந்த குழந்தைகளை பெற்ற தாய் போல் கண்ணும் கருத்துமாக பாதுகாத்து ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்வது சாதாரண விஷயமல்ல. பிறந்த குழந்தைகள் பராமரிப்பு வார்டில் பணிபுரியும் ஒவ்வொரு நர்சும் அந்த குழந்தைகளின் மற்றொரு தாய் போன்றவர்கள்தான்.
எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள் பராமரிப்பு வார்டில் 20 ஆண்டுகளாக பணியாற்றும் நர்சு சாந்திக்கு இந்த ஆண்டின் சிறந்த நர்சுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த வார்டு அனுபவம் பற்றி சாந்தி கூறியதாவது:-
இந்த வார்டில் பணியில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக இரவில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அனுமதிக்கப் பட்டிருக்கும் அத்தனை குழந்தைகளும் அப்போது பிறந்தவைகள்.
அவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் ஆக்சிஜன் பிரச்சினை வரலாம். உடனே அட்டன்ட் பண்ண வேண்டும். சில நிமிடங்கள் தாமதித்தாலும் ஆபத்து நேரிடலாம்.
ஒரு குழந்தையை பார்த்து கொண்டிருக்கும் போதே இன்னொரு குழந்தைக்கு அவசர உதவி தேவைப்படலாம். எனவே, எந்த நேரமும் வென்டிலேட்டர் உதவியுடன் இருக்கும் குழந்தைகளின் அருகில் விழிப்புடன் இருக்க வேண்டும்.
ஆக்சிஜன் வைத்திருக்கும் முக மூடியை கவனித்தல், வென்டிலேட்டர் பராமரிப்பு நரம்பு வழியாக மருந்து செலுத்துதல் ஆகியவை முக்கியம். அதுமட்டுமல்ல இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை நரம்பு வழியாகவோ வாய் வழியாகவோ உணவு வழங்க வேண்டும். தாய்ப்பால் வழங்குவதாக இருந்தால் தாயிடம் குழந்தையை கொடுத்து பாலூட்ட வைக்க வேண்டும்.
தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குவதற்காக தாய்ப்பால் வங்கியும் செயல்படுகிறது.
கொரோனா காலத்தில் தாய்ப்பால் வங்கிக்கும் பால் கிடைக்காமல் சிரமப் பட்டோம். அந்த காலகட்டம் மிகவும் சவாலானதாக இருந்தது.
குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளையும் பராமரித்து ஆரோக்கியத்துடன் தாயிடம் ஒப்படைத்து வீட்டுக்கு அனுப்பும் போதுதான் மகிழ்ச்சியும், நிம்மதியும் வரும் என்றார்.
- நர்சை அடித்து கொன்ற கணவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை முனியாண்டி புரத்தைச் சேர்ந்தவர் சதீஷ் குமார் (வயது 32), கட்டிட தொழிலாளி. இவரும், ரம்யா (22) என்ற பெண்ணும் காதலித்து கடந்த திருமணம் செய்து கொண்டனர். திருப்பரங் குன்றம் பகுதியில் செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனத்தில் ரம்யா நர்சாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று மாலை ரம்யா வீட்டில் இருந்தார். அப்போது அவருக்கும், கணவருக்கும் இடையில் குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது சதீஷ்குமார், கர்ப்பிணியாக இருந்த ரம்யா நடத்தை தொடர்பாக அவதூறாக பேசினார். மேலும் சாதியை குறிப்பிட்டு இழிவாக பேசிய தாகவும் கூறப்படுகிறது. இதனை ரம்யா தட்டி கேட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த சதீஷ்குமார், கர்ப்பிணி மனைவி என்றும் பாராமல் உருட்டு கட்டையால் ரம்யாவை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த ரம்யா சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக ரம்யா வின் தந்தை செல்வம் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவர் சதீஷ்குமார், அவரது தந்தை செல்வம் (55), தாய் பஞ்சவர்ணம் (52) ஆகிய 3 பேரை கைது செய்தனர், அவர்களிடம் கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காலை வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு இந்துமதி சென்றார். ஆனால் மாலை நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை.
- இதையடுத்து பெற்றோர் சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு சென்று மாயமான தனது மகளை மீட்டு தர வேண்டுமென புகார் அளித்தனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த வண்டிபட்டி, அத்தாணி ரோட்டை சேர்ந்தவர் மல்லேஸ்வரன்(45). இவருக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளார்.
இதில் 3-வது மகள் இந்துமதி (21). கோவையில் நர்சிங் பயிற்சி முடித்து விட்டு சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக பணிபுரிந்து வருகிறார்.
தினமும் காலையில் வீட்டிலிருந்து வேலைக்கு செல்பவர் மாலை வீட்டுக்கு வந்து விடுவார். இதேபோல் சம்பவத்தன்றும் காலை வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு இந்துமதி சென்றார். ஆனால் மாலை நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் பதற்றம் அடைந்த அவரது பெற்றோர் இந்து மதியை பல்வேறு இடங்களில் தேடினர். அவர் பணிபுரிந்த மருத்துவமனை, நண்பர்கள் வீடுகளிலும் தேடி பார்த்தும் அவர் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.
இதையடுத்து இந்துமதியின் பெற்றோர் சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு சென்று மாயமான தனது மகளை மீட்டு தர வேண்டுமென புகார் அளித்தனர். புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.