என் மலர்
நீங்கள் தேடியது "பலாத்காரம்"
- பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் நிதி உதவி வழங்க வேண்டும்.
- அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர்கள் பொறுப்பேற்க வேண்டும்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் குண்டூர் மற்றும் கடப்பா மாவட்டங்களில் 2 இளம் பெண்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். அவர்களின் குடும்பத்தினரை ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்த 4½ மாதங்களுக்குள் 77 பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். 7 பெண் கொலைகள் மற்றும் 5 இளம் பெண்கள் தற்கொலைகள் செய்துள்ளனர். குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையில் அரசாங்கம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது போன்ற கேடுகெட்ட செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு ஆளுங்கட்சி கேடயமாக விளங்குகிறது.
பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் நிதி உதவி வழங்க வேண்டும். எங்களுடைய கட்சி சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நீதி வழங்கப்படும்.
சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வந்த பிறகு ஆந்திராவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், கொலைகள் மற்றும் தற்கொலைகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இது மாநிலத்திற்கு நல்லதல்ல. சில சம்பவங்களில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க தயங்குவது அதிகாரத்தில் இருப்பவர்கள் எந்த தவறு செய்தாலும் மறைக்கப்படலாம் என்ற ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கி வருகிறது.
எங்களுடைய ஆட்சியில் திஷா செயலி மூலம் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்தோம். இதன் மூலம் 1.56 கோடி அழைப்புகள் வரப்பட்டு 31 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் காப்பாற்றப்பட்டனர். இதற்காக 19 தேசிய விருதுகளும் கிடைத்தது.
தற்போது காவல்துறை சிறந்து விளங்க முடியவில்லை. அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர்கள் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இதுபோன்ற குற்றங்கள் மீண்டும் நடக்காது என்று உறுதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாணவிக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வீரமணி (22), இவர் சேலம் டவுன் பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். வீரமணி 16 வயதான பிளஸ்-1 மாணவியை கடந்த சில மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த மாணவி வீட்டில் இருந்தவர்களிடம் பள்ளிக்கு சென்று வருவதாக கூறி விட்டு வெளியில் சென்றார். அப்போது அந்த மாணவியை வீரமணி தனது மோட்டார் சைக்கிளில் கொல்லி மலைக்கு சுற்றுலா அழைத்து சென்றார். அவருடன் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வீரமணியின் நண்பர்களான கல்லூரி மாணவர்கள் கவியரசன் (20), அக்பர் (20) ஆகியோரும் சென்றனர்.
பின்னர் அங்கு அவர்கள் பல்வேறு இடங்களுக்கும் சென்று சுற்றி பார்த்தனர். தொடர்ந்து கொல்லி மலையில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து அந்த மாணவியுடன் வீரமணி தங்கினார். பின்னர் அந்த மாணவியை மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்து வீட்டில் இறக்கி விட்டு சென்றார்.
இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் மாணவியிடம் விசாரித்தனர். அப்போது அவர்களிடம் வீரமணி தன்னை கொல்லிமலைக்கு அழைத்து சென்று திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்ததாக கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் சேலம் டவுன் போலீசில் புகார் கொடுத்தனர்.
அதன் பேரில் விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் கலைவாணி மாணவியை கொல்லிமலைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் பலாத்காரம் செய்த வீரமணி மற்றும் உடந்தையாக இருந்த கவியரசன், அக்பர் ஆகியோர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தார். பின்னர் 3 பேரையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
மாணவிக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள ஒரு காப்பகத்தில் அவர் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
- பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இது குறித்து சில மத்தூர் போலீசில் புகார் செய்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.
திருப்பதி:
கர்நாடக மாநிலம், பெல்லாரியை சேர்ந்த தந்தையும், மகனும் ஆந்திரா மாநிலம், சத்ய சாய் மாவட்டம், சில மத்தூரில் உள்ள ஒரு காகித ஆலையில் காவலாளியாக வேலை செய்து வந்தனர்.
தசரா பண்டிகை முன்னிட்டு காகித தொழிற்சாலைக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. நேற்று இரவு தந்தையும், மகனும் தங்களது மனைவிகளுடன் காகித தொழிற்சாலையில் உள்ள ஒரு அறையில் தூங்கிக் கொண்டு இருந்தனர்.
அதிகாலை 3 மணிக்கு 2 பைக்குகளில் 4 மர்ம நபர்கள் வந்தனர். அதிகாலை நேரம் என்பதால் 4 பேரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.
அவர்களது அறைக்கு வந்த மர்ம நபர்கள் கத்தியை எடுத்து தந்தையையும், மகனையும் ஈவு இரக்கம் இன்றி சரமாரியாக வெட்டினர். இதில் தந்தையும், மகனும் படுகாயம் அடைந்தனர்.
பின்னர் கத்தி முனையில் மிரட்டி 4 பேரும் சேர்ந்து மாமியார், மருமகளை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இதையடுத்து அவர்கள் தாங்கள் வந்த பைக்கில் தப்பிச் சென்றனர்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இது குறித்து சில மத்தூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.
போலீஸ் சூப்பிரண்டு ரத்னா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரத்னாவை தொடர்பு கொண்டு குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும் பிரபல நடிகரும், இந்துப்புரம் எம்.எல், ஏ.வுமான நந்தமுரி பாலகிருஷ்ணா குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து கொடுமையான தண்டனை வழங்க வேண்டும் என போலீசாரை கேட்டுக்கொண்டார்.
தசரா பண்டிகை நடந்து வரும் நிலையில் மாமியார், மருமகள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஆண் நண்பரை பார்த்து விட்டு அவருடன் பைக்கில் வந்து கொண்டிருந்தார்.
- இளம் பெண்ணை அங்கிருந்து மறைவான இடத்துக்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
வதோதரா:
குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது ஆண் நண்பரை பார்ப்பதற்காக லட்சுமிபுரா பகுதிக்கு இரவு 11 மணியளவில் பைக்கில் சென்றார்.
ஆண் நண்பரை பார்த்து விட்டு அவருடன் பைக்கில் வந்து கொண்டிருந்தார். லட்சுமிபுரா பகுதியை கடந்து புறவழிச்சாலையில் வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கும்பல் இவர்களது பைக்கை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதில் 2 பேர் அங்கிருந்து சென்று விட்டனர். மேலும் 3 பேர் தொடர்ந்து இவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி வந்த 2 வாலிபர்கள் இளம் பெண்ணிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டனர்.
இதனை பார்த்த இளம் பெண்ணின் ஆண் நண்பர் அவர்களை தடுத்தார். அப்போது ஆத்திரமடைந்த 3 வாலிபர்களில் ஒருவர் ஆண் நண்பரை பிடித்து கொண்டார்.
மற்ற 2 வாலிபர்களும் இளம் பெண்ணை அங்கிருந்து மறைவான இடத்துக்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
பின்னர் அவர்களை அங்கேயே விட்டு விட்டு 3 பேர் கும்பலும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.
இதுகுறித்து இளம்பெண் வதோதரா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். வதோதரா புறநகர் போலீஸ் சூப்பிரண்டு ரோஹன் ஆனந்த் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். மேலும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் 3 பேர் கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
குஜராத் மாநிலத்தில் நகர பகுதிகளில் இரவு முழுவதும் நவராத்திரி பண்டிகைக்கான கர்பா கொண்டாட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. கொண்டாட்ட நேரங்கள் மீதான கட்டுப்பாடுகளை குஜராத் அரசு நீக்கியுள்ளது. நள்ளிரவில் கர்பா நிகழ்ச்சிகளில் பங்கேற்று சென்றவர்களால்தான் இந்த சம்பவம் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதேபோல் மகராஷ்டிரா மாநிலம் புனேவின் புறநகர் பகுதியிலும் 21 வயது இளம் பெண் ஒருவரை 3 பேர் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அந்த சம்பவத்திற்கும் இந்த குற்றச்சாட்டையே கூறப்படுகிறது.
- மது போதையில் இருந்த வாலிபர்கள் மாணவியை கட்டாயப்படுத்தி மது குடிக்க வற்புறுத்தினர்.
- மாணவிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது .
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் சேர்ந்தவர் 22 வயது மாணவி. இவர் வாரங்கல்லில் உள்ள ஒரு கல்லூரி விடுதியில் தங்கி இருந்து பி பார்மசி படித்து வந்தார்.
மாணவியின் சொந்த கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ் குமார். இவர் மாணவியை அடிக்கடி சந்தித்து பேசினார். மேலும் மாணவியை காதலிப்பதாக கூறினார். மாணவி காதலை ஏற்க மறுத்தார்.
இதனால் நண்பர்களாக பழகலாம் என சிவராஜ் குமார் கேட்டுக் கொண்டார்.
அதன்படி மாணவியும் அவருடன் நண்பராக பழகினார். ஆனாலும் சிவராஜ் குமார் மாணவியை எப்படியாவது அடைய வேண்டும் என முடிவு செய்தார்.
இதுகுறித்து அவருடைய நண்பர்கள் குச்சனாமணிதீப் மற்றும் கல்லூரி மாணவர் கோடம் விவேக் ஆகியோரிடம் தெரிவித்தார். அவர்கள் மாணவியை லாட்ஜுக்கு அழைத்துச் சென்று கூட்டுப் பலாத்காரம் செய்யலாம் என கூறினர். அதன்படி கடந்த வாரம் சிவராஜ் குமார் மற்றும் அவருடைய நண்பர்கள் காரில் மாணவியின் கல்லூரி விடுதி அருகே சென்றனர்.
மாணவியை செல்போனில் தொடர்பு கொண்ட சிவராஜ்குமார் வெளியே வரவழைத்தார். உன்னிடம் தனியாக பேச வேண்டும் எங்களுடன் காரில் வா என கூறினார். காரில் 3 பேர் இருந்ததால் மாணவி அவர்களுடன் செல்ல மறுத்தார். ஆனாலும் அவரை சமாதானம் செய்து காரில் ஏற்றினர்.
4 பேரும் அங்குள்ள மார்க்கெட் அருகில் உள்ள லாட்ஜுக்கு சென்றனர். ஏற்கனவே தயாராக வாங்கி வைத்திருந்த மதுவை எடுத்து சிவராஜ்குமார் மற்றும் அவருடைய நண்பர்கள் குடித்தனர்.மாணவி தான் கல்லூரி விடுதிக்கு செல்ல வேண்டும் எனகூறினார்.
மது போதையில் இருந்த வாலிபர்கள் மாணவியை கட்டாயப்படுத்தி மது குடிக்க வற்புறுத்தினர். தொடர்ந்து வற்புறுத்தியதால் மாணவி மது குடித்து மயங்கினார்.
இதனை பயன்படுத்திக் கொண்ட சிவராஜ்குமார் மற்றும் அவருடைய நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து மாணவியை மாறி மாறி பலாத்காரம் செய்தனர். மயக்கம் தெளிந்து மாணவி எழுந்து பார்த்தபோது தனக்கு நேர்ந்த கொடுமை கண்டு அழுது துடித்தார்.
அப்போது வாலிபர்கள் இந்த சம்பவத்தை வெளியே சொன்னால் ரெயில் தண்டவாளத்தில் வீசி கொலை செய்து வருவோம் என மிரட்டல் விடுத்தனர்.
இதனால் பயந்து போன மாணவி விடுதிக்கு திரும்பினார். பரீட்சை முடிந்து விடுதியில் இருந்து வீட்டுக்கு சென்றார். மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார்.
அதிர்ச்சியில் துடித்த பெற்றோர்கள் போலீஸ் கமிஷனரிடம்புகார் அளித்தனர். கமிஷனர் உத்தரவின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது .
போலீசார் வழக்கு பதிவு செய்து சிவராஜ் குமார் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்தனர். இந்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ஓஷோ ஆசிரமத்தில் உள்ளவர்கள் உடலுறவு வைத்து கொள்வதை குழந்தைகள் தவறாமல் பார்க்க வேண்டும்.
- எனது 7 முதல் 11 வயதுவரை ஆசிரமத்தில் உள்ள வயது வந்த ஆண்களுடன் பாலியல் செயல்களைச் செய்ய நிர்பந்திக்கப்பட்டேன்.
இந்தியாவில் பிறந்து, தனது ஆன்மீக சொற்பொழிவுகளால் உலகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான மக்களை ஈர்த்தவர் ஓஷோ.
இந்தியாவில் ஆசிரமம் தொடங்கி பின்னர் அமெரிக்காவில் உள்ள ஓரேகானில் குடியேறி அங்கேயே ஒரு ஆசிரமத்தையும் அமைத்தார். பாலியல் சுதந்திரம் குறித்து ஓஷோவின் சொற்பொழிவுகள் மிக புகழ்பெற்றவை.
இந்நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த 54 வயதான பிரேம் சர்கம் என்ற பெண் ஓஷோவின் ஆசிரமத்தில் 50க்கும் மேற்பட்ட முறை பலாத்தகாரம் செய்யப்பட்டேன் என்று பரபரப்பு குற்றசாட்டை கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய பிரேம் சர்கம், 6 வயதில் எனது தந்தையுடன் இங்கிலாந்தில் இருந்து புனேவில் உள்ள ஓஷோவின் ஆசிரமத்தில் சேர்ந்தேன்
ஆசிரமத்தில் உள்ளவர்கள் உடலுறவு வைத்து கொள்வதை குழந்தைகள் தவறாமல் பார்க்க வேண்டும் என்றும் பெண்கள், பருவமடைந்தவுடன் பாலியல் வழிகாட்டுதலுக்காக வயது வந்த ஆண்களைத் தேட வேண்டும் என்று கற்பிக்கப்பட்டது.
தன்னுடைய 7 வயதில் முதல்முறையாக பாலியல் தொல்லைகளுக்கு ஆளானேன். எனது 7 முதல் 11 வயதுவரை ஆசிரமத்தில் உள்ள வயது வந்த ஆண்களுடன் பாலியல் செயல்களைச் செய்ய நிர்பந்திக்கப்பட்டேன். 12 வயதில் பலாத்காரம் செய்யப்பட்டேன்.
பின்னர் புனேவில் இருந்து அமெரிக்காவிற்குச் சென்று ஒரேகானில் உள்ள ஒரு ஆசிரமத்தில் தாயுடன் சேர்ந்தேன். அங்கு குறைந்தது 50 முறைக்கு மேல் பலாத்காரம் செய்யப்பட்டேன். 16 வயதில் தான் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து எனக்கு புரிந்தது
ஓஷோ ஆசிரமத்தில் பாலியல் ரீதியாக சுரண்டப்பட்ட 2 பிரிட்டிஷ் பெண்களின் கதையுடன் என்னுடைய கதையையும் சேர்த்து எடுக்கப்பட்டுள்ள சில்ட்ரன் ஆஃப் தி கல்ட் ஆவணப் படம் விரைவில் வெளியாகவுள்ளது. எனக்கும், என்னைப் போன்றவர்களுக்கும் என்ன நடந்தது என்பதை உலகம் அறிய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
- என்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் புக்கிராம் மண்டலத்தில் உள்ள சின்னப்பூர் பகுதியை சேர்ந்தவர் எஸ்.வி.மல்லிக் தேஜா என்கிற சிங்கார புமல்லேஷ். இவர் சோமன்பள்ளியை சேர்ந்த இளம்பெண்ணுடன் இணைந்து யூடியூப் சேனலைத் தொடங்கினார்.
இருவரும் 6 ஆண்டுகள் ஒன்றாக வேலை செய்தனர். அந்தப் பெண் சேனலுக்கு பாடல்கள் எழுதிப் பாடினார். இதனால் இருவரும் சமூகவலை தளத்தில் பிரபலமானார்கள். இந்த நிலையில் பெண் நாட்டுபுற பாடகி யூடியூப்பர் மல்லிகா தேஜா மீது போலீசில் புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
நான் மல்லிகா தேஜா உடன் இணைந்து யூடியூப் சேனலில் பாடல்களை பாடி வந்தேன். அவர் எனக்கு ஒரு சிறிய தொகையை பங்காகக் கொடுத்து வந்தார். மல்லிக் தேஜா, என்னை பலமுறை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்.
என்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தார். கடந்த 2 வருடங்களாக என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினேன்.
அவர் என்னை கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் கடந்த மாதம் மியூசிக் ஸ்டுடியோவில் வைத்து தனது ஆசையை நிறைவேற்றும்படி வற்புறுத்தினார். நான் அவரிடம் இருந்து தப்பி வந்தேன்.
அவர் சின்னப்பூரில் உள்ள எனது தாத்தா பாட்டி வீட்டிற்கு வந்து, என்னையும் பெற்றோரையும் அவதூறாக பேசி மிரட்டினார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
- சிறுவனின் உடலில் உள்ள காயங்களை வைத்து பெற்றோர் உண்மையைக் கண்டறிந்துள்ளனர்
- இருவரின் வீட்டுக்கு சென்று நியாயம் கேட்ட சிறுவனின் பெற்றோரை அவர்கள் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்
உத்தரப் பிரதேசத்தில் 5 வயது சிறுவனை பண்ணையில் வைத்து இரண்டு நபர்கள் கூட்டுப் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதைவிட, சிறுவன் பலாத்காரம் செய்யப்பட்டபோது அவ்வழியே சென்றோர் காப்பாற்றாமல் நின்று வீடியோ எடுத்தது மனிதாபிமானத்தைக் கேள்விக்குள்ளாகியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாபூர் [Hapur] மாவட்டத்தில் சிறுவன் வசித்து வந்த வீட்டின் வருகே உள்ள பண்ணையில் வைத்து கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி அவ்வூரை சேர்ந்த இருவர் சிறுவனை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். அப்போது அவ்வழியே வந்த ஆடு மேய்ப்பர்கள் இருவர் சிறுவனை காப்பாற்றாமல் நின்று மனசாட்சியில்லாமல் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.
இந்த சம்பவத்தின் பின்னர் சிறுவனின் உடல் நிலை திடீரென மோசமானதைத் தொடர்ந்து அவனின் உடலில் உள்ள காயங்களை வைத்து பெற்றோர் உண்மையைக் கண்டறிந்துள்ளனர். இதுதொடர்பாக தவறு செய்த இருவரின் வீட்டுக்கு சென்று பெற்றோர் நியாயம் கேட்டுள்ளனர்.அதற்கு சிறுவனின் பெற்றோரை அவர்கள் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி சிறுவனின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதன்மூலமே இந்த கொடூர சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனையடுத்து குற்றவாளிகள் இருவரும் தப்பியோடிய நிலையில் அவர்களை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைத்துள்ளது.
- மனைவியை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.
- வன்கொடுமை உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தார். தொடர்ந்து அவரை தேடி வருகிறார்கள்.
கோவை:
கோவையை சேர்ந்தவர் 35 வயது இளம்பெண். இவர் கோவை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார்.
நான் விமானத்தில் விமானியாக (பைலட்) பணியாற்றினேன். போட்டி தேர்வில் பங்கேற்க விரும்பியதால், நான் பார்த்து வந்த விமானி வேலையை விட்டு விட்டு, போட்டி தேர்வுக்கு தயாராகி வந்தேன்.
இந்த நிலையில் அவினாசி ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் என்ஜினீயரான ஆனந்தராஜ் (37) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இவர் கட்டிட தொழில் செய்து வருகிறார்.
நாங்கள் கடந்த 2023-ம் ஆண்டு முதல் நெருங்கி பழகி வந்தோம். இதனை அறிந்த எனது தந்தை, ஆனந்தராஜை அழைத்து கேட்டார்.
அதற்கு அவர், தனக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டதாகவும், தற்போது மனைவியை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வருவதாகவும், அது முடிந்ததும் உங்களது மகளை திருமணம் செய்து கொள்வதாகவும் எனது தந்தையிடம் தெரிவித்தார்.
இதனை எனது தந்தையும் நம்பினார். அத்துடன் நாங்கள் பழகுவதையும் தடுக்கவில்லை.
எனது தந்தை கார் வாங்குவதற்காக ரூ.16 லட்சம் வைத்திருந்தார்.
கார் வாங்குவது தொடர்பாக எனது தந்தை ஆனந்த ராஜிடம் தெரிவித்தார். அதற்கு அவர் நான் உங்களுக்கு கூடுதலாக பணம் போட்டு வேறு ஒரு புதிய காரை வாங்கி தருவதாக தெரிவித்து, அவரிடம் இருந்த பணத்தையும் வாங்கி கொண்டார். ஆனால் கார் வாங்கி கொடுக்கவில்லை.
கடந்த ஜூலை மாதம் ஆனந்தராஜ், என்னை அவர் குடியிருக்கும் வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து எனக்கு குளிர்பானம் கொடுத்தார். நானும் அதனை குடித்தேன்.
அதனை தொடர்ந்து ஆனந்தராஜ் நாம் தான் திருமணம் செய்ய போகிறோமோ இருவரும் உல்லாசம் அனுபவிக்கலாம் என தெரிவித்தார்.
இதை கேட்டு அதிர்ச்சியான நான், அதெல்லாம் திருமணத்திற்கு பிறகு தான் என மறுத்தேன். ஆனால் ஆனந்தராஜ் வலுக்கட்டாயமாக என்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்.
மேலும் இதனை வீடியோவாகவும் எடுத்து, அதனை லேப்-டாப்பிலும் பதிவு செய்துள்ளார். ஆனால் அது எனக்கு தெரியாது.
தொடர்ந்து நான் ஆனந்தராஜை சந்தித்து, என்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினேன். ஆனால் அவர் மறுத்து விட்டார். அத்துடன் என்னை ஜாதியை சொல்லியும் திட்டினார்.
எனவே என்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த என்ஜினீயர் ஆனந்தராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறியிருந்தார்.
அவரது புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி, என்ஜினீயர் ஆனந்தராஜ் மீது கற்பழிப்பு, வன்கொடுமை உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தார். தொடர்ந்து அவரை தேடி வருகிறார்கள்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
- முத்துக்குமார் போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்றார்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியை சேர்ந்த 33 வயது இளம்பெண் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து புளியங்குளம் பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார்.
அப்போது அந்த பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்து உள்ளனர்.
நேற்று இரவும் அந்த பெண்ணும், வாலிபரும் மானாமதுரை நகரில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முந்திரிகாட்டில் சந்தித்து பேசி கொண்டிருந்தனர். அப்போது அங்கு மது போதையில் வந்த ஒரு கும்பல் 2 பேரிடமும் தகராறில் ஈடுபட்டனர். தொடர்ந்து அந்த வாலிபரை சரமாரியாக தாக்கினர். இதனால் அவர் அந்த பெண்ணை அங்கேயே விட்டு விட்டு ஓடி விட்டார்.
பின்னர் அந்த கும்பல் இளம்பெண்ணை அங்கிருந்து கடத்தி வேறு ஒரு இடத்திற்கு சென்றனர். அங்கு இளம்பெண்ணை சரமாரியாக தாக்கி 7 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றும் அந்த பெண்ணால் முடியவில்லை. அதிகாலை வரை இந்த கொடுமை நிகழ்ந்தது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது.
இதனால் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து மானாமதுரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டனர். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.
போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் மானாமதுரை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 7 பேர் கும்பல் மதுபோதையில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக முத்துக்குமார் என்பவரை விசாரிக்க சென்றனர். அப்போது அவரை அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். இருப்பினும் போலீசார் அவரை துரத்தி சென்றனர். தொடர்ந்து முத்துக்குமார் போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்றார்.
இதையடுத்து போலீசார் துப்பாக்கியால் முத்துக்குமாரின் வலது காலை நோக்கி சுட்டனர். இதில் காலில் குண்டு பாய்ந்து அவர் கீழே விழுந்தார். தொடர்ந்து அவரை பிடித்த போலீசார் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு போலீஸ் பாதுகாப்பில் முத்துக்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முத்துக்குமாரை தவிர இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் மானாமதுரை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- சசிகுமார் மாணவிகள் விடுதியை அனுமதி இல்லாமல் நடத்தி வந்தது தெரிய வந்துள்ளது.
- கண்காணிப்பு கேமரா உள்ள அறை பூட்டப்பட்டுள்ளது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் ஏலூரில் தனியார் மாணவிகள் தங்கும் விடுதி உள்ளது. எர்ரகுண்ட பள்ளியை சேர்ந்த சசிகுமார் (வயது 52) என்பவர் இந்த விடுதியை நிர்வகித்து வருகிறார். இவருடைய 2-வது மனைவி பனி ஸ்ரீ விடுதி வாடன் ஆகவும் மருமகள் பாதுகாவலராகவும் உள்ளனர்.
இந்த விடுதியில் 3-ம் வகுப்பு முதல் கல்லூரி வரை படிக்கும் 45 மாணவிகள் தங்கி இருந்தனர். சசிகுமார் போட்டோ ஸ்டூடியோ வைத்துள்ளார்.
அவ்வப்போது இரவில் விடுதிக்கு வரும் அவர் மாணவிகள் அறைகள் அருகே நின்று புகைபிடித்தபடி பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
இதை மாணவிகள் வெளியே சொல்லாமல் அச்சத்தில் இருந்தனர். கடந்த 15-ந் தேதி அங்குள்ள 3 சிறுமிகளிடம் உங்களை அழகாக போட்டோ எடுக்கிறேன் என்னுடன் வாருங்கள் என வற்புறுத்தி சசிகுமார் காரில் அழைத்துச் சென்றார்.
ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்று அங்கு சிறுமிகளின் கை, கால்களை கட்டி போட்டு விடிய விடிய பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
மறுநாள் காலையில் அந்த சிறுமிகளை விடுதியில் கொண்டு விட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவிகள் நாட்களாக கடும் மன உளைச்சலுடன் இருந்தனர். இது தொடர்பாக 2-வது நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் ஏலூர் டி.எஸ்.பி. சரவணன் குமார் மற்றும் போலீசார் தங்கும் விடுதிக்கு சென்று ஆய்வு செய்து விசாரணையை தொடங்கினர்.
மாணவிகளை தனித்தனியாக அழைத்து விசாரித்தனர். அவர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்து யார் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
விடுதியில் தங்கி இருந்த சிறுமிகள் முதல் கல்லூரி மாணவிகள் வரை பலரை காரில் அழைத்துச் சென்று கை கால்களை கட்டி சசிகுமார் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. அவருடைய மிரட்டலுக்கு பயந்து வெளியே சொல்லாமல் அவர்கள் இருந்துள்ளனர்.
இது தொடர்பாக போக்சோ பிரிவுகளின் கீழ் சசிகுமார் அவருடைய மனைவி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். அவர்கள் இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சசிகுமார் மாணவிகள் விடுதியை அனுமதி இல்லாமல் நடத்தி வந்தது தெரிய வந்துள்ளது. அவர் மீது அங்குள்ள 4 மாணவிகள் தனித்தனியாக புகார் அளித்தனர்.
கடந்த 4 மாதங்களில் மொத்தம் 28 மாணவிகளை கை, கால்களை கட்டி பலாத்காரம் செய்துள்ளார். அங்குள்ள கண்காணிப்பு கேமரா உள்ள அறை பூட்டப்பட்டுள்ளது. அதனை திறந்து கேமரா காட்சிகளை ஆய்வு செய்தால் மேலும் பல தகவல்கள் வெளியே வரும் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.
- தனக்கு நேர்ந்த கொடுமையை மூதாட்டி கிராம மக்களிடம் தெரிவித்தார்.
- ஆத்திரமடைந்த கிராம மக்கள் வெங்கடாபுரம் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர்.
தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டம் வெங்கடாபூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார்.
கிராமத்தில் மைனர் போல சுற்றித்திரிந்த இவர் அந்த பகுதியைச் சேர்ந்த பெண்களிடம் தவறாக நடந்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு அந்த கிராமத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் வீட்டிற்கு வெளியே அமர்திருந்தார்.
அங்கு வந்த சிவக்குமார் மூதாட்டி தனிமையில் வசித்து வந்ததை தெரிந்து கொண்டார். இதைத் தொடர்ந்து திடீரென மூதாட்டியை வீட்டிற்குள் இழுத்துச் சென்று அறை கதவை பூட்டினார்.
மூதாட்டி என்று கூட பார்க்காமல் இரவு முழுவதும் அறையில் அடைத்து வைத்து மூதாட்டியை பலாத்காரம் செய்தார்.
காலையில் தனக்கு நேர்ந்த கொடுமையை மூதாட்டி கிராம மக்களிடம் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வெங்கடாபுரம் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். போலீஸ் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கிராமத்தில் உள்ள 6 பெண்களை சிவக்குமார் ஏற்கனவே பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தற்போது மூதாட்டி என்று கூட பார்க்காமல் வீட்டில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்துள்ளார்.
இப்படியே விட்டால் இன்னும் பல கொடுமைகளை செய்வார். அவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.