search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆந்திராவில் 77 பெண்கள் பலாத்காரம்:  மன்னிப்பு கேளுங்கள் என ஜெகன்மோகன் ரெட்டி ஆவேசம்
    X

    ஆந்திராவில் 77 பெண்கள் பலாத்காரம்: "மன்னிப்பு கேளுங்கள்" என ஜெகன்மோகன் ரெட்டி ஆவேசம்

    • பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் நிதி உதவி வழங்க வேண்டும்.
    • அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர்கள் பொறுப்பேற்க வேண்டும்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் குண்டூர் மற்றும் கடப்பா மாவட்டங்களில் 2 இளம் பெண்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். அவர்களின் குடும்பத்தினரை ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    அப்போது அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

    ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்த 4½ மாதங்களுக்குள் 77 பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். 7 பெண் கொலைகள் மற்றும் 5 இளம் பெண்கள் தற்கொலைகள் செய்துள்ளனர். குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையில் அரசாங்கம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இது போன்ற கேடுகெட்ட செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு ஆளுங்கட்சி கேடயமாக விளங்குகிறது.

    பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் நிதி உதவி வழங்க வேண்டும். எங்களுடைய கட்சி சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நீதி வழங்கப்படும்.


    சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வந்த பிறகு ஆந்திராவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், கொலைகள் மற்றும் தற்கொலைகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

    இது மாநிலத்திற்கு நல்லதல்ல. சில சம்பவங்களில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க தயங்குவது அதிகாரத்தில் இருப்பவர்கள் எந்த தவறு செய்தாலும் மறைக்கப்படலாம் என்ற ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கி வருகிறது.

    எங்களுடைய ஆட்சியில் திஷா செயலி மூலம் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்தோம். இதன் மூலம் 1.56 கோடி அழைப்புகள் வரப்பட்டு 31 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் காப்பாற்றப்பட்டனர். இதற்காக 19 தேசிய விருதுகளும் கிடைத்தது.

    தற்போது காவல்துறை சிறந்து விளங்க முடியவில்லை. அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர்கள் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இதுபோன்ற குற்றங்கள் மீண்டும் நடக்காது என்று உறுதி அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×