என் மலர்
நீங்கள் தேடியது "மாற்றுத்திறனாளிகள்"
- கூட்ட நெரிசலின்றி பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்கிறார்கள்.
- குழந்தைகள் பெற்றோரில் ஒருவரை அழைத்துச்சென்று சாமி தரிசனம் செய்யலாம்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக கடந்த 15-ந்தேதி மாலை திறக்கப் பட்டது. மறுநாள் (16-ந்தேதி) மண்டல பூஜை தொடங்கி நடந்து வரும் நிலையில், தினமும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் சபரி மலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்வதற்காக சபரி மலையில் இந்த ஆண்டு பல்வேறு புதிய நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இதன் காரணமாக, மண்டல பூஜை தொடங்கியதில் இருந்தே பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செயது வருகின்றனர்.
வாரத்தின் இறுதி நாட்க ளான சனி மற்றும் ஞாயிறு தினங்களில் மட்டும் கூட்டம் அதிகமாக இருக்கிறது. மற்ற நாட்களில் அதிகாலை நடை திறக்கப்படும் நேரத்தில் மட்டும் சில மணி நேரம் பக்தர்கள் கூட்டம் இருக்கிறது. மற்ற நேரங்களில் கூட்ட நெரிசலின்றி பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்கிறார்கள்.
இந்தநிலையில் சபரிமலைக்கு வரும் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சாமி தரிசனத்துக்கு வரிசையில் காத்து நிற்பதை தவிர்க்கும் விதமாக, அவர்களுக்கு சிறப்பு வாயில் அமைக்கப்பட்டு இருக்கிறது.
அவர்கள் பதினெட்டாம்படி ஏறிய பிறகு சன்னதிக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள வாயில் வழியாக முதல் வரிசையை அடைந்து சாமி தரிசனம் செய்யலாம்.
குழந்தைகள் தங்களின் பெற்றோரில் ஒருவரை தங்களுடன் இந்த வழியில் அழைத்துச்சென்று சாமி தரிசனம் செய்யலாம். இந்த சிறப்பு வாயிலை பயன்படுத்தி இன்று ஏராளமான பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சாமி தரிசனம் செய்தார்கள்.
- மகாவிஷ்ணுவை போலீசார் விமான நிலையத்தில் வைத்தே கைது செய்தனர்.
- அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் சைதாப்பேட்டை மற்றும் அசோக் நகரில் உள்ள அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரம்பொருள் பவுண்டேஷன் அமைப்பைச் சேர்ந்த மகாவிஷ்ணு ஊக்கப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்துவதாகக் கூறி உரையாற்றினார்.
கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டு இருக்கிறது என்று மாணவர்கள் மத்தியில் அவர் பேசினார். மாணவிகள் அழகாக இல்லாததற்கும், மாற்றுத் திறனாளிகள், ஏழைகள் ஆகியோரது நிலைக்கும் முன் ஜென்ம பாவம் தான் காரணம் என்று மகாவிஷ்ணு பேசியிருந்தார்.
இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி அனைத்து தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவை போலீசார் விமான நிலையத்தில் வைத்தே கைது செய்தனர். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மகாவிஷ்ணுவை வருகிற 20 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் இப்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அரசுப் பள்ளியில் மூடநம்பிக்கை பரப்பி மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறாக பேசிய மகா விஷ்ணுவின் வீடியோ, அவரது பரம்பொருள் அறக்கட்டளை யூடியூப் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
- புதிய தாழ்தள பஸ்களில் மாற்றுத் திறனாளிகள் பயணிக்க வசதி
- டிரைவர்-கண்டக்டர்களுக்கு மாநகர போக்குவரத்து கழகம் அறிவுரை
சென்னை:
சென்னையில் ஓடும் புதிய தாழ்தள பஸ்களில் மாற்றுத் திறனாளிகள் சக்கர நாற்காலியுடன் சென்று பயணம் செய்யும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மாற்றுத் திறனாளிகளை ஏற்றி இறக்கு வதற்கு டிரைவர்-கண்டக்டர்களுக்கு மாநகர போக்குவரத்து கழகம் அறிவுரைகளை வழங்கி உள்ளது.
மாற்றுத் திறனாளிகள் சக்கர நாற்காலியுடன் பயணிக்க முற்படும் போது, சக்கர நாற்காலிகளை ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் உள்ள சாய்தளத்தை உபயோகப்படுத்தி அவர்கள் ஏறு வதற்கு உதவி செய்ய வேண்டும்.
பயணம் செய்யும் போது அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட பகுதியில் சக்கர நாற்காலிகளை பஸ்சில் அமைக்கப்பட்ட கைப்பிடியுடன் 'லாக்' செய்ய கண்டக்டர்கள் உதவ வேண்டும்.
அதேபோல் மாற்றுத் திறனாளிகள் இறங்கும் போது சாய்தள படிக்கட்டை இயக்கி சக்கர நாற்காலியுடன் பஸ்சில் இருந்து பாதுகாப்பாக இறங்க உதவ வேண்டும். இதில் எவ்வித புகாரும் வராத வகையில் டிரைவர்-கண்டக்டர்கள் நடந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஓட்டுநர், நடத்துனர்களுக்கு போக்குவரத்துதுறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
- ஸ்டிக்கர்கள் சரியான முறையில் ஒட்டப்பட்டு, அவர்கள் அமர்ந்து பயணம் செய்ய எளிதாக்க வேண்டும்.
போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
• மாற்றத்திறனாளிகள் பேருந்துகளில் ஏறும் பொழுதும் இறங்கும் பொழுதும் தேவைப்பட்டால் மனிதாபிமான முறையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
• மாற்றுத்திறனாளிகளை பேருந்தில் கண்ணியத்துடன் நடத்த வேண்டும், மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கக் கூடாது.
• மாற்றுத்திறனாளிகள் அமரும் இருக்கைகளுக்கு மேல் உள்ள ஸ்டிக்கர்கள் சரியான முறையில் ஒட்டப்பட்டு, அவர்கள் அமர்ந்து பயணம் செய்ய எளிதாக்க வேண்டும்.
• ஸ்டிக்கர் கிழிந்த நிலையிலோ, மங்கிய நிலையிலோ இருந்தால் புதிய ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டும்.
• மாற்றுத்திறனாளிகளுக்கான இருக்கையில் தேவை நேரும் போது அமர்ந்து பயணிக்க ஏற்பாடு செய்து தர வேண்டும்.
எந்தவித புகார்களுக்கும் இடமளிக்காமல், தக்க மேல் நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து மண்டல பொது மேலாளர்களுக்கும் ஓட்டுநர், நடத்துனர்களுக்கு போக்குவரத்து துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
- ஒவ்வொரு முறையும் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டு நகருக்கு வெளியே கொண்டு போய் போலீசார் விட்டாலும் மீண்டும் வந்து மறியலில் ஈடுபடுகிறார்கள்.
- பூந்தமல்லி சாலை சிக்னல் போராட்ட களமாக மாறியதால் உடனடியாக அங்கு போலீசார் விரைந்து வந்தனர்.
சென்னை:
பார்வையற்ற பட்டதாரிகள் சங்கத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் கடந்த 12-ந் தேதி முதல் சென்னையில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பார்வையற்ற பட்டதாரிகளை நியமன தேர்வு இல்லாமல் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஒவ்வொரு முறையும் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டு நகருக்கு வெளியே கொண்டு போய் போலீசார் விட்டாலும் மீண்டும் வந்து மறியலில் ஈடுபடுகிறார்கள். கோடம்பாக்கம் பாலத்தில் நேற்று காலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
இந்த நிலையில் இன்று மீண்டும் போராட்ட களத்தை மாற்றினர். காலை 10 மணியளவில் வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் அதாவது பூந்தமல்லி சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலையில் படுத்து கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை நகரின் முக்கிய சாலையில் நடந்த போராட்டத்தால் போலீசார் பரபரப்பு அடைந்தனர். பூந்தமல்லி சாலை சிக்னல் போராட்ட களமாக மாறியதால் உடனடியாக அங்கு போலீசார் விரைந்து வந்தனர்.
அவர்களிடம் சமாதானமாக பேசி போராட்டத்தை கைவிடுமாறு கேட்டனர். ஆனால் அவர்கள் அதனை ஏற்க மறுத்து மறியலில் ஈடுபட்டதால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அலாக்காக தூக்கி வேனில் ஏற்றினர். பெண்களை மகளிர் போலீசார் ஒன்று சேர்ந்து தூக்கி சென்றனர். இதனால் 45 நிமிடங்கள் வரை பூந்தமல்லி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் புதிய வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்துகளின் பயன்பாட்டினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- பேருந்தின் முதல் பயணமாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சிறப்பு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறும்போது பெரிய புன்னகைகள் பூக்கின்றன!
மாற்றுத் திறனாளி மாணவர்களைத் திரையரங்கம் - மெட்ரோ ரெயில் பயணம் - விமானப் பயணம் அழைத்துச் சென்றோம்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் வாங்கப்பட்ட புதிய வால்வோ பேருந்துகளில் முதல் பயணம் அவர்களுக்கான மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றேன்.
சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறும்போது பெரிய புன்னகைகள் பூக்கின்றன!
— M.K.Stalin (@mkstalin) November 29, 2023
மாற்றுத் திறனாளி மாணவர்களைத் திரையரங்கம் - மெட்ரோ இரயில் பயணம் - விமானப் பயணம் அழைத்துச் சென்றோம்.@ttdcofficial சார்பில் வாங்கப்பட்ட புதிய வால்வோ பேருந்துகளில் முதல் பயணம் அவர்களுக்கான மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்… pic.twitter.com/jYdPjc7ScW
இன்று துவக்கி வைத்த இந்தப் பயணத்தில்தான் எத்தனை புன்னகைகள்!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் புதிய வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்துகளின் பயன்பாட்டினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பேருந்தின் முதல் பயணமாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சிறப்பு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
- போட்டிகளை கலெக்டர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
- நிகழ்ச்சியில் அனைத்து வகையான மாற்றுத்திறனாளி சிறப்புப்பள்ளிகள், சிறப்பாசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா தொடர்பான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் தென்காசி இ.சிஈ.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, விளையாட்டு மைதானத்தில் நடந்தது. போட்டிகளை கலெக்டர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அனைத்து வகையான மாற்றுத்திறனாளி சிறப்புப்பள்ளிகள், சிறப்பாசிரியர்கள், மாவட்ட விளையாட்டு அலுவலர், உடற்பயிற்சி ஆசிரியர்கள், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ஜெய பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- மாற்றுத்தி றனாளிகளுக்கு கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
- எந்த ஒரு மாற்றுத்திறனா ளியும் விடுபடாமல் முழு மையாக கணக்கெடுப்பை பதிவு செய்ய வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டஅரங்கில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவுகள் பதிவு கணக்கெடுப்பாளர்களுக்கான பயிற்சி நடந்தது. இந்த பயிற்சியை கலெக்டர் சரயு தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
எண்ணற்ற திட்டங்கள்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் சிறப்பு கவனம் செலுத்தி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி, எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன் அடிப்படையில், மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமை சட்ட திட்டத்தின் படி, மாற்றுத்திறனாளிகளுக்கு கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
ஏற்கனவே, மாநில அளவில் கணக்கெடுப்பாளர்களுக்கான பயிற்சி முடிக்கப்பட்டு, நமது கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மாவட்ட அளவில் மகளிர் மேம் பாட்டு திட்ட களப்பணியாளர்களை கொண்டு மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
கணக்கெடுப்பு பணி
கணக்கெடுப்பிற்கும் செல்லும் அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் குறித்து அனைத்து தகவல்கள், மாற்றுத்திறன் தன்மைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் பெற வேண்டிய ஆவணங்கள் போன்ற விவரங்கள் குறித்து பயிற்சி வழங்கப்பட உள்ளது. களப்பணிக்கு செல்லும் அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகளிடம் கனிவாகவும், மென்மையாகவும், அவர்களின் இல்லம் தேடி சென்று தரவுகளை பெற வேண்டும்.
எந்த ஒரு மாற்றுத்திறனாளியும் விடுபடாமல் முழுமையாக கணக்கெடுப்பை பதிவு செய்ய வேண்டும். இந்த கணக்கெடுப்பின் மூலமே அரசின் மூலம் வழங்கப்பட உள்ள அனைத்து நலத்திட்டங்கள் முழுமையாக சென்றடைய இக்கணக்கெடுப்பு பயனுள்ளதாக இருப்பதால் இதில் அதிக கவனம் செலுத்தி இப்பணிகளை குறித்த காலத்திற்குள் முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த பயிற்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் முருகேசன், மகளிர் உதவி திட்ட அலுவலர்கள் சந்தோஷ், பழனி, மாநில திட்ட மேலாளர் அருளப்பா, மாவட்ட திட்ட அலுவலர் ஸ்டான்லி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் உரிமைத்தொகை மறுக்காதே என்பன உள்பட பல்வேறு கோஷங்கள் ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டன
- கோட்டாட்சியர் அலுவலகங்களில் மனு கொடுத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது
நாகர்கோவில் :
மாற்றுத்திறனாளி குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கேட்டு மாநிலம் முழுவதும் இன்று கோட்டாட்சியர் அலுவலகங்களில் மனு கொடுத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் குமரி மாவட்ட குழு சார்பில், நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார்.
மாற்றுத்திறனாளியை பராமரிக்கும் குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் உரிமைத்தொகை மறுக்காதே என்பன உள்பட பல்வேறு கோஷங்கள் ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டன. மாநில-மாவட்ட நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்றனர்.
- கலெக்டர் சரயு வழங்கினார்.
- பொதுமக்கள் 344 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சரயு தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டததில் பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, விலையில்லா தையல் எந்திரம், சலவை பெட்டி, முதியோர் உதவி தொகை, சாலை வசதி, மின்சார வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 344 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்கள்.
மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் சரயு, அந்த மனுக்களின் மீது துறை சார்ந்த அலுவலர்கள் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.7 ஆயிரத்து 900 வீதம் ரூ.23 ஆயிரத்து 700 மதிப்பிலான சக்கர நாற்காலிகளை கலெக்டர் சரயு வழங்கினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் பன்னீர்செல்வம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன், மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் ரமேஷ்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- உசிலம்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
- இந்த முகாமில் 75 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இந்த முகாமில் 75 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். அதில் 17 பேருக்கு தேசிய அடையாள அட்டை, நலவாரிய பதிவு செய்து பெறப்பட்டது. மேலும் 10 பேருக்கு தனித்துவ அடையாள அட்டைகளுக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் ெரயில்வே, பஸ் பயண சலுகைக்கான மருத்துவ சான்றுகள் வழங்கப்பட்டது.
முகாமில் மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுவாமிநாதன் மாவட்ட, கல்வி அலுவலர் கணேசன், உதவி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கார்மேகம், சரவண முருகன், புள்ளியியல் ஆய்வாளர் பால்சாமி, வட்டார கல்வி அலுவலர்கள் சுப்புராஜ், திலகவதி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்த்தி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஜெயந்தி, வளமைய சிறப்பு பயிற்றுநர் மகேஸ்வரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- கடந்த 4 மாதங்களாக 100 நாள் வேலைகளுக்கான கூலி பாக்கி வழங்கப்படவில்லை.
- 100 நாள் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் இழப்பீடு வழங்க வேண்டும்.
பாபநாசம்:
பாபநாசம் ஒன்றியம் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய பொறுப்பாளர் ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாபநாசம் ஒன்றியத்தில் ஊராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த நான்கு மாதங்களாக 100 நாள் வேலைகளுக்கான கூலி பாக்கி வழங்கப்படவில்லை, 100 நாள் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் இழப்பீடு தொகையாக 5 தவீதம் கூடுதலாக சேர்த்துழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் தஞ்சை மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாநிலக்குழு உறுப்பினர் அன்புமணி, செயற்குழு உறுப்பினர்கள் நாகராஜ், மனோகரன் , வினோத், ஜெயந்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாபநாசம் ஒன்றிய செயலாளர் முரளிதரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.