என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மாற்றுத்திறனாளிகள் குறித்த கணக்கெடுப்பு பணியை முழுமையாக பதிவு செய்ய அறிவுரை
- மாற்றுத்தி றனாளிகளுக்கு கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
- எந்த ஒரு மாற்றுத்திறனா ளியும் விடுபடாமல் முழு மையாக கணக்கெடுப்பை பதிவு செய்ய வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டஅரங்கில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவுகள் பதிவு கணக்கெடுப்பாளர்களுக்கான பயிற்சி நடந்தது. இந்த பயிற்சியை கலெக்டர் சரயு தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
எண்ணற்ற திட்டங்கள்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் சிறப்பு கவனம் செலுத்தி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி, எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன் அடிப்படையில், மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமை சட்ட திட்டத்தின் படி, மாற்றுத்திறனாளிகளுக்கு கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
ஏற்கனவே, மாநில அளவில் கணக்கெடுப்பாளர்களுக்கான பயிற்சி முடிக்கப்பட்டு, நமது கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மாவட்ட அளவில் மகளிர் மேம் பாட்டு திட்ட களப்பணியாளர்களை கொண்டு மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
கணக்கெடுப்பு பணி
கணக்கெடுப்பிற்கும் செல்லும் அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் குறித்து அனைத்து தகவல்கள், மாற்றுத்திறன் தன்மைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் பெற வேண்டிய ஆவணங்கள் போன்ற விவரங்கள் குறித்து பயிற்சி வழங்கப்பட உள்ளது. களப்பணிக்கு செல்லும் அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகளிடம் கனிவாகவும், மென்மையாகவும், அவர்களின் இல்லம் தேடி சென்று தரவுகளை பெற வேண்டும்.
எந்த ஒரு மாற்றுத்திறனாளியும் விடுபடாமல் முழுமையாக கணக்கெடுப்பை பதிவு செய்ய வேண்டும். இந்த கணக்கெடுப்பின் மூலமே அரசின் மூலம் வழங்கப்பட உள்ள அனைத்து நலத்திட்டங்கள் முழுமையாக சென்றடைய இக்கணக்கெடுப்பு பயனுள்ளதாக இருப்பதால் இதில் அதிக கவனம் செலுத்தி இப்பணிகளை குறித்த காலத்திற்குள் முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த பயிற்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் முருகேசன், மகளிர் உதவி திட்ட அலுவலர்கள் சந்தோஷ், பழனி, மாநில திட்ட மேலாளர் அருளப்பா, மாவட்ட திட்ட அலுவலர் ஸ்டான்லி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்