என் மலர்
நீங்கள் தேடியது "முகாம்"
- ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
- எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், முகாம்களில் இருந்து மக்களை திமுக அரசு வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மண்டபங்கள் , முகாம்களாக மாற்றப்பட்டு, வீடுகளில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ள மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், முகூர்த்தம் போன்ற பல்வேறு காரணங்களைக் கூறி மக்களை வலுக்கட்டாயமாக திமுக அரசு முகாமிலிருந்து வெளியேற்றி வருவதாக செய்திகள் வருகின்றது.
ஏற்கனவே புயலின் தாக்கத்தால் மனதைப் பிழியும் சொல்லொண்ணா துயரில் உள்ள மக்களை, உணவு, குடிநீர் ஆகியவற்றின் தட்டுப்பாட்டால் நடுரோட்டில் இறங்கி போராடும் நிலைக்கு தள்ளியிருக்கிறது இந்த விடியா திமுக அரசு.
வயிற்றுபசிக்காகவும், நிவாரணத்திற்காகவும் தங்களை நடுரோட்டிற்கு வந்து போராட வைத்த இந்த விடியா திமுக அரசை மக்கள் மன்னிக்கவோ, மறக்கவோ மாட்டார்கள்.
பேரிடர் காலங்களில் மக்களுக்கான உரிய குடிநீர், உணவு, உறைவிடம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளைக் கூட ஒழுங்காக நிறைவேற்ற முடியாத நிர்வாகத் திறனற்ற திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
இயல்புநிலை திரும்பும் வரை மக்களுக்கான அனைத்து தேவைகளையும் தடையின்றி கிடைத்திட உறுதி செய்யுமாறு மு.க.ஸ்டாலினி-ன் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கடற்கரை பகுதியான அல்- மவாசி பகுதியில் பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ள கூடாரங்களின்மீது நேற்று இரவு இஸ்ரேல் குண்டு மழை பொழிந்துள்ளது.
- சுமார் 2000 பவுண்டுகள் [சுமார் 1000 கிலோ] எடையிலான 10,000 ஆயுதங்களையும், மிசைல்கலையும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு அனுப்பிவைத்துள்ளது
பாலஸ்தீன நகரங்களின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் ஓய்ந்தபாடலில்லை. இந்த போரில் இதுவரை 37,718 பேர் உயிரிழந்துள்ள நிலையில் காசா நகரம் முற்றிலும் உருக்குலைந்துள்ளது. பாலஸ்தீன மக்கள் அதிகம் வாழும் மற்றொரு நகரமான ரஃபா மீது இஸ்ரேல் தற்போது குறிவைத்து தாக்குதல்களை நடத்திவருகிறது. மக்கள் தஞ்சமடைந்துள்ள முகாம்கள், மருத்துவமனைகள் என வகைதொகை இன்றி கண்மூடித்தனமாக இஸ்ரேல் நடத்தி வரும் இந்த தாக்குதல்களுக்கு உலக நாடுகள் கண்டம் தெரிவித்து வருகின்றன.
இந்த போரை முடிவுக்கு கொண்டுவருவது எட்டாக்கனியாக இருந்து வரும் நிலையில் ரஃபா நகரில் உள்ள கடற்கரை பகுதியான அல்- மவாசி பகுதியில் பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ள தற்காலிக கூடாரங்களின் மீது நேற்று இரவு இஸ்ரேல் குண்டு மழை பொழிந்துள்ளது. இந்த தாக்குதலில் 11 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் தாக்குதலுக்குள்ளான கூடாரங்களில் இருந்த 40 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலின் பீரங்கிகள் அப்பகுதியில் முன்னேறிவந்துள்ள நிலையில் அங்குள்ள மக்களிடம் பயத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று கூறபடுகிறது. இதற்கிடையில் போர் தொடங்கிய கடந்த அக்டோபர் மாதம் முதல் இன்றுவரை அதிக சேதத்தை ஏற்படுத்தும் சுமார் 2000 பவுண்டுகள் [சுமார் 1000 கிலோ] எடையிலான 10,000 ஆயுதங்களையும், மிசைல்கலையும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு அனுப்பிவைத்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
- பாலஸ்தீனத்தில் அதிக மக்கள் வாழும் ரஃபா நகரில் உள்ள முகாம் மீது கடந்த மே 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டனர்.
- உலக அளவில் "எல்லா கண்களும் ரஃபா மீதுதான் உள்ளன" " Al eyes on Rafa" என்ற ஹேஸ்டேக் டிரெண்டாகி வருகிறது.
பாலஸ்தீனத்தில் அதிக மக்கள் வாழும் ரஃபா நகரில் உள்ள முகாம் மீது கடந்த மே 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டனர். ரஃபா நகர் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்று சர்வதேச நீதிமன்றம் எச்சரித்திருந்தும் இஸ்ரேல் இந்த தாக்குதலை நிகழ்த்தியுள்ளதற்கு சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த தாக்குதல் துரதிஸ்டவசமான தவறு என்று தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு கண்டணங்கள் வலுத்து வரும் நிலையில் உலக அளவில் "எல்லா கண்களும் ரஃபா மீதுதான் உள்ளன" " Al eyes on Rafa" என்ற ஹேஸ்டேக் டிரெண்டாகி வருகிறது. உலகம் முழுவதும் உள்ள சமூக அக்கறை கொண்ட மனிதர்கள் ரஃபா மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
மனிதாபிமான உதவிகள் உள்ளே வரமுடியாத வகையில் ரஃபா எல்லை துண்டிக்கப்பட்டுள்ளதால் இந்த தாக்குதலில் படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எரிந்து கருகிய நிலையில் கிடக்கும் தங்களது குழந்தைகளின் உடல்களை கையில் சுமந்தபடி தாய்மார்கள் நிலைகுலைந்து நிற்கின்றனர். திருப்பிய திசையெல்லாம் குழந்தைகளின் மரண ஓலமே கேட்கிறது.
பல்ஸாதீனம் மீது இஸ்ரேல் நடந்து வரும் தாக்குதலில் இதுவரை 36 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர். சர்வதேச சமூகம் இன்னும் எத்தனை காலத்துக்கு இதையெல்லாம் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப்போகிறது என்பதே தற்போது அனைவரின் கேள்வியாகவும் உள்ளது.
- ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 10 தொகுதிகளும், 6 பாராளுமன்ற தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு உள்ளன.
- தெலுங்கு தேசம் கட்சி சார்பில் பா.ஜ.க கேட்ட தொகுதிகளை ஒதுக்க மறுப்பு தெரிவித்தனர்.
திருப்பதி:
ஆந்திராவில் தெலுங்கு தேசம் பா.ஜ.க மற்றும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.
ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 10 தொகுதிகளும், 6 பாராளுமன்ற தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு உள்ளன.
பா.ஜ.கவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள சட்டமன்ற தொகுதியான விஜயவாடா (மத்தி), மச்சிலிப்பட்டினம், குண்டூர் (மேற்கு), நெல்லூர், கதிரி, அரக்கு, மதனப்பள்ளி, ஸ்ரீகாளஹஸ்தி உள்ளிட்ட தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என தெலுங்கு தேசம் கட்சியிடம் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் பா.ஜ.க கேட்ட தொகுதிகளை ஒதுக்க மறுப்பு தெரிவித்தனர். இதனால் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கல் நீடிக்கிறது.
ஆந்திர மாநில பா.ஜ.க. தலைவர் புரந்தரேஷ்வரி, மாநில அமைப்பு செயலாளர் மதுகர் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் நிர்வாகிகள் டெல்லியில் முகாமிட்டு உள்ளனர்.
பா.ஜ.க. மாநில தலைமை கேட்ட தொகுதிகளை ஒதுக்க சந்திரபாபு நாயுடுவிடம் வலியுறுத்த வேண்டுமென பா.ஜ.க. தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனால் ஆந்திராவில் உள்ள பா.ஜ.க. நிர்வாகிகள் தொண்டர்கள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்காமல் சோர்வடைந்து உள்ளனர்.
- வாக்காளர்கள் அந்தந்த முகாம்களில் இருந்து வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.
- அமைதியாக தேர்தலில் பங்கேற்க வேண்டும்.
வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் உள்ள முகாம்களில் வசிக்கும் மக்கள், வரும் மக்களவை தேர்தலில் முகாம்களில் இருந்து வாக்களிக்க அனுமதிக்கப்படுவர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு குறித்த செய்தியாளர் சந்திப்பின் போது மணிப்பூர் குறித்த கேள்விக்கு பதிலளித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், "நாங்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்வோம்" என்றார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
நாங்கள் ஒரு திட்டத்தை வடிவமைத்துள்ளோம். அதை நாங்கள் அறிவித்துள்ளோம். முகாமில் உள்ள வாக்காளர்கள் முகாமில் இருந்து வாக்களிக்க அனுமதிக்கிறோம்.
ஜம்மு-காஷ்மீர் புலம்பெயர்ந்தோருக்கு ஒரு திட்டம் உள்ளது போல, மணிப்பூரில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
வாக்காளர்கள் அந்தந்த முகாம்களில் இருந்து வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். கீழ் தொகுதியில் இருந்து மேல் பகுதிக்கும், உயரத்திலிருந்து தாழ்ந்த பகுதிக்கும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.
வாக்காளர்களுக்கு எனது வேண்டுகோள் என்னவென்றால், வாக்குச்சீட்டின் மூலம் முடிவு அறிவோம். அமைதியாக தேர்தலில் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
- காவல்துறை தங்களை சுதந்திரமாக இருக்கவிடாமல் சித்ரவதை செய்வதாக அவ்வப்போது போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
- முன்பு அடைக்கப்பட்டு இருந்த வேலூர் சிறையை விட இந்த சிறப்பு முகாம் கொடுமையானதாக இருக்கிறது.
திருச்சி:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி பின்னர் கடந்த 2022 நவம்பர் 11-ந் தேதி உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், சாந்தன் ஆகியோர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் இலங்கை தமிழர்கள் என்பதால் இந்த சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டு இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்க ப்பட்டது.
இந்த நிலையில் இவர்கள் சிறப்பு முகாமில் காவல்துறை தங்களை சுதந்திரமாக இருக்கவிடாமல் சித்ரவதை செய்வதாக அவ்வப்போது போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தங்களை உடனடியாக சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்க வலியுறுத்தி, முருகன், ராபர்ட் பயஸ் ஆகியோர் கால வரையற்ற உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில்
'ராபர்ட் பயஸ் மயக்கமடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக' கடந்த 2 நாட்களுக்கு முன் அவரை காணச் சென்ற வழக்கறிஞர் புகழேந்தி குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில் முருகன் மனைவி எஸ். நளினி தமிழக அரசின் தலைமைச் செயலர், மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உருக்கமான ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
நானும் எனது கணவர் முருகனும் கடந்த 11-11-2022 அன்று உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டோம். அதன் பின்னர் எனது கணவரை அவர் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் திருச்சியில் உள்ள இலங்கை தமிழர்கள் சிறப்பு முகாமில் அடைத்துவிட்டனர்.
சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டது முதல் எனது கணவர் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகிறார்.
எனது கணவர் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர் என்று தெரிந்தும் இதுவரை அவரை இலங்கை தூதரகத்திற்கு அழைத்துச் சென்று பாஸ்போர்ட் விண்ணப்பிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சிறையில் இருந்து எனது கணவர் விடுதலை ஆனாலும் தற்போது காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் தான் உள்ளார். சிறப்பு முகாமிற்குள் எனது கணவர் நடைபயிற்சி கூட செய்ய அனுமதிப்பதில்லை.
எந்தவித விளையாட்டும் விளையாட அனுமதிப்பதில்லை. மேலும் எனது கணவர் மட்டும் மற்ற முகாம் வாசிகளை பார்க்கவோ, பேசவோ, முடியாத அளவில் தனியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவர் முன்பு அடைக்கப்பட்டு இருந்த வேலூர் சிறையை விட இந்த சிறப்பு முகாம் கொடுமையானதாக இருக்கிறது.
இந்த சிறப்பு முகாமில் முறையான உணவு மற்றும் மருத்துவ வசதி இல்லாததால் கடந்த சில நாட்களுக்கு முன் கிருஷ்ணமூர்த்தி என்பவர் சிறப்பு முகாமில் இறந்துவிட்டார்.
அவர் தனக்கு மாத்திரை வேண்டும் என்று கேட்ட போது உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கொடுக்கவில்லை. ஏற்கனவே இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சாந்தன் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு தற்போது சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகி எனது கணவர் உள்ளிட்ட பலர் இருக்கிறார்கள்.
எனது கணவரை கடந்த 5-ம் தேதி நான் முகாமில் சந்தித்தபோது அவர் உடல் மெலிந்து 15 கிலோ எடை குறைந்து காணப்பட்டார்.
எனது கணவர் இன்றுடன் 12 நாட்கள் உணவு உட்கொள்ளாத நிலையில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளார்.
மேலும் தற்போது எனது கணவர் சிறப்பு முகாமில் மயங்கிய நிலையில் உள்ளதாகவும் அவருக்கு முகாமில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படாததால் அவரின் உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படக்கூடும் என அஞ்சுகிறேன் எனவே இந்த கடிதத்தை கருணையுடன் பரிசீலனை செய்து எனது கணவர் உயிரை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ. மணிக்கண்ணன் விழாவிற்கான ஏற்பாடு செய்து வரவேற்று பேசினார். ஒன்றிய செயலாளரும், நகர மன்ற தலைவருமான வைத்தியநாதன், ஒன்றிய கழக மேற்கு செயலாளரும், உளுந்தூர்பேட்டை யூனியன் சேர்மன் ராஜவேல், முன்னாள் எம்.எல்.ஏ.வும், நகர மன்ற தலைவருமான திருநாவுக்கரசு, திருநாவலூர் யூனியன் சேர்மன் சாந்தி இளங்கோவன், மாவட்ட கவுன்சிலர் பிரியா பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் பங்கேற்றவர்களை பல்வேறு நிறுவனங்களில் இருந்து வந்தவர்கள் நேர்காணல் நடத்தி தேர்வு செய்தனர். இதில் 5716 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் 1143 பேர் வேலை வாய்ப்பு பெற்றனர். இவர்களுக்கு பணி நியமன ஆணையை மாவட்ட கலெக்டர் ஷ்ர்வன்குமார், எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன், மணிகண்ணன் ஆகியோர் சேர்ந்து வழங்கி பேசினார்கள்.
இதில் வேலை வாய்ப்பு துறையின் மண்டல இணை இயக்குனர் லதா, கள்ளக்குறிச்சி மாவட்ட அதிகாரி முரளிதரன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் டேனியல் ராஜ், பள்ளி பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் சிவராஜ், துணைத்தலைவர் அம்பிகாபதி, அறங்காவலர் குழு தலைவர் செல்லையா, நகர மன்ற முன்னாள் ஒன்றிய செயலாளர் தொல்காப்பியன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் சிவக்குமார், உறுப்பினர்கள் கலா, மதியழகன், குமரவேல், செல்வகுமார், ரமேஷ்பாபு, சந்திரகுமாரி, நிர்வாகிகள் ஐஸ்வர்யா, பாலாஜி, மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர் ஜெயக்குமார், மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- முகவரி மாற்றம் செய்ய விரும்பும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து விண்ணப்பம் அளித்தனர்.
- வாக்குச்சாவடி மையங்களை பாபநாசம் தாசில்தார் மணிகண்டன் ஆய்வு செய்தார்.
பாபநாசம்:
பாபநாசம் தாலுகாவில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
முகாமில் 18 வயது நிறைவடைந்து இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காமல் இருந்தவர்கள் பெயர் சேர்த்தனர்.
மேலும், இறந்தவ ர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது. தொடாந்து, முகவரி மாற்றம் செய்ய விரும்பும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து விண்ணப்பம் அளித்தனர்.
அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் தேர்தல் அதிகாரிகளின் முன்னிலையில் இந்த பணிகள் நடைபெற்றது.
பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் வாக்குச்சாவடி நியமன அலுவலர் கார்த்திகேயன், வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் கலியமூர்த்தி, கவிதா, ரவிச்சந்திரன் ராவ், பள்ளி தலைமை ஆசிரியர் மணியரசன், பேரூராட்சி கவுன்சிலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வாக்குச்சாவடி மையங்களை பாபநாசம் தாசில்தார் மணிகண்டன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது தேர்தல் துணை தாசில்தார் சுரேஷ், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உடன் இருந்தனர்.
- இதில் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
- முகாமில் 30 பேருக்கு இலவசமாக கண்ணாடி வழங்கப்பட்டது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை சென்ட்ரல் லயன்ஸ் சங்கம், மற்றும் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவ மனையுடன் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நகராட்சி மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இதில் 300 நபர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.
77 நபர்களுக்கு கண் குறைபாடு கண்டறிப்பட்டு மேல் சிகிச்சசைக்காக பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 30 நபர்களுக்கு இலவச கண்ணாடி வழங்கப்பட்டது.
கண் சிகிச்சை முகாமினை மயிலாடுதுறை சட்ட மன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ. ராஜகுமார் முகாமை துவக்கி வைத்தார். மயிலாடுதுறை சென்ட்ரல் லயன் சங்க தலைவர் சுகுமாரன் முன்னிலை வகித்தனர்.
மயிலாடுதுறை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் பரமசிவம், மருத்துவர் சந்தீப் தலைமையிலான மருத்துவ குழுக்கள் பரிசோதனை செய்தனர்.
இதில் சென்ட்ரல் லயன் சங்க செயலர். மோகன்ராஜ் மற்றும் பொருளாளர் லயன்ஸ் மகாவீன் சந்த் ஜெயின், குரு.ராகவேந்திரன், கலியமூர்த்தி, சென்ட்ரல் ஷைன் லயன்ஸ் சங்கம் தலைவர் வேல்விழி, செயலாளர் மகாலட்சுமி, மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டனர்.
- வாக்குச்சாவடிகளில் 2-வது நாளாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம் நடைபெற்றது.
- புகளூர் தாசில்தார் முருகன் பல்வேறு வாக்குச்சாவடிகளுக்கு சென்று ஆய்வு நடத்தி வாக்காளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
வேலாயுதம் பாளையம்
கரூர் மாவட்டம் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளான சேமங்கி அரசு தொடக்கப்பள்ளி, குளத்துப்பாளையம் அரசு தொடக்கப்பள்ளி, வேட்டமங்கலம் அரசு தொடக்கப்பள்ளி, குந்தாணி பாளையம் அரசு தொடக்கப்பள்ளி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் 2-வது நாளாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம் நடைபெற்றது.
முகாமில் பெயர் சேர்த்தல் ,பெயர் நீக்குதல், முகவரி மாற்றம்,திருத்தம் மற்றும் பல்வேறு திருத்தம் செய்தல் போன்றவை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த வாக்காளர்கள் படிவம் 6, வடிவம் 7, படிவம் 8 போன்றவற்றில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல் ,முகவரி மாற்றம் மற்றும் பல்வேறு திருத்தங்கள் தொடர்பான படிவங்களை பூர்த்தி செய்து அதனுடன் முகவரி, வயது போன்ற அடையாளத்திற்கான படிப்பு சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், ஆதார் ஆகிய நகல்கள் அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களிடம் வழங்கினர்.
சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்றது.புகளூர் தாசில்தார் முருகன் பல்வேறு வாக்குச்சாவடிகளுக்கு சென்று ஆய்வு நடத்தி வாக்காளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
- முகாமில் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
- சஞ்சீவி பெட்டகம் 3 கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி புறாக்கிராமம் அரசு தொடக்கப் பள்ளியில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் விஜயகுமார் அறிவுறுத்தலின்படி கலைஞரின் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தார்.வட்டார மருத்துவ அலுவலர் மணிசுந்தரம் முன்னிலை வகித்தார். முகாமில் இரத்தப் பரிசோதனை, ஈசிஜி பரிசோதனை,
ஸ்கேன்,பொது மருத்துவம்,கண் மருத்து வம்,பல் மருத்துவம்,சித்த மருத்துவம்,யோகா, பிசியோதெரபி, காது மூக்கு தொண்டை மருத்துவம், அறுவை சிகிச்சை,தோல் மருத்துவம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் கலந்துக் கொண்டனர். இதில் 1181 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
முகாமில் மாவட்ட நலக்கல்வியாளர் மணவா ளன்,வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கற்பகம்,ஊராட்சி துணைத் தலைவர் ஷோபா பாரதி மோகன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாள ர்கள், கட்டுமாவடி -பு றாக் கிராமம் ஜமாத் நிர்வாகிகள்,பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
முகாமில் சித்த மருத்துவம் சார்பில் சஞ்சீவி பெட்டகம் 3 கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்பட்டது.
- அரியலூரில் 596 வாக்கு சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நடைபெற்றது
- கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா முகாம்களில் ஆய்வு நடத்தினார்
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் உள்ள 2 சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பட்டியல் திருத்தம் முகாம் நேற்றும், இன்றும் நடைபெறுகிறது.திருமானூர் ஒன்றியம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வாரண வாசி அரசு உயர்நி லைப்பள்ளி, கீழப்பழுவூர் அழகப்பா சிமெண்ட் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாமினை மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இம்முகாமானது அரியலூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட 306 வாக்குச்சாவடி மையங்கள், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட 290 வாக்குச்சாவடி மையங்கள் என மொத்தம் 596 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறுகிறது.கலெக்டர் ஆய்வின் போது, அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், அரியலூர் வட்டாட்சியர் ஆனந்தவேல் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.