search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதல் மந்திரி"

    கோவா மாநில சட்டசபையில் இன்று பாஜக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது. #GoanewCM #ManoharParikkar #PramodSawant
    பனாஜி:

    கோவா முதல்-மந்திரியாக இருந்து வந்த மனோகர் பாரிக்கர் கடந்த 17-ந்தேதி மரணம் அடைந்தார். அதைத்தொடர்ந்து அங்கு முதல்- மந்திரி நாற்காலி யாருக்கு என்ற கேள்வி எழுந்தது.

    40 இடங்களை கொண்ட கோவா சட்டசபையில் 14 உறுப்பினர்களுடன் தனிப் பெரும் கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் ஆட்சி அமைக்க உரிமை கோரி கவர்னர் மிருதுளா சின்காவை சந்தித்து வலியுறுத்தினர்.

    ஆனால் பாரதீய ஜனதா கட்சிக்கு 12 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்; அதன் கூட்டணியில் உள்ள மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சி (எம்.ஜி.பி.), கோவா பார்வர்டு கட்சி (ஜி.எப்.பி.) ஆகியவற்றுக்கு தலா 3 உறுப்பினர்களும், சுயேச்சைகள் 3 பேரும் பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவு அளிக்கின்றனர்.



    இந்த நிலையில் கோவா சட்டசபை சபாநாயகராக இருந்து வந்த பிரமோத் சாவந்த் (வயது 46), புதிய முதல்-மந்திரியாக நேற்று முன்தினம் தேர்ந் தெடுக்கப்பட்டார். ஆயுர்வேத மருத்துவரான இவர், மறைந்த முதல்-மந்திரி மனோகர் பாரிக்கரின் தீவிர ஆதரவாளர் ஆவார்.

    பிரமோத் சாவந்த் ஆட்சி அமைக்க கவர்னர் மிருதுளா சின்கா அழைப்பு விடுத்தார்.

    அதைத் தொடர்ந்து பனாஜியில் உள்ள கவர்னர் மாளிகையில் நள்ளிரவில் நடந்த எளிய நிகழ்ச்சியில் புதிய முதல்-மந்திரி பிரமோத் சாவந்துக்கு கவர்னர் மிருதுளா சின்கா பதவிப்பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.

    அவருடன் சுதன் தாவ்லிகார், விஜய் சர்தேசாய், பாபு அஜ்காவோங்கர், ரோகன் காண்டே, கோவிந்த் கவுடே, வினோத பால்யகர், ஜெயேஷ் சால்காவோங்கர், மாவின் கோதின்ஹோ, விஷ்வஜித் ரானே, மிலிந்த் நாயக், நிலேஷ் கேப்ரால் ஆகியோர் கேபினட் மந்திரிகளாக பதவி ஏற்ற னர். மந்திரிகள் இலாகா அறிவிக்கப்படவில்லை.

    சுதன் தாவ்லிகார், விஜய் சர்தேசாய் ஆகிய 2 பேரும் துணை முதல்-மந்திரிகளாக செயல்படுவார்கள் என தகவல்கள் கூறுகின்றன.

    பதவி ஏற்பு விழாவில் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், மத்திய மந்திரியுமான நிதின் கட்காரி கலந்துகொண்டார்.

    கோவாவில் மீண்டும் பாரதீய ஜனதா கட்சி கூட்டணி ஆட்சி அமைக்க கவர்னர் மிருதுளா சின்கா வாய்ப்பு வழங்கியதை காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடி உள்ளது.

    இதையொட்டி மாநில காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் சுனில் காவாதாங்கர் விடுத்துள்ள அறிக்கையில், “தனிப்பெரும் கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சியை அரசு அமைக்க அழைக்காத கவர்னர் மிருதுளா சின்காவின் செயல் கண்டனத்துக்கு உரியது. ஆட்சி அமைக்க போதுமான எண்ணிக்கை இல்லாதபோதும், பாரதீய ஜனதா கட்சி குதிரைப்பேரம் நடத்த வழிவகுத்து விட்டார். கவர்னர் பாரதீய ஜனதா கட்சியின் ஏஜெண்டாக செயல்பட்டுள்ளார்” என சாடி உள்ளார்.

    இதற்கிடையே கோவா சட்டசபையில் முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் இன்று (புதன்கிழமை) நம்பிக்கை வாக்கு கோருகிறார். இதற்கான அழைப்பை கவர்னர் விடுத்துள்ளார். #GoanewCM #ManoharParikkar #PramodSawant
    ராஜஸ்தானில் பசுக்களை கடத்தியதாக கருதி வாலிபர் ஒருவரை வன்முறைக் கும்பல் அடித்துக் கொன்றது. இதற்கு மாநில முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா கடும் கண்டனம் தெரிவித்தார்.
    ஜெய்ப்பூர்:

    பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் ஒரு சிலர் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு அப்பாவி மக்களை கடுமையாக தாக்கி கொலை செய்யும் சம்பவங்கள் வடமாநிலங்களில் சர்வ சாதாரணமாக அரங்கேறி வருகிறது.

    இதுபோன்ற வெறியாட்டத்தை அண்மையில் கடுமையாக கண்டித்த சுப்ரீம் கோர்ட்டு இது வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை மட்டுமல்ல, மிகப்பெரிய குற்றமும் ஆகும் என்று கூறி யாரும் சட்டத்தை கைகளில் எடுத்துக்கொள்ள மாநில அரசுகள் அனுமதிக்க கூடாது என்றும் உத்தரவிட்டு இருந்தது.

    இந்த உத்தரவுக்கு பிறகும் ராஜஸ்தான் மாநிலம் அல்வார் நகர் அருகே பசு பாதுகாவலர்கள் அப்பாவி ஒருவரை அடித்துக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது.

    அரியானா மாநிலம் கலோகான் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் அக்பர் கான்(வயது 28). இவர் தனது நண்பரான அஸ்லாம் என்பவருடன் 2 பசுக்களை தனது சொந்த ஊருக்கு அல்வார் அருகேயுள்ள லாலாவாண்டி காட்டு்ப் பகுதி வழியாக நேற்று முன்தினம் இரவு ஓட்டிச் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவர்கள் இருவரும் பசுக்களை கடத்திச் செல்வதாக கருதிய பசு பாதுகாவலர்கள் அமைப்பைச் சேர்ந்த கிராம மக்கள் சிலர் இருவரையும் வழி மறித்து கடுமையாக தாக்கினர்.

    அப்போது அஸ்லாம் அங்கிருந்து தப்பியோடி விட்டார். அக்பர்கான் மட்டும் அவர்களின் பிடியில் சிக்கிக் கொண்டார். இதனால் அவரை வன்முறைக் கும்பல் சரமாரியாக தாக்கி அடித்து உதைத்தது.

    இதில் படுகாயம் அடைந்த வாலிபர் அக்பர் கானை சிலர் மீட்டு அருகில் உள்ள ராம்கார் நகர ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிர் இழந்தார். அவருடைய உடல் ராம்கார் அரசு ஆஸ்பத்திரியில் பிணவறையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு உள்ளது. அங்கு அக்பர்கானின் குடும்பத்தினர் விரைந்தனர்.

    இந்த படுகொலை தொடர்பாக ராம்கார் போலீசார் அடையாளம் தெரியாத நபர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், 2 பசுக்களும் கிராம மக்களிடம் இருந்து மீட்கப்பட்டன.

    இந்த சம்பவத்துக்கு மாநில முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் தாக்குதல் நடத்திய அத்தனை பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். 
    பெங்களூருவில் இன்று நடைபெற்ற கோலாகல விழாவில், கர்நாடகத்தின் 24-வது முதல்-மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்றார். #KarnatakaCM #HDKumaraswamy

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 104 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரிய கட்சியாக உருவெடுத்தது. ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் 78 இடங்களையும், ஜனதா தளம் (எஸ்) கட்சி 38 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இதனால் தொங்கு சட்டசபை அமைந்தது. இந்த நிலையில் ஜனதா தளம் (எஸ்) ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது. ஆனால் கவர்னர் பா.ஜனதாவை ஆட்சி அமைக்க அழைத்தார். அதோடு பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசமும் கொடுத்தார்.

    ஆனால் சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு கடந்த 19-ந் தேதி கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது. பெரும்பான்மை இல்லாததால், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே எடியூரப்பா முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ஜனதா தளம் (எஸ்) தலைவர் குமாரசாமியை, ஆட்சி அமைக்க வருமாறு கவர்னர் அழைப்பு விடுத்தார்.

    இதைத்தொடர்ந்து, மந்திரி பதவி பங்கீடு தொடர்பாக காங்கிரசுக்கும், ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கும் இடையே நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு உள்ளது. அதன்படி ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு முதல்-மந்திரி பதவி உள்பட 12 மந்திரி பதவியும் மற்றும் துணை சபாநாயகர் பதவியும், காங்கிரசுக்கு துணை முதல்-மந்திரி உள்பட 22 மந்திரி பதவியும் மற்றும் சபாநாயகர் பதவியும் ஒதுக்கப்பட்டு உள்ளது. காங்கிரசை சேர்ந்த ரமேஷ்குமார் சபாநாயகராக பதவி ஏற்பார்.



    கவர்னரின் அழைப்பை ஏற்று கர்நாடகத்தின் 24-வது முதல்-மந்திரியாக குமாரசாமி இன்று (புதன்கிழமை) பதவி ஏற்றார். பெங்களூரு விதான சவுதா கட்டிடத்தின் முன்பகுதியில் பதவி ஏற்பு விழா இன்று மாலை 4:30 மணியளவில் கோலாகலமாக நடைபெற்றது. 

    குமாரசாமியுடன் மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். பதவி ஏற்றவர்களுக்கு ஆளுநர் வஜுபாய் வாலா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. அதன் பிறகு மற்ற மந்திரிகள் பதவி ஏற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    பதவி ஏற்பு விழாவுக்காக சுமார் 80 அடி நீளம், 60 அடி அகலம் கொண்ட பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. 20-க்கும் மேற்பட்ட இடங்களில் எல்.இ.டி. அகன்ற திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. விதான சவுதாவை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    பதவி ஏற்பு விழாவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் தேவேகவுடா, கம்யூனிஸ்டு தலைவர் சீதாராம் யெச்சூரி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், கர்நாடக முன்னாள் முதல்-மந்திரிகள் சித்தராமையா, வீரப்பமொய்லி, உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரிகள் மாயாவதி, அகிலேஷ் யாதவ், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



    விழா அரங்கில் உத்தரபிரதேசம் மாநில முன்னாள் முதல்-மந்திரிகள் மாயாவதி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் அருகருகே அமர்ந்திருந்ததை காண முடிந்தது. மகன் குமாரசாமி முதல்வராக பொறுப்பேற்ற காட்சியை தேவகவுடாவும், அவரது மனைவியும் நெகிழ்ச்சியுடன் கண்டு மகிழ்ந்தனர். #KarnatakaCM #HDKumaraswamy
    ×