search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூதாட்டி படுகாயம்"

    • ருக்குமணி தனது வீட்டின் கதவை திறந்து வெளியில் வந்தார்.
    • யானை அவரை தும்பிக்கையால் தாக்கி அவரை அங்கிருந்த சாக்கடைக்குள் தூக்கி வீசியது.

    பேரூர்:

    கோவை மாவட்டம் செம்மேடு, அடிகளார் வீதியைச் சேர்ந்தவர் ருக்குமணி(வயது 70). தோட்ட வேலை பார்க்கிறார்.

    இவரது வீட்டில் அருகே வசிப்பவர் ஈஸ்வரி. நேற்று இரவு 12 மணிக்கு மேல், ஈஸ்வரியின் வீட்டு கதவை யாரோ தட்டுவது போன்ற சத்தம் கேட்டது.

    இதனால் அதிர்ச்சியான ருக்குமணி தனது வீட்டின் கதவை திறந்து வெளியில் வந்தார். அப்போது அங்கு ஈஸ்வரி வீட்டின் கதவை உடைத்து யானை ஒன்று அரிசியை சாப்பிட்டு கொண்டிருந்தது. இருட்டாக இருந்ததால் யானை தெரியவில்லை.

    இதையடுத்து யாரோ ஒருவர் கதவை தட்டுகிறார் என நினைத்து ருக்குமணி, ஈஸ்வரியின் வீட்டின் அருகே சென்றார். அப்போது தான் அங்கு யானை நின்றிருந்தது தெரியவந்தது.

    உடனடியாக ஓட முயற்சித்தார். ஆனால் அதற்குள் யானை அவரை தும்பிக்கையால் தாக்கி அவரை அங்கிருந்த சாக்கடைக்குள் தூக்கி வீசியது.

    யானை நிற்பதை அறிந்த ஈஸ்வரி வீட்டுக்குள்ளேயே இருந்து விட்டார். இந்த நிலையில் வெளியில் நின்ற யானை ஆவேசமாக பிளறியபடி அங்கிருந்து நகர்ந்து சென்றது.

    யானை சென்ற பின்னர் வீட்டை விட்டு வெளியில் வந்த ஈஸ்வரி, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் யானை தாக்கி படுகாயம் அடைந்த ருக்குமணியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    தலை மற்றும் நெஞ்சு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், தற்போது அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • தீபாவளி பலகாரம் செய்தபோது விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த நரசிங்கபுரம் வடகால் கிராமம், திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சபாபதி. இவரது மனைவி முத்தம்மாள் (வயது 70).

    இவர் நேற்று தீபாவளி பண்டிகையில் வீட்டில் பலகாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கொதித்து கொண்டிருந்த எண்ணெய் சட்டியின் மீது தவறி விழுந்தார்.

    இதில் முத்தம்மாள் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்த முத்தம்மாளை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இது தொடர்பாக சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜம்மாள் (69) கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று காலை ஒட்டன் கோவில் பகுதியில் சாலையை கடப்பதற்காக ராஜம்மாள் நின்று கொண்டிருந்தார்.
    • வேகமாக வந்த சரக்கு வாகனம் இவர் மீது மோதியதில் படுகாயமடைந்தார்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஆனங்கூர் சாலை, ஒட்டன்கோவில் பகுதியில் வசிப்பவர் ராஜம்மாள் (69) கூலித் தொழிலாளி.

    சம்பவத்தன்று காலை ஒட்டன் கோவில் பகுதியில் சாலையை கடப்பதற்காக ராஜம்மாள் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த சரக்கு வாகனம் இவர் மீது மோதியதில் படுகாயமடைந்தார்.

    இதையடுத்து இவர் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்துக்கு காரணமான சரக்கு வாகன டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குமாரபாளையம் போலீசில் அவரது உறவினர்கள் புகார் கொடுத்தனர். இதன்படி போலீசார் வழக்குப்பதிவு சரக்கு வாகன டிரைவரான கிழக்கு காலனியை சேர்ந்த சவுந்தர்ராஜன் (28) என்ற வாலிபரை கைது செய்தனர்.

    • மேற்கூறை யிலிருந்து சிமெண்ட் காரைகள் திடீரென்று பெயர்ந்து ஆதிலட்சுமி மீது விழுந்தது.
    • ஆதிலட்சுமியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த அழகிய நத்தம் காலனியை சேர்ந்த வர் ஆதிலட்சுமி (வயது 70). இவர் தொகுப்பு வீட்டில் வசித்து வருகிறார். நேற்று நள்ளிரவு தொகு ப்பு வீட்டில் மேற்கூறை யிலிருந்து சிமெண்ட் காரைகள் திடீரென்று பெயர்ந்து ஆதிலட்சுமி மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் கதறி துடித்து அழுதார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உடனடியாக தலையில் காயமடைந்த ஆதிலட்சுமியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆதிலட்சுமிக்கு டாக்டர்கள் உடனடி யாக சிகிச்சை அளித்த னர்.

    ஆதிலட்சுமி வசித்து வந்த தொகுப்பு வீட்டில் ஏற்கனவே ஆங்கா ங்கே சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து வந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை காரணமாக கட்டிடம் மழை நீரில் ஊறி மீண்டும் சிமெண்ட் காரைகள் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தூக்கணா ம்பாக்கம் போலீசார் விசார ணை நடத்தி வருகின்றனர்.

    ×