என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கணினி
- காதலர் தினத்தை ஒட்டி பிரீபெயிட் ரிசார்ஜ்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
- பல்வேறு ரிசார்ஜ் சலுகைகளில் அதிகபட்சம் 5 ஜிபி வரையிலான கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.
இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் வி காதலர் தினத்தை ஒட்டி இரண்டு புதிய சலுகைகளை அறிவித்து இருக்கிறது. பல்வேறு ரிசார்ஜ் சலுகைகளில் வி நிறுவனம் அதிகபட்சம் 5 ஜிபி வரை கூடுதல் டேட்டா வழங்குகிறது. புதிய சலுகைகள் வி ஆப் பயன்படுத்தும் சந்தாதாரர்களுக்கு பிரத்யேகமாக வழங்கப்படுகிறது. இவை பிப்ரவரி 14 ஆம் தேதி வரை வழங்கப்படும்.
சிறப்பு சலுகைகள் மட்டுமின்றி "Vi Love Tunes Contest" பெயரில் பரிசு திட்டம் அறிவித்து இருக்கிறது. இதில் வெற்றி பெறும் பயனர்கள் அதிகபட்சம் ரூ. 5 ஆயிரம் வரையிலான பரிசு வவுச்சர்கள் வழங்கப்பட இருக்கிறது.
ரூ. 299 மற்றும் அதற்கும் அதிக தொகை கொண்ட ரிசார்ஜ் சலுகைகளில் அதிகபட்சம் 5 ஜிபி வரையிலான கூடுதல் டேட்டாவை எவ்வித தயக்கமும் இன்றி வழங்கப்படுகிறது. எனினும், கூடுதல் டேட்டாவுக்கான வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். வி ரூ. 199 முதல் ரூ. 299 வரையிலான ரிசார்ஜ்களை செய்வோருக்கு அதிகபட்சம் 2 ஜிபி வரையிலான கூடுதல் டேட்டா எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது.
இதற்கான வேலிடிட்டியும் 28 நாட்கள் ஆகும். அனைத்து சலுகைகளிலும் கூடுதல் டேட்டா பெறுவதற்கு பயனர்கள் இந்த சலுகைகளை வி ஆப் மூலம் ரிசார்ஜ் செய்ய வேண்டும். மேலும் இவை பிப்ரவரி 14 ஆம் தேதி வரை மட்டுமே கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.
பரிசு கூப்பன் விவரங்கள்:
காதலர் தினத்தை ஒட்டி வி அறிவித்து இருக்கும் "Vi Love Tunes Contest"-இல் கலந்து கொண்டு பயனர்கள் ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள பரிசு கூப்பனை வெல்ல முடியும். சமூக வலைதளங்களில் நடைபெறும் #ViLoveTunes போட்டிகளில் வி பயனர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். இதில் பயனர்கள் ஹங்காமா மியூசிக் காதலர் தின பிளேலிஸ்ட்-இல் மாற்றப்பட்ட வரிகள் கொண்ட பாடல்களை சரியாக கண்டுபிடிக்க வேண்டும்.
போட்டியில் கலந்து கொள்வோர் சரியான விடையை #ViLoveTunes எனும் ஹேஷ்டேக் பயன்படுத்தி கமெண்ட் செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒரு வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டு ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள கிஃப்ட் கார்ட் ஆக வெற்றி பெற முடியும்.
- நாய்ஸ் நிறுவனத்தின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ப்ளூடூத் 5.3 மற்றும் ஹைப்பர்சின்க் தொழில்நுட்பம் கொண்டுள்ளது.
- யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் கனெக்டர் கொண்டிருக்கும் நாய்ஸ் பட்ஸ் VS404 IPX5 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.
நாய்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ், நாய்ஸ் பட்ஸ் VS404 மாடலை அறிமுகம் செய்தது. இத்துடன் "StoopidCupid" திட்டத்தின் கீழ் நாய்ஸ் நிறுவனம் தனது ஸ்மார்ட்வாட்ச் மற்றும் ஆடியோ சாதனங்களுக்கு அதிகபட்சம் 75 சதவீதம் தள்ளுபடி வழங்குகிறது.
புதிய நாய்ஸ் பட்ஸ் VS404 மாடலில் 10mm டிரைவர்கள் உள்ளன. இவை ஸ்டிராங் பேஸ் மற்றும் குவாட் மைக் ENC தொழில்நுட்பம் வழங்குகிறது. இதன் மூலம் தரமாக கால் அனுபவம் பெறலாம். இத்துடன் மூன்று EQ மோட்கள்- பேஸ், கேமிங் மற்றும் நார்மல் உள்ளன. இவை தனிப்பட்ட சவுண்ட் வழங்குகின்றன. இந்த இயர்பட்ஸ் ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி, ஹைப்பர்சின்க் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது.
அதிகபட்சம் 50 மணி நேர பிளேடைம் கொண்டிருக்கும் நாய்ஸ் பட்ஸ் VS404 பத்து நிமிட சார்ஜிங்கில் 200 நிமிடங்கள் பயன்படுத்தும் வசதியை வழங்குகிறது. உடற்பயிற்சி அல்லது நீரின் அருகிலும் எவ்வித தயக்கமும் இன்றி பயன்படுத்தும் வகையில், இந்த இயர்பட்ஸ் IPX5 சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் கனெக்டர் வழங்கப்படுகிறது.
நாய்ஸ் பட்ஸ் VS404 அம்சங்கள்:
ட்ரூ வயர்லெஸ்
10mm டிரைவர் மற்றும் AAC சப்போர்ட்
ப்ளூடூத் 5.3, ஹைப்பர்சின்க்
குவாட் மைக் மற்றும் ENC
பில்ட்-இன் 3 EQ மோட்கள்
50 மணி நேர பிளேடைம்
யுஎஸ்பி டைப் சி சார்ஜிங்
IPX5 வாட்டர் ரெசிஸ்டண்ட்
ஒரு வருட வாரண்டி
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
நாய்ஸ் பட்ஸ் VS404 மாடல் தற்போது அறிமுக சலுகையாக ரூ. 1,299 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் உண்மை விலை ரூ. 3 ஆயிரத்து 399 ஆகும். இந்த இயர்பட்ஸ் ஜெட் பிளாக், ஃபாரஸ்ட் கிரீன் மற்றும் ஸ்னோ வைட் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் கோநாய்ஸ் வலைதளங்களில் நடைபெற்று வருகிறது.
- ஒன்-நெட்புக் நிறுவனத்தின் புதிய கையடக்க கன்சோல் விற்பனைக்கு கிடைக்கிறது.
- முன்னதாக இந்த கன்சோல் கிரவுட்-ஃபண்டிங் வலைதளத்தில் முன்பதிவுக்கு வந்தது.
ஒன் நெட்புக் நிறுவனம் தனது விண்டோஸ் சார்ந்த கையடக்க கேமிங் கன்சோல் ஒன்எக்ஸ்பிளேயர் 2 சாதனத்தை சமீபத்தில் அறிவித்தது. வழக்கம் போல் இந்த கன்சோல் முதற்கட்டமாக இண்டிகோகோ வலைதளத்தில் முன்பதிவுக்கு வைக்கப்பட்டது. கிரவுட்ஃபண்டிங் வலைதளத்தில் இந்த கையடக்க கன்சோல் முன்பதிவு நடைபெறுகிறது.
முன்பதிவில் 1 மில்லியன் டாலர்களை வசூலித்ததை அடுத்து ஒன்எக்ஸ்பிளேயர் 2 தற்போது ஆர்டர் செய்ய கிடைக்கிறது. இந்த கன்சோல் டிசைன் அதன் முந்தைய வெர்ஷனை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இதில் கழற்றக்கூடிய கண்ட்ரோலர் பேட்கள், ஸ்டைலஸ் மற்றும் கீபோர்டு சப்போர்ட் உடன் டேப்லெட் மற்றும் மின் லேப்டாப் போன்று பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
ஒன்எக்ஸ்பிளேயர் 2 மாடலில் ரைசன் 7 6800U APU, 8.4 இன்ச் டிஸ்ப்ளே, 2.5K ரெசல்யூஷன், 65.5 வாட் ஹவர் பேட்டரி, இண்டர்சேன்ஜ் செய்யக்கூடிய கண்ட்லோர்கள், பில்ட்-இன் கிக்-ஸ்டாண்டு, பென் இன்புட், 4096 லெவல் பிரெஷர் சென்சிடிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஹார்மன் டியூனிங் செய்யப்பட்ட டூயல் ஸ்பீக்கர் சிஸ்டம், ஸ்மார்ட் கூலிங் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஒன் நெட்புக் நிறுவனம் புதிய ஒன்எக்ஸ்பிளேயர் 2 மாடலின் வினியோகம் மார்ச் மாத வாக்கில் துவங்க இருக்கிறது. இத்துடன் மேக்னடிக் கீபோர்டு, போர்டபில் கனெக்டர் மற்றும் ஸ்டைலஸ் உள்ளிட்டவை தனித்தனியே விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றின் விலை முறையே 39, 29 மற்றும் 39 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஒன்எக்ஸ்பிளேயர் 2 ஆர்டர்கள் ஒன்எக்ஸ்பிளேயர் ஸ்டோர் மற்றும் இண்டிகோகோ வலைதளத்தில் இம்மாத இறுதியில் துவங்க இருக்கிறது. இத்துடன் பல்வேறு ஆன்லைன் வலைதளங்களிலும் ஒன்எக்ஸ்பிளேயர் 2 விற்பனை செய்யப்பட இருக்கிறது.
விலை விவரங்கள்:
16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மாடல் 1,099 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 90 ஆயிரத்து 668
16 ஜிபி ரேம், 1 டிபி மெமரி மாடல் 1,199 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 98 ஆயிரத்து 918
16 ஜிபி ரேம், 2 டிபி மெமரி மாடல் 1,299 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 07 ஆயிரத்து 168
32 ஜிபி ரேம், 1 டிபி மெமரி மாடல் 1,299 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 07 ஆயிரத்து 168
32 ஜிபி ரேம், 2 டிபி மெமரி மாடல் 1,499 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 23 ஆயிரத்து 668
- ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனுடன் ஒன்பிளஸ் ப்ட்ஸ் ப்ரோ 2 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
- புது பட்ஸ் ப்ரோ 2 மாடலில் 48db ANC மற்றும் ஸ்பேஷியல் ஆடியோ போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஒன்பிளஸ் 11 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனுடன் ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 சீரிஸ் இயர்பட்ஸ்-ஐ இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இது ஒன்பிளஸ் நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை பிரீமியம் இயர்பட்ஸ் மாடல் ஆகும். ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 டாப் எண்ட் மாடலாகவும், பட்ஸ் ப்ரோ 2R சற்றே குறைந்த விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
அம்சங்களை பொருத்தவரை புதிய ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடலில் 48db டெப்த் மற்றும் 4000Hz விட்த் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் 54ms லோ லேடன்சி, மெலோடிபூஸ்ட் டூயல் டிரைவர்கள் 11mm வூஃபர், 6mm டுவீட்டர், டைனாடியோ, டால்பி அட்மோஸ் மற்றும் ஸ்பேஷியல் ஆடியோ என ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதில் உள்ள வூஃபரின் டோம் பகுதியில் க்ரிஸ்டல் பாலிமர் டைஃப்ரம் மற்றும் டோம், எட்ஜ் டிசைன் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இவை வெவ்வேறு ஃபிரீக்வன்சிக்களில் இணைப்பை மேம்படுத்தும் திறன் கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மற்றும் பட்ஸ் ப்ரோ 2R அம்சங்கள்:
ப்ளூடூத் 5.3 (LHDC 5.0/AAC/SBC/LC3)
டால்பி அட்மோஸ் ஸ்பேஷியல் ஆடியோ (ஒன்பிளஸ் 11 மற்றும் ஒன்பிளஸ் 11R)
ஒன்பிளஸ் ஆடியோ ID 2.0 தனித்துவம் மிக்க ஆடியோ
11mm டைனமிக் டிரைவர் + 6mm டைஃப்ரம் டிரைவர்
பிரெஷர் சென்சிடிவ் கண்ட்ரோல்
டூயல் மைக்ரோபோன்
54ms லோ-லேடன்சி கேமிங்
இயர்போனுக்கு வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP55), கேஸ்-க்கு IPX4 ரெசிஸ்டண்ட்
டூயல் கனெக்ஷன்
இயர்பட்களில் 60 எம்ஏஹெச் பேட்டரி
கேசில் 520 எம்ஏஹெச் பேட்டரி
ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
Qi வயர்லெஸ் சார்ஜிங் (ப்ரோ 2 மாடலில் மட்டும்)
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 அப்சிடியன் பிளாக் மற்றும் ஆர்பர் கிரீன் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 11 ஆயிரத்து 999 என் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2R அப்சிடியன் பிளாக் மற்றும் மிஸ்டி வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 9 ஆயிரத்து 999 ஆகும்.
இந்தியாவில் ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 முன்பதிவு பிப்ரவரி 07 ஆம் தேதி துவங்குகிறது. விற்பனை பிப்ரவரி 14 ஆம் தேதி துவங்குகிறது. ஒன்பிளஸ் ப்ரோ ப்ரோ 2R விற்பனை மார்ச் மாத வாக்கில் துவங்க இருக்கிறது. புதிய ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 வாங்குவோர் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு மற்றும் மாத தவணை முறையை பயன்படுத்தும் போது ரூ. 500 உடனடி தள்ளுபடி பெறலாம்.
- ஒன்பிளஸ் நிறுவனம் புது டெல்லியில் நடைபெற்ற கிளவுட் 11 நிகழ்வில் தனது முதல் டேப்லெட்-ஐ அறிமுகம் செய்தது.
- புதிய ஒன்பிளஸ் பேட் மாடல் டால்வி விஷன் மற்றும் டால்பி ஆடியோ வசதிகளை கொண்டிருக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் கிளவுட் 11 நிகழ்வில் தனது புதிய ஃபிளாக்ஷிப் ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனுடன் ஒன்பிளஸ் பேட் டேப்லெட்-ஐ அறிமுகம் செய்தது. புதிய ஒன்பிளஸ் பேட் மாடலில் 11.6 இன்ச் டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் 9000 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 9510 எம்ஏஹெச் பேட்டரி, 67 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் ஒன்பிளஸ் ஸ்டைலோ மற்றும் மேக்னடிக் கீபோர்டு சப்போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. 5ஜி கனெக்டிவிட்டி வசதி கொண்டிருக்கும் ஒன்பிளஸ் பேட் மாடலில் குவாட் ஸ்பீக்கர்கள், டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மோஸ் வசதிகளும் வழங்கப்பட்டு உள்ளது.
ஒன்பிளஸ் பேட் அம்சங்கள்:
11.6 இன்ச் 2800x2000 பிக்சல் டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட்
மீடியாடெக் 9000 பிராசஸர்
அதிகபட்சம் 12 ஜிபி ரேம்
5ஜி கனெக்டிவிட்டி
குவாட் ஸ்பீக்கர்கள்
டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மோஸ்
9510 எம்ஏஹெச் பேட்டரி
67 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
இந்தியாவில் புதிய ஒன்பிளஸ் பேட் மாடல் ஹலோ கிரீன் நிறத்தில் கிடைக்கிறது. ஒன்பிளஸ் பேட் விலை விவரங்கள் இன்றைய நிகழ்வில் அறிவிக்கப்படவில்லை. ஒன்பிளஸ் பேட் மாடலின் முன்பதிவு ஏப்ரல் மாத வாக்கில் துவங்க இருக்கின்றன.
- புதிய ஸ்மார்ட் டிவியை மாணிட்டர், டிவி மற்றும் ஸ்மார்ட் டிவைஸ் என மூன்று வழிகளில் பயன்படுத்த முடியும்.
- கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் QLED டிவிக்களை அறிமுகம் செய்த நிலையில், தற்போது புதிய HD டிவி அறிமுகமாகி இருக்கிறது.
Blaupunkt நிறுவனத்தின் புதிய 24 இன்ச் ஸ்மார்ட் டிவி இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட் டிவி மாணிட்டர், டிவி மற்றும் ஸ்மார்ட் டிவைஸ் போன்று பயன்படுத்திக் கொள்ளலாம். கடந்த ஆண்டு QLED டிவிக்களை அறிமுகம் செய்த Blaupunkt இந்த முறை Blaupunkt புதிதாக HD ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்துள்ளது.
Blaupunkt பிரீமியம் ஸ்மார்ட் டிவி சீரிஸ் தலைசிறந்த வியூவிங் அனுபவம், பிரத்யேக பரிந்துரை, அதிக தரமுள்ள சவுண்ட் மற்றும் ஆப்டிமைஸ்டு கண்டென்ட் வழங்குகிறது. இதில் HD டிஸ்ப்ளே, 20 வாட் சவுண்ட் அவுட்புட், டிவியின் கீழ்புறத்தில் ஸ்பீக்கர்கள் மற்றும் சரவுண்ட் சவுண்ட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஏர்ஸ்லிம் டிசைன் கொண்டிருக்கும் Blaupunkt ஸ்மார்ட் டிவி மெல்லிய தோற்றம், A35 x 4 சிப்செட் மற்றும் 2.4 GHz வைபை போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. இதன் 24 இன்ச் மாடலில் 300 நிட்ஸ் பிரைட்னஸ், 512MB ரேம், 4 ஜிபி ரோம், டிஜிட்டல் நாய்ஸ் ஃபில்ட்டர், A+ பேனல் உள்ளது.
இந்த ஸ்மார்ட் டிவி- கணினி, மொபைல் மற்றும் லேப்டாப்களுக்கான சப்போர்ட் கொண்டிருக்கிறது. இத்துடன் வரும் ரிமோட்டில் யூடியூப், பிரைம் வீடியோ, ஜீ5, வூட் மற்றும் சோனிலிவ் போன்ற சேவைகளுக்கான ஹாட்கீ கொண்டிருக்கிறது.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
Blaupunkt சிக்மா 24 இன்ச் 3-இன்-1 ஸ்மார்ட் டிவி-யின் விலை தற்போது ரூ. 6 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த விலை பிப்ரவரி 7 முதல் பிப்ரவரி 12 ஆம் தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும். இதன் உண்மை விலை ரூ. 10 ஆயிரத்து 999 ஆகும்.
- தடை செய்யப்பட்ட செயலிகள் மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு மிரட்டி வந்துள்ளன.
- பல்வேறு மாநிலங்களில் ஏராளமானோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் அரங்கேறி இருக்கின்றன.
சீனாவை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. 288 சீன செயலிகளை முழுமையாக ஆய்வு செய்த மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், அவற்றில் 230 செயலிகளை அவசரகால அடிப்படையில் தடை செய்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய பரிந்துரையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.
தற்போது தடை செய்யப்பட்டு இருக்கும் இந்த செயலிகள் மூலம் தனிநபர்கள் குறைந்த தொகையை கடனாக பெற்று, அளவுக்கு மீறிய இடையூறு மற்றும் சட்டவிரோத மிரட்டல்களை சந்தித்து வந்துள்ளனர். சில சமயங்களில் வட்டி சதவீதம் ஆண்டிற்கு 3 ஆயிரம் சதவீதம் வரை வசூலிக்கப்பட்டு இருப்பது அம்பலமாகி இருக்கிறது.
கடன் பெற்றவர்கள், தொகையை திரும்ப செலுத்தாத நிலையில் செயலி சார்பில் அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலான குறுந்தகவல் மற்றும் மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு மிரட்டி வந்துள்ளன. இதன் காரணமாக இந்தியாவின் ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மற்றும் பல்வேறு மாநிலங்களில் ஏராளமானோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் அரங்கேறி இருக்கின்றன.
இது போன்ற அறிக்கைகள், மற்றும் பல்வேறு மாநிலங்களின் உளவுத் துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட தகவல்களின் பேரில், செயலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. தடை செய்யப்பட்ட செயலிகளில் 94 செயலிகள் ஆப் ஸ்டோர்களில் இன்ஸ்டால் செய்ய தயார் நிலையில் இருந்துள்ளன. இதர செயலிகள் மூன்றாம் தரப்பு இணைய முகவரிகள் மூலம் இணையத்தில் வலம் வந்துள்ளன.
சீன செயலிகளுக்கு தடை விதித்து இருப்பதோடு, இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் பந்தயம் கட்டுவது மற்றும் சூதாடுவது சட்ட விரோதமான நடவடிக்கை ஆகும். இவற்றை விளம்பரப்படுத்துவது நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019, கேபில் டிவி நெட்வொர்க் ஒழுங்குமுறை சட்டம் 1995 மற்றும் தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 போன்ற சட்டப்பிரிவுகளின் கீழ் சட்டவிரோத நடவடிக்கை என அரசு சார்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை தகவல் விடுக்கப்பட்டு இருக்கிறது.
- ஒப்போ நிறுவனம் தனது புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் 13.4mm பாலிமர் கம்போசிட் கொண்டிருக்கிறது.
- புது ஒப்போ இயர்பட்ஸ் முழு சார்ஜ் செய்தால் ஆறு மணி நேரத்திற்கும், மொத்தத்தில் 25 மணி நேர பிளேபேக் வழங்குகிறது.
ஒப்போ நிறுவனம் தனது ரெனோ8 T 5ஜி ஸ்மார்ட்போனுடன் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்-ஐ இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஒப்போ என்கோ ஏர்3 இயர்பட்ஸ் 13.4mm பாலிமர் கம்போசிட் மற்றும் ட்ரான்ஸ்லுசெண்ட் கேஸ் கொண்டிருக்கிறது.
இதில் உள்ள கேடென்ஸ் ஹைபை5 டிஜிட்டல் சிக்னல் பிராசஸர் மேம்பட்ட ஸ்பீச் ரிகக்னிஷன் வழங்குகிறது. மேலும் ஒப்போ அலைவ் ஆடியோ உடன் ஔரல் அவுட்புட் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை ப்ளூடூத் 5.3, 47ms அல்ட்ரா லோ-லேடன்சி, 25 மணி நேரத்திற்கான பிளேபேக் வழங்கும் பேட்டரி கொண்டிருக்கிறது. இந்த இயர்பட்ஸ் கூகுள் ஃபாஸ்ட் பேர் வசதி கொண்டிருப்பதால், ஒரே சமயத்தில் இரு சாதனங்களுடன் இணைத்துக் கொள்ளும் வசதி உள்ளது.
ஹால்ஃப் இன்-இயர் டிசைன் கொண்டிருக்கும் ஒப்போ என்கோ ஏர்3 ஒவ்வொரு இயர்பட்-ம் அதிகபட்சம் ஆறு மணி நேரத்திற்கான பிளேபேக் வழங்குகிறது. ஒட்டுமொத்தமாக இந்த இயர்பட்ஸ் 25 மணி நேரத்திற்கான பிளேபேக் வழங்குகிறது.
ஒப்போ என்கோ ஏர்3 அம்சங்கள்:
13.4mm பாலிமர் கம்போசிட் டிரைவர்
ஃபிளாக்ஷிப் தர N48 நியோடிமியம் காந்தம், 1.9m காப்பர்-அலுமினியம் அலாய் காயில்கள்
ப்ளூடூத் 5.3
கூகுள் ஃபாஸ்ட் பேர்
புதிய ஹைபை டிஎஸ்பி
டச் கண்ட்ரோல்
டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட்
27 எம்ஏஹெச் பேட்டரி (இயர்பட்ஸ்)
300 எம்ஏஹெச் பேட்டரி (சார்ஜிங் கேஸ்)
பத்து நிமிட சார்ஜில் இரண்டு மணி நேரத்திற்கான பிளேபேக்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ஒப்போ என்கோ ஏர்3 மாடலின் விலை ரூ. 2 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை பிப்ரவரி 10 ஆம் தேதி ப்ளிப்கார்ட், அமேசான், ஒப்போ ஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் துவங்க இருக்கிறது.
- சாம்சங் நிறுவனத்தின் புதிய தலைமுறை ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுடன் கேலக்ஸி புக்3 சீரிஸ் மாடல்களும் அறிமுகம்.
- ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து புதிய கேலக்ஸி புக்3 சீரிஸ் இந்திய விலையை சாம்சங் அறிவித்து இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி புக்3 சீரிஸ்- கேலக்ஸி புக்3 அல்ட்ரா, கேலக்ஸி புக்3 ப்ரோ மற்றும் கேலக்ஸி புக்3 ப்ரோ 360 மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய கேலக்ஸி புக்3 சீரிஸ் மாடல்களில் இண்டெல் கோர் 13th Gen பிராசஸர்களை கொண்டிருக்கின்றன. புதிய லேப்டாப்களின் மூலம் சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் கேலக்ஸி சீரிசை விரிவுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.
கேலக்ஸி புக்3 லேப்டாப்கள் சீம்லெஸ் மல்டி-டிவைஸ் கனெக்டிவிட்டி, டாப் எண்ட் ஹார்டுவேரை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்காக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த காலத்து மல்டி-டிவைஸ் உலகத்துக்கு ஏற்ப கேலக்ஸி புக்3 சீரிஸ் மாடல்கள் சந்தையின் முன்னணி நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. இவை தலைசிறந்த மல்டி-டிவைஸ் கனெக்டிவிட்டியை பலதரப்பட்ட சாதனங்கள் மற்றும் இயங்குதளங்கள் இடையே வழங்குகிறது.
கேலக்ஸி புக்3 மாடல்களில் மேம்பட்ட செயல்திறன் வழங்கும் நோக்கில் முற்றிலும் புதிய சிபியு, ஜிபியு மற்றும் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. கேலக்ஸி புக்3 அல்ட்ரா மாடலில் அதிநவீன 13th Gen இண்டெல் கோர் i9 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. NVIDIA RTX GeForce 4070 GPU கொண்டிருக்கும் கேலக்ஸி புக்3 அல்ட்ரா அதிரடி கிராஃபிக்ஸ் மற்றும் சிறப்பான கேமிங் அனுபவத்தை வழங்குகிறது.
இதில் உள்ள டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே மற்றும் 3K ரெசல்யூஷன், 120Hz அட்ப்டிவ் ரிப்ரெஷ் ரேட் சிறப்பான வியூவிங் அனுபவத்தை வழங்கும். இத்துடன் மல்டி கண்ட்ரோல் அம்சம் கொண்டு கணினி, கேலக்ஸி டேப் மற்றும் ஸ்மார்ட்போன் உள்ளிட்டவைகளை கேலக்ஸி புக்3 சீரிஸ் கீபோர்டு மற்றும் டிராக்பேட் மூலம இயக்க முடியும். Expert RAW அம்சம் மூலம் கேலக்ஸி ஸ்மார்ட்போனில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை புக்3 சீரிசுக்கு டிரான்ஸ்ஃபர் செய்து எடிட் செய்ய முடியும்.
விலை விவரங்கள்:
இந்திய சந்தையில் புதிய கேலக்ஸி புக்3 360 சீரிஸ் விலை ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 990 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் கேலக்ஸி புக்3 அல்ட்ரா மாடலின் விலை ரூ. 2 லட்சத்து 81 ஆயிரத்து 990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
அறிமுக சலுகையாக கேலக்ஸி புக்3 அல்ட்ரா வாங்குவோருக்கு ரூ. 10 ஆயிரமும், கேலக்ஸி புக்3 ப்ரோ சீரிஸ் வாங்குவோருக்கு ரூ. 8 ஆயிரமும் கேஷ்பேக் ஆக வழங்கப்படுகிறது. இத்துடன் அதிகபட்சம் 24 மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது. முன்பதிவு சலுகைகளின் கீழ் கேலக்ஸி புக்3 அல்ட்ரா வாங்குவோர் ரூ. 50 ஆயிரத்து 990 மதிப்புள்ள M8 ஸ்மார்ட் மாணிட்டரை ரூ. 1,999 விலையில் வாங்கிட முடியும்.
கேலக்ஸி புக்3 ப்ரோ 360 மற்றும் கேலக்ஸி புக்3 ப்ரோ மாடல்களுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. கேலக்ஸி புக்3 அல்ட்ரா மாடலுக்கான முன்பதிவு பிப்ரவரி 14 ஆம் தேதி துவங்குகிறது. முன்பதிவு சாம்சங் வலைதளம், முன்னணி ஆன்லைன் வலைதளங்கள் மற்றும் தேர்வு செய்யப்பட்ட சில்லறை விற்பனை மையங்களில் நடைபெறுகிறது.
- ஒன்பிளஸ் நிறுவனத்தின் கிளவுட் 11 நிகழ்வில் புது ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனுடன் பல்வேறு சாதனங்கள் அறிமுகமாகின்றன.
- புது சாதனங்கள் அறிமுகமாக இருக்கும் நிலையில், ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ இயர்போனின் விலை குறைக்கப்பட்டது.
ஒன்பிளஸ் நிறுவனம் பிப்ரவரி 7 ஆம் தேதி கிளவுட் 11 நிகழ்வில் புதிய ஒன்பிளஸ் 11, ஒன்பிளஸ் 11R, ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2, ஒன்பிளஸ் டிவி, ஒன்பிளஸ் பேட் போன்ற சாதனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இவற்றில் ஒன்பிளஸ் 11 மற்றும் ஒன்பிளஸ் பட்ஸ் 2 மாடல்கள் ஏற்கனவே சீன சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்தியாவில் ஒன்பிளஸ் பட்ஸ் 2 விலை ரூ. 10 ஆயிரத்து 990 என நிர்ணயம் செய்யப்படலாம்.
புது இயர்பட்ஸ் அறிமுகமாக இருக்கும் நிலையில், ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ விலையை இந்திய சந்தையில் குறைத்து இருக்கிறது. இந்தியாவில் ரூ. 9 ஆயிரத்து 990 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ தற்போது ரூ. 1000 விலை குறைக்கப்பட்டு ரூ. 8 ஆயிரத்து 990 விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.
இந்த விலை குறைப்பு ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ ரேடியண்ட் சில்வர், மேட் பிளாக் மற்றும் கிலாசி வைட் என மூன்று நிற வேரியண்ட்களுக்கும் பொருந்தும்.விலை குறைப்பு மட்டுமின்றி ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ வாங்கும் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு கொண்டு பணம் செலுத்தும் போது ரூ. 1000 உடனடி தள்ளுபிட பெறலாம். இதே போன்று மொபிகுயிக் வாலெட் பயன்படுத்தும் போது ரூ. 500 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ மாடலில் 11mm டிரைவர்கள், ப்ளூடூத் 5.2 கனெக்டிவிட்டி, மூன்று மைக்ரோபோன்கள் கொண்ட ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி, 37 எம்ஏஹெச் பேட்டரி, IP55 தர ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி, ஏழு மணி நேரத்திற்கான பேட்டரி பேக்கப் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இதனுடன் வரும் கேஸ்-இல் 520 எம்ஏஹெச் பேட்டரி, யுஎஸ்பி டைப் சி கேபில் சார்ஜிங் வசதி, Qi வயர்லெஸ் சார்ஜிங் வசதிகள் உள்ளன.
- ஒன்பிளஸ் நிறுவனத்தின் புது டேப்லெட் அலுமினியம் அலாய் ஃபிரேம் மற்றும் மெல்லிய பெசல்களை கொண்டுள்ளது.
- ஒன்பிளஸ் பேட் விலை மற்றும் முழுமையான அம்சங்கள் பற்றி இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் கிளவுட் 11 நிகழ்வு பிப்ரவரி 7 ஆம் தேதி இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், ஒன்பிளஸ் பேட் மாடலுக்கான புது டீசரை ஒன்பிளஸ் வெளியிட்டு உள்ளது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் டேப்லெட் மாடல் ஒன்பிளஸ் 11 5ஜி, ஒன்பிளஸ் 11R 5ஜி, ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மற்றும் ஒன்பிளஸ் டிவி 65 Q2 ப்ரோ போன்ற மாடல்களுடன் அறிமுகம் செய்யப்படுகிறது.
புது டேப்லெட் பற்றி அதிக விவரங்கள் வெளியாகாத நிலையில், புது டீசரின் படி ஒன்பிளஸ் பேட் டேப்லெட் ஸ்டைலஸ் வசதியுடன் அறிமுகமாகும் என்றும் இதில் மெல்லிய பெசல்கள் இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது. இத்துடன் ஒன்பிளஸ் டேப்லெட் மாடல் கிரீன் நிற ஷேட், வளைந்த எட்ஜ் மற்றும் பட்டன் கொண்டிருக்கிறது.
முன்னதாக வெளியான தகவல்களில் ஒன்பிளஸ் பேட் மாடலில் 11.6 இன்ச் டிஸ்ப்ளே, மெல்லிய பெசல்கள், மத்தியில் கேமரா, எல்இடி ஃபிளாஷ், வட்ட வடிவ கேமரா மாட்யுல், 13MP சென்சார், 5MP செல்ஃபி கேமரா, குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் வழங்கப்படுகிறது. புதிய ஒன்பிளஸ் பேட் மாடலின் விலை இந்திய சந்தையில் ரூ. 25 ஆயிரத்திற்கும் குறைந்த விலையில் நிர்ணயம் செய்யப்படலாம்.
புதிய ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸ் வேரியண்ட் விலை ரூ. 54 ஆயிரத்து 999 என்றும், 16 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மாடல்களின் விலை முறையே ரூ. 59 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 66 ஆயிரத்து 999 வரை நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. ஒன்பிளஸ் 11R 5ஜி மாடலின் விலை ரூ. 35 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 40 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம்.
- சோனி நிறுவனத்தின் முற்றிலும் புது வாக்மேன் 5 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.
- புது சோனி வாக்மேன் நாய்ஸ் ரிடக்ஷன் வசதியை வழங்கும் தொழில்நுட்பம் கொண்டுள்ளது.
சோனி நிறுவனம் 1979 ஆண்டு வாக்கில் கேசட் வாக்மேன் மாடலை அறிமுகம் செய்தது. 150 டாலர்கள் விலை கொண்டிருந்த சோனி வாக்மேன் மிகவும் பிரபலமான சாதனமாக மாறியது. மேலும் கடந்த ஆண்டுகளில் இசை பிரியர்களை கவரும் வகையில், வாக்மேன் மாடல் கணசமான அப்டேட் மற்றும் ஏராள மாற்றங்களை பெற்று விட்டது.
இந்த வரிசையில், சோனி இந்தியா நிறுவனம் புது பிளேயர் NW-ZX707 பெயரில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புது வாக்மேன் ஆடியோ பிரியர்களை மனதில் கொண்ட மிகவும் நேர்த்தியாக டிசைன் செய்யப்பட்டு இருப்பதாக சோனி அறிவித்து இருக்கிறது. சோனி இந்தியா நிறுவனம் புது வாக்மேன் S மாஸ்டர் HX டிஜிட்டல் ஆம்ப் தொழில்நுட்பம் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது.
இது வாக்மேனுக்காக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது சாதனத்தின் ஆடியோ தரத்தை மேம்படுத்தும் வசதி கொண்டுள்ளது. புது சோனி வாக்மேன் 5 இன்ச் டிஸ்ப்ளே, வைபை வசதி, மியூசிக் ஸ்டிரீமிங், டவுன்லோட் வசதி, மெல்லிய டிசைன் கொண்டிருக்கிறது. இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 25 மணி நேரத்திற்கு பேட்டரி லைஃப் வழங்குகிறது.
இதில் உள்ள S-மாஸ்டர் HX டிஜிட்டல் ஆம்ப் தொழில்நுட்பம் நாய்ஸ் ரிடக்ஷன் வசதியை வங்குகிறது. இத்துடன் ஆடியோ தரத்தையும் மேம்படுத்துகிறது. மேலும் மேம்பட்ட ஃபைன் டியூன் செய்யப்பட்ட கபேசிட்டர்கள், FTCAP3, சாலிட் ஹை பாலிமர் கபாசிட்டர் வழங்கப்பட்டு இருக்கிறது.
சோனி வாக்மேன் மாடலில் எட்ஜ் ஏஐ, DSEE அல்டிமேட், டிஜிட்டல் மியூசிக் ஃபைல்களை ரியல் டைமில் அப்ஸ்கேல் செய்யும் வசசதி கொண்டிருக்கிறது. முற்றிலும் புதிய சோனி NW-ZX707 வாக்மேன் விலை ரூ. 69 ஆயிரத்து 990 என நிர்ணயம்செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்