search icon
என் மலர்tooltip icon

    கணினி

    • அமேசான் பிரைம் ஒடிடி சேவையின் புது சந்தா உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
    • புதிய அமேசான் பிரைம் லைட் விலை சற்றே குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

    அமேசான் நிறுவனம் இந்திய சந்தையில் தனது பிரைம் சந்தாவை ஓரளவு குறைந்த விலையிலேயே வழங்கி வருகிறது. அமேசான் பிரைம் சந்தாவில் ஸ்டிரீமிங் மட்டுமின்றி ஒரே நாளில் டெலிவரி மற்றும் இலவச அதே நாளில் டெலிவரி போன்ற சேவைகளையும் வழங்கி வருகிறது. இந்த நிலையில், அமேசான் நிறுவனம் பிரைம் லைட் பெயரில் மற்றொரு சந்தா முறையை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அதன்படி அமேசான் பிரைம் லைட் சந்தா ஆண்டிற்கு ரூ. 999 எனும் விலையில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. ஏற்கனவே அமேசான் பிரைம் சந்தா இதே விலையில் வழங்கப்பட்டு வந்தது. எனினும், விலை உயர்வு காரணமாக இது ரூ. 1,499 ஆக மாறி இருக்கிறது. தற்போது புது சந்தா முறை அதன் பீட்டா வெர்ஷனில் தேர்வு செய்யப்பட்ட சில பயனர்களிடம் சோதனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    இதில் இரண்டு நாட்களில் இலவச டெலிவரி மற்றும் ஒரே நாளில் டெலிவரி போன்ற சேவைகள் சேர்க்கப்பட்டு இருக்கும். அந்த வகையில், இரண்டு நாட்களுக்குள் டெலிவரி வேண்டும் எனில், பயனர்கள் அதற்கான கட்டணத்தை செலுத்த நேரிடும் என்றே தெரிகிறது. இரண்டு நாட்களுக்கு இலவச டெலிவரி மட்டுமின்றி அமேசான் பிரைம் லைட் சந்தாவின் கீழ் பிரைம் வீடியோ தரவுகள் அனைத்தையும் பார்க்கும் வசதி வழங்கப்படுகிறது.

    எனினும், குறைந்த விலை கொண்ட சேவையில் பயனர்கள் தரவுகளை HD தரத்தில் மட்டுமே ஸ்டிரீம் செய்ய முடியும். இது தவிர ஸ்டிரீம்களின் இடையில் வரும் விளம்பரங்களையும் பார்க்க நேரிடும். அந்த வகையில் புது அமேசான் பிரைம் லைட் விளம்பரங்கள் அடங்கிய குறைந்த விலை சந்தா என எடுத்துக் கொள்ளலாம். அமேசான் பிரைம் லைட் சந்தா ஒரே சமயத்தில் இரு சாதனங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். இதில் ஒன்று நிச்சயம் மொபைல் போனாகவே இருக்க வேண்டும்.

    புதிய அமேசான் பிரைம் லைட் அறிமுகமானால், அமேசான் பிரைம் சந்தா முறையின் விலை ஆண்டிற்கு ரூ. 1499 என்றும், காலாண்டிற்கு ரூ. 459, மாதத்திற்கு ரூ. 179 மற்றும் அமேசான் பிரைம் லைட் சந்தா ஆண்டுக்கு ரூ. 999 என நிர்ணயம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    • ஃபயர்-போல்ட் நிறுவனத்தின் புது ஸ்மார்ட்வாட்ச் IP67 வாட்டர் ரெசிஸ்டண்ட், ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன் கொண்டுள்ளது.
    • புது ஃபயர்-போல்ட் ஸ்மார்ட்வாட்ச் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக ஐந்து நாட்களுக்கு பேட்டரி லைஃப் வழங்குகிறது.

    ஃபயர்-போல்ட் நிறுவனம் இந்திய சந்தையில் புது ஸ்மார்ட்வாட்ச்-ஐ அறிமுகம் செய்து இருக்கிறது. ஃபயர்-போல்ட் சூப்பர்நோவா என அழைக்கப்படும் புது ஸ்மார்ட்வாட்ச் தோற்றத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் விலை உயர்ந்த ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா போன்ற தோற்றம் கொண்டிருக்கிறது. சில வாரங்களுக்கு முன் ஃபயர்-போல்ட் ராக்கெட் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்த மாடல் அறிமுகமாகி இருக்கிறது.

    புதிய ஃபயர்-போல்ட் சூப்பர்நோவா மாடலில் 1.78 இன்ச் ஆல்வேஸ்-ஆன் AMOLED டிஸ்ப்ளே, 368x448 பிக்சல் ரெசல்யூஷன், 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் மெல்லிய மெட்டாலிக் பாடி டிசைன் மற்றும் டெக்ஸ்ச்சர் செய்யப்பட்ட ஸ்டிராப் கொண்டிருக்கிறது. இதில் முழுமையாக இயங்கும் சுழலும் கிரவுன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் ஐந்து நாட்களுக்கு பேட்டரி லைஃப் வழங்குகிறது.

    இந்த ஸ்மார்ட்வாட்ச் 123 ஸ்போர்ட்ஸ் மோட்களை கொண்டிருக்கிறது. இத்துடன் ப்ளூடூத் 5.0, இன்-பில்ட் மைக்ரோபோன், ஸ்பீக்கர், இன்-பில்ட் வாய்ஸ் அசிஸ்டண்ட், இன்-பில்ட் கேம்ஸ், ஏராளமான வாட்ச் ஃபேஸ்கள், 8 யுஐ ஸ்டைல்கள் உள்ளன. இத்துடன் ப்ளூடூத் மூலம் அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி உள்ளது. இவைதவிர ஏராளமான உடல்நல அம்சங்கள், சென்சார்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    ஃபயர்-போல்ட் சூப்பர்நோவா அம்சங்கள்:

    1.78 இன்ச் AMOLED, ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, 500 நிட்ஸ் பிரைட்னஸ்

    மெட்டாலிக் பாடி டிசைன், சுழலும் கிரவுன்

    பல நிறங்களில் டெக்ஸ்ச்சர் கொண்ட ஸ்டிராப்கள்

    ப்ளூடூத் காலிங்

    123-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்

    வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி

    ஸ்லீப், SpO2 மற்றும் ஹார்ட் ரேட் டிராக்கிங்

    IP67 வாட்டர் ரெசிஸ்டண்ட்

    ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன்

    இன்-பில்ட் கேம், இன்-பில்ட் மைக் மற்றும் ஸ்பீக்கர்

    அதிகபட்சம் ஐந்து நாட்களுக்கு பேட்டரி லைஃப்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஃபயர்-போல்ட் சூப்பர்நோவா ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 3 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் ஃபயர்-போல்ட் வலைதளங்களில் நடைபெறுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் எல்லோ, ஆரஞ்சு, புளூ, பிளாக், லைட் கோல்டு மற்றும் கோல்டு பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

    • நாய்ஸ் நிறுவனத்தின் புது ஸ்மார்ட்வாட்ச் 24x7 ஹார்ட் ரேட் மாணிட்டரிங், SpO2 சென்சார்களை கொண்டிருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்வாட்ச் 100 ஸ்போர்ட்ஸ் மோட்கள், IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது.

    நாய்ஸ் நிறுவனம் கலர்ஃபிட் ப்ரோ 4 GPS பெயரில் புது ஸ்மார்ட்வாட்ச் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. கடந்த ஆண்டு கலர்ஃபிட் ப்ரோ 4 மாடல் அறிமுகம் செய்யப்பட்டதை அடுத்து புது மாடல் தற்போது அறிமுகமாகி இருக்கிறது.

    அம்சங்களை பொருத்தவரை 1.85 இன்ச் TFT LCD ஸ்கிரீன், சதுரங்க வடிவம் கொண்ட டயல், 600 பீக் பிரைட்னஸ், 150-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள நாய்ஸ் ட்ரூ சின்க் தொழில்நுட்பம் ப்ளூடூத் காலிங் வசதியை வழங்குகிறது. இத்துடன் குயிக் பேரிங் மற்றும் குறைந்த மின் பயன்பாட்டை எடுத்துக் கொள்ளும் வசதி இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் உள்ளது.

    நாய்ஸ் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் 24x7 இதய துடிப்பு சென்சார், SpO2, ஸ்லீப் டிராக்கிங், ஸ்டிரெஸ் மேனேஜ்மெண்ட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 100 ஸ்போர்ட்ஸ் மோட்கள், IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    இதில் பில்ட்-இன் கால்குலேட்டர், நோட்டிஃபிகேஷன் டிஸ்ப்ளே, வானிலை மற்றும் பங்கு சந்தை அப்டேட்கள், கேமரா கண்ட்ரோல், மியூசிக் கண்ட்ரோல், குயிக் ரிப்ளை, ஸ்மார்ட் DND போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. கலர்ஃபிட் ப்ரோ 4 GPS மாடலில் உள்ள பேட்டரி முழு சார்ஜ் செய்தால் ஏழு நாட்களுக்கு தேவையான பேட்டரி லைஃப் வழங்குகிறது.

    நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 4 GPS அம்சங்கள்:

    1.85 இன்ச் 240x284 பிக்சல் TFT LCD ஸல்கிரீன், அதிகபட்சம் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்

    ப்ளூடூத் 5.3

    ப்ளூடூத் காலிங் மற்றும் நாய்ஸ் ட்ரூ சின்க் தொழில்நுட்பம்

    150-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள்

    24x7 இதய துடிப்பு சென்சார்

    SpO2, ஸ்லீப் டிராக்கிங், ஸ்டிரெஸ் மேனேஜ்மெண்ட்

    100 ஸ்போர்ட்ஸ் மோட்கள்

    பில்ட்-இன் GPS மற்றும் GPS டிராக்கிங்

    IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்

    பில்ட்-இன் கால்குலேட்டர், நோட்டிஃபிகேஷன் டிஸ்ப்ளே

    வானிலை மற்றும் பங்கு சந்தை அப்டேட்கள்

    கேமரா கண்ட்ரோல், மியூசிக் கண்ட்ரோல்

    குயிக் ரிப்ளை, ஸ்மார்ட் DND

    250 எம்ஏஹெச் பேட்டரி

    அதிகபட்சம் ஏழு நாட்களுக்கான பேட்டரி லைஃப்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 4 GPS மாடல் சார்கோல் பிளாக், டீப் வைன், மிண்ட் கிரீன், சில்வர் கிரே, சன்செட் ஆரஞ்சு, டீல் புளூ, ரோஸ் பின்க் மற்றும் மிட்நைட் புளூ போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை ஏற்கனவே துவங்கி விட்டது. அறிமுக சலுகையாக நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 4 GPS மாடலின் விலை ரூ. 2 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • ஃபயர் போல்ட் நிறுவனத்தின் புது கேமிங் இயர்பட்ஸ் சூப்பர் சின்க் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது.
    • இது அந்நிறுவனத்தின் முதல் ட்ரூ வயர்லெஸ் கேமிங் இயர்பட்ஸ் மாடல் ஆகும்.

    ஃபயர் போல்ட் ஃபயர் பாட்ஸ் நின்ஜா 601 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்-ஐ இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. 10mm ஃபுல் ரேன்ஜ் டிரைவர்களை கொண்டிருக்கும், ஃபயர் பாட்ஸ் நின்ஜா 601 அதிக சத்தத்தை வெளிப்படுத்துகிறது. இந்த ட்ரூ வயர்லெஸ் இயர்போன்களில் சூப்பர் சின்க் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த தொழில்நுட்பம் இயர்போனை காதுகளில் வைத்ததும் ஸ்மார்ட்போனுடன் இணைந்து கொள்ளும் வசதியை வழங்குகிறது.

    இதில் யுஎஸ்பி டைப் சி போர்ட், ஃபயர் சார்ஜ் மூலம் குயிக் சார்ஜிங் வசதி உள்ளது. இது முழு சார்ஜ் செய்தால் 30 மணி நேரத்திற்கான பேட்டரி லைஃப் வழங்குகிறது. கேமிங் மோடில் ஃபுல் சார்ஜ் செய்தால் இந்த இயர்பட்ஸ் ஆறு மணி நேரத்திற்கு பிளேடைம் வழங்குகிறது. இத்துடன் ஸ்மார்ட் டச் கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த இயர்போன் விசேஷ ANC மற்றும் ENC மோட் கொண்டிருக்கிறது.

    கேமிங் அனுபவத்தை வழங்க இந்த இயர்போனில் பிரத்யேக கேமிங் மோட் உள்ளது. இது அடுத்தக்கட்ட ஆடியோ அவுட்புட் மற்றும் அல்ட்ரா லோ லேடன்சி அதிகபட்சம் 40ms வரை வழங்குகிறது. இந்த இயர்பட்ஸ் வாட்டர் ரெசிஸ்டண்ட் மற்றும் IPX5 தரச் சான்று பெற்று இருக்கிறது. ஃபயர் பாட்ஸ் இயர்பட்ஸ்-க்கு போல்ட் பிளே ஆப் பிரத்யேக அம்சங்களை வழங்குகிறது. கூடுதல் பலன்களை பெற பனர்கள் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்-ஐ செயலியுடன் லின்க் செய்ய வேண்டும்.

    ஃபயர்-போல்ட் ஃபயர் பாட்ஸ் நின்ஜா 601 அம்சங்கள்:

    லைட்ஸ் இன் கேம் மோட் மற்றும் மேட் ஃபினிஷ் கேஸ்

    10mm ஃபுல் ரேன்ஜ் டைனமிக் டிரைவர்

    38ms அல்ட்ரா லோ லேடன்சி கேம் மோட்

    ஃபாஸ்ட் சார்ஜ் அம்சத்திற்காக ஃபயர் சார்ஜ் தொழில்நுட்பம்

    முழு சார்ஜ் செய்தால் கேம் மோடில் அதிகபட்சம் ஆறு மணி நேரத்திற்கு பிளேடைம்

    சார்ஜிங் கேஸ் சேர்க்கும் போது 30 மணி நேர பிளேடைம்

    தெளிவான அழைப்புகளுக்காக ஃபயர் எக்ஸ் தொழில்நுட்பம்

    டச் கண்ட்ரோல் மற்றும் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி

    சூப்பர் சின்க் தொழில்நுட்பத்தின் மூலம் இன்ஸ்டா வேக் அண்ட் பேர்

    IPX5 வாட்டர் ரெசிஸ்டண்ட்

    போல்ட் பிளே ஆப்

    ஒரு வருடத்திற்கான வாரண்டி

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஃபயர்-போல்ட் நிறுவனத்தின் புதிய ஃபயர் பாட்ஸ் நின்ஜா 601 மாடல் அறிமுக சலுகையாக ரூ. 899 விலையில் குறுகிய காலக்கட்டத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த இயர்பட்ஸ் ப்ளிப்கார்ட் மற்றும் ஃபயர்போல்ட் வலைதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த இயர்பட்ஸ் பிளாக் அண்ட் வைட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

    • பிடிரான் நிறுவனத்தின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் முழு சார்ஜ் செய்தால் 35 மணி நேரத்திற்கான பிளேடைம் வழங்குகிறது.
    • புது இயர்பட்ஸ் கேசில் சிறிய டிஜிட்டல் டிஸ்ப்ளே, சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாத பொருட்களால் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    பிடிரான் நிறுவனத்தின் புதிய பிடிரான் பேஸ்பட்ஸ் எபிக் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புது இயர்பட்ஸ் அசத்தலான டிசைன் மற்றும் நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்குகிறது. பிடிரான் பேஸ்பட்ஸ் எபிக் மாடலின் கேசில் பில்ட்-இன் டிஜிட்டல் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.

    இதன் இயர்பட்ஸ் அசத்தலான டிசைன் மற்றும் சருமத்திற்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத பொருட்களால் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ட்ரூடாக் ENC அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது அழைப்புகளின் போது வெளிப்புற சத்தத்தால் ஏற்படும் இடையூறை தடுக்கிறது. இத்துடன் ஆப்ட்சென்ஸ் 40ms லோ-லேடன்சி கேமிங் மோட் வழங்கப்பட்டு இருக்கிறது. கேஸ் உடன் சேர்த்து இந்த இயர்பட்ஸ் முழு சார்ஜ் செய்தால் 35 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது.

    யுஎஸ்பி டைப் சி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் பிடிரான் பேஸ்பட்ஸ் எபிக் 8mm டைனமிக் டிரைவர்களை கொண்டிருக்கிறது. இது கஸ்டமைஸ் செய்யப்பட்ட EQ - கேம், மியூசிக் மோட் போன்ற அம்சங்களை வழங்குகிறது. இத்துடன் 1-ஸ்டெப் பேரிங், ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி உள்ளது. இந்த இயர்பட்ஸ் வாய்ஸ் அசிஸ்டண்ட், IPX4 வாட்டர் ரெசிஸ்டண்ட் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.

    பிடிரான் பேஸ்பட்ஸ் எபிக் அம்சங்கள்:

    டிஜிட்டல் டிஸ்ப்ளே கேஸ்

    8mm டைனமிக் டிரைவர்கள்

    ப்ளூடூத் 5.3 மற்றும் 1-ஸ்டெப் பேரிங்

    ஆப்ட்சென்ஸ் 40ms லோ-லேடன்சி கேமிங் மோட்

    ட்ரூடாக் அம்சம்

    35 மணி நேரத்திற்கான பிளேடைம்

    கஸ்டமைஸ் செய்யப்பட்ட EQ - கேம், மியூசிக் மோட்

    ஸ்டீரியோ போன் அழைப்புகளுக்காக டூயல் HD மைக்

    டச் சென்சார்

    பேசிவ் நாய்ஸ் கேன்சலிங் வசதி

    IPX4 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி

    வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி

    ஒரு வருட வாரண்டி

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    பிடிரான் பேஸ்பட்ஸ் எபிக் இயர்பட்ஸ் அறிமுக சலுகையாக ரூ. 799 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. அதன்பின் இதன் விலை ரூ. 899 என மாறிவிடும். விற்பனை பிடிரான் வலைதளம் மற்றும் ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறுகிறது.

    • பிஎஸ்என்எல் நிறுவனம் இந்தியாவில் 4ஜி சேவைகளை வெளியிடும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
    • இந்தியாவின் முன்னணி தனியார் டெலிகாம் நிறுவனங்கள் இந்தியா முழுக்க 5ஜி சேவைகளை வேகமாக வெளியிட்டு வருகின்றன.

    இந்தியாவில் சில மாதங்களுக்கு முன் 5ஜி நெட்வொர்க் சேவை துவங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் நாட்டின் முக்கிய நகரங்களில் 5ஜி சேவைகளை வெளியிட துவங்கின. இரு நிறுவனங்களும் 5ஜி வெளியீட்டில் மிக தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

    எனினும், அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் 4ஜி நெட்வொர்க்-ஐ வெளியிடும் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. விரைவில் பிஎஸ்என்எல் 4ஜி வெளியாகும் என பலமுறை தகவல்களை வெளியாகின. இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் பிஎஸ்என்எல் 4ஜி வெளியீடு மேலும் தாமதமாகும் என கூறப்படுகிறது. இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்திலேயே பிஎஸ்என்எல் 4ஜி வெளியாகும் என தெரிகிறது.

    தற்போதைய நிதியாண்டின் இறுதியில் பிஎஸ்என்எல் 4ஜி வெளியீடு நடைபெற மத்திய அரசு உத்தரவிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் இந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் வெளியாகும் என கூறப்பட்டது. அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன் பிஎஸ்என்எல் நிறுவனம் டிசிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து டெல்டிங்கை நடத்தி முடித்தது.

    பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களை மீட்டெடுக்க அரசு சார்பில் ரூ. 1 லட்சத்து 64 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. இதில் பிஎஸ்என்எல் நிறுவனம் மெட்ரோ பகுதிகளில் 4ஜி நெட்வொர்க்-ஐ வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்டிஎன்எல் நிறுவனம் தற்போதைய இணைப்புகளிலேயே கவனம் செலுத்தி வருகிறது. தற்போது 4ஜி வெளியீடு தாமதமாகி இருப்பதை அடுத்து பிஎஸ்என்எல் 5ஜி சேவை வெளியீடு மேலும் தாமதமாகும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.

    • நாய்ஸ் நிறுவனத்தின் புது ஸ்மார்ட்வாட்ச் மாடல் ட்ரூ சின்க் தொழில்நுட்பத்தின் மூலம் ப்ளூடூத் காலிங் வசதியை வழங்குகிறது.
    • இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் பில்ட்-இன் கால்குலேட்டர், நோட்டிஃபிகேஷன் டிஸ்ப்ளே, வானிலை மற்றும் பங்கு சந்தை அப்டேட்கள் உள்ளன.

    நாய்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய நாய்ஸ்ஃபிட் டுவிஸ்ட் ஸ்மார்ட்வாட்ச்-ஐ அறிமுகம் செய்து இருக்கிறது. ப்ளூடூத் சார்ந்து இயங்கும் புது நாய்ஸ்ஃபிட் டுவிஸ்ட் மாடலில் 1.38 இன்ச் TFT LCD ஸ்கிரீன், 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 100-க்கும் அதிக வாட்ச ஃபேஸ்கள் உள்ளன. இதில் நாய்ஸ் உள்ள ட்ரூ சின்க் தொழில்நுட்பம் குயிக் பேரிங் மற்றும் குறைந்த மின் பயன்பாட்டில் ப்ளூடூத் காலிங் வசதியை வழங்குகிறது.

    இத்துடன் நாய்ஸ் ஹெல்த் சூட் மூலம் 24x7 இதய துடிப்பு சென்சார், SpO2. ஸ்லீப் டிராக்கர், ஸ்டிரெஸ் மேனேஜ்மெண்ட் மற்றும் பல்வேறு அம்சங்கள் உள்ளது. இதில் 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், பில்ட்-இன் கால்குலேட்டர், நோட்டிஃபிகேஷன் டிஸ்ப்ளே, வானிலை மற்றும் பங்குசந்தை அப்டேட்கள், கேமரா கண்ட்ரோல், மியூசிக் கண்ட்ரோல், குயிக் ரிப்ளை, ஸ்மார்ட் DND மற்றும் இதர அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    மேலும் IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கும் நாய்ஸ்ஃபிட் டுவிஸ்ட் ஸ்மார்ட்வாட்ச் முழு சார்ஜ் செய்தால் ஏழு நாட்களுக்கான பேட்டரி லைஃப் வழங்குகிறது.

    நாய்ஸ்ஃபிட் டுவிஸ்ட் அம்சங்கள்:

    1.3 இன்ச் TFT LCD ஸ்கிரீன், 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்

    ப்ளூடூத் காலிங் மற்றும் நாய்ஸ் ட்ரூ சின்க் தொழில்நுட்பம்

    100-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள்

    24x7 இதய துடிப்பு சென்சார், SpO2

    100-க்கும் அதிக வொர்க் அவுட் மோட்கள்

    IP68 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்

    அதிகபட்சம் ஏழு நாட்களுக்கான பேட்டரி லைஃப்

    ப்ளூடூத் காலிங் பயன்படுத்தும் போது இரண்டு நாட்களுக்கான பேட்டரி லைஃப்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    நாய்ஸ்ஃபிட் டுவிஸ்ட் ஸ்மார்ட்வாட்ச் ஜெட் பிளாக், சில்வர் கிரே, ரோஸ் வைன், ரோஸ் பின்க் மற்றும் ஸ்பேஸ் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை ஜனவரி 12 ஆம் தேதி துவங்குகிறது. அறிமுக சலுகையாக இதன் விலை ரூ. 1999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விற்பனை அமேசான் வலைதளத்தில் நடைபெற இருக்கிறது.

    • ஆப்பிள் நிறுவனத்தின் புது மேக்புக் ஏர் வெளியீடு பற்றி இணையத்தில் தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
    • இதுதவிர புதிய ஏர்பாட்ஸ் மாடல் உருவாகி வருவதாகவும், இதன் விலை சற்று குறைவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனம் தனது மேக்புக் ஏர் மாடல்களை மாற்றியமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இவற்றில் அளவில் சிறிய 12 இன்ச் மாடல் மற்றும் பெரிய 15 இன்ச் மாடலும் இடம்பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து மார்க் குர்மேன் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் 12 இன்ச் மாடல் இந்த ஆண்டு அறிமுகமாகாது என்றும் 15 இன்ச் மேக்புக் ஏர் மாடல் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்து இருக்கிறார்.

    புதிய 15 இன்ச் மேக்புக் ஏர் பற்றிய விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. எனினும், டிஸ்ப்ளே பிரிவு வல்லுனரான ராஸ் யங், ஆப்பிள் நிறுவனம் 15.5 இன்ச் டிஸ்ப்ளே பேனல்களை உருவாக்கும் பணிகளை இந்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் துவங்கி விடும் என ஏற்கனவே தெரிவித்து இருந்தார். இதற்கான தேதியில் மாற்றம் செய்யப்படவில்லை எனில், புது மேக்புக் ஏர் மாடல் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும்.

    சமீபத்தில் தான் மேக்புக் ஏர் மாடல் பெருமளவு அப்டேட் செய்யப்பட்டது என்ற காரணத்தால் ஆப்பிள் இம்முறை புது மேக்புக் ஏர் டிசைனை பெருமளவுக்கு மாற்றாது என்றே தெரிகிறது. அதன்படி புது மேக்புக் ஏர் டிசைன் அதன் தற்போதைய மாடல்களை போன்றே காட்சியளிக்கும். மற்ற அம்சங்களை பொருத்தவரை இதில் M2 சிப் அல்லது M2 ப்ரோ பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த இரு பிராசஸர்களையும் ஆப்பிள் இதுவரை அறிவிக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    விரைவில் புதிய M2 சிப்செட் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதோடு புதிய மேக் சாதனங்களில் இந்த சிப்செட் வழங்கப்பட இருக்கிறது. இந்த ஆண்டு அல்லது 2024 வாக்கில் ஆப்பிள் அறிமுகம் செய்யும் என கூறப்பட்ட 12 இன்ச் மேக்புக் ஏர் மாடல் தற்போதைக்கு விரைந்து அறிமுகம் செய்யப்படாது என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

    • நாய்ஸ் நிறுவனத்தின் புது ஸ்மார்ட்வாட்ச் முழு சார்ஜ் செய்தால் ஏழு நாட்களுக்கான பேட்டரி லைஃப் வழங்குகிறது.
    • புதிய நாய்ஸ் கலர்ஃபிட் ஸ்மார்ட்வாட்ச் பில்ட்-இன் மைக் மற்றும் ஸ்பீக்கர் கொண்டிருக்கிறது.

    நாய்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. நாய்ஸ் கலர்ஃபிட் Caliber Buzz என அழைக்கப்படும் புது ஸ்மார்ட்வாட்ச் மிக குறைந்த விலையில் கிடைக்கிறது. இதில் 1.69 இன்ச் டிஸ்ப்ளே, சதுரங்க வடிவம் கொண்ட டயல், 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 240x280 பிக்சல் ரெசல்யூஷன், 100-க்கும் அதிக கஸ்டமைஸ் செய்யக்கூடிய வாட்ச் ஃபேஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இதன் வலதுபுறம் பட்டன் மற்றும் IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு உள்ளது. ஃபிட்னஸ் அம்சங்களை பொருத்தவரை நாய்ஸ் கலர்ஃபிட் Caliber Buzz மாடலில் இதய துடிப்பு சென்சார், SpO2 மாணிட்டர், மென்ஸ்டுரல் சைக்கில் டிராக்கர் உள்ளது. இத்துடன் பயனரின் உறக்க முறைகள், மன அழுத்த அளவுகளை டிராக் செய்து மூச்சு பயிற்சி வழங்குகிறது.

    இதில் 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. நாய்ஸ் கலர்ஃபிட் Caliber Buzz மாடலில் பில்ட்-இன் மைக் மற்றும் ஸ்பீக்கர் வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு ப்ளூடூத் மூலம் அழைப்புகளை மேற்கொள்ளலாம். இந்த ஸ்மார்ட்வாட்ச் டயல் பேட் மற்றும் சமீபத்திய அழைப்புகளை காண்பிக்கிறது.

    இந்த ஸ்மார்ட்வாட்ச் 300 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இது முழு சார்ஜ் செய்தால் ஏழு நாட்களுக்கு பேட்டரி லைஃப் வழங்குகிறது. இத்துடன் நோட்டிஃபிகேஷன் டிஸ்ப்ளே, DND மோட், வானிலை மற்றும் பங்கு சந்தை அப்டேட்கள், ரிமோட் கேமரா, மியூசிக் கண்ட்ரோல் மற்றும் ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    நாய்ஸ் கலர்ஃபிட் Caliber Buzz மாடலின் விலை ரூ. 1,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஜெட் பிளாக், ரோஸ் பின்க், மிட்நைட் புளூ மற்றும் ஆலிவ் கிரீன் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை நாய்ஸ் அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறுகிறது. 

    • விங்ஸ் நிறுவனத்தின் புது கேமிங் இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது.
    • சமீபத்தில் தான் விங்ஸ் நிறுவனத்தின் ஃபேண்டம் 800, 760 கேமிங் இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன.

    விங்ஸ் நிறுவனத்தின் ஃபேண்டம் 850 கேமிங் இயர்பட்ஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. முன்னதாக சின்க் ஆப், விங்ஸ் ஃபேண்டம் 800 மற்றும் 760 கேமிங் இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது புதிய ஃபேண்டம் 850 அறிமுகமாகி இருக்கிறது. இந்த இயர்பட்களில் 13 மில்லிமீட்டர் ஹை-ஃபை டிரைவர்கள், பிரத்யேத கேம் மோட், 40ms அல்ட்ரா-லோ லேடன்சி வழங்கப்பட்டு இருக்கிறது.

    இவை கேமிங் அனுபவத்தை மேலும் மேம்படுத்தும். இந்த ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் முழு சார்ஜ் செய்தால் 10 மணி நேரத்திற்கான பேட்டரி லைஃப் வழங்குகிறது. இத்துடன் புல்லட் சார்ஜ் தொழில்நுட்பம் உள்ளது. இதை கொண்டு 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 100 நிமிடங்களுக்கான பிளேடைம் பெறலாம். இந்த இயர்பட்ஸ் கேஸ் சேர்க்கும் போது மொத்தத்தில் 50 மணி நேரத்திறான பிளேபேக் கிடைக்கிறது.

    இந்த இயர்பட்ஸ்-இல் ப்ளூடூத் 5.3, ஸ்பீடு சின்க் போன்ற தொழில்நுட்பங்கள் உள்ளன. விங்ஸ் ஃபேண்டம் 850 மாடலில் பிரீமியம் ABS ஷெல் உள்ளது. இத்துடன் IPX5 சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளது. இதில் உள்ள குவாட் ENC மைக்ரோபோன்கள் அழைப்புகள் மற்றும் பொழுதுபோக்கிற்கு வெளிப்புறம் சத்தத்தால் இடையூறு ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறது. இதனுடன் சின்க் ஆப் கொண்டு பல்வேறு EQ மோட்கள், பட்ஸ் லைட்னிங் மோட்களை கஸ்டமைஸ் செய்வது, டச் கண்ட்ரோல்களை மாற்றிக் கொள்வது மற்றும் காணாமல் போகும் பட்களை கண்டறிவது போன்ற வசதிகளை மேற்கொள்ளலாம்.

    இந்திய சந்தையில் புதிய விங்ஸ் ஃபேண்டம் 850 கேமிங் இயர்பட்ஸ் விலை அறிமுக சலுகையாக ரூ. 899 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது பிளாக் மற்றும் வைட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இவற்றின் விற்பனை ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. விற்பனை விங்ஸ் அதிகாரப்பூர்வ வலைதளம், அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் போன்ற தளங்களில் நடைபெறுகிறது.

    • ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனுடன் ஒன்பிளஸ் ப்ட்ஸ் ப்ரோ 2 அறிமுகம் செய்யப்பட்டது.
    • புது பட்ஸ் ப்ரோ 2 மாடலில் 54ms லோ லேடன்சி, டால்பி அட்மோஸ் மற்றும் ஸ்பேஷியல் ஆடியோ போன்ற அம்சங்கள் உள்ளது.

    ஒன்பிளஸ் 11 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனுடன் ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 இயர்பட்ஸ்-ஐ அறிமுகம் செய்து இருக்கிறது. இது ஒன்பிளஸ் நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை பிரீமியம் இயர்பட்ஸ் மாடல் ஆகும். புதிய ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடலில் 48db டெப்த் மற்றும் 4000Hz விட்த் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    இத்துடன் 54ms லோ லேடன்சி, மெலோடிபூஸ்ட் டூயல் டிரைவர்கள் 11mm வூஃபர், 6mm டுவீட்டர், டைனாடியோ, டால்பி அட்மோஸ் மற்றும் ஸ்பேஷியல் ஆடியோ என ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் உள்ள வூஃபரின் டோம் பகுதியில் க்ரிஸ்டல் பாலிமர் டைஃப்ரம் மற்றும் டோம், எட்ஜ் டிசைன் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இவை வெவ்வேறு ஃபிரீக்வன்சிக்களில் இணைப்பை மேம்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

    ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 அம்சங்கள்:

    ப்ளூடூத் 5.3 (LHDC 5.0/AAC/SBC/LC3)

    டால்பி அட்மோஸ் ஸ்பேஷியல் ஆடியோ

    11mm டைனமிக் டிரைவர் + 6mm டைஃப்ரம் டிரைவர்

    பிரெஷர் சென்சிடிவ் கண்ட்ரோல்

    டூயல் மைக்ரோபோன்

    பைநௌரல் லோ-லேடன்சி ப்ளூடூத் டிரான்ஸ்மிஷன்

    54ms லோ-லேடன்சி கேமிங்

    வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP55)

    டூயல் கனெக்ஷன்

    இயர்பட்களில் 60 எம்ஏஹெச் பேட்டரி

    கேசில் 520 எம்ஏஹெச் பேட்டரி

    ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 அப்சிடியன் பிளாக் மற்றும் ஆர்பர் கிரீன் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 899 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 10 ஆயிரத்து 820 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சீன சந்தையில் இதன் விற்பனை ஜனவரி 9 ஆம் தேதி துவங்குகிறது. இதன் இந்திய விலை அடுத்த மாதம் 7 ஆம் தேதி அறிவிக்கப்படுகிறது.

    • பிளே நிறுவனத்தின் புது ஸ்மார்ட்வாட்ச் மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • புதிய பிளேஃபிட் டயல் 3 உறுதியான கிளாஸ் டிஸ்ப்ளே, 500 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது.

    பிளே நிறுவனம் இந்திய சந்தையில் புதிய பிளேஃபிட் டயல் 3 ஸ்மார்ட்வாட்ச்-ஐ அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய பிளேஃபிட் டயல் 3 மாடலில் 1.8 இன்ச் சதுரங்க வடிவம் கொண்ட IPS டிஸ்ப்ளே, 500 நிட்ஸ் பிரைட்னஸ், கஸ்டமைஸ் செய்யக்கூடிய வாட்ச் ஃபேஸ்கள் உள்ளன.

    குறைந்த எடை கொண்ட புது ஸ்மார்ட்வாட்ச் மாடலில் 2 வாட் ஸ்பீக்கர், அதிகபட்சம் ஐந்து நாட்களுக்கான பிளேடைம், 15 நாட்களுக்கு ஸ்டாண்ட் பை உள்ளது. இத்துடன் இதய துடிப்பு சென்சார், ரத்த அழுத்தம், கலோரி, உறக்கம் மற்றும் ஏராளமான உடல்நல அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள ஏராளமான பயிற்சி மோட்கள் பயனர்களின் உடலை கட்டுக்கோப்பாக வைக்க உதவுகிறது.

    அழைப்புகள் மற்றும் குறுந்தகவல் வரும் போது ஸ்மார்ட்வாட்ச் வைப்ரேட் ஆகும் வசதி கொண்டுள்ளது. இத்துடன் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, வாய்ஸ் அசிஸ்டண்ட் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் சாதனங்களுடன் இணைந்து இயங்கும் திறன் கொண்டுள்ளது. பிளேஃபிட் டயல் 3 ஸ்மார்ட்வாட்ச் புளூ, சில்வர் மற்றும் கிரே என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது.

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    பிளேஃபிட் டயல் 3 ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 3 ஆயிரத்து 999 ஆகும். எனினும், அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்வாட்ச் ரூ. 2 ஆயிரத்து 999 விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. விற்பனை பிளே அதிகாரப்பூர்வ வலைதளம், முன்னணி ஆன்லைன் தளங்கள் மற்றும் 50 ஆயிரத்திற்கும் அதிக ஆஃப்லைன் விற்பனை மையங்களில் கிடைக்கிறது.

    ×