search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆடி மாதத்தையொட்டி திருச்சி வாராஹி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
    X

    ஆடி மாதத்தையொட்டி திருச்சி வாராஹி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

    ஆடி மாதத்தையொட்டி திருச்சி வாராஹி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது
    திருச்சி மங்கள் நகரில் தனி ஸ்தலமாக வாராஹி அம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இங்கு ஆடி மாத உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    அந்த வரிசையில் இந்த ஆண்டு ஆடி மாதம் முதல் வெள்ளியான நேற்று (22-ந்தேதி) மாலை 6.30 மணிக்கு சகஸ்ரநாம பூஜையுடன் குத்து விளக்கு பூஜை நடைபெற்றது.

    தொடர்ந்து இதேபோல் வருகிற 29-ந்தேதி இரண்டாம் வெள்ளியன்றும் சகஸ்ர நாம பூஜையுடன் குத்துவிளக்கு பூஜையும், மூன்றாம் வெள்ளியான அடுத்த மாதம் 5-ந்தேதி ஆடிப் பூரத்தையொட்டி வாராஹி அம்மனுக்கு வளையல் அலங்காரமும் நடக்கிறது.

    அன்று மாலை 6.30 மணிக்கு சகஸ்ரநாம பூஜையுடன் கோவிலுக்கு வரும் கர்ப்பிணி பெண்களுக்கு பெரியோர்களால் வளையல் அணிவித்து சித்திரான்னம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    அத்துடன் அனைத்து பெண்களுக்கும் பிரசாதத்துடன் அன்னையின் அலங்கார வளையலும் வழங்கப்படும்.

    ஆடி நான்காம் வெள்ளியான அடுத்த மாதம் 12-ந்தேதி சகஸ்ரநாம பூஜையுடன் குத்துவிளக்கு பூஜைகள் நடைபெறும்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி வாராஹி தாசர் செய்து வருகிறார்.

    Next Story
    ×