search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருச்சி காவேரி அம்மன்
    X

    திருச்சி காவேரி அம்மன்

    திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு வடக்கு பகுதியில் அமைந்துள்ளது காவேரி அம்மன் கோவில்
    திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு வடக்கு பகுதியில் அமைந்துள்ளது காவேரி அம்மன் கோவில். ஆடி பதினெட்டாம் பெருக்கு விழா, ஆடிமாத செவ்வாய், வெள்ளி, ஆடிப்பூரம் ஆகிய நாட்களில் திரு விழாக்கள் நடைபெறுகின்றன. இக்கோயிலின் சிறப்பு காவேரி அம்மன் முன் வீற்றிருக்கும் நந்தி ஆகும். இந்த நந்தி அதிகார நந்தி என்று அழைக்கப்படுகிறது. அம்மன் கோவிலில் நந்தி அமைந்திருப்பது அபூர்வமானது. இக்கோவிலில் அமைந்துள்ள நந்தி நேராக அம்மனைப் பார்த்து இல்லாமல் சற்று வலதுபுறம் திரும்பியது போல் காட்சி தருகிறது.
        
    ஆடி மாதம் பக்தர்கள் தங்களது பிரார்த்தனைகள் நிறைவேற இங்குள்ள அம்மனை வேண்டிச்செல்கின்றனர். இங்குள்ள அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, புது வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர். இங்கு எழுந்தருளியிருக்கும் காவேரி அம்மனின் தனிச் சிறப்பு நீர் வளம்தான்.

    இப்பகுதியில் கோடைக் காலத்தில் நீர் வளம் குறைந்து விட்டால் இந்த அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வேண்டிட, நல்ல மழை பெய்து வீட்டின் கிணற்றில் நீர்வளம் நிறைந்து காணப்படும் என்கிறார்கள். காவேரிக் கரையோரங்களில் வருடந்தோறும் கொண்டாடப்படும் ஆடி பதினெட்டாம் பெருக்கு விழா மிகச்சிறப்பாக இக் கோவிலில் கொண்டாடப்படுகிறது. இக்கோவிலில் காலை ஏழு மணிக்கும் மாலை ஆறு மணிக்கும் இரண்டு கால பூஜைகள் நிகழ்கின்றன.
    Next Story
    ×