search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சங்கரன்கோவிலில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தவசு திருவிழா
    X

    சங்கரன்கோவிலில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தவசு திருவிழா

    சங்கரன்கோவிலில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தவசு திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வதனர்.
    நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தவசு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நடைபெறுவது வழக்கம். இத்திருவிழா தொடர்ந்து 12 நாள்கள் நடைபெறும். இந்த ஆண்டிற்கான திருவிழா வரும் கடந்த 6-ம் தேதி கோமதி அம்பாள் சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா தொடர்ந்து நாளை வரை நடைபெறுகிறது.

    ஆடித்தவசு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் கடந்த 14-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெற்றது. அதை தொடர்ந்து சிகர நிகழ்ச்சியாக நேற்று மாலை 6.26 மணிக்கு தெற்கு ரதவீதியில் சங்கரநாராயணர் திருக்கோலமாக காட்சியளிக்கும் ஆடித்தவசு திருவிழாவும் நடைபெற்றது. இரவு 12மணியளவில் ஆடித்தவசு 2-ம் காட்சியாக சங்கரலிங்க சுவாமியாக காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெற்றது.

    இந்த திருவிழாவிற்கு நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். திருவிழா நாட்களில் ஒவ்வொரு மண்டகப்படிதாரர்கள் சார்பில் இன்னிசை கச்சேரிகள் மற்றும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. காவல்துறை சார்பில் போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் தலைமையில் கோவிலின் உட்பகுதி மற்றும் வடக்கு ரதவீதி, தெற்கு ரதவீதிகள், மற்றும் நகரின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு சுமார் 800-க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கோவில் வாசலில் காவல்துறை, தீயணைப்பு, மற்றும் சுகாதார துறையினர் சார்பில் அவசர கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஞானசேகர், இணை ஆணையர் லட்சுமணன், துணை ஆணையர் பொன்சுவாமிநாதன், டி.ஐ.ஜி. தினகரன், சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் கண்ணன், டாக்டர் சுப்பாராஜ், தொகுதி இணை செயலாளர் வேல்ச்சாமி, நகராட்சி ஆணையாளர் ராஜேந்திரன், பசும்பொன் தேசிய கழக மாவட்ட செயலாளர் அழகுதுரை, நகை கடை அதிபர்கள் சீதாலட்சுமி ராமகிருஷ்ணன், அமுதா செல்வம், சி.எஸ்.எம்.எஸ். சங்கரசுப்பிரமணியன்,

    அரசு ஒப்பந்ததாரர் கே.எஸ்.எஸ். மாரியப்பன், வேல்ஸ் பப்ளிக் ஸ்கூல் சேர்மன் முருகையா, கோமதி அம்பாள் மெட்ரிக் பள்ளி முதல்வர் திலகவதி, மாவட்ட பிரதிநிதிகள் சங்கர், ராமநாதன், நகர பொருளாளர் பரமகுருநாதன், கூட்டுறவு சங்க தலைவர் சங்கரசுப்பிரமணியன், நகர எம்.ஜி.ஆர். இளைஞரணி தலைவர் சவுந்தர், இளைஞர் பாசறை இணை செயலாளர் மாரியப்பன், நகராட்சி கவுன்சிலர் வெள்ளி முருகன், உமாமகேஷ்வரன், அ.தி.மு.க. பிரமுகர்கள் வெள்ளி மாரியப்பன், முருகன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் பொன்சுவாமிநாதன் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×