என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி திருவிழாவில் தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரம்
Byமாலை மலர்29 Aug 2017 9:31 AM IST (Updated: 29 Aug 2017 9:31 AM IST)
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழாவில் ‘தருமிக்கு பொற்கிழி அளித்தல்’ அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் காட்சி அளித்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா நடந்து வருகிறது. இதில் சிவபெருமானின் திருவிளையாடல்களை சித்தரிக்கும் அலங்காரங்கள் தினமும் இடம் பெறுகின்றன. 4-ம் நாளான நேற்று ‘தருமிக்கு பொற்கிழி அளித்தல்’ அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் காட்சி அளித்தனர்.
‘தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை’ புராணம் பின் வருமாறு:-
வங்கிய சூடாமணி பாண்டியன் இறைவனுக்கு பூஜை செய்ய நறுமணம் மிக்க செண்ப மரங்களை தன் நந்தவனத்தில் வளர்த்து வந்தார். ஒருநாள் அரசி நத்தவனத்தின் அருகே இருக்கும் போது ஒரு புதிய வாசனையை உணர்ந்தார். அது அரசியின் கூந்தலில் இருந்து வருவதாக உணர்ந்த அரசன் பெண்ணின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உள்ளதோ என்று சந்தேகம் கொண்டார்.
தனது ஐயத்தை நீக்குபவருக்கு ஆயிரம் பொற்காசுகள் கொடுப்பதாக அறிவித்தார். இதை அறிந்த பல புலவர்கள் தங்கள் மனத்தில் தோன்றியதை பாடினார்கள். ஆனால் அரசனின் ஐயம் தீரவில்லை. அந்த நேரத்தில் தருமி என்ற ஆதிசைவ பிரம்மசாரி ஒருவர் இறைவன் சொக்கநாதரை பூஜை செய்ய விரும்பினார். ஆனால் மணமான பிறகே இறைவனை பூஜை செய்யலாம் என்பதால் தனக்கு அந்த பரிசை கிடைக்கும்படி செய்தால், அப்பொருளை கொண்டு தானும் மணம் முடித்து இறைபணி செய்யலாம் எனக்கருதி இறைவனிடம் வேண்டினான்.
இறைவனும் அந்த தருமிக்கு “கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி, காமம் செப்பாது கண்டது மொழிமோ, பயிலியது கெழிஇய நட்பின் பயிலியற், செறியெயிற் றரிவை கூந்தலில், நறியவு முளதோ நீ அறியும் பூவே“ என்ற பாடல் எழுதப்பட்ட ஓலையினை வழங்கினார்.
தருமியும் அரச அவைக்கு சென்று அந்த பாடலை படித்து காட்டினார். அரசனும் தன் சந்தேகம் தீர்ந்ததாகக்கூறி ஆயிரம் பொற்காசுகள் கொண்ட பொற்கிழியை தருமிக்கு அளிக்க உத்தரவிட்டார். அப்போது நக்கீரர் எழுந்து அதனை தடுத்து பரிசு கொடுக்க விடாமல் தடுத்தார். உடனே தருமி இறைவனிடம் சென்று ஐயனே உன் பாட்டில் குற்றம் உள்ளது என்று கூறிவிட்டார்கள் என்று புலம்பினார். இறைவன் ஒரு புலவர் வடிவத்தில் அரச அவைக்கு வந்து தன் பாடலில் என்ன குற்றம் என்று கேட்டார். அப்போது நக்கீரர் எழுந்து பாடலில் பொருட்குற்றம் உள்ளது என்றார்.
இருவருக்கும் இடையே வாதம் தொடர, இறுதியாக இறைவன் தன் நெற்றிக் கண்ணைத் திறந்து காட்டினார். இறைவனே வந்திருக்கிறார் என்று அறிந்த பின்னரும் நக்கீரர் பொருட்குற்றம் உள்ளது என்று வாதாடினார். அப்போது இறைவன் தன் நெற்றிக் கண்ணை திறக்க, நெற்றிக்கண்ணின் வெப்பம் தாளாமல் பொற்றாமரைக்குளத்தில் நக்கீரர் விழுந்தார். இறைவனும் அங்கிருந்து மறைந்தார்.
இவ்வாறு நக்கீரரின் தமிழ் புலமையை உலகுக்கு உணர்த்திய இறைவன், மற்ற புலவர்களின் வேண்டுதலுக்கு இணங்கி பொற்றாமரைக்குளத்தில் இருந்து நக்கீரனை உயிர்ப்பித்துக் கொடுத்தார். நக்கீரரும் பொற்கிழியைத் தருமிக்கே கொடுக்கும்படி செய்தார்.
இவ்வாறு புராணம் கூறுகிறது.
இன்று (செவ்வாய்கிழமை) உலவாக் கோட்டை அருளிய லீலை அலங்காரத்தில் சிவபெருமான் காட்சி அளிக்கிறார்.

Next Story
×