என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் வழிபாடு நாளை நடக்கிறது
Byமாலை மலர்1 March 2018 9:35 AM IST (Updated: 1 March 2018 9:35 AM IST)
திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் வழிபாடு நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி லட்சக்கணக்கான பெண்கள் திரண்டு பொங்கலிடுகிறார்கள்.
திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழா சிறப்புக்குரியது. இந்த திருவிழாவின் போது ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பெண்கள் திரண்டு பொங்கல் வழிபாடு நடத்துவதால், இது கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்து உள்ளது.
இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 22-ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டு செல்கிறார்கள்.
முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் வழிபாடு நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. நாளை காலை 10.15 மணிக்கு பொங்கல் வழிபாடு தொடங்குகிறது. பிற்பகல் 2.30 மணிக்கு அம்மனுக்கு பொங்கல் நைவேத்தியம் செய்யப்படும்.
சுமார் 40 லட்சம் பெண்கள் திரண்டு பொங்கலிடுவார்கள் என எதிர்பார்ப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. விழாவையொட்டி போக்குவரத்திலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் முதல் போக்குவரத்து மாற்றம் நடைமுறைக்கு வருகிறது.
அதன்படி, நாகர்கோவில் பகுதியில் இருந்து வரும் தனியார் வாகனங்களை, பாப்பனம் கோடு என்ஜினீயரிங் கல்லூரி, நீரமன்கரை என்.எஸ்.எஸ். கல்லூரி சாலையோரத்தின் ஒரு பகுதியில் மட்டும் நிறுத்த வேண்டும்.
கொல்லம் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள், கழக்கூட்டம்- கோவளம் புறவழிச்சாலை பகுதியில் சாலையின் இருபுறமும் நிறுத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆற்றுக்கால் பகவதியம்மன் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு நாளை தென்னக ரெயில்வேயின் சார்பில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. பல்வேறு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் கூடுதலாக நின்று செல்லும் இடங்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன.
பொங்கல் விழாவை முன்னிட்டு, திருவனந்தபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளில் மதுக்கடைகளை மூட திருவனந்தபுரம் மாவட்ட கலெக்டர் வாசுகி உத்தரவிட்டு உள்ளார். நாளை உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story
×