search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கொக்கு அறு கோ
    X

    கொக்கு அறு கோ

    முருகனின் கையில் கொடியாக அமர்ந்த அமர்ந்த சேவல் 'கொக்கு அறு கோ!' என்று கூவியது. ஏன் அவ்வாறு கூவுகிறது? என்பதற்கான காரணத்தை பார்க்கலாம்.
    முருகனின் கையில் கொடியாக அமர்ந்த அமர்ந்த சேவல் 'கொக்கு அறு கோ!' என்று கூவியது. மனித இனத்தை விழிப்படையச் செய்ய இன்றும் தொடர்ந்து, அதிகாலையில், 'கொக்கு அறு கோ!' என்று கூவுகிறது! ஏன் அவ்வாறு கூவுகிறது?

    'கொக்கு' என்றால் மாமரம் என்று பொருள். கொக்கை (மாமரத்தை) அறுத்த தலைவன் என்ற பொருளில் சேவல், 'கொக்கு அறு கோ' என்று முருகனைப் போற்றியது.

    அழகனான குமரக்கடவுள், மேனி முழுவதும் கண்களாக இருந்த இந்திரனாகிய மயிலூர்தியை விடுத்து, நல்லுணர்வு பெற்று நல்லொழுக்கம் வரப் பெற்ற சூரனின் ஒரு கூறாகிய மயில் மேல் எழுந்தருளினான்! ‘மயிலே! எம்மைச் சுமந்திடுவாயாக!’ என்று கூறி அம்மயிலை வானத்திலும், திக்குகளிலும், பூமியிலும் செலுத்தலானான்.

    இந்திரன் முருகனின் இடைக்கால மயிலூர்தியாக இருந்து போர்க்களத்தில் பணியாற்றினான். சூரன் மயிலாக மாறியவுடன் இடைக்கால ஊர்தியை விட்டு இறங்கினான். சேவலும் மயிலும் ஆகிட, விரும்பி, தவம் செய்த சூரனுக்கு பேரருள் செய்யும் பொருட்டு அவனைத் தன் ஊர்தியாக்கி அதன் மீதேறி உலகைச் சுற்றி வந்தான். புதிய மயிலூர்தியில் வலம் வந்த வடிவேல் முருகனை அமரர்களும், தம்பியரும் சூழ்ந்து நின்று போற்றினர்.
    Next Story
    ×