search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    விபூதியை தொட்டு வைக்கும் விரல்
    X

    விபூதியை தொட்டு வைக்கும் விரல்

    நாம் நெற்றியில் அணியும் விபூதியை, எடுக்க சில விரல்களை பயன்படுத்தும் போது தீமையும், சில விரல்களை பயன்படுத்தும் போது நன்மையும் நிகழ்வதாக சொல்கிறார்கள்.
    இறைவனை வழிபடுவதற்காக ஆலயங்களுக்குச் செல்லும் அனைவருக்கும், ஆலயத்தில் உள்ள அர்ச்சகர் விபூதி, குங்குமம் பிரசாதமாக கொடுப்பார். அப்படி தரப்படும் பிரசாதமான விபூதி, குங்குமத்தை நெற்றியும் வைக்கும் முறையும் சொல்லப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட விரல்களைப் பயன்படுத்தியே நெற்றியில் விபூதியை பூசிக்கொள்ள வேண்டும் என்பது ஐதீகமாக இருக்கிறது.

    நாம் நெற்றியில் அணியும் விபூதியை, எடுக்க சில விரல்களை பயன்படுத்தும் போது தீமையும், சில விரல்களை பயன்படுத்தும் போது நன்மையும் நிகழ்வதாக சொல்கிறார்கள். ஆகவே விபூதியை எடுக்கும்போது, ஆன்மிக ரீதியாக சொல்லப்பட்டுள்ள சில விதிகளைப் பின்பற்றி நன்மைகளைப் பெற முயற்சி செய்வோம்.

    நெற்றியில் விபூதி அணிவதற்கு பயன்படுத்தும் விரல்களில், எந்தெந்த விரல்கள், என்னென்ன பலன்களைத் தருகிறது என்பதை இங்கே பார்ப்போம்.

    கட்டை விரல் என்று சொல்லப்படும் பெருவிரலால், விபூதியை அணிந்தால் தீராத வியாதி வந்து சேரும்.

    ஆள்காட்டி விரலை, விபூதி அணிவதற்கு பயன்படுத்துவதும் தவறு. அந்த விரலைக் கொண்டு விபூதி பூசுவதால், பொருள் இழப்பு உண்டாகும்.

    அதே போல் நடுவிரலைக் கொண்டும் விபூதி அணிந்து கொள்ளக் கூடாது. நடுவிரலில் விபூதியைத் தொட்டு நெற்றியில் இட்டுக் கொண்டால் நிம்மதியின்மை ஏற்படும்.

    விபூதியை அணிந்து கொள்வதற்கு மோதிர விரலே சரியான ஒன்று. மோதிர விரலினால் விபூதியை தொட்டு அணிந்து கொள்ளும் அனைவரும் மகிழ்ச்சியான வாழ்க்கையை அடைவார்கள்.

    சிறு விரல் எனப்படும் சுண்டு விரலும் விபூதி அணிந்து கொள்ள ஏற்றதல்ல. இதன் மூலம் விபூதி அணிந்து கொண்டால் கிரக தோஷங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

    மோதிர விரல் மற்றும் கட்டை விரல் இரண்டையும் சேர்த்து விபூதியை எடுத்து, மோதிர விரலால் விபூதியை நெற்றியில் அணிந்து கொள்பவர்களுக்கு, உலகமே வசப்படும். அவர்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியைப் பெறும்.
    Next Story
    ×