என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மீனம்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து விமான நிலையத்துக்கு செல்ல ஆகாய நடை பாதை திறப்பு
Byமாலை மலர்31 Oct 2017 1:19 PM IST (Updated: 31 Oct 2017 1:19 PM IST)
சென்னை விமான நிலைய முனையத்தையும், மெட்ரோ ரெயில் நிலையத்தையும் இணைக்கும் வகையில் ஆகாய பாலம் திறக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் நிறைவேற்றப்படுகிறது.
பல்வேறு கட்டங்களாக தீவிரமாக நடைபெற்று வரும் மெட்ரோ ரெயில் பணிகள் அடுத்த ஆண்டு நிறைவு பெறுகின்றன.
தற்போது நேரு பூங்காவில் இருந்து விமான நிலையம் வரை மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. சுரங்கப்பாதை மற்றும் உயர்மட்ட பாதை வழியாக மெட்ரோ ரெயில்கள் சென்று வருகின்றன.
மெட்ரோ ரெயில் விமான நிலையம் வரை சென்றாலும் அங்கிருந்து பயணிகள் தங்கள் உடமைகளை ரெயிலில் தூக்கி கொண்டோ, பேட்டரி கார் மூலமோதான் விமான நிலையத்திற்குள் செல்ல முடியும்.
சிறிது தூரம் நடந்து படிக்கட்டு மற்றும் லிப்ட் வழியாகவும் விமான நிலையத்திற்கு செல்ல முடியும். மெட்ரோ ரெயில் நிலையத்தையும் இணைக்கும் வகையில் பாதை அமைக்கப்படாமல் இருந்தது பெரும் கவலை அளிப்பதாக இருந்தது.
அதே போல விமான நிலையத்தில் இருந்து மெட்ரோ ரெயில் பயணம் செய்ய வேண்டும் என்றாலும் லிப்ட் அல்லது படிக்கட்டு வழியாக கீழே இறங்கி நடந்து சென்றுதான் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும்.
இந்த சிரமங்களை தவிர்ப்பதற்காக விமான நிலைய முனையத்தையும், மெட்ரோ ரெயில் நிலையத்தையும் இணைக்கும் வகையில் ஆகாய பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பாலத்தின் வழியாக பயணிகள் நேரடியாக விமான நிலையத்தில் இருந்து மெட்ரோ ரெயிலுக்கு எளிதாக செல்ல முடியும். அது போல மெட்ரோ ரெயிலில் வரும் பயணிகள் விமான நிலையத்திற்கு செல்ல முடியும்.
வெளிநாடு மற்றும் உள்நாடு முனையத்திற்கு செல்ல இந்த ஆகாய பாலம் பணி நடைபெற்று வருகிறது. தற்போது மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து பழைய விமான நிலையம் வருகை பகுதி வரையிலும் நடந்த பணி நிறைவடைந்துள்ளது. அங்கு லிப்ட் பொருத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வரக்கூடியவர்கள் ரோட்டை கடக்காமல் முற்றிலும் மூடப்பட்ட நடை மேம்பாலம் வழியாக செல்லலாம்.
பன்னாட்டு விமான நிலைய முனையத்துடன் இணைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தில் இருந்து படிக்கட்டு வழியாகவும், லிப்ட் வழியாகவும் வருகை பகுதிக்கும், புறப்பாடு பகுதிக்கும் செல்லலாம்.
ஆனால் தற்போது லிப்டும் செயல்படவில்லை. அதனால் பயணிகள் இன்னும் இந்த பாலத்தை பயன்படுத்த அனுமதிக்கவில்லை.
கடந்த சனிக்கிழமை இந்த பாலம் திறக்கப்பட்டதாக கூறினாலும் இன்னும் மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை என்பதுதான் உண்மை.
மெட்ரோ ரெயிலில் இருந்து பயணிகள் வழக்கம் போல கீழே இறங்கி நடந்து அல்லது பேட்டரி கார் மூலம்தான் செல்ல முடியும். பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராத ஒன்றை திறந்து விட்டதாக விமான நிலைய அதிகாரிகள் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது என்று பயணிகள் தெரிவிக்கின்றனர்.

Next Story
×