search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிய கண்டுபிடிப்புக்காக சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியருக்கு மத்திய அரசு விருது
    X

    புதிய கண்டுபிடிப்புக்காக சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியருக்கு மத்திய அரசு விருது

    புற்றுநோய் மற்றும் டெங்கு பாதிப்பை முற்றிலும் தடுப்பது தொடர்பாக மேற்கொண்டுள்ள ஆராய்ச்சிக்காக சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியருக்கு மத்திய அரசு சுவர்ணஜெயந்தி விருது வழங்கி உள்ளது. #Swarnajayanti
    சென்னை:

    என்ஜினீயரிங் அறிவியல் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் 3 பேருக்கு ஆண்டு தோறும் மத்திய அரசு, சுவர்ணஜெயந்தி என்ற விருதை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த விருதுக்கு தேர்ந்து எடுக்கப்படுபவர்களுக்கு மாதம் தோறும் ரூ.25 ஆயிரம் வீதம் 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு வழங்குகிறது. 2017-18-ம் ஆண்டுக்கான இந்த விருதுக்கு சென்னை ஐ.ஐ.டி.யில் மெக்கானிக்கல் துறையில் இணை பேராசிரியராக பணியாற்றி வரும் அஷீஸ்குமார் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    புற்று நோய் மற்றும் டெங்கு பாதிப்பை முற்றிலும் தடுப்பது தொடர்பாக மேற்கொண்டுள்ள ஆராய்ச்சிக்காக இவருக்கு அந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருது மேலும் பல ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உதவியாக இருக்கும் என்று பேராசிரியர் அஷீஸ்குமார் தெரிவித்துள்ளார். #Swarnajayanti

    Next Story
    ×