search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    தீராத நோய்களை தீர்க்கும் திருநீலகண்ட பிள்ளையார்
    X

    தீராத நோய்களை தீர்க்கும் திருநீலகண்ட பிள்ளையார்

    • தனக்கு ஏற்பட்ட நோய் நீங்கியதின் காரணமாக 12 வேலி நிலத்தை திருநீலகண்ட பிள்ளையாருக்கு எழுதிக் கொடுத்தார் மகாராஜா.
    • முடப்புள்ளிக்காடு ஏந்தல் என்று அழைக்கப்படும் மையப்பகுதியில் திருநீலகண்ட பிள்ளையார் கோவில் அமைக்கப்பட்டது.

    தஞ்சைத் தரணியை அரசாண்ட துளசி மகாராஜாவிற்கு ஒரு சமயம் நீரிழிவு நோய் ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை பெற எண்ணி திருப்பெருந்துறை (மணிவாசகர் திருத்தலமான ஆவுடையார்கோவில்) செல்லும் வழியில் தனது அரச பரிவாரங்களுடன் பேராவூரணிக்கு வந்தார்.

    அப்போது சங்கரர்கள் 2 பேர் பிள்ளையாருக்கு பூஜை செய்து கொண்டிருப்பதை பார்த்த துளசி மகாராஜா, 'தனக்கு தீராத வியாதி இருக்கிறது' 'அதை தீர்க்க திருநீறு கொடுங்கள்' எனக்கேட்டார். அவர்களும் பிள்ளையாரை வணங்கி மகாராஜாவிற்கு திருநீறு கொடுத்தார்கள். என்னஆச்சரியம்! திருநீறு பூசிய நேரத்திலேயே மகாராஜாவின் தீராத வியாதி குணமாகியது.

    தனக்கு ஏற்பட்ட நோய் நீங்கியதின் காரணமாக 12 வேலி நிலத்தை திருநீலகண்ட பிள்ளையாருக்கு எழுதிக் கொடுத்தார் மகாராஜா. பின்னர் ஒருநாள் பிள்ளையார் மகாராஜா கனவில் தோன்றி, தனக்கு பழத்தோட்டம் வேண்டுமென கேட்டதாகவும் அதனால் பழத்தோட்டமும், மலர்த்தோட்டமும் பேராவூரணியில் உள்ள நல்லமான் கொல்லையில் 4 வேலி இடத்தை எழுதிக்கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    அதன்பின்னரே, பேராவூரணி நகரின் முடப்புள்ளிக்காடு ஏந்தல் என்று அழைக்கப்படும் மையப்பகுதியில் திருநீலகண்ட பிள்ளையார் கோவில் அமைக்கப்பட்டது.

    Next Story
    ×