என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
தெய்வங்களே தேர்வு செய்து கொண்ட நட்சத்திர திருநாள்-பங்குனி உத்திரம்
- மாதம்தோறும் உத்திர நட்சத்திரம் வருகிறது என்றாலும் பங்குனியில் வரும் உத்திரத்திற்கு பெருமை அதிகம்.
- ஏனென்றால் தெய்வங்களே தேர்வு செய்து கொண்ட நட்சத்திரம் இந்த திருநாள் .
மாதம்தோறும் உத்திர நட்சத்திரம் வருகிறது என்றாலும் பங்குனியில் வரும் உத்திரத்திற்கு பெருமை அதிகம்.
ஏனென்றால் தெய்வங்களே தேர்வு செய்து கொண்ட நட்சத்திரம் அந்த திருநாள் .
பார்வதி - சிவன் திருமணம் , முருகன் -தெய்வானை திருமணம், ஆண்டாள் -ரெங்க மன்னார் திருமணம் , மீனாட்சி -சுந்தரேஸ்வர் திருமணம் என தெய்வீகத்திருமணங்கள் பலவும் பங்குனி உத்திரத்தில் தான் நிகழ்ந்தன என்று புராணங்கள் கூறுகின்றன .
இவை மட்டுமா ? ராமாயண சகோதரர்கள் நால்வருக்கும் மிதிலையில் இத்திருநாளில் தான் திருமணம் நடைபெற்றது .
ராமன் -சீதா ,பரதன் -மாண்டவி ,லக்ஷ்மணன் -ஊர்மிளா , சத்ருகன்-சுருதகீர்த்தி என நான்கு இதிகாச ஜோடிகளும் திருமணத்தில் சேர்ந்தது பங்குனி உத்திரத்தில்தான் .
ஐயப்பன் பந்தள ராஜாவிற்கு மகனாக பிறந்ததும் ,பாண்டவர்களில் அர்ச்சுனன் தோன்றியதும் ,முருகப்பெருமானை தேடிச்சென்று மணந்த வள்ளி அவதாரமும் பங்குனி உத்திரமே .
பங்குனி உத்திர விரதத்தை சிறப்பாக கடைபிடித்தே மஹாவிஷ்ணுவின் மார்பில் ஸ்ரீமஹாலட்சுமி இடம்பிடித்தாள் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது .