search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ஏகாதசியின் சிறப்பு
    X

    ஏகாதசியின் சிறப்பு

    • திருநெல்வேலியில் இருந்து சுமார் 47 கி.மீ. தொலைவில் உள்ள திவ்ய தேசம் திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவில்.
    • நான்கு ஆழ்வார்களால் பாடப்பட்ட தலம் இது.

    ஏகாதசியின் சிறப்புக்கு எத்தனையோ சம்பவங்கள் உதாரணமாக உள்ளன.

    அதில் நம்பாடுவான் வாழ்க்கை தனித்துவம் கொண்டது.

    திருநெல்வேலியில் இருந்து சுமார் 47 கி.மீ. தொலைவில் உள்ள திவ்ய தேசம் திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவில்.

    பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் என்று நான்கு ஆழ்வார்களால் பாடப்பட்ட தலம் இது.

    திருமங்கையாழ்வார் கடைசியில் பாடியதும், முக்தி பெற்றதும் இங்கு தான்.

    இங்கே நின்ற நம்பி, இருந்த நம்பி, கிடந்த நம்பி, திருப்பாற்கடல் நம்பி, மலைமேல் நம்பி என்று ஐந்து விதமாக காட்சி தருகிறார் பெருமாள்.

    வராக அவதாரம் கொண்டு நிலங்களை மீட்டருளிய பெருமாள் இங்கு தங்கியதாலும், தன்னுடைய பேருருவை குறுக்கிக்கொண்டு திகழ்ந்ததாலும் குறுங்குடி என்று தலத்துக்குப் பெயர் வந்தது.

    Next Story
    ×