search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ஜன்னல் வழியாக மட்டுமே கண்ணனை தரிசிக்க முடியும்
    X

    ஜன்னல் வழியாக மட்டுமே கண்ணனை தரிசிக்க முடியும்

    • தன் கணவர் குழந்தையாக இருந்த போது, எப்படி இருந்தார் என்று பார்க்க ருக்மணி ஆசைப்பட்டாள்.
    • அதனால், தேவலோக சிற்பியான விஸ்வகர்மா மூலம் ஒரு கிருஷ்ண விக்ரகத்தைச் செய்தாள்.

    கண்ணனுக்கு சனிக்கிழமை

    கிரகங்களில் சனீஸ்வர பகவானுக்குரியது சனிக்கிழமை.

    அந்த தினம் கண்ணனை வணங்குவதற்கும் உரிய நாளாக கருதப்படுகிறது.

    அனைத்து கிரகங்களும் கிருஷ்ண பரமாத்மாவுக்கு கட்டுப்பட்டவையே.

    எனவே, கண்ணனை வணங்கினால் எந்த கிரகமும் துன்பம் தராது.

    கதவே இல்லாத கண்ணன் கோவில்

    கர்நாடக மாநிலம் உடுப்பி கிருஷ்ணன் கோவிலில், குழந்தை வடிவில் கண்ணன் காட்சி தருகிறார்.

    வலது கையில் தயிர் கடையும் மத்தும், இடது கையில் வெண்ணையும் ஏந்தியுள்ளார்.

    தன் கணவர் குழந்தையாக இருந்த போது, எப்படி இருந்தார் என்று பார்க்க ருக்மணி ஆசைப்பட்டாள்.

    அதனால், தேவலோக சிற்பியான விஸ்வகர்மா மூலம் ஒரு கிருஷ்ண விக்ரகத்தைச் செய்தாள்.

    அந்த விக்கிரகமே உடுப்பியில் வழிபாட்டில் உள்ளது.

    இந்த கோவிலுக்கு வாசல் கதவுகள் இல்லை.

    ஜன்னலைப் போன்ற அமைப்புக் கொண்ட வழி மட்டுமே உண்டு.

    கர்ப்பகிரகத்தின் நுழைவு வாயில் விஜயதசமி அன்று மட்டுமே திறந்திருக்கும்.

    மற்ற நாட்களில் சன்னதியின் இருபுறமும் உள்ள ஜன்னல் வழியாக மட்டுமே கண்ணனைத் தரிசிக்க முடியும்.

    Next Story
    ×