search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    கால பைரவ அஷ்டமி விரதம்
    X

    கால பைரவ அஷ்டமி விரதம்

    • சந்தோஷத்துடன் உடனே செயல்பட்டு நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார்.
    • ஞாயிறு முதல் சனி வரையிலான வாரத்தின் அனைத்து நாட்களும் ஸ்ரீபைரவரை வழிபட உகந்த நாட்கள்தான்.

    படைத்தல், காத்தல், அழித்தல் அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய இறையருள் தொழில்களை செய்து பல லட்ச உயிர்களையும் காப்பதால் அவருக்கு திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்பட்டது.

    படைத்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும்.

    இந்த கடவுளே ஆனந்த பைரவராக உலகை படைக்கிறார். பின்னர் காலபைரவராக உலகை காக்கின்றார்.

    அவருக்கு தகுந்த பூஜைகள் செய்தால் மட்டுமே திருப்தியடைந்து நம்மை இடுக்கண்களிலிருந்து காப்பாற்றுவார் என்றில்லை.

    எந்தவித பூஜைகள் செய்யா விட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே கூட போதும்.

    சந்தோஷத்துடன் உடனே செயல்பட்டு நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார்.

    முதலில் துவங்கும் காலை பூஜையும், இரவில் நடக்கும் இறதியான பூஜையும் ஸ்ரீபைரவருக்கே உரியது.

    பற்றற்ற நிலையில் நிர்வாண கோலத்தில் பைரவர் வீற்றிருப்பதால் பைரவர் விக்ரகத்தை தொட்டு வணங்குதல் நாமே சென்று புஷ்பம் சாற்றுதல் ஆகியவை கூடாது.

    கோவிலில் இருக்கும் குருக்கள் மூலமாகத்தான் புஷ்பம் முதலியவை சாற்றுதல் வேண்டும்.

    சித்திரை, ஐப்பசி மாதங் களில் வரும் பரணி நட்சத்திர நாட்கள் ஸ்ரீபைரவருக்கு மிக உகந்த நாட்கள் ஆகும்.

    ஞாயிறு முதல் சனி வரையிலான வாரத்தின் அனைத்து நாட்களும் ஸ்ரீபைரவரை வழிபட உகந்த நாட்கள்தான்.

    ஆயினும், தேய்பிறை மற்றும் வளர்பிறை நாட்களில் வரும் அஷ்டமி திதி ஸ்ரீபைரவரை வணங்குவதற்கு மிக விசேஷமான நாட்களாக நடைமுறையில் உள்ளது.

    பீட்ரூட்டை வெட்டி வேக வைத்து அந்த தண்ணீரில் கலந்த சாதம், தேனில் ஊறவைத்து உளுந்து வடை மற்றும் வடையை மாலையாக சாற்றுதல் வெண் பூசணிக்காய் வெட்டி பலியிடுதல், எலுமிச்சை சாதம் படைத்தல் போன்ற வைகள் ஸ்ரீபைரவருக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள் ஆகும்.

    Next Story
    ×