என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் பாலாம்பிகா சமேத கார்கோடேஸ்வரர்!
- இங்கு கணவன் மனைவியாக வந்து வழிபட்டால் இருவர் இடையே உறவு மேம்படும் என்பது ஐதீகம்.
- உலகத்தை நல்வழிப்படுத்த வேண்டியது சான்றோர்கள் கடமை.
கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் பாலாம்பிகா சமேத கார்கோடேஸ்வரர்
இரு மனம் இணையும் திருமண நிகழ்வை யாராலும் மறக்க முடியாது.
வாழ்கை துணையாக வாழ்வின் இறுதி வரை வரப்போகும் உறவை கைபிடிக்கும் உன்னதமான நாள் திருமண நாள்.
கணவன் மனைவி என புது உறவுடன் வாழ்வை தொடங்கும் புது மணத் தம்பதியினரின் வாழ்வு வளம் பெற பல கோவில்களுக்கும் சென்று வழிபட வேண்டும் என பெரியவர்கள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் அமைந்துள்ள பழமையான கோவில்கள் பல தனித்தன்மை வாய்ந்த சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளன.
வரலாற்று ஆதாரங்களுடன், புராண நிகழ்வுகளை செவி வழிச் செய்தியாக கொண்ட கோவில்கள் பல இன்றும் மக்கள் வாழ்வில் வளங்களை தந்து கொண்டிருக்கின்றன.
அந்த வகையில் கணவன் மனைவி உறவு மேம்பட அருள் தரும் கோவிலாக விளங்குகிறது அரியலூர் மாவட்டம், காமரசவல்லி கிராமத்தில் உள்ள பாலாம்பிகா சமேத கார் கோடேஸ்வரர் திருக்கோவில்.
இங்கு கணவன் மனைவியாக வந்து வழிபட்டால் இருவர் இடையே பாசம் அதிகரிக்கும், உறவு மேம்படும் என்பது ஐதீகம்.
இதற்கு அடிப்படை ஆதராத்தை இந்த கோவிலின் தலவரலாறே நமக்கு கூறுகிறது.
கிடைத்தற்கு அரிய பேரின்பத்தைப் பலரும் தேடி அலைந்த காலத்தில், சிற்றின்ப வேட்கையில் நாட்டம் கொண்டு அதிலேயே மூழ்கிக் கிடந்தவர்களும் இருந்தார்கள்.
காமம் அவர்களைப் படாத பாடு படுத்தியது. இதன் காரணமாக நித்தமும் தாங்கள் அனுஷ்டிக்க வேண்டிய வழிபாடுகளையும், நியதிகளையும் பலர் மறந்து போயினர்.
இத்தகைய காலத்தில் உலகத்தை நல்வழிப்படுத்த வேண்டியது சான்றோர்கள் கடமை அல்லவா?
எனவே, தேவர்களும் முனிவர்களும் சிவபெருமானிடம் சென்று மக்களின் இந்த நிலையை மாற்றுமாறு வேண்டினார்.
இதனால்தான் காமன் என்கிற மன்மதன் ஈசனின் நெற்றிக் கண்ணால் எரிக்கப்பட்டான் என்ற கதை நாம் அனைவரும் அறிந்ததே.
தன் கணவன் மன்மதனை மீண்டும் உயிர்பித்துத் தருமாறு ஈசனை நோக்கி தவம் இருந்தாள் அவனது துணைவியான ரதிதேவி.
தன்னை வழிபட்ட ரதிக்கு மாங்கல்ய பிச்சை தருவதற்காகவும் அவள் பார்வைக்கு மட்டும் தெரியுமாறு மன்மதனை உயிர்பித்துத் தந்தார் ஈசன்.
ரதிக்கு வரம் கொடுத்த ஊர் என்பதால் ரதிவரபுரம் என்றும் காமனின் தேவியான ரதி தவம் இருந்த தலம் என்பதால், காமரதிவல்லி எனவும் அழைக்கப்படலானது.
இதுவே பின்னாளில் காமரச வல்லி ஆகி விட்டது.
ஊர்ப் பெயருக்கான இந்தக் கதை புராணத்தோடு நின்று போய்விடவில்லை.
இதை மெய்ப்பிக்கும் வகையில் ரதிதேவியின் செப்புத் திருமேனி ஒன்று இந்த ஆலயத்தில் உள்ளது.
தன் கணவனை உயிர்ப்பிக்க வேண்டி, இறைவனிடம் இரு கரங்களை ஏந்தி, மாங்கல்ய பிச்சை கேட்கும் கோலத்தில் காணப்படுகிறது இந்தத் திரு மேனி.
காமரசவல்லியில் ஒவ்வொரு மாசி மாதமும் பவுர்ணமி தினத்தன்று காமன் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவின்போது இரண்டாக வெட்டிய ஆமணக்குச் செடியை ஆலயத்தில் நட்டு வைப்பார்கள்.
இறை பக்திக்கு உட்பட்டும், சத்தியத்துக்குக் கட்டுப்பட்டும் இந்தக் கிளை எட்டே நாட்களுக்குள் மீண்டும் உயிர் பெற்று வளர்கிறது.
ரதிதேவியின் வாழ்க்கை இங்கே துளிர்த்தது போல், இங்கே நடப்படுகிறவை மீண்டும் துளிர்க்கும் என்பதற்கு உதாரணம் இது.
குடும்பத்தில் தம்பத்திக்குள் பிரிவினை இருப்பவர்கள், கருத்து வேற்றுமை கொண்டவர்கள், விவாகரத்தைத் தடுக்க நினைப்பவர்கள், தம்பதியரின் அன்பு பெருக வேண்டுவோர் காமரசவல்லியை வந்து வணங்கினால் சிறப்பு.
முறையாக இங்கு வந்து தரிசனம் செய்து விட்டுச் சென்றால், தம்பதியர்களின் வாழ்வில் புத்தொளி பரவும் என்பது ஐதீகம்.
ரதிதேவிக்கே மாங்கல்ய பிச்சை அளித்த திருத்தலம் என்பதால், நிலைத்த மாங்கல்ய பேறு வேண்டுவோர், இங்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.
ஆதி காலத்தில் நான்கு வேதங்களையும் கற்றுத் தேர்ந்த அந்தணர்கள் பெருமளவில் காமரசவல்லியில் வசித்து வந்தார்களாம் எனவே, சதுர்வேதி மங்கலம் என்கிற சிறப்புப் பெயருடன் இந்த ஊர் விளங்கி வந்துள்ளது.
ஒரு காலத்தில் இந்தத் திருக் கோவிலை அந்தணர்கள் நிர்வகித்து வந்ததாகவும், அவர்களுக்காச் சில கிராமங்கள் தானமாகக் கொடுக்கப்பட்டன என்றும் கல்வெட்டுத் தகவல்கள் கூறுகின்றன.
வேத பாராயணங்களும், சத்சங்கக் கூட்டங்களும் இங்கு அதிகம் நடந்துள்ளன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்