search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    கேட்டதைக் கொடுக்கும்  காமதேனு
    X

    கேட்டதைக் கொடுக்கும் காமதேனு

    • தேவலோகக் காமதேனு தான் இருக்குமிடத்தில் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றித் தரும்.
    • அந்த அரசனே “ராஜரிஷி” என்று அழைக்கப்பட்ட விசுவாமித்திர முனிவர் ஆவார்.

    தேவலோகக் காமதேனு தான் இருக்குமிடத்தில் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றித் தரும்.

    ஒரு முறை அரசன் ஒருவன் தனது பெரிய பரிவாரங்களுடன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான்.

    வேட்டையாடிக் களைத்துப் போன அரசனுக்கும் அவனது பரிவாரங்களுக்கும் கடுமையான பசியும் தாகமும் ஏற்பட்டது.

    அவர்கள் காட்டில் அலைந்து திரிந்து ஒரு முனிவரின் ஆசிரமத்தை வந்தடைந்தனர்.

    அவ்வாசிரமம் வசிஷ்ட முனிவரின் ஆசிரமம் ஆகும். அரசன், அம்முனிவரிடம் தங்கள் தாகத்தைத் தீர்க்க ஏதேனும் தரும்படி வேண்டினான்.

    அதற்கு முனிவரோ, "வெறுமனே தாகத்தைத் தீர்த்தால் மட்டும் போதுமா? நீங்கள் கடுமையான பசியால் இருப்பதால் உங்களுக்கு விருந்தும் படைத்து அனுப்புகிறேன்" என்று கூறினார்.

    முனிவர் சொன்னது போலவே அரசனுக்கும் அவனது பரிவாரங்களுக்கும் சுவையான விருந்தும் அளித்தார்.

    இதனைக் கண்ட அரசன் மிகுந்த ஆச்சரியம் அடைந்தான். இந்த காட்டில் இப்படியொரு விருந்தை இம்முனிவரால் எப்படி அளிக்க முடிந்தது என்று அதைப் பற்றி முனிவரிடமே கேட்டான்.

    அதற்கு முனிவர் தன்னிடம் இருக்கும் பசுவின் மகிமையால்தான் இப்படியொரு விருந்தை அளிக்க முடிந்தது என்று கூறினார். ஆம் கேட்டதைக் கொடுக்கும் ஆற்றல் காமதேனுவுக்கு உண்டு.

    வசிஷ்ட முனிவரிடமிருந்த அந்த பசுவே காமதேனு. அவர் தனது தவ வலிமையால் விண்ணுலகிலிருந்து காமதேனுவைப் பெற்றிருந்தார்.

    அப்பசுவைத் தான் அடைய நினைத்த அந்த அரசன் வசிஷ்டரிடமிருந்து அதனை அபகரிக்க முயன்று தோல்வியுற்றான். பின்னாளில் வசிஷ்டரைப் போலவே தவ வாழ்க்கை மேற்கொண்டு பிரம்மரிஷியாக மாறினான்.

    அந்த அரசனே "ராஜரிஷி" என்று அழைக்கப்பட்ட விசுவாமித்திர முனிவர் ஆவார்.

    ஆக காமதேனுவின் சந்ததிகளான பசுக்கள் பூமியிலும் மக்கள் கேட்டதைக் கொடுக்கும் தெய்வீக அன்னை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    Next Story
    ×